×
இறைவனின் திருப்தியை மாத்திரம் நோக்காகக் கொண்டு தமது காரியங்களையும் அமைத்துக் கொள்ளும் இறை நேசர்கள் இருக்கின்றனர். எந்த அற்ப காரியமானாலும் அதனை பிறருக்கு காட்ட வேண்டும், அவர்கள் அதனை புகழ வேண்டும் என எதிர்பார்க்கும் புகழ் விரும்பிகளும் உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். தனக்காக எந்த அற்ப காரியத்தை செய்தாலும் அதற்காக அபரிமிதமான அருட் கொடைகளையும், நன்மைகளையும் இறைவன் வழங்குகின்றான். ஆனால் புகழுக்காக அல்லது உலகின் அற்ப பொருளுக்காக எந்த நல்லறத்தை செய்தாலும் அதற்கு கூலி வழங்குவதற்கு பதிலாக கடும் தண்டனையே அல்லாஹ் தருகிறான்.

    மறுமையில் உலக பிரபலங்களின் நிலை…

    أحوال المرائيين في الآخرة

    < தமிழ் >

    تاميلية

    A.J.M.மக்தூம்

    اسم المؤلف: محمد مخدوم عبد الجبار

    —™

    Translator's name:

    Reviser's name:

    முஹம்மத் அமீன்

    ترجمة:

    مراجعة: محمد أمين

    மறுமையில் உலக பிரபலங்களின் நிலை

    மறுமையில் உலக பிரபலங்களின் நிலை…

    A.J.M.மக்தூம்

    ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரையில் தனது வாழ்வை முழுமையாக இறைவனுக்காக அர்ப்பணித்து செயற்பட வேண்டும். இறைவன் தனது நல்லடியார்களுக்கு மறுமையில் தயார் படுத்தி வைத்துள்ள அபரிமிதமான அருட்கொடைகளை அடைந்து கொள்ள தனது அனைத்து காரியங்களையும் இறை பொருத்தத்தை மாத்திரம் நாடி, செயலாற்ற வேண்டும். உலகின் அற்ப இன்பங்களை இலக்காக கொண்டு செயற்பட கூடாது.

    இறைவனின் திருப்தியை மாத்திரம் நோக்காகக் கொண்டு தமது அனைத்து காரியங்களையும் அமைத்துக் கொள்ளும் இறை நேசர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அதேவேளை, எந்த அற்ப காரியமானாலும் அதனை பிறருக்கு காட்ட வேண்டும், அவர்கள் அதனை புகழ வேண்டும் என எதிர்பார்க்கும் புகழ் விரும்பிகள் அனேக பேர் இன்று உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். தனக்காக எந்த அற்ப காரியத்தை செய்தாலும் அதற்காக அபரிமிதமான அருட் கொடைகளையும், நன்மைகளையும் இறைவன் வழங்குகின்றான். அதேவேளை, பிறருக்காக, புகழுக்காக அல்லது உலகின் அற்ப பொருளுக்காக எவ்வளவு பெரிய நல்லறத்தை செய்தாலும் அதற்கு கூலி வழங்குவதற்கு பதிலாக கடும் தண்டனையே தருகிறான். இதனையே பின்வரும் நபி மொழி எமக்கு எடுத்துக் கூறுகிறது.

    عن سليمان بن يسار قال: تفرق الناس عن أبي هريرة فقال له ناتل أهل الشام: أيها الشيخ حدثنا حديثاً سمعته من رسول الله صلى الله عليه وسلم، قال: نعم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ((إن أول الناس يقضى يوم القيامة عليه رجل استشهد، فأُتى به، فعرَّفه نعمه فعرفها، قال: فما عملت فيها؟ قال: قاتلت فيك حتى استشهدت، قال: كذبت، ولكنك قاتلت لأن يقال جريء، فقد قيل، ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار، ورجل تعلم العلم وعلَّمه، وقرأ القرآن، فأُتي به فعرَّفه نعمه فعرفها، قال: فما عملت فيها؟ قال: تعلمت العلم وعلمته، وقرأت فيك القرآن، قال: كذبت ولكنك تعلمت العلم ليقال عالم، وقرأت القرآن ليقال هو قارئ، فقد قيل، ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار.

    ورجل وسَّع الله عليه، وأعطاه من أصناف المال كله، فأُتى به فعرَّفه نعمه فعرفها، قال: فما عملت فيها؟ قال: ما تركت من سبيل تحب أن ينفق فيها إلا أنفقت فيها لك، قال: كذبت، ولكنك فعلت ليقال هو جواد فقد قيل، ثم أمر به فسحب على وجهه ثم ألقي في النار)) رواه مسلم (3527).

    சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது, ஒருமுறை அபூஹுரைரா (றலி) அவர்களிடம் மக்கள் கூடி, அவை கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், “பெரியவரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார்.

    அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ஆம் தெரிவிக்கிறேன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்:

    மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தனக்குப் பாதகமாக தீர்ப்பு வழங்கப்படும் (மூன்று பேரில்) ஒருவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் ஆவார் . அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும் போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் ஏற்றுக் கொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல் பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “இறைவா! உனக்காக நான் (அறப் போரில் ஈடுபட்டு) என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார்.

    இறைவன், “இல்லை நீ பொய் சொல்கிறாய், (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை) மாறாக “மாவீரன்” என்று (மக்களிடையே) பேசப் படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு (உலகிலேயே) சொல்லப் பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது) என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

    பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான மார்க்க அறிஞர் ஒருவர் இறைவனிடம் கொண்டு வரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் ஏற்றுக் கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல் பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், ” இறைவா! கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.

    அதற்கு இறைவன், “இல்லை நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை) “அறிஞர்” என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; “காரி” என மக்களிடையே பேசப் படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு (உலகிலேயே) சொல்லப் பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறி விட்டது) என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

    பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கப்பட்டிருந்த பெரிய செல்வந்தர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் ஏற்றுக் கொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்” என்று பதிலளிப்பார்.

    அதற்கு இறைவன், ” இல்லை, நீ பொய் சொல்கிறாய் “இவர் ஒரு புரவலர்” (கொடை வள்ளல்) என மக்களிடையே பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு செலவு செய்தாய் . உன் எண்ணப்படி அவ்வாறு (உலகிலேயே) சொல்லப்பட்டு விட்டது (உனது எண்ணம் நிறைவேறி விட்டது) என்று கூறி விடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார் (ஆதாரம்: முஸ்லிம்).

    எந்த நற்காரியத்தை செய்யும் போதும் இஃஹ்லாஸ் எனும் மனத் தூய்மையுடன் நிறைவேற்ற வேண்டும். இறைவனிடமே நன்மைகளை எதிர்பார்க்க வேண்டும். இஃஹ்லாஸ் இன்றி நிறைவேற்றப்படும் எவ்வளவு பெரிய அமலுக்கும் மறுமையில் சிறிய கூலியேனும் கிடைக்காது. மாற்றமாக தண்டனையையே அந்த செயல்கள் தேடித் தரும் என்பதையே இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.

    இறைவன் தனது அருள்மறையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்,

    مَن كَانَ يُرِيدُ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لَا يُبْخَسُونَ

    எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். (11:15 )

    أُولَٰئِكَ الَّذِينَ لَيْسَ لَهُمْ فِي الْآخِرَةِ إِلَّا النَّارُ ۖ وَحَبِطَ مَا صَنَعُوا فِيهَا وَبَاطِلٌ مَّا كَانُوا يَعْمَلُونَ. (سورة هود 15، 16)

    இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே! (11:16)

    புகழுக்காக, பிறருக்கு காட்டுவதற்காக நல்லறங்கள் செய்வது உண்மையில் ஒரு இறைவிசுவாசியின் பண்பல்ல. அது நயவஞ்சகர்களின் பண்பு என்பதை பின்வரும் இறை வசனங்கள் எடுத்துரைக்கின்றன.

    إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَىٰ يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا (سورة النساء 142)

    நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை ஏமாற்றி (அவர்களின் உண்மை நிலையை காட்டி) விடுகிறான், தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளி என) காண்பிப்பதற்காகவே (தொழுகின்றார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை. (4:142 )

    فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ

    இன்னும், (உள்ளத்தில் நயவஞ்சகத்தை மறைத்துக் கொண்டு வெளியில் தொழுகையாளிகள் போன்று காட்டுவதற்காக தொழும்) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

    الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ

    அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.

    الَّذِينَ هُمْ يُرَاءُونَ

    அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.

    وَيَمْنَعُونَ الْمَاعُونَ

    மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள். (107:4, 5, 6, 7)

    எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது திருப் பொருத்தத்தை நாடி நல்லறங்கள் செய்து நற்கூலிகளை வென்ற நல்லடியார்களின் கூட்டத்தில் நம்மனைவரையும் சேர்த்தருள்வானாக... ஆமீன்