நபித் தோழர்களை நாம் நேசிப்பது ஏன்?
பிரிவுகள்
Full Description
நபித் தோழர்களை நாம் நேசிப்பது ஏன்?
] Tamil – தமிழ் –[ تاميلي
M.S.M.இம்தியாஸ் யூசுப்
2014 - 1436
حـب الصـحابة
رضي الله عنهم و رضوا عنه
« باللغة التاميلية »
محمد إمتياز يوسف
2014- 1436
நபித் தோழர்களை நாம் நேசிப்பது ஏன்?
எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப்
நபித்தோழர்கள் சஹாபாக்கள் என அழைக்கப் படுவர். அல்லாஹ் தனது மார்க்கத்தை நிலை நாட்டுவதற்கு தேர்ந்தெடுத்த மக்களே சஹாபாக்களாவர். அவர்களை பண்படுத்தி தூய்மைப்படுத்தி சுவனத்திற்குரிய மக்களா கவும் அல்லாஹ் ஆக்கினான். இந்த உம்மதத்தின் முதலாவது முஃமின்களாக்கி அருள் புரிந்தான். அவர்களை தன்னுடைய நபி முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு தோழர் களாக்கினான்.
சஹாபாக்கள் இந்த மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காக பெரும் தியாகங்களை செய்தவர்கள், பல சித்திர வதைகளை சுமந்தவர்கள். பல இன்னல்களை அனுபவித்த வர்கள். உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்கள். அகதிகளாக அனாதைகளாக ஆனவர்கள். உலக இன்பங்களை இழந்து மறுமையின் நலனுக்காக வாழ்ந்தவர்கள்.
கணவனை இழந்த விதவைகளாக தந்தையை இழந்த அனாதைகளாக சொந்தங்களை இழந்த அனாதரவற்ற வர்களாக வாழ்ந்தவர்கள்.
சஹாபா பெண்களும் ஆண்களுக்கு நிகராகவே தியாகங்களை செய்தவர்கள். தங்களது கணவன் மற்றும் பிள்ளைகளை இஸ்லாத்தை நிலை நாட்டவே ஊக்குவித்து வளர்த்தவர்கள்.
தங்கள் கணவர்களையும் பிள்ளைகளையும் அல்லாஹ்வுக்காக உயிர்தியாகங்களை செய்ய ஆர்வமூட்டியவர்கள். விதவைகளாகி விட்டோம் பிள்ளைகள் அனாதைகளாகி விட்டார்கள் என்று சற்றும் கவலைக் கொள்ளாதவர்கள்.
கலப்பற்ற தூய எண்ணத்துடன் வஹியை சுமந்து நடமாடியதுடன் தங்கள் வாழ்க்கை யிலும் நிழலாடச் செய்தவர்கள்.
சஹாபாபக்களின் தியாகங்கள்உண்மை யானது, அவர்களது இறைநம்பிக்கை அழுக்கற்றது. அவர்களது தோழமை உறுதியானதும் நேர்மையானதும் என்பதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.
அல்லாஹ் அந்த சஹாபாக்களை ஈமானுடன் வாழ்ந்து ஈமானுடன் மரணிக்கவும் செய்தான். அவர்கள் மூலமாக பல வெற்றிகளை அல்லாஹ் கொடுத்து இந்த மார்க்கத்தை உலக மக்களிடம் கொண்டு சேர்க்கவும் செய்தான்.
சஹாபாக்கள் உயிர் வாழும் போதே அவர் களை சிறந்த சமூகமாக பிரகடனப்படுத்தி அவர்களது நம்பகத் தன்மையை அல்லாஹ் உலகறியச் செய்தான்.
சஹாபாக்களை நேசிப்பது ஈமானின் அடிப் படையாகும் அவர்களுக்காகப் பிரார்த்திப்பதும் கடமையாகும். அவர்களை தூற்றுவது, இம்சிப்பது, கோபிப்பது பாவமாகும். அது அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும் நோவினை செய்வதற்கு சமமாகும்.
சஹாபாக்களிடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் கருத்து வேறுபாடுகள் குறித்து நாம் விசாரிக்கப் படமாட்டோம். அவர்களது விவகாரங்களை அல்லாஹ்விடம் விட்டு விடுவோம். அவர்களுக் குரிய மரியாதையையும் கண்ணியத்தையும் முழுமையாகி வழங்கி அவர்களுக்காக துஆ செய்வோம். அவர்களை குறித்து அல்லாஹ் தன்னுடைய குர்ஆனிலும், நபி(ஸல்) அவர்கள் தங்களுடைய பொன்மொழிகளிலும் போற்றி புகழ்ந்துள்ளார்கள். இந்த அடிப்படையின் ஒவ் வொன்றையும் ஒவ்வொரு முஸ்லிமும் படிப்பது கட்டாயமாகும்.
