×
மனித சமூகத்தில் ஒரு சாரார் நாம் சமாதானம் மேலோங்க பாடுபடுகிறோம், சீர் திருத்தம் ஏற்பட உழைக்கின்றோம் என வாதிட்டுக் கொண்டே அநியாயம், அக்கிரமம் மற்றும் நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டு குழப்பங்களை உருவாக்கு கின்றனர். இவர்கள் பற்றியே இறைவன் தனது அருள் மறையில் அறிவிக்கிறான்.:

    சமாதானத்தை வாதிடும் குழப்பவாதிகள்

    المفسدون الذين يدعون من أنهم من دعاة السلام

    < தமிழ் >

    A.J.M மக்தூம்

    اسم المؤلف: محمد مخدوم عبد الجبار

    —™

    Translator's name:

    Reviser's name:

    முஹம்மத் அமீன்

    ترجمة:

    مراجعة: محمد أمين

    சமாதானத்தை வாதிடும் குழப்பவாதிகள்

    சமாதானத்தை வாதிடும் குழப்பவாதிகள்

    – A.J.M மக்தூம் -

    மனித சமூகத்தில் ஒரு சாரார் நாம் சமாதானம் மேலோங்க பாடுபடுகிறோம், சீர் திருத்தம் ஏற்பட உழைக்கின்றோம் என வாதிட்டுக் கொண்டே அநியாயம், அக்கிரமம் மற்றும் நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டு குழப்பங்களை உருவாக்குகின்றனர். இவர்கள் பற்றியே இறைவன் தனது அருள் மறையில் பின்வருமாறு கூறுகிறான்:

    وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ، أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَٰكِن لَّا يَشْعُرُونَ (سورة البقرة 11،12)

    “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை. (அல் குர்ஆன் 2:11,12)

    குழப்பம் செய்தல், நாசம் விளைவித்தல் மற்றும் சீர்த்திருத்தம், சமாதானம் போன்ற செயற்பாடுகளில் மனிதர்களின் பார்வை வித்தியாசமானதாக இருப்பதை அவதானிக்கின்றோம். முரண்பாடுகளுடைய அவர்களின் புரிதலை அடிப்படையாக வைத்து குழப்பம் மற்றும் சீர்த்திருத்தம் போன்றவற்றுக்கு அவர்கள் இடும் வரையறைகளும் முரண்பட்டதாகவே அமைந்து விடுகிறது.

    இது இறைவனின் போதனைகளை பொருட்படுத்தாது மனோ இச்சைக்கும், மனித புத்திக்கும் முழுமையாக கட்டுப்பட்டு அது நல்லதென கருதுவதை நல்லதென்றும், அது தீயதாக கருதுவதை தீமையாக எண்ணுவதுமே இதற்கு அடிப்படை காரணமாக விளங்குகிறது. இதன் விளைவால்தான் அடிப்படைகள் அற்ற பல்வேறு கருத்துக்கள் உருவாகி சமூகத்தில் முரண்பாடுகள், பிணக்குகள், குழப்பங்கள் ஏற்படுகின்றன. சமாதானம் சீர்குலைந்து போய்விடுகிறது.

    எனவேதான் இஸ்லாம் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முகமாக குழப்பம் மற்றும் சமாதானம், நாசம் மற்றும் சீர்த்திருத்தம், தீயது மற்றும் நல்லது, ஹராம் மற்றும் ஹலால் போன்றவற்றை பிரித்தறிவிக்கும் பொறுப்பை முழுமையாக தனது கையில் வைத்துள்ளது. அதில் மனித புத்திக்கு எந்த வகையிலும் இடம் கிடையாது. இதன் மூலம் இஸ்லாத்தில் குறித்த பிரச்சனைக்கான வாயில் முழுமையாக மூடப்பட்டுள்ளது என்பதை பின்வரும் நபி மொழி ஊடாக மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

    عَن أَبي ثَعْلبةَ الْخُشَنِيِّ جُرثُومِ بنِ ناشرٍ- رَضِي اللهُ عَنْهُ- عَن رسولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قالَ: ((إنَّ اللهَ تَعَالى فَرَضَ فَرَائِضَ فَلاَ تُضَيِّعُوهَا، وَحَدَّ حُدُودًا فَلاَ تَعْتَدُوهَا، وَحَرَّمَ أَشْيَاءَ فَلاَ تَنْتَهِكُوهَا، وَسَكَتَ عَنْ أَشْيَاءَ رَحْمَةً لَكُمْ غَيْرَ نِسْيَانٍ فَلاَ تَبْحَثُوا عَنْها)). حديثٌ حسنٌ رواه الدَّارَقُطْنِيُّ وغيرُه.

