லுக்மான் (ரஹ்) தனது புதல்வனுக்கு செய்த உபதேசம்.
பிரிவுகள்
மூலாதாரங்கள்
Full Description
லுக்மான் (ரஹ்) தனது புதல்வனுக்கு செய்த உபதேசம்.
21ம் நூற்றாண்டின் பெற்றோர்களுக்கும் பொருந்தும்
] தமிழ்– Tamil –[ تاميلي
அயிஷா ஸ்டேசி IslamReligion.com
தமிழில்
ஜாசிம் பின் தய்யான்
2015 - 1436
نصائح لقمان الحكيم لأبنه
« باللغة تاميلي »
عائشة إستيسي
IslamReligion.com
ترجمة: جاسم بن دعيان
2015 - 1436
லுக்மான் (ரஹ்) தனது புதல்வனுக்கு செய்த உபதேசம்.
21ம் நூற்றாண்டின் பெற்றோர்களுக்கும் பொருந்தும்
லுக்மான் (ரஹ்) தனது புதல்வனுக்கு கொடுத்த உபதேசம் காலத்தின் வரம்பை தாண்டி என்றென்றும் எல்லா பெற்றோருக்கும் பயன் தரக்கூடியதாகும்.
அயிஷா ஸ்டேசி IslamReligion.com
தமிழில்
ஜாசிம் பின் தயியான்
21 ம் நூற்றாண்டில் பிள்ளைகள் வளர்ப்பது இலேசான தல்ல. அதே போன்று ஏனைய சகாப்தங்களிலும் இந்த விடயம் கஷ்டமில்லாது இருக்கவுமில்லை.
ஒவ்வொறு சகாப்தங்ளிலும் அக்காலத்துக்குரிய பிரச்சனைகள் ஏற்பட்டாலும், மனிதனின் இயல்பு மாறாத காரணத்தால், உயர் பண்புடன் வழங்கப் படும் அறிவுரைகள் சிறந்த தீர்வுகளை கொடுத்தன. அல்லாஹ் குர்ஆனை எல்லா மனிதர்களுக்கும் எல்லா காலத்துக்கும் பயனளிக் கூடிய சிறந்த அறிவுரைகளுடனும், ஞாபகப் படுத்தலுடனும் இறக்கினான்.
லுக்மான் (ரஹ்) தன் மைந்தனுக்கு வழங்கிய அறிவுரைகளை அல் குர்ஆனில் 31 அத்தியாயத்தில் 12 முதல் 19 வசனங்கள் வரை காண முடியும். 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்னு கதீர் என்ற அறிஞர் “குர்ஆன் கூறும் கதைகள்” என்ற தனது நூலில், அக்காலத்தில் இருந்த நம்பகமான சரித்திர நூல்களிலிருந்து லுக்மானை பற்றி எழுதியுள்ளார். இப்னு கதீர், மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள், லுக்மான் அவர்கள் ஒரு நபியல்ல, ஆனால் அல்லாஹ் அவருக்கு அருளிய அறிவின் காரணமாக அவர் அக்காலத்தில் வாழ்ந்த ஒரு சிறந்த அறிவாளி ஆவார் என்று கருத்து தெரிவிக்கின்றனர். விவேகம் என்பது “விவேகமும் மத சார்ப்பான அறிவும்” ஆகும் என்று புராண அறிஞர்களின் கருத்தை இப்னு கதீர் ஏற்றுக்கொள்கிறார். லுக்மான் (ரஹ்) அவர்களும் “எனது பார்வயை தாழ்த்தி, நாவை கவனமாக பாதுகாத்து, ஹலாலானவைகளை மாத்திரம் சாப்பிட்டு, எனது கற்பை பாதுகாத்து, கொடுத்த வாக்குறுதிளை நிறைவேற்றி, எனது பொறுப்புகளை சரிவர செய்து, விருந்தாளிகளுக்கு சங்கை செய்து, அண்டை அயலவர்களுக்கு மரியாதை செய்து, எனக்கு சம்பந்தமற்றவைகளில் இருந்து நீங்கி எனது மரியாதையையும், கௌரவத்தையும் பாதுகாத்துக் கொண்டேன். நீங்கள் இன்று என்னை இந்த நிலையில் காண்பது இதன் மூலமே.” என்று கூறியதாக சில ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. ஆதாரம் ஸஹீஹ் முஸ்லிம்.
