×
இந்த புத்தகம் வெள்ளிக்கிழமையின் சிறப்பையும், அதன் ஒழுங்குகளையும் கூறுகிறது

    வெள்ளிக்கிழமையின் சிறப்பும், அதன் ஒழுங்குகளும்

    فضل يوم الجمعة وآدابه

    < tamil> تاميلي -

    ஆக்கம்: முஹம்மத் ரிஸ்மி (அப்பாஸி)

    —™

    மீள்பார்வை: எம். அஹ்மத் (அப்பாஸி)

    فضل يوم الجمعة وآدابه

    اسم المؤلف

    محمد رزمي جنيد

    —™

    مراجعة:

    أحمد بن محمد

    பொருளடக்கம்

    விடயம்

    பக்கம்

    1

    பொருளடக்கம்

    02

    2

    வெள்ளிக்கிழமை ஒரு பெரும் பேறே

    04

    3

    நறுமனம் பூசி நேரகாலத்துடன் செல்க

    05

    4

    நபிகளார் மீது ஸலவாத்துக் கூறுக

    08

    5

    ஜும்ஆவை தவறாது நிறை வேற்றுவீராக.

    09

    6

    தஹிய்யதுல் மஸ்ஜிதை நிறைவேற்றுவீராக

    10

    7

    மிம்பர் மேடை பயனுள்ளதாக அமையட்டும்

    12

    8

    அழகிய ஆடையோடு கதீபைக் காண்போம்.

    16

    9

    ஜும்ஆவின் சுன்னாவை நிறை வேற்றுவோம்.

    18

    ﭧ ﭨ ﭽ ﭑ ﭒ ﭓ ﭔ ﭕ ﭖ ﭗ ﭘ ﭙ ﭚ ﭛ ﭜ ﭝ ﭞ ﭟﭠ ﭡ ﭢ ﭣ ﭤ ﭥ ﭦ ﭧ الجمعة: ٩

    “ஈமான் கொண்டவர்களே! ஜும்ஆ வுடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.” என அல்லாஹ் கூறியுள்ளான்.

    அல்குர்ஆனின் அறுபத்திரண்டாவது சூறாவில் உள்ள ஒன்பதாவது வசனமே இது. இவ்வசனம் ஜும்ஆ நாளோடு சம்பந்தமான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. நாட்களில் சிறந்த வெள்ளிக்கிழமையை அல்லாஹ் இந்த உம்மத்துக்கு அருட்கொடையாக வழங்கினான்.

    عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: خَيْرُ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ يَوْمُ الجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ، وَفِيهِ أُدْخِلَ الجَنَّةَ، وَفِيهِ أُخْرِجَ مِنْهَا، وَلاَ تَقُومُ السَّاعَةُ إِلاَّ فِي يَوْمِ الجُمُعَةِ.(مسلم 854)

    “சூரியன் உதித்த நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை நாளாகும். அந்நாளில் தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அந்நாளில் தான் சுவனம் நுழைவிக்கப்பட்டார்கள். அந்நாளில் தான் அதிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். வெள்ளிக்கிழமை நாளிலேயன்றி மறுமை நாள் ஏற்படமாட்டாது” என நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).

    ஆதாரம் : முஸ்லிம் 854.

    வெள்ளிக்கிழமை ஒரு பெரும் பேறே

    வேதங்கள் வழங்கப்பட்டவர்களில் சிறந்த சமூகமான எமக்கு ஜும்ஆவுக்கு வழிகாட்டி அல்லாஹ் அருள்புரிந்துள்ளான். கடைசிச் சமூகமான நாம் மறுமையில் முதற்சமூகமாக இருப்போம்.

    عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ القِيَامَةِ، بَيْدَ أَنَّهُمْ أُوتُوا الكِتَابَ مِنْ قَبْلِنَا، ثُمَّ هَذَا يَوْمُهُمُ الَّذِي فُرِضَ عَلَيْهِمْ، فَاخْتَلَفُوا فِيهِ، فَهَدَانَا اللَّهُ، فَالنَّاسُ لَنَا فِيهِ تَبَعٌ اليَهُودُ غَدًا، وَالنَّصَارَى بَعْدَ غَدٍ» (البخاري)

