×
யூத, கிறிஸ்தவ மதங்களைப் பொறுத்தவரை விவாகரத்து பெறும் உரிமையைப் பெண்களுக்கு வழங்கவில்லை.

    பைபிளின் பார்வையில் விவாகரத்து

    பெண் அந்த உரிமை கோருவதற்கு தகுதியற்றவள்

    .விளக்கம்

    ] Tamil – தமிழ் –[ تاميلي

    M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

    2014 - 1435

    الطلاق في العهد الجديد

    لا يحق للمرأة طلب الطلاق

    « باللغة التاميلية »

    محمد إمتياز يوسف

    2014 - 1435

    பைபிளின் பார்வையில் பெண் –

    விவாகரத்து உரிமையை கோருவதற்கு தகுதியற்றவள்.

    M.S.M. இம்தியாஸ் யூசுப் ஸலபி

    ஆண்களுக்கு சகல விடயங்களிலும் முன்னுரிமை வழங்கி சட்டங்களைக் கூறுவது போலவே விவாகரத்து உரிமையிலும் ஆண் களுக்கே முதலிடம் கொடுத்து பெண்களிட மிருந்து அந்த உரிமையைப் பறித்துள்ளது பைபிள்.

    (இயேசுவாகிய) நான் உங்களுக்குச் சொல்கிறேன் எவரும் தம் மனைவியை வேசித் தன முகாந்தரத்தினாலொழிய (வேசித்தனம் பண்ணினாலேயொழிய) வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கி விடக்கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபச்சாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். அப்படி தள்ளி விடப்பட்டவளை (விவாகரத்துச் செய்யப்பட்டவளை) மணப்போரும் விபச்சாரம் செய்கிறனர். (மத்தேயு. 5:32, லூக்கா.16:18)

    இயேசு யூதேயப் பகுதிகளுக்கும் ஜோர்தான் அக் கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம் போல மீண்டும் அவர் களுக்குக் கற்பித்தார்.

    பரிசேயர் அவரை அணுகி 'கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா? என்று கேட்டு அவரைச் சோதித்தார். அவர் அவர்களிடம் மறுமொழியாக ‘மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?’ என்று கேட்டார்.

    அவர்கள் ‘மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கி விடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்’ என்று கூறினார்கள்.

    அதற்கு இயேசு, “அவர்களிடம் உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ஆணும் பெண்ணு மாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டு விட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்கா திருக்கட்டும்” என்றார்.

    பின்னர் வீட்டில் இதைப்பற்றி மீண்டும் சீடர்கள், அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி தன் மனைவியை விலக்கி விட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபச்சாரம் செய் கிறான். தன் கணவரை விலக்கி விட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபச்சாரம் செய்கிறாள் என்றார். (மார்கு: 10:1-12, மத்தேயு: 9:1-12)

    பெண்களின் விவாகரத்து உரிமை சம்பந்தப்பட்ட விடயத்தில் பைபிள் கூறும் மிக முக்கியமான சட்டம் இது. “இல்லற வாழ்க்கையில் இணைந்திருக்கும் கணவனும் மனைவியும் எக்காரணத்தைக் கொண்டும் பிரிந்து விடக் கூடாது. விவாகரத்துப் பண்ணக் கூடாது. மரணம் வரும் வரை இணைந்திருக்க வேண்டும்” என்று இயேசு கூறு கிறார்.

    இயேசுவின் இவ்வார்த்தைகள் விவாகரத்தின் மூலம் ஏற்படும் சமூக சீரழிவைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு போதிக்கப்பட்ட உயர்ந்த போதனையாகத் தென்படுகின்றது என்று வாதிக்கலாம். விவாகரத்திற்குப் பின்னால் ஆண், பெண் இருவருடைய வாழ்வும் சீரழியக் கூடிய சூழல்களும் பாதிப்படையக் கூடிய வழிகளும் அதிகம். இதனால், ஏற்படும் பிரச்சினைகள் அதிகம். எனவே விவாகரத்தை ஊக்குவிக்காமல் என்ன பிரச்சினைகள் வந்தாலும் இருவரும் உடன்பட்டு வாழும் போக்கை ஊக்குவிப்பதே சிறந்தது. அதனைத்தான் இயேசு போதிக்கிறார் என்று காரணங்கள் கூறலாம். ஆனால், இது நியாயம்தானா? நடைமுறைச் சாத்தியம்தானா? என்பதை சிந்திக்க வேண்டும்.

