×
அல் குர்ஆனை ஓதும் போது பிழையின்ற அழகிய முறையில் ஓதவேண்டும். தஜ்வீத் முறைப்படி ஓதும் சட்டங்கள் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

    புகழனைத்தும் ஏக வல்லவனாம் அல்லாஹ்வுக்கே உரித்தாகுக.

    "அல் குர்ஆனைத் தானும் கற்று அதனைப் பிறருக்கும் கற்றுக்கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்" என நபியவர்கள் கூறியுள்ளதட்கினங்க, அல்குர்ஆனை தஜ்வீத் முறைப்படி அழகுற ஓதுவதற்கு வழிகாட்டக் கூடிய இச்சிறு நூலைத் தொகுத்துள்ளேன்.

    மேலும் எம்மில் அதிகமானோர் குர்ஆனை ஓதுகின்ற போது தாஜ்வீதைப் பேணாது சாதாரணமாக ஒதிவருகின்றனர். இது மாபெரும் தவறாகும். "குர்ஆனை (உச்சரிப்புடன், தஜ்வீத் முறைப்படி) ஒத்துவீராக" என அல்லாஹ் அல் குர்ஆனிலே நபியவர்களைப் பார்த்துக் கூறுகிறான். மேலும் யார் அல்குர்ஆனை அதன் உச்சரிப்புகளைப் பேணி, தஜ்வீத் முறைப்படி அழகாக ஓதவில்லையோ அவர் எம்மைச்சாந்தவரல்ல என நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

    எனவே இச்சிறு தொகுப்பை வாசகர்களான உங்களுக்கு விளங்கிக் கொள்ள இலகுவான நடையில் தொகுத்துள்ளேன். இதன் மூலம் நீங்கள் பூரண பயன் பெற வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பணியை ஏற்றுக் கொண்டு, இதன் மூலம் எமக்கு ஈருலகிலும் பிரயோசனமளிப்பானாக.

    1. அரபு எழுத்துக்கள்

    الحروف الهجا ئية

    ر

    2. எழுத்துக்களுக்கிடயிலான உச்சரிப்பு வித்தியாசம்

    # أ - ع

    # ت - ط

    # ث - س - ش - ص

    # ح - خ - هـ

    # ذ - ز

    # ض - ظ - ل

    # ق - ك

    3. அரபு எழுத்துக்களை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்

    أ ب ت ث ج ح د ذ ر ز س ش ع ف ك ل م ن و هـ ي

    4. "ر" எழுத்தின் சட்டம்

    ·

    ·

    َبَّكَ
    رُ
    بَمَا \ وَ

    ·

    ·

    جَعُونَ
    ل
    َتَرْ

    · "رْ" ஐ அடுத்து التَّفْخِيم உடைய எழுத்துக்களில் ஒன்று வருதல்.

    ·

    ·

    5. " الله " என்ற சொல்லின் சட்டம்

    ·

    أَعُوذُ بِاللهِ \ بِسْمِ اللهِ \ وَلِلهِ

    ·

    قُلْ هُوَ اللهُ \ نَصْرُ اللهِ

    6. "ஷத்தா" செய்யப்பட " நூன்" இன் சட்டம்.

    · அல் குர்ஆனில் எந்த இடத்திலாவது " ن " என்ற எழுத்து செய்யப்பட்டு வந்தால் அதனை (2 ஹரகத் அளவு) இராகமாக (غنة) ஓத வேண்டும்.

    إِنَّ الذِينِ \ مِنَّا \ مِنِّي

    7. "ஷத்தா" செய்யப்பட " மீம் " இன் சட்டம்.

    · அல் குர்ஆனில் எந்த இடத்திலாவது " م " என்ற எழுத்து செய்யப்பட்டு வந்தால் அதனை (2 ஹரகத் அளவு ) இராகமாக (غنة) ஓத வேண்டும்.

    إِمَّا \ ثُمَّ \ مُزَّمِّل

    8. " சுகூன் செய்யப்பட்ட நூன் , தன்வீன் " இன் சட்டம்.