    “நாம் இவ்வுலகில் இறுதியாக வந்தவர்கள், மறுமையில் முதன்மையாக இருப்பவர்கள். எனினும் எமக்கு முன் சென்ற ஒவ்வொரு கூட்டத்துக்கும் வேதம் கொடுக்கப்பட்டது. அவர்களுக்குப் பின்னர் தான் நாங்கள் கொடுக்கப்பட்டோம். மேலும் அல்லாஹ் எமக்கென விதித்து, வழிகாட்டிய நாளும் இதுதான். இவ்விடயத்தில் மனிதர்கள் எம்மைத் தான் தொடர்வார்கள். மேலும் யூதர்கள் நாளையும், கிறிஸ்தவர்கள் நாளை மறுநாளும் (புனித தினத்தை அனுஷ்டிப்பார்கள்) என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).

    ஆதாரம் : புஹாரி 876.

    நறுமனம் பூசி நேரகாலத்துடன் செல்க

    “சிறப்புமிகு இந்நாள் அமலுக்குரியதாகும். நல்ல ஆடை அணிந்து, மணம் பூசிக்கொண்டு ஒருவன் நேரகாலத்தோடு முதல் நேரத்திற்கு ஜும்ஆவுக்குச் சென்றால் ஒரு ஒட்டகத்தையும், இரண்டாவது நேரத்திற்கு செல்பவன் மாடொன்றையும், மூன்றாவது நேரத்திற்குச் செல்பவன் கொம்புள்ள செம்மறி ஆட்டையும், நான்காவது நேரத்திற்குச் செல்பவன் கோழி ஒன்றையும் குர்பான் கொடுத்த நன்மையை அடைந்து கொள்வான், மேலும் ஐந்தாவது நேரத்திற்குச் செல்பவன் முட்டை ஒன்றை தர்மம் செய்த நன்மையையும் பெற்றுக்கொள்வான். குத்பாவுக்காக இமாம் வெளிப்பட்டால் நன்மையை எழுதும் மலக்குகள் ஏடுகளை சுருட்டிக்கொண்டு குத்பாவை செவிமடுக்க நிற்பர்”. இந்த ஹதீஸ் இப்னுமாஜா தவிர்ந்த ஏனைய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

    அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).

    ஆதாரம் : புஹாரி 881, முஸ்லிம் 850.

    இதற்கு அஷ்ஷேஹ் உஸைமீன் (ரஹ்) போன்றவர்கள்: “மாரி, கோடை என்ற கால வித்தியாசங்களுக்கேற்ப இந்த நேரங்கள் வித்தியாசப்படும். கோடையில் பகற்பொழுது நீண்டு விடும், மாரியில் குறையும். எனவே சூரியன் உதித்த நேரம் முதல் இமாம் ஜும்ஆவுக்கு வரும் நேரத்துக்கு இடைப்பட்ட காலத்தை ஐந்தாகப் பிரித்தால் ஒவ்வொரு நேரத்தையும் புரிந்துகொள்ளலாம்” எனக் கூறுகின்றார். (ஷரஹ் ரியாளுஸ்ஸாலிஹீன் – அஷ்ஷேஹ் உதைமீன், 5-172)

    ஜும்ஆவுக்காக குளிப்பது மிகவும் ஏற்றமான சுன்னத் ஆகும். அவ்வாறு குளித்து நறுமனத்தோடு பள்ளிக்குச்செல்பவனது சிறிய பாவங்கள் அடுத்த ஜும்ஆ வரை மன்னிக்கப்படுகின்றன.

    عَنْ سَلْمَانَ الفَارِسِيِّ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الجُمُعَةِ، وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ، وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ، أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ، ثُمَّ يَخْرُجُ فَلاَ يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ، ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ، ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الإِمَامُ، إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الجُمُعَةِ الأُخْرَى» (البخاري وأحمد)

    எவரேனும் ஒருவர் வெள்ளிக்கிழமை நாளன்று குளித்து, சுத்தமாகி, தம்மிடமுள்ள வாசனைத் திரவியங்களைத் தடவிக்கொண்டு, பள்ளிவாசல் சென்று அங்கு அமர்ந்திருப்பவர்களைப் பிரித்துக்கொண்டு செல்லாமல், உள்ளே சென்று, தன்னால் முடியுமானததைத் தொழுது, இமாம் குத்பாவை ஆரம்பித்தால் அதனையும் செவியுறுகிறாரோ, இந்த ஜும்ஆவுக்கும், அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலுள்ள பாவங்கள் நிச்சயம் மன்னிக்கப்படும் என நபி ஸல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: ஸல்மானுல் பாரிஸி (ரழி)

    ஆதாரம்: புஹாரி 883

    நபிகளார் மீது ஸலவாத்துக் கூறுக

    வெள்ளிக்கிழமையன்று செய்யவேண்டிய மற்றுமொரு நன்மையான காரியம்தான் நபி ஸல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வது.

    عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ، وَفِيهِ النَّفْخَةُ، وَفِيهِ الصَّعْقَةُ، فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فِيهِ، فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ» (أبو داود، والنسائي ، وابن ماجة)

    நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை நாளாகும். அந்நாளில் என் மீது அதிகம் ஸலவாத்துச் சொல்லுங்கள். நிச்சயமாக உங்கள் ஸலவாத்து எனக்கு எடுத்துக்காட்டப்படும் என நபி ஸல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர் அவ்ஸ் பின் அவ்ஸ் ரழி

    ஆதாரம் அபூதாவுத் 1047, நஸாஈ 1374 இப்னு மாஜா 1085.

    ஜும்ஆவை தவறாது நிறைவேற்றுவீராக.

    இந்த அளவு சிறப்புமிகு ஜும்ஆ நாளை நாம் பயன்படுத்திக்கொள்ளாதது ஏன் ? ஜும்ஆவே தொழாதவர்களை விட பாக்கியம் கெட்டவர்கள் யாரும் இருக்க முடியாது. அத்தகையவர்களது உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிடுவான்.

    أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، وَأَبَا هُرَيْرَةَ حَدَّثَاهُ، أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ: «لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ، أَوْ لَيَخْتِمَنَّ اللهُ عَلَى قُلُوبِهِمْ، ثُمَّ لَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ»(مسلم)

    அபூ ஹுரைரா ரழி, மற்றும் இப்னு உமர் ரழி ஆகயோர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மின்பரில் நின்று பின்வருமாறு கூறியதை தாம் செவியுற்றதாக அறிவிக்கிறார்கள். “ஜும்ஆவை விடுவதை விட்டும் சிலர் தவிர்ந்து கொள்ளட்டும். அவ்வாறு ஜும்ஆவை விடுவோரின் உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிடுவான். பிறகு அவர்கள் அல்லாஹ்வை மறந்தவர்களாகவே வாழ்வர்”.

    ஆதாரம்: முஸ்லிம் 865.

    நோய், பிரயாணம் போன்ற நியாயமான காரணங்களின்றி ஜும்ஆவை விடுபவன் அல்லாஹ்வை மறந்து வாழ்பவனாவான்.

    தஹிய்யதுல் மஸ்ஜிதை நிறைவேற்றுவீராக

    ஜும்ஆவுக்கு பள்ளிக்கு வந்துவிட்டால் இமாம் மிம்பரில் ஏறும்வரை தொழுதல், குர்ஆன் ஓதுதல் போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும். பள்ளியினுள் நுழைந்தால் பள்ளிக்குரிய காணிக்கையான (தஹிய்யதுல் மஸ்ஜித்) இரண்டு ரக்அத்துக்களையும், பின்னர் தாம் விரும்பிய எத்தனை ரக்அத்துக்களையும் தொழலாம். குத்பா நிகழ்ந்துகொண்டிருக்கும் போது கூட பள்ளியினுள் நுழைபவர் தஹிய்யதுல் மஸ்ஜிதை நிறைவேற்ற வேண்டும்.

    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளிக்கிழமை குத்பாப் பிரசங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது பள்ளியினுள் நுழைந்த ஒருவர் குத்பாவை கேட்பதற்காக அமர்ந்துவிட்டார். இதைக் கண்ணுற்ற நபியவர்கள் அம்மனிதனை எழுந்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு அமருமாறு கட்டளையிட்டார்கள். “உங்களில் எவரும் பள்ளியினுள் நுழைந்துவிட்டால் இரண்டு ரக்அத்துக்கள் தொழாதவரை அங்கு அமர வேண்டாம்” என நபியவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அபூ கதாத (ரழி)

    ஆதாரம்: புஹாரி 1163, முஸ்லிம் 714

    பொதுவாகவே இது பள்ளியினுள் நுழைபவர் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். விசேடமாக வெள்ளிக்கிழமையில் அவசியம் நிறைவேற்ற வேண்டும். பள்ளியினுள் நுழையும் போது ஜமாத் நடைபெற்றுக்கொண்டிருந்தால் அதில் கலந்து கொள்வதன் மூலம் தஹிய்யதுல் மஸ்ஜித் என்ற கடமை நிறை வேறிவடும்.