    “இறைவன் சில கடமைகளை விதித்திருக்கின்றான்; அவற்றை (செயற்படுத்தாது) வீணடித்து விடாதீர்கள். அவன் நமக்கு எல்லைகளை நிர்ணயித்திருக்கின்றான். ஆகவே அவைகளைக் கடந்து (மீறிச்) செல்லாதீர்கள். அவன் நமக்கு சிலவற்றை (ஹாராமாக ஆக்கி) தடை செய்திருக்கின்றான். ஆகவே அவற்றை மீறாதீர்கள். சில விஷயங்களில் அவன் மௌனமாக இருக்கின்றான். இது அவன் மறந்து விட்டதனால் அல்ல, அவன் நம் பால் கொண்ட அன்பினால் (அனுமதித்துள்ளான்). ஆகவே அவைகளைக் குறித்து துருவித் துருவி ஆராயாதீர்கள்” என அபூ தஃலபா அல் குஷனீ ஜுர்தூம் இப்னு நாஷிர் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் மொழிந்ததாக அறிவிக்கின்றார்கள். (நூல்: தாரகுத்னி)

    இவ்வுலகில் நிம்மதி, சந்தோஷம், சமாதானம், அமைதி நிறைந்த வாழ்வை அடைந்து கொள்ள வேண்டும் என்றால் இறைவன் அமைத்துள்ள வழிமுறைகள் ஊடாகவே அடைந்து கொள்ள வேண்டும். இதற்கு மாற்றமான வழிவகைகள் ஊடாக அமைதியை தேட முயற்சிக்கும் போது குழப்பங்களே உருவாகும். நிம்மதி அற்ற வாழ்வுக்கு வழிகோலுகிறது.

    பின்வரும் இறை வசனங்கள் ஊடாக இதனை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

    ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ(سورة البقرة 229)

    இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்; ஆகையால் அவற்றை மீறாதீர்கள்; எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள். (அல் குர்ஆன் 2:229)

    تِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ. وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُّهِينٌ (سورة النساء 13، 14)

    இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும்.

    எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. ( அல் குர்ஆன் 4:13, 14)

    وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ، قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَىٰ وَقَدْ كُنتُ بَصِيرًا، قَالَ كَذَٰلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا ۖ وَكَذَٰلِكَ الْيَوْمَ تُنسَىٰ، وَكَذَٰلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِن بِآيَاتِ رَبِّهِ ۚ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَىٰ (سورة طه 124,125,126,127)

    “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.

    (அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.

    (அதற்கு இறைவன்,) “இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான்.

    ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும். ( அல் குர்ஆன் 20: 124, 125, 126, 127)

    إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ ۗ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ ۗ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ، ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ، وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا ۚ إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِّنَ الْمُحْسِنِينَ (سورة الأعراف 54، 55، 56)

    நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

    (ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.

    (மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது. (அல் குர்ஆன் 7:54, 55, 56)

    قُلْ أَرَأَيْتُم مَّا أَنزَلَ اللَّهُ لَكُم مِّن رِّزْقٍ فَجَعَلْتُم مِّنْهُ حَرَامًا وَحَلَالًا قُلْ آللَّهُ أَذِنَ لَكُمْ ۖ أَمْ عَلَى اللَّهِ تَفْتَرُونَ (سورة يونس 59)

    (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?” (அல் குர்ஆன் 10: 59)

    இறைவன் இவ்வுலகில் மனிதர்கள் நிம்மதியை அடைந்து கொள்ளும் பொருட்டு பல்வேறு வரையறைகளை விதித்துள்ளான். அவற்றை மீறி தனது மனோ இச்சைப்படி செயற்படுகின்றவர்கள் வரம்பு மீறியவர்கள். இவர்களே உலகில் குழப்பம் உண்டாக்குகின்றவர்கள். இவர்கள் விடயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது மிக மிக அவசியம்.