    அல் இக்லாப் الإِقْلاَبُ

    1. அல் இழ்ஹார் ( (الإظهار:
      • பொருள்: வெளிப்படுத்தல்.
      • எழுத்துக்கள்: 06

    أ هـ ع ح غ خ

    ( أَخِي هَاكَ عِلْما ً حَازَهُ غَيْرُ خَاسِرٍ )

    · சட்டம்: نْ ஆகியவற்றில் ஒன்றை அடுத்து இவ்வெழுத்துக்களில் ஏதாவதொன்று வந்தால் அதனை வெளிப்படுத்தி இராகமின்றி ஓத வேண்டும்.

    عَنْهُ \\ حَاسِدٍ إِذَا

    2. அல் இத்காம் (الإِدْغاَم)

    · பொருள்: நுழைத்தல்.

    · எழுத்துக்கள்: 06

    ي ر م ل و ن

    ( يَرْمَلُونَ)

    அல் இத்காம் ஐ மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்:

    مِن رَّسُولٍ \ جَمِيْعٌ لَّدَيْنِا

    رَجُلٌ يَّسْعَى \ وَعَادٌ وَفِرْعَوْن

    وَإِن نَّشَأْ \\ قَوْمًا مُّجْرِمِيْنَ

    3. அல் இக்பாஉ (الإِخْفَاءُ)

    · பொருள்: மறைத்தல்.

    · எழுத்துக்கள்: 15.

    ص ذ ث ك ج ش ق س د ط ز ف ت ض ظ

    صِفْ ذَا ثَنَا كَمْ جَادَ شَخْصٍ قَدْ سَمَا

    دُمْ طَيِّباً زِدْ فِيْ تُقىً ضَعْ ظَاِلِمَاً

    عَلَّمَ الإِنسَانَ \ بِشَرَرٍ كاَلقَصر

    4. அல் இக்லாப் (الإِقْلاَب)

    · பொருள்: புரட்டுதல்.

    · எழுத்துக்கள்: 01. (ب)

    وَمَنْ يُؤْمِن بِاللهِ \ أَبَداً بِماَ

    9. கடுமையாக வெளிப்படுத்தல் ( أَشَدُّ الإِظْهاَر )

    அல்குர்ஆனில் دُنْيَا ، صِنْوَان ، قِنْوَانْ ، بُنْيَان ஆகிய சொற்களில் ஏதாவது ஒன்று இடம் பெறுகின்ற போது அதில் வரும் சுக்கூன் செய்யப்பட்ட நூன் ஐ நன்கு வெளிப்படுத்தி இராகமின்றி ஓத வேண்டும்.

    وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا

    10. "அல் கல்களா" (القَلْقَلَة)

    · பொருள்: குலுக்குதல்.

    · எழுத்துக்கள்: 05.

    ق ط ب ج د ( قُطبُ جَدٍ )

    "அல் கல்களாவை" இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

    · القَلْقَلَةُ الكُبْرَى என்றால் பெரிய அளவில் குலுக்குதல் என்பதாகும். நிறுத்தும் இடத்தில் கல்கலாவுடைய எழுத்தொன்று "சுகூன்" ْ பெற்றோ அல்லது "சுகூன்" கொடுத்து நிறுத்த முடியுமான நிலையிலோ வரின் அதனைப் பெரிய அளவில் குலுக்கி ஓதுவது அவசியமாகும்.

    بِاسْمِ رَبِّكَ الذِّي خَلَقَ \ بِرَبِّ الفَلَقِ

    • القَلْقَلَةُ الصُّغْرَى என்றால் சிறிய அளவில் குழுக்குவதாகும். கல்கலாவுடைய எழுத்துக்களில் ஒன்று ஒரு வசனத்தின் நடுவில் "சுகூன் " பெற்று வரின் அதனை சிறிய அளவில் குழுக்கி ஓத வேண்டும்.

    قَدْ أَفْلَحَ \ إِقْرَأْ

    10: "சுகூன்" செய்யப்பட்ட "மீம்" இன் சட்டம்:

    مْ أ، ت، ث، ج، ح، خ، د، ذ، ر، ز، س، ش، ص، ض، ط، ظ، ع، غ، ف، ق، ك، ل، ن، و، هـ، ي

    • (سُكُون) செய்யப்பட்ட (م) ஐ அடுத்து (ب) வந்தால் அதனை அடுத்து வரும் எழுத்தான (ب) வில் மறைத்து இராகமாக ஓத வேண்டும்.

