×
1. வட்டியைத் தவிர்த்தல். 2. மோசடியை தவிர்த்தல் 3. அளவு நிறுவை சரியாக மேற் கொள்ளல். 4. பொய்ச் சத்தியம் செய்யாது இருத்தல் 5. பதுக்கல் கூடாது.

    வியாபாரமும் அதன் ஒழுங்குமுறைகளும்

    ] Tamil – தமிழ் –[ تاميلي

    M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

    2014 - 1435

    التجارة ونظمها في الإسلام

    « باللغة التاميلية »

    محمد إمتياز يوسف

    2014 - 1435

    வியாபாரமும் அதன் ஒழுங்குமுறைகளும்

    M.S.M. இம்தியாஸ் யூசுப் ஸலபி

    மக்களின் அன்றாட வாழ்வில், பொருளீட்டுவது அல்லது வியாபாரம் செய்வது என்பது முக்கிய இடத்தை வகிக் கின்றது. அதுவே வாழ்வின் அச்சானியும் கூட. பொருளீட்டுவதை இஸ்லாம் ஊக்குவிக்கின்றது. அல்லாஹ் கூறுகிறான்:

    {فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ

    தொழுகை நிறைவேற்;றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங் கள்; மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். (62-10)

    இந்த வசனத்தில் அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்வது என்பதன் அர்த்தம் பொருளாதாரத்தை தேடிக் கொள்வது என்பதாகும். பொருளாதாரத்தை அல்லாஹ் தன்னுடைய அருள் என்று சிறப்பித்துச் சொல்கிறான். அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய வணக்கத்தை நிறைவு செய்தபின் வாழ்வுக்கான ஜீவனோபாயத்தை தேடிச் செல்ல வேண்டும்என பணிக்கிறான். எனவே ஆன்மீகமும் லௌகீகமும் இரண்டறக் கலந்த வாழ்வே இஸ்லாமிய வாழ்வு முறையாகும்.

    இந்த அடிப்படையில், ஒரு மனிதன் அடுத்த மனிதனை சுரண்டாத வகையில் நேர்மையான நம்பகமான வழியில் பொருளாதாரத்தை தேடிக் கொள்ளும் வழிகளை அல்லாஹ் வும் அவனது தூதர் நபிமுஹம்மத் (ஸல்) அவர்களும் சொல்லித் தந்துள்ளார்கள். அவைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

    வட்டியைத் தவிர்த்தல்.

    இன்றைய உலகில் பொருளாதாரத்தில் வட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சாதாரண கொடுக்கல் வாங்கல்களிலும் வட்டி பயன்படுத்தப்படுகிறது. வட்டி யினால் பல பேர் சொத்துக்களை இழந்து நிம்மதி இழந்து மானம் மரியாதைகளை இழந்து நடை பிணங்களாக காட்சித் தருவதை பாரக்கிறோம். பல நாடுகளும் வட்டியினால் சுரண்டப் படுவ தையும் வஞ்சிக்கப்படு வதையும் காண்கிறோம். ஒரு நாடு பெறுகின்ற கடனுக்கான வட்டி குடிமக்கள் மீதே திணிக்கப்படுகிறது. உற்பத்தி பொருட்கள் முதற் கொண்டு அனைத்து பொருட்களிலும் இந்த வட்டி கலப்பதனால் மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இதனால் சாதாரண விலைக்கு கிடைக்க வேண்டிய ஒரு பொருள் அதிக விலையில் சந்தைக்கு இடப் படுகிறது. அட்டை இரத்தத்தை உறிஞ்சுவது போல் மனிதனது உழைப்பை சம்பாத்தியத்தை இந்த வட்டி உறிஞ்சி எடுக்கிறது. மனிதாபி மானத்தை குழிதோன்றிப் புதைக்கின்றது. எனவே மனிதனை சுரண்டக் கூடிய இந்த வட்டியை இஸ்லாம் முற்றிலுமாக தடை செய்கின்றது. இது அல்லாஹ்வுடன் தொடுக்கக் கூடிய யுத்தமாக பிரகடனப் படுத்துகிறது.