    குத்பா நேரத்தில் கதைக்காதீர்

    ஜும்ஆவுக்கு வருபவர் குத்பாப் பிரசங்கத்தைக் கேட்பது கடமையாகும். அதை விட்டு வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதோ, பக்கத்தில் உள்ளவரோடு கதைப்பதோ கூடாத காரியமாகும்.

    عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ تَكَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ، فَهُوَ كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا، وَالَّذِي يَقُولُ لَهُ: أَنْصِتْ، لَيْسَ لَهُ جُمُعَةٌ " (أحمد)

    “வெள்ளிக்கிழமை நாளன்று இமாம் குத்பாப் பிரசங்கம் செய்யும் போது எவனேனும் மற்றவனோடு கதைப்பானாயின் அவன் ஏடு சுமந்த கழுதை போன்றாவான். கதைப்பவனைப் பார்த்து வாய்மூடி இருக்கச்சொல்பவனுக்கு ஜும்ஆவின் பலன் இல்லாது போய்விடும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி)

    ஆதாரம்: அஹ்மத் 2033.

    ஜும்ஆவுக்கு வருபவர்களில் எத்தனை பேர் குத்பாவில் கவனம் செலுத்துகிறார்கள்?! சிலர் செல்போன்களில் விளையாடிக்கொண்டும், கதைத்துக்கொண்டும் இருக்கின்றார்கள். வேறு சிலர் பள்ளிக்கு வெளியே நின்று கதைத்துக் கொண்டிருக்கின்றனர்.

    عن أَبَي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الجُمُعَةِ: أَنْصِتْ، وَالإِمَامُ يَخْطُبُ، فَقَدْ لَغَوْتَ " (البخاري)

    “இமாம் குத்பாப் பிரசங்கம் செய்துகொண்டிருக்கையில் மற்றவனை வாய்மூடி இருக்குமாறு கூறினாலும் நீர் ஜும்ஆவை வீணாக்கிவிட்டீர்” என நபி ஸல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி)

    ஆதாரம்: புஹாரி 934, முஸ்லிம் 851.

    மிம்பர் மேடை பயனுள்ளதாக அமையட்டும்

    தஃவாவுக்கென வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், இறுவெட்டுக்கள், இணையத்தளங்கள் போன்ற எத்தனையோ ஊடகங்கள் பயன்படுத்தப்படும் நவீன காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இவையெல்லாவற்றிலும் சிறந்த ஒன்றாக அல்லாஹ் அமைத்துத் தந்தது பள்ளிவாசல் மிம்பராகும். இது கதீப்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு அமானிதமாகும். இவ்விடம் மக்களுக்கு வழிகாட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ளது.

    அதில் அல்லாஹ்வினதும், ரஸூலினதும் செய்திகள் எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்பதற்காகத்தான் வழங்கப்பட்டுள்ளது. வாரத்தில் ஒரு விடுத்தம் மிம்பர் எனப்படும் புனித இடம் அலங்கரிக்கப்படுகின்றது. அங்கு ஆற்றப்படும் குத்பாவைக்கேட்டு ஈருலக விமோசனத்துக்குமுரிய வழியை அறிந்த கொள்ள மக்கள் அங்கு திரள்கின்றனர். அல்குர்ஆன் வசனங்கள் தன்னிலே ஒளிமயமானது., பிரகாசமானது. அவ்வாறே ஹதீஸ்களும் பிரகாசமிக்கவையாகும். அவையே ஜும்ஆவுக்கு சமூகமளிக்கும் மக்களுக்கு திருப்தியை வழங்குகின்றது. நேரிய வழியைக் காட்டுகின்றது. உள்ளத்திலே பதிகின்றது.