    கணவன் மனைவிக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகள், மனக்கசப்புக்கள், தகராறுகள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு எவ்வித மான பிரச்சினைகள் வந்தாலும் அவைகளையும் சமாளித்துக் கொண்டு வாழ வேண்டும் என்று கூறுவது கேட்பதற்கு தத்துவம் போல் தோன் றினாலும் நடைமுறை வாழ்வுக்கு ஏற்புடைய தாக இருக்குமா? என்பதைக் கவனிக்க வேண்டும்.

    இயேசுவுடைய இப்போதனையை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ சமுதாயத்தில் விவாகரத்துக்கள் நடைபெறாமலா இருக் கின்றன? குறிப்பாக மேற்கத்திய ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகளிலும் நாளொருவண்ணம் பொழுதொரு மேனியாக விவாகரத்து நடந்து கொண்டுதானே இருக்கிறது. ஒரு சட்டையை கழற்றிவிட்டு அடுத்த சட்டையை மாற்றிக் கொள்வது போல் திருமணம், விவாகரத்து, என்று மாறி மாறி நடந்து வருகிறது. இயேசுவினுடைய போதனை நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை என்பதற்கு அம்மக்களின் வாழ்வு ஒரு சாட்சியாக இருக்கிறது.

    கணவன் மனைவியாக தொடர்ந்தும் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலை வந்தால் பிரிந்து வாழவேண்டும் என்ற நிலைக்கு வந்து தான் ஆகவேண்டும். ஏற்றம் ஒன்று இருந்தால் இறக்கம் ஒன்று இருந்துதானே ஆகவேண்டும். ஒத்துப்போகாத இரு உள்ளங்களும் ஒதுங்கிப் போக வேண்டிய வழிகளை காட்டித் தானே ஆகவேண்டும். அது தானே நியதி! துரதிஷ்ட வசமாக கிறிஸ்தவ மதம் அந் நியதியை அநீதி என்கிறது.

    கணவனின் நடத்தைகள் செயற்பாடுகள் பிடிக்கா விட்டாலும் விவாகரத்தைக் கோரமுடியாது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற அடிப்படையில் வாழ வேண்டும். மரணம் வரை மனதைக் கல்லாக்கிக் கொண்டு காலத்தை ஓட்ட வேண்டும். மனைவியின் நியாயமான கோரிக்கையையோ அல்லது விவாகரத்து கோரும் உரிமையையோ பைபிள் வழங்க வில்லை. கணவனுடைய ஆதிக்கத்திற்கு அடங்கி அவள் வாழ வேண்டும்.

    ‘அந்த ஆதிக்க முறைக்கு’ கூறும் வார்த்தைதான் ‘தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்’ என்ற அருள்வாக்கு!

    முறையாக கணவனிடமிருந்து பிரிந்து போக வழி யில்லாத போது “விபச்சாரத்தில் ஈடுபடுதல்” என்ற முறையற்ற செயலை செய்தால் தான் விடுதலைக்கு வழி கிடைக்கிறது. இதைத் தவிர அப்பெண்களுக்கு வேறு மார்க்கம் இல்லை!

    மனைவியிடமிருந்து விவாகரத்தை எதிர் பார்க்கும் கணவன் அவளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த வேண்டும் அல்லது விபச்சாரத்தில் ஈடுபட்டாள் என்று வீண் பழி சுமத்த வேண்டும். இவ்விரண்டில் ஒன்றை செய்தால் தான் அவனால் விவாகரத்தை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.

    சில நேரம் மனைவியினுடைய நடவடிக்கைகளில் உண்மையிலேயே வெறுப் படைந்து இக்காரியத்தை செய்யலாம். அல்லது மனைவியை பிடிக்காமல் போகும் போது கூட இக் காரியத்தை செய்யலாம். எது எப்படி இருப்பினும் ஒரு அப்பாவிப் பெண்ணை விபச்சாரியாக சித்தரித்தால்தான் விவாகரத்து பெற முடியும் என்பதால் அக்காரியத்தை கணவன் செய்துதான் ஆகுவான். அவனைப் பொறுத்த வரையில் மனைவியிடமிருந்து விடுதலை தேவை! அதனைப் பெற்றுக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்ய அவன் தயாராக இருப்பான். அதன் காரணமாக அப்பாவி பெண் விபச்சாரி என்ற பட்டத்தை சுமக்க வேண்டியவளாக மாறி விடுகிறாள்.