    {الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ}

    2:275 வட்டியை உண்போர் ஷைத்தானால் தீண்டப்பட்டு ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (மறுமையில்) எழ மாட்டார்கள் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி (ஹலாலாக்கி) வட்டியை தடை செய்து (ஹராமாக்கி) விட்டான். ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகி விடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தா னது - என்றா லும் அவனுடைய விவகாரம் அல்லாஹ் விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இந்த வட்டியின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடு வார்கள்.

    {يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ}

    அல்லாஹ் வட்டியை அழித்து விடுவான். தர்மங்களை பெருகச் செய்வான், நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்( 2:276)

    سنن الترمذي ت بشار (2ஃ 503)

    عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: لَعَنَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا، وَمُوكِلَهُ، وَشَاهِدَيْهِ، وَكَاتِبَهُ.

    வட்டியை உண்போர் அதனை உண்ணக் கொடுப்போர் வட்டியை எழுதுபவர் அதற்கு இரு சாட்சிகளாக இருப்ப வர் ஆகியோரை நபி (ஸல்) சபித்தார்கள். அறிவிப்பவர் இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் திர்மிதி

    மோசடியை தவிர்த்தல்

    வாழ்க்கையிலாவது கொடுக்கல் வாங்களி லாவது நீதமாக நியாயமாக நடக்க வேண்டும். மோசடி செய்வது அல்லது சுரண்டுவது என்பது அடுத்தவனுடைய உரிமையை பறிக்கும் செயலாக இஸ்லாம் கண்டிக்கிறது.

    وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

    மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமை யாக வழங்கப்படும்.

    إِنَّ اللَّهَ يُدَافِعُ عَنِ الَّذِينَ آمَنُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ

    நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை பாதுகாக்கின்றான். மோசடிக்கார நன்றி கெட்ட எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. (22:38)

    விற்கப்படுகின்ற ஒரு பொருளில் ஏதாவது குறைகள் இருக்குமாயின் அதனை எடுத்துக் காட்டி விற்க வேண்டும். மாறாக அக்குறையை மறைத்து விற்பதாயின் அவர் மிகப் பெரிய மோசடிக்காரராவார். அதேவேளை அவர் முஹம்மது நபியை பின்பற்றக்கூடிய ஒருவராக இருக்க மாட்டார் என நபியவர்கள் கண்டிக்கிறார்கள்.

    صحيح مسلم (1ஃ 99)

    عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا، فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ: «مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟» قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللهِ، قَالَ: «أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ، مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي»

    ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கடை வீதிக்குச் சென்ற போது ஒரு வியாபாரியின் தானியக் குவியலுக்கருகே வந்து தனது கையை அந்த தானியக் குவியலில் விட்ட போது விரல்களில் ஈரம் பட்டது. அப்போது உணவு வியாபாரியே! இது என்ன என்று கேட்டார்கள் அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே! மழையில் நனைந்து விட்டது என்றார். அதற்கு நபியவர்கள் மக்கள் பார்க்கும் விதமாக உணவுக்கு மேல் பகுதியில் அதைப் போட்டிருக்கக் கூடாதா என்று கூறிவிட்டு யார் மோசடி செய்கிறாறோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என்று கூறினார்கள். (அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நூல், முஸ்லிம்)

    صحيح البخاري (3ஃ 58)

    عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الحَارِثِ، رَفَعَهُ إِلَى حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، - أَوْ قَالَ: حَتَّى يَتَفَرَّقَا - فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا '

    விற்பவரும் வாங்குபவரும் பிரியாமல் இருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு.அவ்விருவரும் உண்மைகளை பேசி குறைகளை தெளிவுப்படுத்திக் கொண்டால் அவர்களுடைய வியாபாரத்தில் பரகத் செய்யப்படும். குறைகளை மறைத்து பொய் சொல்லி யிருந்தால் அவர்களின் வியாபாரத்திலுள்ள பரகத் நீங்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி)

    அளவு நிறுவை சரியாக மேற் கொள்ளல்.

    மக்களிடம் பொருட்களை வாங்கும் போதும் அவர்களுக்கு அளந்து கொடுக்கும் போதும் நீதமாக நடக்க வேண்டும். இந்த நீதத்திற்கு அனியாயம் செய்து கொண்டிருந்த ஒரு சமூகத்தை திருத்துவதற்காக ஷுஐபை நபியை இறைத் தூதராக அல்லாஹ் அனுப்பிவைத்து மோசடிகளை சுரண்டல்களை கண்டித்தான்.

    وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ}

    மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதர ராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி) “என் சமூகத்தார்களே! அல்லாஹ் வையே வணங்குங்கள், அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான சான்று வந்துள்ளது. எனவே அளவையையும் நிறுவையையும் முழுமையாக நிறைவேற்றுங் கள். மனிதர்களுக்கு அவர்களின் பொருட் களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள், பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார். (7:85)

    (ஷுஐபை) நபியுடைய வழிகாட்டலின் தங்களை சீர்திருத்தம் செய்துக் கொள்ள அம் மக்கள் மறுத்தனால் -நேர்வழியை நிராகரித் ததனால் - அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளானார்கள்.

    சுரண்டல் மூலம் அதிக லாபமீட்டி இந்த உலகில் சுகம் அனுபவித்தாலும் மரணத்திற்குப் பின் மறுமையில் இந்த மோசடியை குறித்து அல்லாஹ் விசாரிப்பதாக எச்சரிக்கை செய்கிறான்.

    وَيْلٌ لِلْمُطَفِّفِينَ الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ لِيَوْمٍ عَظِيمٍ يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ

    அல்லாஹ் கூறுகிறான் அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்கு கின்றனர் மற்றவர்களுக்கு அளந்து கொடுத் தாலோ அல்லது நிறுத்து கொடுத்தாலோ குறைவு செய்கின்றனர். மகத்தான நாளில் (மறுமை நாளில்) அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 83:1-3)

    பொய்ச் சத்தியம் செய்யாது இருத்தல்

    பொருட்களை விற்பனை செய்யும் போது பொய் சத்தியம் செய்து தரமற்ற பொருட்களை தரமான பொருளாக காட்டி ஏமாற்றி வியாபாரம் செய்கின்றர். இதனால் மக்கள் பெரிதும் வஞ்சிக்கப்படுகின்றனர். இந்த பாவி களுக்கெதிராக மறுமையில் வாதிடுவதாக நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.

    سنن الترمذي ت بشار (2ஃ 507)

    عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلاَثَةٌ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ القِيَامَةِ، وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ، قُلْنَا: مَنْ هُمْ يَا رَسُولَ اللهِ، فَقَدْ خَابُوا وَخَسِرُوا؟ فَقَالَ: الْمَنَّانُ، وَالمُسْبِلُ إِزَارَهُ، وَالمُنَفِّقُ سِلْعَتَهُ بِالحَلِفِ الكَاذِبِ.

    மறுமை நாளில் அல்லாஹ், மூன்று நபர்களை பார்க்க மாட்டான். அவர்களை பரிசுத்தப் படுத்தவு மாட்டான். அவர்களுக்கு கடுமையான தண்டனையுமுண்டு என்று கூறினார்கள் நஷ்டமடைந்த அம்மூவரும் யார்? என கேட்ட போது செய்த உதவிகளை சொல்லிக் காட்டுபவன், தனது வேட்டியை தரையில் படுமாறு அணிபவன். தனது வியாபார பொருட்களை பொய் சத்தியம் செய்து விற்பவன் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் அபூதர்(ரலி) நூல்: திரிமிதி)

    வாங்குபவருக்கும் விற்பவருக்குமிடையே நம்பகத்தன்மை இருப்பது முக்கியமானது. பரஸ்பரம் இரண்டு பேரும் திருப்திக் கொள்ளும் முறையே வியாபாரத்தில் இருக்க வேண்டும்.

    أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا

    நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்களுக்கிடையில் திருப்தியுடன் சம்மதத்தின் பெயரில் செய்யும் வியாபாரத்தை தவிர உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (4:29)

    பதுக்கல் கூடாது

    சில வியாபாரிகள் பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது போல் காட்டிக் கொள்வதற்காக தமது வியாபார சரக்குகளை பதுக்கிவிடுகிறார்கள். சந்தையில் பொருட் களுக்கான தட்டுப்பாட்டை உருவாக்கி விட்டு அதிக விலைக்கு அப்பெருட்களை விற்று கொள்ளை இலாபமிடு கிறார்கள். இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி பொருளா தார நெருக்கடிக்கும் ஆளாகிவிடுகிறார்கள். இந்த மோசடி வியாபாரத்தையும் நபியவர்கள் கண்டித்தார்கள்.

