×
Image

நல்ல நட்பு - (தமிழ்)

நட்பும் உறவும் எம்மை அறியாமலே தாக்கத்தை உண்டு பன்னக் கூடியவை, நாம் நெருங்காவிட்டாலும் அவர்களினுடைய்ய சிந்தனையும், நடைமுறையின் தாக்கமும் நம்மை அறியாமல் செல்வாக்குச் செலுத்திவிடும். இதற்கான உதாரணம் தான் புலம்பெயர்ந்து வாழ்வோர் தாம் இருக்கும் இடத்திற் கொப்ப தம்மை அறியாமலே மாற்றிக் கொள்கின்றனர். தொடர்புகள் போக்கயே மாற்றிவிடும். அதற்கு தாக்கம் செலுத்துவது நற்பாகும். முதலாவது யாரோடு நற்புவைக்கின்றோம், நற்புக்கான நோக்கம் என்ன என்பதனையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Image

இளமைப்பருவமும் கட்பொழுக்கமும் - (தமிழ்)

ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கிடைத்தது கனீமத் (இஃதனிம்) போன்ற பயன்பாடாக இருக்க வேண்டுமென ஹதீஸ் கூறுகின்றது. குறிப்பாக இளமைப் பருவத்தில் பத்தினித் தனத்துடன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு அல் -குர்ஆன் இப்றாஹீம்(அலை), யூசுப்(அலை) போன்றவர்களை முன்னுதாரணப்படுத்திருக்கின்றது. இன்று பாவங்கள் நடைபெறாமல் இருக்க சந்தர்ப்பங்கள் கிடைக்காமலிருப்பதே.இவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தும் தக்வாவின் காரணமாக அதனை புறமொதுக்கியவர்கள். தக்வாவை விட்ட அறிவு நலவைக் கொண்டு தரமாட்டாது என இங்கு கூறப்படுகின்றது.

Image

ஊடகப் பாவனை குறித்த எச்சரிக்கை - (தமிழ்)

பாவங்களில் ஈடுபடுவது எவ்வாறு பாவமானதே அதோ போன்றே பாவங்களை பகிரங்கப்படுத்துவதும் சிலபொது சமூக நலனுக்காகவன்றி பாவமாகும். இரகசியங்கள் பாதுகாக்கப்படுவதன் மூலம் கண்ணியமும் பாதுகாக்கப்படுகிறது. நவீன ஊடகங்கள் எவ்வித இங்கிதமும் இன்றி குறைகளை, அவதூறுகளை நொடிப் பொழுதில் பரப்பிவிடுகின்றன.இதன் விளைவு பாவங்கள் பரகசியப்படுத்துவது சகஜமாகிவிட்டது.ஆக மறுமை நாளில் இச் சமூக ஊடகங்கள் எமக்காக சார்பாகவா ? எதிராகவா சாட்சி சொல்லப் போகின்றது என்பதை கருத்திற் கொண்டு பயன்படுத்த சில வழிகாட்டல்களை இவ்உரை....

Image

ஈதுல் அழ்ஹாவின் சிறப்புக்களும் அதன் ஒழுங்குகளும் - (தமிழ்)

உலக எல்லா சமயத்திற்கும் பொருநாட்களும், திருநாட்களும் இருக்கின்ற போதிலும் முஸ்லீம்களைப் பொறுத்த மட்டில் அது அகீதாவுடன் தொடர்புபடுவதால் வித்தியாமாக் கொண்டாடப்பட வோண்டும்,ஏனையவர்களை விட்டும் வித்தியாசப்பட்டிருக்க வோண்டும். எமக்கென்று ஒழுங்குகள் இருக்கின்றன. முஸ்லிம்,முஸ்லிம் அல்லாத சகோதரர்களை கருத்திற் கொண்டு அமைவது மாத்திரமல்லாது மார்க்கம் தடுத்திருக்கும் ஆடல், பாடல் போன்றவற்றை மகிழ்ச்சிகரமான நாள் என்ற பெயரில் செய்வதும் ஹராமாகும் போன்ற ஒழுங்குகள் விளக்கப்படுகின்றன.

Image

துல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் - (தமிழ்)

அல்-குர்ஆனிலே அல்லாஹ் சத்தியம் செய்து கூறப்படுகின்ற பொருற்கள் திருப்பிப் பெற்றுக் கொள்ள முடியாத அளவு முக்கியத்துவமிக்கவை அதில் ஒன்றுதான் துல்-ஹிஜ்ஜாவின் பத்து நாட்கள், இந்த நாட்களைப் பொறுத்த வரை சத்தியம் குறிப்பாக்கி சொல்லப்பட்டிருக்கின்றது. இப்னு அப்பாஸ்(ரழி) குறிப்பிட்ட, அறியப்பட்ட நாட்களில் இபாதத் செய்வதை இது வழியுறுத்துகிறது எனக் குறிப்பிடுகின்றார்கள். அதிலும் திக்ர் எந்த நிலையிலும் செய்ய முடியுமானது என்பது பற்றி இங்கு தெளிவுபடுத்தப்படுகின்றது.