சிறந்த சமூகம்
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்ட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள். (ஏனெனில் நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள். தீமையை தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ் வை நம்பிக்கை கொள்கின்றீர்கள். 3:110
பொருந்திக் கொள்ளப்பட்டவர்கள்.
لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا
நபியே நம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்தடியில் உடன்படிக்கை எடுத்த போது நிச்சயமாக அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்து அவர்கள் மீது அமைதியை இறக்கி வைத்தான். மேலும் அவன் அவர்களுக்கு சமீபமான வெற்றியையும் வழங்கினான். (48:18)
முஃமின்கள் என கூறப்பட்டவர்கள்
وَإِنْ يُرِيدُوا أَنْ يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ
அவர்கள் உமக்கு சதி செய்ய நாடினால் நிச்சயமாக அல்லாஹ்வே உமக்கு போதுமான வன். அவனே தனது உதவியினைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் உம்மை பலப்படுத்தினான்.(8:62)
வெற்றியாளர்கள் \ சுவனத்திற்குரியவர்கள்.
لَكِنِ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ جَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ وَأُولَئِكَ لَهُمُ الْخَيْرَاتُ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ أَعَدَّ اللَّهُ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
எனினும் இத்தூதரும் அவருடன் இருக்கும் நம்பிக்கை கொண்டோரும் தமது செல்வங்க ளாலும் தமது உயிர்களாலும் அறப்போர் புரிகின்றனர். அவர்களுக்கே (எண்ணற்ற) நன்மைகள் இருக்கின்றன. மேலும் அவர்களே வெற்றியாளர்கள்.
அல்லாஹ் அவர்களுக்கு சுவனச் சோலைகளை தயார் செய்துவைத்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். (9:88 -89)
உண்மையான தியாகிகள்
وَالَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آوَوْا وَنَصَرُوا أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
எவர்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போரும் புரிந்தனரோ அவர்களும் எவர்கள் புகழிடம் அளித்து உதவியும் செய்தார்களோ அவர் களுமே உண்மையான நம்பிக்கையாளர் களாவர். அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணிய மான ஆகாரமும் உண்டு.(8:74)
அல்லாஹ்வின் திருப்தியை நோக்கமாகக் கொண்டவர்கள்
لِلْفُقَرَاءِ الْمُهَاجِرِينَ الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ وَأَمْوَالِهِمْ يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا وَيَنْصُرُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ
وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
தமது இல்லங்களையும், தமது செல்வங்க ளையும் விட்டும் வெளியேற்றப்பட்ட ஏழை முஹாஜிர் களுக்கும் (பங்குண்டு.) அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் பொருத்தத்தையும் நாடி அல்லாஹ் வுக்கும் அவனது தூதருக்கும் உதவி செய்கின்றனர். அவர்கள் தாம் உண்மையாளர்கள்.
அவர்களு(டைய வருகை)க்கு முன்னரே (மதீனாவில்) இருப்பிடத்தையும், ஈமானையும் அமைத்துக் கொண்டோருக்கும் (பங்குண்டு.) அவர்கள் தம்மிடம் ஹிஜ்ரத் செய்து வந்தோரை நேசிப்பார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டவை குறித்து தமது உள்ளங்களில் எவ்வித காழ்ப்புணர்வும் கொள்ளமாட்டார்கள். மேலும், தமக்குத் தேவையிருந்த போதும் தம்மை விட (அவர்களையே) முற்படுத்துவார்கள். எவர்கள் தமது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப் படுகின்றனரோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.(59:8-9)
வெற்றியாளர்கள்.
الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ أَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللَّهِ وَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ
எவர்கள் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, அல்லாஹ்வின் பாதையில் தங்களது செல்வங்களாலும், தங்களது உயிர்களாலும், அறப்போர் புரிந்தார்களோ அவர்களே அல்லாஹ் விடத்தில் மகத்தான அந்தஸ்துக்குரி யவர்கள். மேலும், அவர்கள்தான் வெற்றி யாளர் களாவர்.(9:20)
அல்லாஹ்வின் திருப்தியை பெற்றவர்கள்.