    صحيح مسلم (3ஃ 1227)

    أَنَّ مَعْمَرًا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ احْتَكَرَ فَهُوَ خَاطِئٌ»، فَقِيلَ لِسَعِيدٍ: فَإِنَّكَ تَحْتَكِرُ، قَالَ سَعِيدٌ: إِنَّ مَعْمَرًا الَّذِي كَانَ يُحَدِّثُ هَذَا الْحَدِيثَ، كَانَ يَحْتَكِرُ

    பாவியைத் தவிர எவனும் பதுக்க மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்

    இடைத் தரகர்களின் தலையீடு கூடாது

    வியாபாரியிடம் வாடிக்கையாளர்கள் ஒன்று கூடும் போது, அந்த வியாபாரி தனது இடைத் தரகர்களை ஏவிவிட்டு குறித்த பொருளின் விலையை ஏற்றிவிட்டு நழுவி விடச் செய்வார் எதையும் அறியாத அப்பாவி மக்கள் அற்பமான அப்பொருளை தரம் வாய்ந்த பொருள் என நம்பி கூடுதல் விலை கொடுத்து வாங்கிச் செல்வார்கள். வியாபாரிகளின் இந்த மோசடி யினை நபியவர்கள் கண்டித்தார்கள்.

    (வாங்கும் எண்ணமின்றி) விலையை உயர்த்த வேண்டாம் என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா (ரலி) நூல்:- புகாரி)

    அது போல் வாடிக்கையாளரும் வியாபாரியும் ஒரு பொருளைக் குறித்து பேசிக் கொண்டி ருக்கும் போது அவ் விடத்தில் மூன்றாம் நபர் குறுக்கிட்டு விலை பேசுவதையும் கண்டித்தார்கள்.

    صحيح مسلم (3ஃ 1154)

    عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَبِعِ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلَا يَخْطُبْ عَلَى خِطْبَةِ أَخِيهِ، إِلَّا أَنْ يَأْذَنَ لَهُ»

    ஒருவர் மற்றவருடைய வியாபாரத்தில் குறுக்கிட வேண்டாம். ஒருவர்(திருமணத்திற் காக) பெண் பேசும் போது மற்றவர் அதில் குறுக்கிட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் உமர் (ரலி) நூல்:- முஸ்லிம்.)

    கால் நடைகளை அதிக விலைக்கு விற்க வேண்டும் என்பதற்காக, அந்த கால்நடையிடம் (ஆடு, மாடுகளிடம்) சில நாட்களுக்கு பால் கரக்காமல் விட்டு விட்டு பால் மடு பெரிதாக இருப்பது போல் காட்டிகாட்சிப்படுத்துவார். பால்மடு பெரிதாக இருப்பதைக் கண்டு அதனை வாங்குபவர் அதிக விலை கொடுத்து வாங்கி விடுவார். இந்த மோசடி யையும் நபியவர்கள் தடுத்தார்கள்.

    صحيح البخاري (3ஃ 71)

    عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لاَ تَلَقَّوُا الرُّكْبَانَ، وَلاَ يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَلاَ تَنَاجَشُوا، وَلاَ يَبِعْ حَاضِرٌ لِبَادٍ، وَلاَ تُصَرُّوا الغَنَمَ، وَمَنِ ابْتَاعَهَا فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ بَعْدَ أَنْ يَحْتَلِبَهَا، إِنْ رَضِيَهَا أَمْسَكَهَا، وَإِنْ سَخِطَهَا رَدَّهَا وَصَاعًا مِنْ تَمْرٍ»