    மனைவி நடத்தைக் கெட்டவளாக இருந்தால் அவளை விவாகரத்து செய்வதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் விபச்சாரம் செய்யாத, அதன் பக்கமே நெருங்காத கற்பொழுக்கமுள்ள பெண்ணை (மனைவியை) விவாகரத்துப் பண்ணுவதற்காக விபச்சாரியாக சித்தரிப்பது பெரும் அநீதியாகும். இந்த அநீதியை செய்தால்தான் வழிபிறக்கும் என்றிருக்கும் போது கணவனால் வேறு என்னதான் செய்ய முடியும்?

    பைபிள் கூறும் காரணத்திற்கு ஏற்ப மனைவியை விவாக ரத்து செய்யக்கூடிய சூழ்நிலை அமையாத போது கணவன் வேறு விதத்தில் தனக்குரிய சுகத்தையும் வாழ்வையும் அமைத்துக் கொள்ள வேண்டிய (சின்ன வீட்டை செட்அப் பண்ண வேண்டிய) கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு விடுகிறான். இப்பாவத்தை செய்வதற்கு தூண்டுதலாக இச்சட்டம் அமைந்து விடுகிறது.

    அது போல் கணவனது நடத்தைகள் பிடிக்கா விட்டால் அவனை விட்டும் பிரிந்து வாழ்வதற்கு தனது கற்பைப் பணயம் வைத்து விடுதலை பெறவேண்டிய நிலைக்கு மனைவி தள்ளப் படுவதும் பரிதாபத்திற்குரிய தாகும்.

    இந்நிலையைத் தவிர்த்து விட்டு கணவனை விவாக ரத்து செய்து வேறொருவரை மணம் முடித்தால் அவள் “விபச்சாரம் செய்தவளாவாள்” என்றும், விவாக ரத்து செய்யப்பட்ட பெண்ணை மணந்தவன் “விபச்சாரம் செய்த வனாவான்” என்றும் இயேசு குற்றம் சுமத்துகிறார். விவாகரத்துக்குப் பின் மறுவாழ்வு பெறுபவளும் மறுவாழ்வு கொடுப்பவனும் “விபச்சாரக் குற்றத்தின் கீழ் கண்டிக்கப்படுகின்ற” பாவமாக காட்டப் படுகிறது.

    இயேசு கூறும் விவாகரத்து சட்டத்தை மறுதலிக்கும் போது அவருடைய சமூகத்தினர், (பழைய ஏற்பாட்டின்) மோசேயுடைய சட்டத்தை எடுத்துக் கூறி விவாகரத்தை மோசே அனுமதித்திருக்கும் போது நீங்கள் ஏன் மறுக்கின்றீர்கள் என்ற அடிப்படையில் கேட்கிறார்கள்.

    அதற்கு இயேசு கூறும் காரணம், ‘உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கி விடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால், ஆதி முதலாய் அப்படி இருக்கவில்லை’ என்றார். (மத்தேயு: 19:8)

    ஆரம்பத்தில் விவாகரத்துப் பண்ணும் முறை இருக்க வில்லை. யூத மக்களின கடின உள்ளத்தின் செயற்பாடு காரணமாகத் தான் விவாகரத்து கொடுக்க வேண்டிய தாயிற்று. கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்கக் கூடாது என்று விளக்கம் கூறி விவாகரத்து உரிமையை மறுதலிக் கிறார் இயேசு.

    பைபிள் போதனைப்படி விவாகரத்துப் பண்ணும் உரிமை மனைவிக்கு இல்லை. கணவனுக்கு தான் உண்டு! அதுவும் மனைவி “விபச்சாரம் புரிந்தவள்” என்று நிரூபிக்கப் பட்டால் மாத்திரம் தான் முடியும்!

    இச்சட்டத்தின் பிரகாரம் கணவன் மனைவி இருவரும் பாதிக்கப்பட்டாலும் பெரும்பாலும் மனைவி தான் அதிகமதிகம் பாதிப்புக் குள்ளாகிறாள். திருமண வாழ்க்கைக்குள் வரும் பெண்கள் இருதலைக் கொள்ளியாக வெந்து சாகக் கூடியவளாக ஆகிவிடுகிறாள்.

    மனைவி நடத்தை கெட்ட பெண் என்பதற்காக விவாகரத்து செய்வது சரிதான். விவாகரத்து பெற வேண்டும் என்பதற்காக அவளை நடத்தை கெட்ட பெண்ணாக ஆக்குவதும், ஆக்க இடம் கொடுப்பதும் முறையாகுமா?

    யூத, கிறிஸ்தவ மதங்களைப் பொறுத்தவரை விவாகரத்து பெறும் உரிமையைப் பெண் களுக்கு வழங்கவில்லை.