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
மேலும், முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளில் (ஈமான் கொள்வதில்) முதலாமவர்களாக முந்திக் கொண்டோரையும், அவர்களை நல்ல முறையில் பின்பற்றி யோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். அவன் அவர்களுக்குச் சுவனச் சோலைகளைத் தயார் செய்து வைத்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண் டிருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத் தான வெற்றியாகும்.(9:100)
பாவமன்னிப்பை பெற்றவர்கள்.
لَقَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍ مِنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ إِنَّهُ بِهِمْ رَءُوفٌ رَحِيمٌ
அல்லாஹ் இந்த நபியையும், முஹாஜிர் களையும் அன்ஸாரிகளையும் மன்னித்து விட்டான். அவர்கள் தங்களிலுள்ள ஒரு சாராரின் உள்ளங்கள் தடுமாறும் நிலையை அண்மித்த பின்னரும், கஷ்டமான நேரத்தில் அவரைப் பின்பற்றினர். பின்னரும் அவர்களை அவன் மன்னித்தான். நிச்சயமாக அவன் அவர்களுடன் பெரும் கருணையாளன் நிகரற்ற அன்புடையவன். (9:117)
அல்லாஹ்வின் நற்செய்தியை பெற்றவர்கள்.
الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ أَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللَّهِ وَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ
எவர்கள் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, அல்லாஹ்வின் பாதையில் தங்களது செல்வங்க ளாலும், தங்களது உயிர்களாலும், அறப் போர் புரிந்தார்களோ அவர்களே அல்லாஹ்விடத்தில் மகத்தான அந்தஸ்துக் குரியவர்கள். மேலும், அவர்கள் தான் வெற்றியாளர் களாவர்.(9:20)
இறையச்சமுடையவர்கள்.
إِذْ جَعَلَ الَّذِينَ كَفَرُوا فِي قُلُوبِهِمُ الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ وَأَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوَى وَكَانُوا أَحَقَّ بِهَا وَأَهْلَهَا وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
நிராகரித்தோர், தமது உள்ளங்களில் அறியாமைக் கால வைராக்கியத்தை ஏற்படுத்தி யிருந்தபோது, அல்லாஹ் தனது தூதரின் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் தனது அமைதியை இறக்கி வைத்தான். மேலும், பயபக்தியின் வார்த்தையை அவர்களுக்குக் கட்டாயப் படுத்தி னான். அவர்கள் அதற்குத் தகுதியுடையவர் களாகவும் அதற்குரியவர்களாகவும் இருந்தனர். அல்லாஹ் யாவற்றையும் நன் கறிந்தவனாக இருக்கின்றான்.(48:26)
நிராகரிப்பை வெறுக்கப்படச் செய்தவர்கள்
وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ
நிச்சயமாக உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங் கள். அவர் உங்களுக்கு அதிகமான விடயங்களில் கட்டுப்பட்டிருந்தால் நீஙகள் சிரமப்பட்டிருப் பீர்கள். எனினும் அல்லாஹ் உங்களுக்கு ஈமானை நேசத்திற்குரியதாக்கி அதனை உங்களது உள்ளங்களில் அழகுப் படுத்தினான். மேலும் நிராகரிப்பையும் பாவம் செய்வதையும் அவன் உங்களுக்கு வெறுப்புடையதாக்கினான். அவர்கள் தாம் வெற்றிப் பெற்றவர்கள்.(49:7)
ஆட்சியைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவர்கள்.
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ
உங்களில் நம்பிக்கைக் கொண்டு நல்லறங்களும் புரிந்தவர்களுக்கும் இவர்க ளுக்கு முன்னுள்ளோர்களை பூமியில் அதிபதி யாக்கியது போல் இவர்களையும் ஆக்குவ தாகவும் இவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட இவர்களது மார்க்கத்தை உறுதிப்படுத்துவதாகவும் இவர்களது அச்சத்திற்குப் பின்னர் பாதுகாப்பை இவர்களுக்கு ஏற்படுத்துவதாகவும் அல்லாஹ் வாக்களிக்கின்றான். இவர்கள் எனக்கு எதனையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள். இதன் பின்னரும் யார் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தாம் பாவி கள்.(24:55)
இவர்களுக்காக மன்னிப்பு கோர வேண்டும்.
وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ
இவர்களுக்குப் பின் வருவோர், 'எங்கள் இரட்சகனே! எங்களையும், நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்தி விட்ட எமது சகோதரர்களையும் மன்னிப்பாயாக! இன்னும், நம்பிக்கை கொண்டோர் குறித்து எமது உள்ளங் களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க கருணையுள்ள வனும் நிகரற்ற அன்புடையவனுமாவாய்’ எனக் கூறுவார்கள். (59:10)
அல்லாஹ்வின் தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்கள் குறித்தும் அவர்களால் இந்த உம்மத்திற்கு கிடைக்கும் வெற்றி குறித்தும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை குறித்தும் பின்வருமாறு உறுதிப்படுத்தினார்கள்
سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ يُحَدِّثُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ خَيْرَكُمْ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» - قَالَ عِمْرَانُ: فَلَا أَدْرِي أَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ قَرْنِهِ، مَرَّتَيْنِ أَوْ ثَلَاثَةً - «ثُمَّ يَكُونُ بَعْدَهُمْ قَوْمٌ يَشْهَدُونَ وَلَا يُسْتَشْهَدُونَ، وَيَخُونُونَ وَلَا يُؤْتَمَنُونَ، وَيَنْذِرُونَ وَلَا يُوفُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ
"உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை (உங்களை) அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தலைமுறையினருக்குப் பிறகு ("அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று) இரண்டு தடவை கூறினார்களா, அல்லது மூன்று முறை கூறினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.
பிறகு "அவர்களுக்குப்பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் சாட்சிய மளிக்கும்படி கோரப் படாமலேயே (தாமாக) சாட்சியம் அளிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள், அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படமாட்டாது. அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே உண்டு கொழுக்கும் (தொந்தி பெருக்கும்) நிலை தோன்றும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) (நூல்: முஸ்லிம்)
صحيح مسلم (4/ 1961)
عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: صَلَّيْنَا الْمَغْرِبَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قُلْنَا: لَوْ جَلَسْنَا حَتَّى نُصَلِّيَ مَعَهُ الْعِشَاءَ قَالَ فَجَلَسْنَا، فَخَرَجَ عَلَيْنَا، فَقَالَ: «مَا زِلْتُمْ هَاهُنَا؟» قُلْنَا: يَا رَسُولَ اللهِ صَلَّيْنَا مَعَكَ الْمَغْرِبَ، ثُمَّ قُلْنَا: نَجْلِسُ حَتَّى نُصَلِّيَ مَعَكَ الْعِشَاءَ، قَالَ «أَحْسَنْتُمْ أَوْ أَصَبْتُمْ» قَالَ فَرَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ، وَكَانَ كَثِيرًا مِمَّا يَرْفَعُ رَأْسَهُ إِلَى السَّمَاءِ، فَقَالَ: «النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ، فَإِذَا ذَهَبَتِ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ، وَأَنَا أَمَنَةٌ لِأَصْحَابِي، فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِي مَا يُوعَدُونَ، وَأَصْحَابِي أَمَنَةٌ لِأُمَّتِي، فَإِذَا ذَهَبَ أَصْحَابِي أَتَى أُمَّتِي مَا يُوعَدُونَ
(ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதோம். பிறகு நாங்கள், “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுகை தொழும் வரை (இங்கேயே) அமர்ந்திருந்தால் நன்றாயிருக்கும்" என்று கூறிக் கொண்டு (அங்கேயே) அமர்ந்திருந்தோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, “ஏன் இங்கேயே இருந்து கொண்டிக்ருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தங்களுடன் மஃக்ரிப் தொழுகை யைத் தொழுதுவிட்டுப் பிறகு "தங்களுடன் இஷாத் தொழுகையையும் தொழும்வரை அமர்ந்திருப் போம்" என்று கூறினோம்" என்றோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் செய்தது "நன்று" அல்லது "சரி" என்று சொல்லி விட்டு, வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தினார்கள். - (பொதுவாக) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமாக வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தக் கூடியவராக இருந்தார்கள்.-
பிறகு, "நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய் விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு ஆவேன். நான் போய்விட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும். என் தோழர்கள் என் சமுதாயத்தாருக்குப் பாதுகாப்பு ஆவார்கள். என் தோழர்கள் போய்விட்டால் என் சமுதாயத்தாருக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமூசா அல் அஷ்அரீ (ரலி) (நூல்: முஸ்லிம்)
صحيح مسلم (4/ 1962)
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ، يَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ لَهُمْ: فِيكُمْ مَنْ رَأَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيَقُولُونَ: نَعَمْ، فَيُفْتَحُ لَهُمْ، ثُمَّ يَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ لَهُمْ: فِيكُمْ مَنْ رَأَى مَنْ صَحِبَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيَقُولُونَ: نَعَمْ، فَيُفْتَحُ لَهُمْ، ثُمَّ يَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ لَهُمْ: هَلْ فِيكُمْ مَنْ رَأَى مَنْ صَحِبَ مَنْ صَحِبَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيَقُولُونَ: نَعَمْ فَيُفْتَحُ لَهُمْ "
மக்களில் ஒரு குழுவினர் அறப்போர் புரியச் செல்கின்ற ஒரு காலம் வரும். அப்போது அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தவர்கள் (நபித்தோழர்கள்) எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அதற்கு அக்குழுவினர், "ஆம் (இருக்கிறார்கள்)" என்று பதிலளிப்பார் கள். ஆகவே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.
