×
Image

புறக்கணிக்கப்படும் மார்க்கக் கல்வி - (தமிழ்)

வணக்கத்தை சரியாக நிறைவேற்ற மார்க்கக் கல்வி இன்றியமையாதது, அல்குர்ஆன் நபிமொழிகளிலிருந்து அறிவின் சிறப்பு, அது பற்றி எழுதப்பட்ட நூல்கள், முஸ்லிம்கள் அறிவில் பின்தங்கக் காரணம், உலகக் கல்வியை விட மார்க்கக் கல்வியின் முக்கியத்துவம், அதனைப் புறக்கணிப்பதன் காரணங்களும் வெளிப்பாடுகளும்.

Image

ஈமானை இழக்கச் செய்யும் சில சிந்தனைகள் - (தமிழ்)

பிறப்பால் முஸ்லீம் என்ற காரணத்தால் இமான் தானாகவே வந்து அடையாது. ஈமானையும் கற்று அறிய வேண்டும். இல்லாவிடில் எம்மை அறியாமலே ஈமானை அழித்து விடும். சகுனம் பார்ப்பது, ஆந்தையின் சத்தம், தொற்று நோய் தானாக ஒருவரை வந்தடையும் போன்ற சிந்தனைகள் எமது ஈமானை அழிக்க வல்லது.

Image

கல்வியும் அறிஞர்களின் சிறப்பும் - (தமிழ்)

இக பரத்திலும் குறிப்பாக மறு உலகத்தில் ஜெயம் பெற மார்க்க கல்வியும் அதன்படி செயலாற்றுவதும் கடமை என்பதே நமது நம்பிக்கை. அல் குர்ஆனும் ஸுன்னாவும் தரும் கல்வியே மார்க்கக் கல்வியாகும். எனினும் அது கடல் போன்றது. எல்லோராலும் அதனை முழுமையாகக் கற்றுத் தேர முடியாது. எனினும் மார்க்கத்தின் அத்தியவசிய விடயங்களைக் கற்பது சகல முஸ்லிம்களின் மீதும் கடமை.

Image

மாணவர்களின் விடயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு - பகுதி 2 - (தமிழ்)

"கற்பிக்கும் போது பொறுமை, நிதானம், மென்மை, பணிவு போன்ற பண்புகளுடன் ஆசிரியர் நடந்து கொள்ளல் வேண்டும். மாணவர்களுக்கு முன்வைக்கும் தகவல்கள் சரியானது தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் மாணவர்களின் கருத்துக்களுக்கும், சிந்தனைகளுக்கும், கண்டுபிடிப்புக்களுக்கும் மதிப்பளித்து மென்மேலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதுடன், அவர்களுக்கு மத்தியில் நீதமாகவும் நடக்க வேண்டும்"

Image

மாணவர்களின் விடயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு - பகுதி 1 - (தமிழ்)

"ஆசிரியர் தனக்குக் கீழுள்ள மாணவர்களுக்குப் பொறுப்பாளர் கற்பித்தலின் போது உளத்தூய்மை அவசியம் மாணவர்களுக்குப் பயனுள்ளதைப் போதிக்க வேண்டும் மார்க்கம் அனுமதித்த நவீன தொடர்பு சாதனங்களைக் கற்பித்தலில் பயன்படுத்தல் இஸ்லாமிய சமூகம் பயனடையும் விதத்தில் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும்."

Image

சான்றோர் பாடசாலை பாகம் 2 - (தமிழ்)

இமாம் அஹ்மது அவர்களின் ஸுஹ்த் நூலிலிருந்து தொகக்கப்பட்ட இமாம் ஹஸன் பஸரி அவர்களின் ஐம்பது கூற்றுகள் மற்றும் அவற்றின் விளக்கங்கள்