Image

துல்-ஹிஜ்ஜாவின் சிறப்பும் அதிலிருக்கும் உன்னத அமல்களும் - (தமிழ்)

அல்லாஹ் எம்மீது கொண்ட அன்பின் காரணமாக சில அமல்களையும் நாட்களையும் சிறப்பாக்கி தந்திருக்கின்றான். அப்படியான ஒன்று தான் துல்-ஹஜ் மாதத்தின் முதற் பத்து நாட்களாகும். குறிப்பாக மனிதன் தனது பாவக் கறைகளில் இருந்து தௌபாச் செய்து மீட்சிபெற வோண்டிய காலமாகும், அது மாத்திரமல்ல இக்காலத்திலே செய்யப்படுகின்ற அமல் ஜிகாத்தை விட முற்படுத்திக் கூறப்பட்டுள்ள அளவு சிறப்பு வாய்ந்தது. அவ்வாறான அமல்கள் என்ன என்பதை இவ் உரை தெளிவுபடுத்துகின்றது.

Image

ஓய்வு நேரத்தை எவ்வாறு கழிப்பது - (தமிழ்)

மனிதர்களுக்கு ஓய்வு தேவை. ஒரு முஸ்லிம் அவனது ஓய்வு காலத்தை எவ்வாறு கழிப்பது? உன்னுடைய இறைவனை வணங்குவதற்கு காலத்தை கழிப்பாயாக எனறும், அல்லாஹ்வை பற்றி சிந்தனையில் கழிப்பாயா என்றும் குர்ஆன் கூறுகிறது. அஷ் ஷெய்க் அப்துல் கரீம் அவர்களுடன் கருத்து பரிமாறல்

Image

மருத்துவத் துறைக்கு இஸ்லாத்தில் முக்கியத்துவம் - (தமிழ்)

ஆரோக்கியம் அல்லாஹ்வால் கொடுக்கப் பட்ட ரஹ்மாவாகும். அதனை பாதுகாக்க வேண்டும். நபி (ஸல்) சுன்னாவில் உடல் ஆரோக்கியத்துக்கு காட்டிய வழிகள், அனைத்து நோய்க்கும் நிவாரணம் உண்டு, நோயின் போது இஸ்லாம் அளிக்கும் சலுகை, ஷிர்க் மூலம் நிவாரணம் தேடும் பிழைகள் என்பன பற்றி வைத்தியர் அஷ் ஷெய்க் Dr. ரயிஸுத்தீன் அவர்களுடன் கருத்து பரிமாறல்

Image

ஆசிரியர்களின் பொறுப்புகளும் மாணவர்களின் கடமைகளும் - (தமிழ்)

மன்ஹஜ் அல் இஸ்லாம் கருத்துக் களம் – தஅவா பணியில் ஈடுபடும் அஷ் ஷெய்க் அப்துல் வதூத் ஜிப்ரி அவர்களுடன் கருத்து பரிமாறல். ஆசிரியர்; 1. பின்ளைகளை அமானிதமனாக நடத்தவேண்டும். 2. வேலையை திறமையாக செய்ய வேணடும். 3. வேலையை முழுமையாக செய்ய வேண்டும். 4. பல்வேரறு தரத்தை சார்ந்த மாணவர்கள் கவணம் செலுத்த வேண்டும். 5. ஆடைகள், ஒழுக்கங்கள் பற்றி கவணம்செலுத்த வேண்டும் மனணவர்கள்; ஆசிரியரை கண்ணியப்படுத்த வேண்டும்

Image

பெண்கள் கல்வியின் முக்கியத்துவம் - (தமிழ்)

மன்ஹஜ் அல் இஸ்லாம் கருத்துக் களம் – தாருல் இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் பெண்களுக்கான அரபுக் கல்லூரி அதிபர் அஷ் ஷெய்க் அஸ்கர் அவர்களுடன் கருத்து பரிமாறல்

Image

தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமொழிகள் பகுதி-4 - (தமிழ்)

போட்டியில் தெரிவு செய்யப்பட்ட 80நபி மொழிகள் குரலொலி வடிவில் பதியப்பட்டுள்ளது

Image

சுத்தம் சுகாதாரம் - (தமிழ்)

இஸ்லாத்தில் சுத்தம் மிக முக்கியமான ஒ அம்சமாகும். ஈமானின் பாதி சுத்தம் என்று இஸ்லாம் கூறுகிறது