பிறகு (அடுத்த தலைமுறை) மக்களில் மற்றொரு குழுவினர் அறப்போர் புரியச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்த வர்களைப் பார்த்தவர்கள் (தாபிஉகள்) எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா? என்று கேட்கப்படும். அப்போது அக்குழுவினர் "ஆம் (இருக்கிறார்கள்)" என்று பதிலளிப்பார் கள். ஆகவே, அவர்களுக்கும் வெற்றியளிக்கப் படும்.
பிறகு (அதற்கடுத்த தலைமுறை) மக்களில் வேறொரு குழுவினர் அறப்போருக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தோழமை கொண்டிருந்தவர்களு டன் தோழமை/கொண்டிருந்தவர்கள் (தபஉத் தாபிஈன்) எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அதற்கு அக்குழுவினர் "ஆம் (இருக்கிறார்கள்)" என்று பதிலளிப்பார்கள். ஆகவே, அவர்களுக்கும் வெற்றியளிக் கப்படும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்வர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) (நூல்: முஸ்லிம்)
صحيح مسلم (4/ 1962)
عَنْ جَابِرٍ، قَالَ: زَعَمَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ، يُبْعَثُ مِنْهُمُ الْبَعْثُ فَيَقُولُونَ: انْظُرُوا هَلْ تَجِدُونَ فِيكُمْ أَحَدًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيُوجَدُ الرَّجُلُ، فَيُفْتَحُ لَهُمْ بِهِ، ثُمَّ يُبْعَثُ الْبَعْثُ الثَّانِي فَيَقُولُونَ: هَلْ فِيهِمْ مَنْ رَأَى أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيُفْتَحُ لَهُمْ بِهِ، ثُمَّ يُبْعَثُ الْبَعْثُ الثَّالِثُ فَيُقَالُ: انْظُرُوا هَلْ تَرَوْنَ فِيهِمْ مَنْ رَأَى مَنْ رَأَى أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ ثُمَّ يَكُونُ الْبَعْثُ الرَّابِعُ فَيُقَالُ: انْظُرُوا هَلْ تَرَوْنَ فِيهِمْ أَحَدًا رَأَى مَنْ رَأَى أَحَدًا رَأَى أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيُوجَدُ الرَّجُلُ فَيُفْتَحُ لَهُمْ بِهِ "
மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது அவர்களிலிருந்து ஒரு படைப்பிரிவு அனுப்பப் படும். அப்போது "நபித் தோழர்களில் எவரை யேனும் உங்களில் காண்கிறீர்களா என்று பாருங்கள்" என்று கூறுவர். அப்போது ஒரு மனிதர் காணப்படுவார். ஆகவே, அவருக்காக அப்படைக்கு வெற்றியளிக்கப்படும். பிறகு (அடுத்த தலைமுறையில்) இரண்டாவது படைப்பிரிவு ஒன்று அனுப்பப்படும். அப்போது "நபித்தோழர்களைப் பார்த்தவர்கள் (தாபிஉ) எவரேனும் அவர்களிடையே இருக்கிறார் களா?" என்று கேட்பார்கள். (அப்போது ஒரு மனிதர் காணப்படுவார்.) ஆகவே, அவருக்காக அப்படைக்கு வெற்றியளிக்கப்படும்.