    تَرْمِيْهِم بِحِجَارَةٍ مِن سِجِّيل

    • (سُكُون) செய்யப்பட்ட (م) ஐ அடுத்து (م) வந்தால் அதனை அடுத்து வரும் எழுத்தான (م) இல் நுழைத்து இராகமாக ஓத வேண்டும்.

    أَطْعَمَهُم مِنْ جُوْعٍ وَآمَنَهُم مِنْ خَوْف

    · (سُكُون) செய்யப்பட்ட (م) ஐ அடுத்து (إِظْهَارُ المِيم) இன் எழுத்துக்களில் ஒன்று வந்தால் அதனை வெளிப்படுத்தி இராகமின்றி ஓத வேண்டும்.

    أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الفِيل

    11. ( ة ) " التَّاءُ المَرْبُوطِة "

    · நிறுத்தும் இடத்தில் ( ة ) " التَّاءُ المَرْبُوطِة " வந்தால் அதனை (هـْ) "ஹ்" என்ற ஓசையில் நிறுத்த வேண்டும்.

    الحَاقَّةُ

    12. "அல் மத்து" المَدُّ

    · பொருள்: நீட்டுதல்.

    · எழுத்துக்கள்: 03.

    "அல் மத்து" ஐ இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

    • المَدُّ الأَصْلِي \ المَدُّ الطَّبِيعِي (அடிப்படை மத்து \ இயற்கை மத்து)

    குறிப்பு: இதனை இரண்டு ஹரகத் அளவு நீட்டி ஓத வேண்டும்.

    • المَدُّ الفَرَعِي "அல் மத்து அல் பரஇ"

    (பிரிவு மத்து அல்லது கிளை மத்து)

    مَدُّ التَّمْكِين

    مَدُّ العِوَض

    مَدُّ اللِّين

    المِدُّ العَارِض لِلسُّكُون

    المَدُّ اللَازِم

    المَدُّ الجَائِز

    المَدُّ الوَاجِب

    · அல் மத்து அல் வாஜிப்" المَدُّ الوَاجِب

    மத்துடைய எழுத்துக்களில் ஒன்றை அடுத்து ( அதே சொல்லில்) ء வருவது المَدُّ الوَاجِب ஆகும். இதனை 4 அல்லது 5 ஹரகத் அளவு நீட்டி ஓதவேண்டும்.

    وَجَآءَ \ وَجِيئ \ سُوءُ

    · "அல் மத்து அல் ஜாஇஸ்" المَد الجَائِز

    ஒரு சொல்லின் இறுதியில் மத்துடைய எழுத்துக்களில் ஒன்று வந்து அடுத்த சொல்லின் ஆரம்பத்தில் ء வருவது المَدُّ الجَائِز ஆகும். இதனை 4 ஹரகத் அளவு நீட்டி ஓதவேண்டும்.

    وَمَآ أَدْرَاكَ

    ·

    மத்துடைய எழுத்துக்களில் ஒன்றை அடுத்து வருவது المَدُّ اللَازِم ஆகும். இதனை 6 ஹரகத் அளவு நீட்டி ஓதவேண்டும்.

    وَلاَ الضَّآلِّين \ آلْان

    • "மத்துல் லீன்" مَدُّ اللِّين

    خَوْف \ قُرَيْش

    • " மத்துல் இவழ்" مَدُّ العِوَض

    ஒரு சொல்லை நிறுத்தி ஓதும் போது அதன் இறுதி எழுத்து ً பெற்றிருப்பின் அதனை 2 ஹரகத் அளவு நீட்டி ஓத வேண்டும்.

    حَكِيماً \ خَبِيراً

    • "மத்துத் தம்கீன்" مَدُّ التَّمْكِين

    ஒரு சொல்லில் இரண்டு ي வந்து, இரண்டாவது ي " ْ " செய்யப்பட்டும் அதற்கு முன்னால் உள்ள ي வுக்கு வும் வரின் அதனை 2 ஹரகத் அளவு நீட்டி ஓத வேண்டும்.