    சரக்குகளை ஏற்றிக் கொண்டு) வாகனத்தில் வருபவர்களை எதிர் கொண்டு (விதியில் சந்தித்து சரக்குகளை) வாங்காதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்து கொண் டிருக்கும் போது மற்றவர் வியாபாரம் செய்வதற்காக குறுக்கிட வேண்டாம். வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிட வேண்டும் என்பதற்காக விலை கேட்க வேண்டாம். கிராமத்திலிருந்து (சரக்கு களை கொண்டு) வருபவர்களுக்காக உள்ளுர் வாசிகள் விற்க வேண்டாம். ஆடுகளின் (பாலைக் கரக்காமல் அவற்றின் ) மடியை கணக்கச் செய்யவேண்டாம். இத்தகைய ஆட்டை ஒருவர் வாங்கி பால் கரந்து திருப்தியடைந்தால் வைத்துக் கொள்ளட்டும். திருப்தியடையாவிட்டால் அந்த ஆட்டை ஒரு ஸாவு பேரீச்சம் பழத்துடன் திருப்பி கொடுத்து விடட்டும். இவ்விரண்டில் ஒன்றை தேர்வு செய்யும் உரிமை வாங்கியவருக்கு உண்டு. என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி) நூல் - புகாரி.)

    வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு மாற்றமாக விற்பனை செய்தல்.

    சந்தைக்கு அல்லது துணிக் கடைக்குச் சென்று குறித்த ஒரு பொருளை பிரித்து பார்க்காமல் தொட்டுப் பார்த்து விட்டால் அந்தப் பொருளை தொட்டுப்பார்த்தவர் வாங்கி விட வேண்டும் என்று வியாபாரிகள் நிர்ப்பந்திப்பதை பார்க்கி றோம். எப்படியாவது அப்பொருளை வாடிக்கை யாளர் வாங்கியே ஆகவேண்டும் என்பதற்காக அதை பார்சல் பண்ணியும் திணித்து விடுவார்கள். வாடிக்கை யாளரது விருப்பத் திற்கு மாற்றமாக அதனை விற்று விடு வார்கள். இதனை அரபியில் முலாபஸா முலாஜா எனப் படும்.இந்த வியாபார முறையை நபியவர்கள் தடுத்தார்கள்.

    صحيح البخاري (3ஃ 70)

    أَنَّ أَبَا سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنِ المُنَابَذَةِ»، وَهِيَ طَرْحُ الرَّجُلِ ثَوْبَهُ بِالْبَيْعِ إِلَى الرَّجُلِ قَبْلَ أَنْ يُقَلِّبَهُ، أَوْ يَنْظُرَ إِلَيْهِ «وَنَهَى عَنِ المُلاَمَسَةِ»، وَالمُلاَمَسَةُ: لَمْسُ الثَّوْبِ لاَ يُنْظَرُ إِلَيْهِ

    முனாபதா மற்றும் முலாமஸாவை நபி (ஸல்) தடை செய்தார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி) (நூல் : புகாரி)

    நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர் தனக்கு விரும்பிய ஒரு பொருளை தொட்டுப் பார்ப்பதற்கும் தேர்ந் தெடுப்ப தற்கும் உரிமைபடைத்தவர். அது போல் அப் பொருள் தனக்கு பிடிக்கவில்லையென்றால் வேண்டாம் என கூறுவதற்கும் உரிமையுடையவர். பார்த்த பொருளை வாங்கியே ஆக வேண்டும் என வியாபாரி நிர்ப்பந்திக்கக் கூடாது.

    வியாபாரத்தில் வாங்குபவரும், விற்பவரும் பரஸ்பரம் சுதந்திரமாக கருத்துக்களை பரிமாறி நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டுமென இஸ்லாம் பணிக்கிறது.

    صحيح البخاري (3ஃ 57)

    عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «رَحِمَ اللَّهُ رَجُلًا سَمْحًا إِذَا بَاعَ، وَإِذَا اشْتَرَى، وَإِذَا اقْتَضَى»

    வாங்கும் போதும் விற்கும் போதும் வழக்காடும் போதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதனுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் நூல்: புகாரி.

    வாடிக்கையாளருடன் சிரித்த முகத்துடன் கடுகடுப்பின்றி விட்டுக் கொடுப்புடன் நடப்பதே பெருந்தன்மையாகும்.

    ஒருவரது நடத்தையை வைத்துத்தான் அவரது நம்பகத் தன்மையையும் அவர் சார்ந்திருக்கின்ற சமூகத்தினதும் மார்க்கத்தினதும் நம்பகத் தன்மை உரசிப் பார்க்கப் படுகிறது இதனை கவனத்தில் கொண்டு முஸ்லிம்கள் செயலாற்ற வேண்டும்.