அழகிய கடன்
பிரிவுகள்
- கடமையல்லாத ஸதகா << சகாத் - செல்வந்தர் வரி << வணக்க வழிபாடு << பிக்ஹ்
- கடன் << வியாபாரம் << கொடுக்கல் வாங்கல் << பிக்ஹ்
Full Description
அழகிய கடன்
] Tamil – தமிழ் –[ تاميلي
M.S.M.இம்தியாஸ் யூசுப்
2014 - 1435
القرض الحسن
« باللغة التاميلية »
محمد إمتياز يوسف
2014 - 1435
அல்லாஹ்வுக்கு கடன் கொடுக்க நீங்கள் தயாரா?
M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி
مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً وَاللَّهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ } [البقرة: 245
அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் கடன் கொடுப்பவர் யார்? (கடன் கொடுக்கும்) அவருக்கு அல்லாஹ் அதனை (திருப்பிக் கொடுக்கும் போது) பன்மடங்குகளாகப் பெருக் கிக் கொடுப்பான். அல்லாஹ் குறைத்தும் வழங்குகிறான் தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (2:245).
முஸ்லிம்களே! கொஞ்சம் கவனியுங்கள்! அல்லாஹ் உங் களிடத்தில் கடன் கேட்கிறான். கடன் கொடுக்க நீங்கள் தயாரா?
அல்லாஹ்விடத்தில் எப்போதும் கையேந்தி அவனிடமிருந்து கேட்டுப் பெறும் உங்களிட மிருந்து அல்லாஹ் கடன் கேட்கிறான். கடன் கொடுக்க நீங்கள் தயாரா?
இதுகாலவரை மக்களிடத்தில் கொடுக்கல் வாங்கல் செய்த வர்களுக்கு அல்லாஹ்வுடனும் கொடுக்கல்-வாங்கல் செய்ய வாய்ப்பு வந்துள்ளது.
உலகத்தில் மக்களிடம் கடன்கொடுத்தால் சில நேரம் திருப்பிக் கிடைக்கவும் கூடும். கிடைக்காமல் போகவும் கூடும். அல்லாஹ் வுக்கு கடன் கொடுத்தால் நிச்சயமாக திருப்பித் தரப்படும். பன்மடங்குகளாகத் திருப்பித் தரப்படும்.
அல்லாஹ்வுக்கு எப்படி கடன் கொடுப்பது? எப்படி திருப்பிப் பெறுவது? கடன் கேட்கக் கூடியளவு அல்லாஹ் தேவையுள்ளவனா? அல்லாஹ்வுக்கு எதற்குக் கடன்? சந்தேகம் பல வரலாம்.
ஆம், மனிதனுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கும் அல் லாஹ்வுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கும் வேறு பாடு உண்டு.
மனிதனுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும்போது அல்லது உதவிகள் செய்யும் அல்லது தர்மங்கள் (ஸதகாக்கள்) செய்யும் போது மனிதனுடைய சொத்திலிருந்து ஒரு பகுதி செலவாகிறது.
எதிலும் லாபத்தை மட்டுமே எதிர்பார்த்து மனிதன் செயற் படுகிறான். எனவே அவனது பொருளாதாரத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகை வெளியாகும் போது அல்லது பிறருக்கு கொடுக்கும்போது திருப்பிப் பெற முடியும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆகவே சிறியதொரு தொகையை மட்டுமே கொடுத்து விடுகிறான்.
தர்மமாக வழங்கினால் அதற்கு நன்மையுண்டு. கடனாக வழங்கினால் அந்தக் கடனை மட்டும் திருப்பிப் பெற முடியும். கூடுதலாகப் பெற முடியாது. பெற்றால் அது வட்டியாகிவிடும்.
அதே கடனை அல்லாஹ்வுக்கு வழங்கினால் திருப்பித் தரும் போது பல மடங்குகளாக பெருக்கித் தருகிறான். ஆனால், அது வட்டியாகக் கணிக்கப்படுவதில்லை. மனி தனுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கும் அல்லாஹ் வுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கும் அடிப்படை வித்தியாசம் இதுதான்.
அதுசரி! அல்லாஹ்வுக்கு எப்படி கடன் கொடுத்து பல மடங்குகளாக திருப்பி எடுப்பது?
அல்லாஹ்வுக்கு கடன் கொடுப்பதென்றால் அந்தக் கட னைப் பெறுவதற்கு அல்லாஹ் வருவதில்லை. அல்லாஹ் வுடைய திருப்தியை எதிர்பார்த்து ஏழை, எளிய மக்களுக்கும் தேவையுடையவர்களுக்கும் உதவி செய்வதும் அள்ளி வழங்குவதும் அல்லாஹ்வுக்கு கொடுத்த கடனாகக் கணிக்கப்படுகிறது.