    இந்த அருமையான, உயர்ந்த நோக்கம் நிறைவேறுகின்றதா?! என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும். மிம்பர் மேடை தக்வாவைத் தூண்டவும், ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கவும் பயன்படும் மேடை என்பது மறக்கடிக்கப்பட்டு, பிறரை ஏசவும், திட்டித் தீர்க்கவும் உரிய ஒரு மேடையாக தற்போது பயன்படுத்தப்படுவதை நாம் மறுப்பதற்கில்லை. நல்ல குணங்களுக்கு வித்திடவேண்டிய இடம், மற்றோரை ஏசவும், திட்டவும் பயன்படுமாயின் அத்தகைய ஜும்ஆவுக்கு வருகை தருவோர் என்ன பயனைக் கண்டுகொள்வர் என்பதனை உரியவர்கள் சிந்திக்க வேண்டும்.

    பிரிந்திருந்த உள்ளங்களை ஒன்று சேர்ப்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உதவியது மிம்பர் மேடையாகும். துர்க்குணம் கொண்டோரை தூய குணம் கொண்டோராக மாற்றியதும் இம்மேடை தான். தாஇகளின் தலைவரான எமது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பரைப் பயன்படுத்திய முறைதான் அன்னாருக்கு துணை நின்றது என்பதை நாம் மறுக்க முடியாது.

    ﭙ ﭚ ﭛ ﭜ ﭝ ﭞﭟ ﭠ ﭡ ﭢ ﭣ ﭤ ﭥ ﭦ ﭧ آل عمران: ١٥٩

    “அல்லாஹ்வின் அருளின் காரணமாக அம்மக்களோடு கனிவாக நடந்துகொண்டீர். நீர் கடுகடுப்புள்ள கல்நெஞ்சனாக நடந்திருப்பின் உன் சூழலிலிருந்தே அவர்கள் விரண்டோடியிருப்பர்”. (ஆலு இம்ரான்:195) என அல்லாஹ் கூறுகிறான். மிம்பர் மேடை மற்றோரை திட்டித்தீர்க்கும் இடமாக பயன்படுத்தலாகாது. அவ்வாறே மிம்பர் பயன்படுத்தப்பட்ட ஒரு காலத்தையும் இஸ்லாமிய வரலாறு பதிவு செய்துள்ளது.

    கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களது ஆட்சிக்காலத்தில் பனூஉமய்யாக்களில் சில கதீப்மார் முன்னைய ஆட்சியாளர்களான அலி (ரழி) போன்றோரை வசைபாட ஆரம்பித்தனர். அதனை நிறுத்த வேண்டுமென விரும்பிய கலீபா அவர்கள் அவ்வாறு வசைபாடுவதற்குப் பதிலாக ஸூறா அந்நஹ்லின் 90வது வசனத்தை ஓதிவருமாறு பணித்தார்கள்.

    ﭻ ﭼ ﭽ ﭾ ﭿ ﮀ ﮁ ﮂ ﮃ ﮄ ﮅ ﮆ ﮇﮈ ﮉ ﮊ ﮋ النحل: ٩٠

    “நீங்கள் நற்போதனை பெறவேண்டும் என்பதற்காக நீங்கள் நேர்மையோடு நடக்க வேண்டும், மற்றவர்களுக்கு உபகாரம் செய்துவர வேண்டும், உறவினர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகின்றான். மேலும் வெறுக்கத்தக்க விடயங்களை விட்டும், அக்கிரமம் செய்வதிலிருந்தும் உங்களை தடுக்கின்றான்”. (சூறா அந்நஹ்ல்: 90)

    மிம்பர் எனும் சிறப்பான மேடை, அங்கு நிகழ்த்தப்படும் சிறப்பான போதனைகள், உபந்நியாசங்கள் என்பன மூலம் அலங்கரிக்கப்படுகின்றது. அலங்கரிப்பதற்கு அவலட்சனமானவை எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. நாற்றமானவை வைக்கப் படுவதில்லை. அருவருப்பானவை அவைக்கு கொண்டுவரப்படுவதில்லை.

    எனவே மிம்பர் மேடையை அலங்கரிப்போர் தாம் முன்வைக்கும் அனைத்தும் நல்லவையாக இருக்கவேண்டும் என்பதில் கரிசனையாக இருக்க வேண்டும். அழகிய முறையில் அவை எடுத்து வைக்கப்பட வேண்டும். ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கப்படும் இடத்திலிருந்து பிரிவினைக்கு வழிகோலப்படலாகாது. நம்முன்னோருக்கு பிரார்த்திக்க வேண்டியபோது அவர்களை சபிக்கலாகாது. உலமாக்கள் மத்தியில் பேசப்படவேண்டிய கருத்து முரண்பாடுகளை பாமர மக்கள் மத்தியில் பேசி சிக்களுக்குள்ளாக்கலாகாது.