    மனித சமூகத்தில் தோன்றும் எந்த விதமான முரண்பாடுகளாக இருந்தாலும் அவை சமூக பிரிவினைக்கு வழிகோல முன் அல் குர்ஆன், சுன்னாவுடன் அவற்றை அலசி அதில் சரி எது? பிழை எது? என்பதை புரிந்து கொண்டு சமூக கட்டமைப்பையும், சமாதானத்தையும் பாதுகாப்பதன் அவசியத்தை அல் குர்ஆன் பின் வருமாறு எடுத்துரைக்கிறது.

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا (سورة النساء 59)

    நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல் குர்ஆன் 4:59)

    அகிலத்தின் இரட்சகனாகிய அல்லாஹ்வின் மார்க்கத்தை புறக்கணித்து வாழ்பவர்களே குழப்பத்தை சமாதானமாகவும், ஹராத்தை ஹலாலாகவும், தீயதை நல்லதாகவும் கருதி செயற்படுகின்றனர். இது இவ்வாறிருக்க முஸ்லிம்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு கூட்டம் அன்று தொட்டு இன்று வரை அல்லாஹ்வின் மார்க்கத்தோடு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத அவர்களின் கருத்துக்களையும், கட்டுக் கதைகளையும் பரப்பி வருகின்றனர். இவர்களே முஸ்லிம் பெயர் தாங்கிகளாக சமூகத்தில் வளம்வரும் நயவஞ்சகர் கூட்டம். அல் குர்ஆன் பல இடங்களின் இவர்களின் முகத்திரையை கிழித்து இவர்களின் உண்மை முகத்தை தெளிவு படுத்தத் தவறவில்லை. இவர்களே சமாதானத்தை வாதிடும் குழப்பவாதிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ، يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ، فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ، وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ، أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَٰكِن لَّا يَشْعُرُونَ (سورة البقرة : 8، 9، 10، 11، 12)

    இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.

    (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.

    அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.

    “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.

    நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை. (அல் குர்ஆன் 2:8, 9, 10, 11, 12)

    எனவே அல் குர்ஆன் மற்றும் சுன்னாவோடு இவர்களின் நிலைகளை அலசிப் பார்த்தால் இவர்களின் உண்மை முகத்தை மிக எளிதில் புரிந்து கொள்ளலாம். இவர்களின் மூலம் ஏற்படும் ஆபத்து மிகவும் பாரதூரமானது என்பதை புரிந்து கொண்டு கருமமாற்றுவது அவசியமாகும். நயவஞ்சகர்களின் நடவடிக்கைகள் எப்படியிருக்கும்? அவர்களின் குணாதிசயங்கள் எவ்வாறு அமைந்திருக்கும்? என்பதையெல்லாம் அல் குர்ஆன் மற்றும் சுன்னாவில் வெட்ட வெளிச்சமாக காணலாம்.

    குழப்ப வாதிகள் எப்போதும் முற்றுப் பெறுவதில்லை; அவர்கள் சமூகத்துக்கு ஆபத்தானவர்களே, அதிலும் அவர்கள் தாம் சீர்திருத்த வாதிகள் என நம்பிக் கொண்டு நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுவது மேலும் ஆபத்தானதாக அமைந்து விடுகிறது. இவை எல்லாவற்றை விடவும் உண்மையான சீர்திருத்த வாதிகள் தமது பங்களிப்பை செய்யாது செயலிழந்து நிற்பது மென்மேலும் ஆபத்தானதாக அமைந்து விடும். இதனையே அல் குர்ஆன் பின்வருமாறு தெளிவு படுத்துகிறது.

    وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّفَسَدَتِ الْأَرْضُ وَلَٰكِنَّ اللَّهَ ذُو فَضْلٍ عَلَى الْعَالَمِينَ (سورة البقرة 251)

    அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான். (அல் குர்ஆன் 2:251)

    الَّذِينَ أُخْرِجُوا مِن دِيَارِهِم بِغَيْرِ حَقٍّ إِلَّا أَن يَقُولُوا رَبُّنَا اللَّهُ ۗ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا ۗ وَلَيَنصُرَنَّ اللَّهُ مَن يَنصُرُهُ ۗ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ (سورة حج 40)

    இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடமாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 22:40)