பிறகு (அதற்கடுத்த தலைமுறையில்) மூன்றாவது படைப் பிரிவு அனுப்பப்படும். அப்போது "நபித்தோழர்களைப் பார்த்தவர் களைப் பார்த்தவர்கள் (தபஉத் தாபிஉ) எவரையேனும் அவர்களிடையே நீங்கள் காண்கிறீர்களா?” என்றுகேட்கப்படும். பிறகு (அதற்கடுத்த தலைமுறையில்) நான்காவது படைப் பிரிவு அனுப்பப்படும். அப்போது நபித்தோழர்களைப் பார்த்த ஒருவரை (தாபிஉ) பார்த்தவரை (தபஉத் தாபிஉ) பார்த்த எவரேனும் அவர் களிடையே நீங்கள் காண்கிறீர்களா? பாருங்கள்” என்று சொல்லப் படும். அத்தகைய ஒருவர் காணப்படுவார். ஆகவே, அவருக்காக அப்படைக்கு வெற்றியளிக்கப்படும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி). (நூல்: முஸ்லிம்)
صحيح مسلم (4/ 1963)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ أُمَّتِي الْقَرْنُ الَّذِينَ بُعِثْتُ فِيهِمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» وَاللهُ أَعْلَمُ أَذَكَرَ الثَّالِثَ أَمْ لَا، قَالَ: «ثُمَّ يَخْلُفُ قَوْمٌ يُحِبُّونَ السَّمَانَةَ، يَشْهَدُونَ قَبْلَ أَنْ يُسْتَشْهَدُوا
"என் சமுதாயத்தாரில் சிறந்தவர்கள், நான் யாரிடையே அனுப்பப் பட்டுள்ளேனோ அந்தத் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்” என்று கூறிவிட்டு, மூன்றாவது முறையும் அவ்வாறு கூறினார்களா, இல்லையா என்பதை அல்லாஹ்வே அறிவான்- "பிறகு அவர் களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் உண்டு கொழுப்பதை விரும்பு வார்கள். சாட்சியமளிக்கும் படி கோரப்படு வதற்கு முன்பே (தாமாக முன்வந்து) சாட்சியம் அளிப்பார்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்)
صحيح مسلم (4/ 1967)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسُبُّوا أَصْحَابِي، لَا تَسُبُّوا أَصْحَابِي، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا، مَا أَدْرَكَ مُدَّ أَحَدِهِمْ، وَلَا نَصِيفَهُ
என் தோழர்களை ஏசாதீர்கள். என் தோழர்களை ஏசாதீர்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹுத் மலையளவுக்குத் தங்கத்தை (தானமாகச்) செலவிட்டாலும், என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கை யளவு, அல்லது அதில் பாதியளவைக் கூட எட்ட முடியாது. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் (நூல்: முஸ்லிம்)
صحيح البخاري (1/ 12)
عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسًا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ
அன்சாரின்களை நேசிப்பது ஈமானின் அடையாளம் அன்சாரின்களை கோபிப்பது நயவஞ்சகத்தின் அடையாளம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னி அப்துல்லாஹ் (ரலி) (நூல்: புகாரி முஸ்லிம்)
அல்லாஹ்வின் அடியார்களே! சஹாபாக்கள் விஷயத்தில் சந்தேகத்தை கிளப்ப்பவர்கள், அவநம்பிக்கைய ஏற்படுத்துபவர்கள் திட்டுபவர் தூற்றுபவர்கள் நிச்சயமாக முஹம்மத் நபி(ஸல்) அவர்களது உம்மை சார்ந்தவனாக இருக்கமாட்டார்.
இஸ்லாத்தினை வீழ்த்த முனைந்தவர்கள் இஸ்லாத்தினுடைய அடிப்படை ஆதாரங்களை தகர்த்தெறிய முயற்ச்சித்தவர்கள் சஹாபாக்கள் மீதே குற்றச்சாட்டுக்களை சுமத்தி சந்தேகங் களை உண்டுபண்ணினர். இதில் முன்னிலை வகிப்பவர்கள் (ஷீஆக்கள்) ராபிழாக்களாவர்
நபி (ஸல்) அவர்களது நேரடி மாணவர்களான தோழர்களான சஹாபாக்கள் மீது சந்தேகத்தை உண்டு பண்ணினால் இஸ்லாத்தின் கொள்கைகள் மீதும் அடிப்படைகளான குர்ஆன் சுன்னா மீதும் சந்தேகம் ஏற்பட்டு விடும். அதனை நிவர்த்தி செய்திட வேறு வழியில்லாமல் போகும் போது இஸ்லாம் பொய்யாகி விடும் என்பதே ராபிழாக்களின் கொள்கையாகும். இந்த குழப்பத்தை முஸ்லிம்களுக்குள் ஏற்படுத்திட ராபிழாக்கள் ஊடுறுவதனாலேயே அன்றிலிருந்து இன்று வரை ஷீஆ சுன்னி பிரச்சனை இரத்த ஆறாக ஓடிக் கொண்டி ருக்கின்றது
உங்கள் கருத்துக்களை அறிவிக்க;