    حُيِّيْتُم \ نَبِيِّيْنَ

    • "அல் மத்துள் ஆரிழு லிஸ்சுகூன்" المَدُّ العَارِضُ لِلسُّكُون

    رَبِّ العَالَمِين

    12. "மத்துஸ் ஸிலா" مَدُّ الصِّلَة

    • "மத்துஸ் சிலதில் கசீரா" مَدُّ الصِّلَة القَصِيرَة \ الصُغْرَى

    هُ அல்லது هِ என்ற எழுத்தின் இருபக்கமும் எனும் உயிர்க்குறி பெற்று வரின் அதனை அடுத்துவரும் சொல்லுடன் சேர்த்து ஓதும் போது 2 ஹரகத் அளவு நீட்டி ஓதவேண்டும்.

    فَأَثَرْنَ بِهِ نَقْعاً \ عَنْهُ مَالُهُ و وَمَا كَسَب

    • "மத்துஸ் சிலதித் தவீலா" مَدُّ الصِّلَة الطَّوِيلَة \ الكُبرَى

    هُ அல்லது هِ என்ற எழுத்தின் இருபக்கமும் எனும் உயிர்க்குறி பெற்று வருவதுடன் அதனை அடுத்து ء வருமானால் அதனை 4 ஹரகத் அளவு நீட்டி ஓதவேண்டும்.

    وَثَاقَهُ و أَحَد \ عَلَى غَيْبِهِ أَحَدًا

    13. "அலிபுல் வஸ்ல்" أَلِفُ الوَصْل

    சேர்த்து ஓதும் போது விழக்கூடிய அலிப் (ٱ) أَلِفُ الوَصْل எனப்படும்.

    بِسمِ ٱللَّهِ \ فَذَلِكَ ٱلذِّي

    14. "அலிபுல் கத்உ" أَلِفُ القَطْعِ

    இது நிரந்தரமாக தரிபட்டு வரும் அலிபாகும். இதனை முன்னாலுள்ள சொல்லோடு சேர்தோதும் போது நிரந்தரமாக தரிபட்டே இருக்கும்.

    صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِم

    15. "இத்காமுல் முதமாஸிலைன்" إِدْغَامُ المُتَمَاثِلَيْن

    ஒரே இரு எழுத்துக்கள் அடுத்தடுத்து வந்து முந்திய எழுத்து "சுக்கூன்" செய்யப்பட்டு இரண்டாவது எழுத்து ஹரகத் செய்யப்பட்டு வந்தால் முந்திய எழுத்தை இரண்டாவது எழுத்துடன் "இத்காம்" செய்து ஓத வேண்டும்.

    قَد دَّخَلُوا

    16. "இத்காமுல் முதஜானிசைன்" إِدْغَامُ المُتَجَانِسَين

    கிட்டத்தட்ட வெளியாகும் இடத்தால் ஒன்று பட்டு மொழிச்சலால் வித்தியாசப்படக்கூடிய இரு எழுத்துக்கள் அடுத்தடுத்து வந்து முந்திய எழுத்து "சுகூன்" செய்யப்பட்டு இரண்டாவது எழுத்து ஹரகத் செய்யப்பட்டு வந்தால் முந்திய எழுத்தை இரண்டாவது எழுத்துடன் இணைத்து (இத்காம் செய்து) ஓத வேண்டும்.

    قَد تَّبَيَّنَ

    17. "இத்காமுல் முதகாரிபைன்" إِدْغَامُ المُتَقَارِبَين

    இரு சமீபமான எழுத்துக்கள் ஒன்றன்பின் மற்றது வந்து முந்திய எழுத்து "சுகூன்" செய்யப்பட்டு இரண்டாவது எழுத்து ஹரகத் செய்யப்பட்டு வந்தால் முந்திய எழுத்தை இரண்டாவது எழுத்தில் நுழைத்து ஓத வேண்டும்.

    أَلَمْ نَخْلُقكُّم.

    அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் கிளையார் தோழர்கள் மீதும் உண்டாவதாக!.