×
1. ஸத்துல் பித்ரா கொடுப்பதின் நோக்கம். 2. எதை கொடுக்க வேண்டும்? 3. எந்தளவு கொடுக்க வேண்டும்? 4. எப்போது கொடுக்க வேண்டும்? 5. பித்ராவைக் கூட்டாக அறவிட்டு பங்கிடுதல்.

    ரமழான் நோன்பு கடைசி பத்து வந்துவிட்டால் ஒவ்வொரு முஸ்லிம் குடும்பமும் ஏழை எளியவர்களை தேடிக்கண்டு பிடித்து ஸகாத்துல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை கொடுப்பதற்கு தயாராகவே இருப்பர். பெரிய வர்கள் இதற்காக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக் கும் போது சிறுவர்கள் அதனை கொண்டு போய் கொடுப் பதில் ஆர்வம் காட்டுவர். மனமகிழ்ச்சியுடன் அல்லாஹ் வின் அன்பையும் திருப்பொருத்தத்தையும் நாடி நாம் கொடுக்கும் இந்த பித்ரா பற்றிய விபரத்தை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.

    நோன்புப் பெருநாளைக்காக தயாராகும் போது ஒவ்வொரு முஸ்லிமும் பித்ரா கொடுத்து தயாராகும் படி இஸ்லாம் கட்டளையிடுகிறது.

    பித்ரா கொடுப்பதன் நோக்கம் :-

    நோன்பின் போது ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகார மாகவும் பெருநாள் தினத்தில் ஏழை எளியவர்கள் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது என்பதுமே இதன் நோக்க மாகும்.

    سنن ابن ماجه (1ஃ 585)

    عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، وَطُعْمَةً لِلْمَسَاكِينِ، فَمَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلَاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ، وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلَاةِ فَهِيَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ»

    நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகளிலி ருந்து தூய்மைப் படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை (பித்ராவை) கடமை யாக்கினார்கள் அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் அபூதாவூத், இப்னுமாஜா)

    பணக்காரர்கள் மட்டுமல்லாமல் பெருநாளைக் கான செலவு கள் போக எவர்களிடம் (பணம், பொருள்) வசதி இருக் கிறதோ அவர்கள் அனைவரும் இந்த பித்ராவை கொடுத் தாக வேண்டும்.

    صحيح البخاري (2ஃ 130)

    عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى العَبْدِ وَالحُرِّ، وَالذَّكَرِ وَالأُنْثَى، وَالصَّغِيرِ وَالكَبِيرِ مِنَ المُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ»

    முஸ்லிமான ஆண், பெண், பெரியார், சிறுவர், அடிமை, அடிமையல்லாதவர் ஆகிய அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரீச்சம்பழம், தீட்டிய கோதுமை ஆகிய வற்றில் ஒரு ஸாவு கொடுப்பதை நபி (ஸல்) அவர் கள் கடமையாக்கினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல்கள் புகாரி முஸ்லிம்)

    குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்காகவும், நோன்பு நோற்றவர்களுக்கும், நோன்பு நோற்க முடியாத நிலை யிலுள்ள ஆண் பெண் குழந்தை, சிறியவர், முதியவர்களுக் காகவும், குடும்பத் தலைவன் ஒரு ஸாவு வீதம் பித்ரா கொடுக்க வேண்டும்.

    எதை கொடுக்க வேண்டும் :-

    மக்கள் எதனை பிரதான உணவாக கொள்கி றார்களோ அதையே கொடுக்க வேண்டும்.

    صحيح البخاري (2ஃ 131)

    عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كُنَّا نُعْطِيهَا فِي زَمَانِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَاعًا مِنْ طَعَامٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ

    நாங்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்புப் பெரு நாள் தர்மமாக ஏதேனும் உணவையோ அல்லது பேரீச்சம் பழத்தையோ அல்லது தீட்டப்படாத கோதுமையையோ அல்லது பாலாடைக் கட்டியையோ அல்லது உலர்ந்த திராட்சையையோ ஒரு ஸாவு அளவு கொடுப்போம் என அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) அறிவிக் கிறார்கள் (நூல் புகாரி)

    صحيح البخاري (2ஃ 131)

    قَالَ عَبْدُ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فَجَعَلَ النَّاسُ عِدْلَهُ مُدَّيْنِ مِنْ حِنْطَةٍ»

    மக்கள் ஒரு ஸாவு அளவு தீட்டப் படாத கோதுமைக்கு பகரமாக அரை ஸாவு தீட்டப்பட்ட கோதுமையை பித்ரா வாக கொடுத்தார்கள் என இப்னு உமர் (ரலி) அறிவிக் கிறார்கள். நூல் புகாரி)

    நமது நாட்டில் அரசி, மா, போன்றவை பிரதான உணவாக இருப்பதனால் அதனையே ஒரு ஸாவு பித்ரா கொடுக்கலாம்.

    ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டு இந்த பித்ராவை நபியவர்கள் கடமையாக்கி னர்கள் என்ற ஹதீஸிலிருந்து அந்தந்தப் பகுதிகளில் எது உணவாக அமைந்துள்ளதோ அதனையே வழங்கலாம் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

    எந்தளவு கொடுக்க வேண்டும் :-

    ஒரு ஸாவு அளவு கொடுக்க வேண்டும் என்று மேலேயுள்ள ஹதீஸ் கூறுகிறது. இரண்டு கைகளாலும் நான்கு முறை அள்ளி கொடுப்பதே ஒரு ஸாவு என்று கூறப்படும். (இது சுமார் 2 1\2 kg என்று கணிக்கப்படுகிறது) எனவே நாம் கொடுக்கும் உணவுப் பொருட்களை இந்த முறையில் அளந்து கொடுக்க வேண்டும்.

    எப்போது கொடுக்க வேண்டும் :-

    பெருநாள் தொழுகைக்கு முன் அல்லது பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன் கொடுத்துவிட வேண்டும்.

    صحيح البخاري (2ஃ 131)

    عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِزَكَاةِ الفِطْرِ قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ»

    (பித்ராவை) மக்கள் தொழுகைக்கு புறப்பட முன் கொடுக்கு மாறு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள் என இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி)

    صحيح البخاري (2ஃ 132)

    وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا «يُعْطِيهَا الَّذِينَ يَقْبَلُونَهَا، وَكَانُوا يُعْطُونَ قَبْلَ الفِطْرِ بِيَوْمٍ أَوْ يَوْمَيْنِ»

    சஹாபாக்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாகவே கொடுத்து விடுவார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல் புகாரி)

    பித்ரா கொடுப்பதன் கடைசி நேரம் பற்றி கூறப் பட்டிருக்கிறது. அதனை சேகரித்து விநியோகிக்கும் ஆரம்ப நேரம் பற்றி கூறப் படவில்லை. எனவே ரமழான் மாதத்தில் எப்போதும் வேண்டுமானாலும் இதற்கான ஆயத்தங் களை, விநியோகிக்கும் நடவடிக்கை களை மேற்கொள்ளலாம்.

    பித்ராவைக் கூட்டாக அறவிட்டு பங்கீடு செய்தல் :-

    பெரும்பாலான மக்கள் வருடா வருடம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே பித்ரா கொடுத்து வரும் வழக்கத்தைப் பார்க்கி றோம். இதனால் அதிகமான ஏழைகள் நன்மை பெறும் சந்தர்ப்பம் குறைந்து விடுகிறது. ரமழான் காலங்களில் பாதையோரங்களில் காணப்படக் கூடிய ஏழைகள், வீடு வீடாக ஏறி இறங்கக் கூடிய ஏழைகள் அதிகரித்துக் கொண்டு வருவதையும் காணுகிறோம். தெரிந்த, தெரியாத ஏழைகள் உட்பட எல்லோரும் இந்த பித்ராவை பெற்றுக் கொள்ளும் வழியை நாம் கடைபிடிக்க வேண்டும்.

    ஒவ்வொரு ஊரிலும் (மஹல்லாக்களிலும்) பித்ரா கொடுப்பதற்கு தகுதியுள்ள மக்களிட மிருந்து அவர்களு டைய பித்ராக்களை ஒரு இடத்தில் ஒன்று சேர்த்து, அவ்வூரிலுள்ள ஏழை எளியவர்களை அழைத்து கொடுக்கும் போது எளியவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் முடியும். வீடு வீடாகப் படியேறி இறங்கும் ஏழைகளின் அவலங்களுக்கு பரிகாரம் காணவும் முடியும்.

    பள்ளிவாசலை மையமாக வைத்து இயங்கக் கூடிய கட்டமைப்பொன்று எம்மத்தியில் இருப்பதனால் இப்பணயினை மேற் கொள்வது மிக இலகுவாக இருக்கும்.

    இந்த பித்ரா ஏழைகளுக்கு முறையாக போய் சேர வேண்டும் என்பதற்காக மேற் கொள்ளும் நிர்வாக ரீதியான ஒழுங்கமைப்பு என்ற அடிப் படையில் இதனை புரிந்து கொள்ள வேண்டும். கூட்டாக விநியோகிக்கும் போது ஆயிரக் கணக்கான ஏழைகள் நன்மையடை வார்கள். தனித்தனியாக கொடுக்கும் போது ஒரு சிலர் மட்டுமே நன்மை யடைவார்கள்.

    முஸ்லிம்கள் சேர்ந்து வாழக்கூடிய இடங்களில் (மஹல்லாக்களில்) இத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படு மானால் ஏழைகளின் வாழ்வு பிரகாசமானதாக அமையும். கொடுக்கும் பித்ரா அர்த்த முள்ளதாக இருக்கும். பள்ளி நிர்வாகிகள் முன்னின்று இத்திட்டத்தை நடைமுறைப் படுத்தல் வேண்டும்.- அல்லாஹூ அஃலம்.-