வறுமையில் உள்ளவர்களுக்கும் தேவையுடையவர் களுக்கும் உதவிகள் செய்யும் போது ஸதகாக்கள் வழங்கும்போதும் அனாதை களை, விதவைகளை வாழவைப் பதற்கும் கல்வி ஸ்தாபனங்களை நிறுவி பொதுப் பணிகள் மேற்கொள்ளும் போதும் பொருளா தாரம் செலவிடப் படுகிறது. இப்பொருளாதா ரத்தை அல்லாஹ் தனக்கு வழங்கிய கட னாகவே ஏற்றுக் கொள்கிறான்.
அக்கடனை அல்லாஹ் இம்மையிலோ மறுமையிலோ திருப்பிக் கொடுக்கிறான். நாளை மறுமையில் நன்மைகள் அதிகம் உள்ளவர்களுக்கே சுவனம் வழங்கப்படுகின்ற அந்த நாளையில் இவ்வுலகில் அல்லாஹ்வுக் காக தன்னுடைய பணத்தை, பொருளாதா ரத்தை உழைப்பை செலவிட்ட வர்களுக்கு பன்மடங்குகளாகக் நன்மைகளை வழங்கி விடுகிறான். இந்த நன்மைகளே அவனுக்கு அன்றைய நாள் பலனளிக்கக் கூடியதாக அமைந்து விடுகி றது. மனைவி மக்களோ சொத்துக்களோ பலன் தராத அந்த விசாரனை நாளில் இந்த நன்மைகளே அவனை காப்பாற்றி விடுகிறது. எனவே அல்லாஹ்வுக்காக ஒரு முஸ்லிம் கடன் கொடுக்க தயாராக வேண்டும்.
மேலேயுள்ள (2:245) வசனம் இறங்கிய தும் அபூதர்தா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எங்களிடமிருந்து அல்லாஹ் கடனை எதிர் பார்க்கிறானா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று கூறினார்கள். உடனே அவர் அல்லாஹ்வின் தூதரே! உங்கள் கையை காட்டுங்கள் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தமது கையை நீட்டியதும் அபூ தஹ்தா (ரழி) அவர்கள், எனக்குச் சொந்தமான தோட்டத்தை அல்லாஹ்வுக்குக் கடனாக வழங்கிவிட்டேன் என்று (நபியவர்களின் கையின் மீது தமது கையை வைத்து கூறினார்.
அந்தத் தோட்டத்தில் அறு நூறு பேரீச்ச மரங்கள் இருந்தன. மேலும் அவருடைய மனைவி உம்முதஹ்தா (ரழி) அவர் களும் அவர்களுடைய குழந்தைகளும் அங்குதான் வாழந்தார்கள்.
பிறகு தமது மனைவி உம்மு தஹ்தா (ரழி) அவர்களிடம் வந்து உம்மு தஹ்தாவே என்று அழைக்க அவர் உங்கள் அழைப்புக்கு அடி பணிகிறேன் என்று பதிலளித்தார். அப்போது அபூ தஹ்தா (ரழி) அவர்கள் நீ (இங்கிருந்து) வெளியேறிவிடு. இந்த இடத்தை என் இரட்சகனுக்கு கடனாக வழங்கிவிட்டேன் என்று கூறினார். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி) நூல்: இப்னு அபீ ஹாத்தம்)
அல்குர்ஆனுடைய ஒரு வசனத்தை தமது வாழ்வில் நிலை நாட்ட நபித்தோழர்கள் எடுத்த முயற்சியை பார்த்தீர்களா? அல்லாஹ்வுக்காக தமக்கு பலன் தரும் தோட்டத்தையே ஸதகாவாகக் கொடுத்த ஈமானிய மனிதரகளை பார்த்தீர்களா?
அல்லாஹ்வுக்காக இந்த உலகில் தமது பொருளாதாரத்தை கொடுத்தால் மறுமையில் உரிய கூலி கிடைக்குமே என்ற உயர்ந்த எண்ணத்தில் வாழ்ந்த உத்தமர்களை கவனித் தீர்களா?
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவதே அல்லாஹ்வுக்கு கொடுக்கும் கடனாகும் என உமர் (ரழி) அவர்கள கூறிய விளக்கம் எத்துனை அருமையானது.
ரமழான் ரமழான் அல்லாத மாதத்தில் நாமும் சமூக நலன் கொண்டு செயற்பட தயாராகுவோம்.
மக்களை தன்மானமுள்ளவர்களாக உருவாக்கு வதுடன் வீடு வீடாக, வீதி வீதியாக ஏறி இறங்கும் நிலையை மாற்றிட ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் உரிய திட்டங்களை வகுத்து செயற்படுவோம்.