    அழகிய ஆடையோடு கதீபைக் காண்போம்.

    பார்ப்போரைக் கவரும் அழகிய தோற்றமே கதீபின் தோற்றமாகும். தன் தொழிலுக்கென அணியும் ஆடை தவிர்ந்த மற்றொரு ஆடையை ஜும்ஆவுக்கென வைத்துக்கொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது இதனால் தானோ!!!.

    عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ عَلَى الْمِنْبَرِ فِي يَوْمِ الْجُمُعَةِ: «مَا عَلَى أَحَدِكُمْ لَوِ اشْتَرَى ثَوْبَيْنِ لِيَوْمِ الْجُمُعَةِ، سِوَى ثَوْبِ مِهْنَتِهِ» (أبو داود، وابن ماجة)

    “ஜும்மா நாளன்று நபியவர்கள் மின்பர் மீது பின்வரும் செய்தியை கூற, தாம் செவிமடுத்ததாக இப்னு ஸலாம் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: “உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கென இரண்டு ஆடைகளையும், தொழிலுக்காக இரண்டு ஆடைகளையும் ஏன் வாங்கி வைத்துக் கொள்ளக்கூடாது !!!”

    அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி).

    ஆதாரம்: அபூதாவுத் 1078, இப்னு மாஜா 1095

    ஜும்ஆவுக்கு வருவோர் தனியான ஆடை வைத்திருக்குமாறு கூறப்பட்டுள்ள போது கதீபின் ஆடை எவ்வளவு நல்லதாக இருக்க வேண்டும் என்பது விளங்கப்படவேண்டிய ஒன்றல்லவா !!!.

    நேரத்தைப் பயன்படுத்துவோம்.

    வெள்ளிக்கிழமை நாள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் நாள். அங்கீகரிக்கப்படும் அந்நேரம் இமாம் மிம்பரில் ஏரியதிலிருந்து தொழுகை முடியும் வரை உள்ள நேரம், இரண்டு குத்பாக்களுக்கிடையே இமாம் உட்காரும் நேரம் என பல கருத்துக்கள் கூறப்படுகின்றன.

    ஜும்ஆ நாளைப் பற்றி குறிப்பிட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அந்நாளிலே ஒரு நேரம் உண்டு. ஒரு முஸ்லிமான அடியான் நின்று வணங்கி எதைக் கேட்டாலும் அதனை அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை. அது ஒரு குறுகிய நேரமென சுட்டிக்காட்டினார்கள்.

    அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி)

    ஆதாரம்: புஹாரி 937, முஸ்லிம் 852.

    ஜும்ஆவின் சுன்னாவை நிறைவேற்றுவோம்.

    பர்ளான தொழுகைகளுக்கு முன், பின் சுன்னத்துத் தொழுகைகள் இருப்பதைப் போல் ஜும்ஆத் தொழுகைக்குப் பின்பும் இருக்கின்றது. இரண்டு ரக்அத்துக்களோ, நான்கு ரக்அத்துக்களோ தொழலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிலவேளை பள்ளியில் இரண்டு ரக்அத்துக்களும், வீட்டில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுபவராகவும் இருந்தார்களென வரலாறு கூறுகின்றது. அவர்கள் பின்வருமாறு கூறினார்கள், “எவரேனும் ஜும்ஆவுக்குப் பின் ஸுன்னத் தொழுவதாயின் நான்கு ரக்அத்துக்கள் தொழுது கொள்ளவும்”.

    அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி)

    ஆதாரம்: முஸ்லிம் 881.

    எனவே சிறந்த நாளொன்றைப் பெற்றுள்ள சமூகத்தவராகிய நாம் ஜும்ஆ நாளுக்கேயென்றுள்ள சகலவித ஒழுங்குகளையும், ஒழுக்கங்களையும் பேணுவதன் மூலமே ஜும்ஆ நாளை கண்ணியப்படுத்திய கூலியைப் பெற முடியும். குத்பாக்கள் நல்ல முறையில் அமைவதே சமூகத்துக்குப் பயனுள்ள ஒன்றாகும். அதுவே இக்காலத்தில் இன்றியமையாததுமாகும்.