லுக்மான் (ரஹ்) என்ற விவேகம் பொருந்திய பெரியார் தனது மகனுக்கு பத்து விஷயங்கள் பற்றி அறிவுரை கூறினார். இஸ்லாத்தின் பிரகாசத்தில் தமது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க விரும்பும் எந்த பொற்றோர்களுக்கும் இந்த அறிவுரைகள் எக்காலத்திலும் பொருந்தும். சுவர்க்கம் கொண்டு செல்லும் பாதையை காட்டும் லுக்மான் (ரஹ்) அவர்களின் அறிவுரையை எடுத்து நடந்தால், அனைத்து பெற்றோர்களும் ஆஃஹிராவில் பிள்ளைகளின் விதி எப்படி இருக்கும் என்று வருந்துவதற்கு எவ்வித தேவையும் ஏற்படாது. குர்ஆனில் ஒரு சில சிறிய வசனங்களின் மூலம் லுக்மான் (ரஹ்) அவர்கள், தனது மகனுக்கு கொடுத்த அறிவுரைகளில் இவ்வுலகிலும், விசாரணை நாளிலும் வெற்றி பெறுவதற்கு தேவையான திறவு கோல் உள்ளது. பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு கொடுக்கும், அல்லது கொடுக்காமல் விடும் அறிவுரைகள் மிகவும் முக்கியமானதாகும். கேள்வி கணக்கு கேட்கும் இறுதி நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்கும் ஒரு பிள்னை “எனது தாய்/தந்தை இதனை பற்றி எனக்குச் சொல்லிக் கொடுக்க வில்லயே!” என்று கூறும் காட்சி தாங்க முடியாத வேதனையாகவே இருக்கும். எமது குறுகிய சிந்தனைக்குள் அறிவுரை கூறுவதற்கு பொருத்தமான வார்த்தைகளை நாமே தெரிவு செய்வது மிகவும் கஷ்டமான காரியம் என்பதால் நபிமார்கள் அல்லது லுக்மான் (ரஹ்) அவர்கள் போன்ற நேர் வழிபெற்ற முன்னோர்களின் அறிவுரைகளை தேர்ந்தெடுத்தல் சிறந்த வழியாகும். லுக்மான் (ரஹ்) அவர்கள் தனது மைந்தனோடு மிகவும் மரியாதையுடன் பேசியதால், அன்னார் கூறிய அறிவுரைகள் என்ன என்று பார்ப்பது சிறந்த முறையாகும். சமூகத்தில் மனிதர்கள் ஒருவருக் கொருவர் மரியாதை செலுத்துவது முக்கிய பண்பாடாகும், ஆனால் குடும்ப அங்கத்தவர்கள் தமக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் மரியாதை யோடும், கௌரவத்துடனும் நடந்துக் கொள்வது அதனை விட மிக முக்கியமான விஷயமாகும். மரியாதை குறைவாக பேசுவது, குரலை உயர்த்தி அதிகாரம் செய்வது போன்ற செயலை ஒருவரும் விரும்புவதில்லை என்பதை யாரும் ஏற்றுக் கொள்வார்கள். அப்படிப்பட்ட நடத்தை தனக்கு உறவு கூற முன்வரும் குடும்ப அங்கத்தவரிட மிருந்து வருவதை ஒரு போதும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
- சூரா லுக்மான் 31-13
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّـهِ ۖ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ ﴿١٣﴾
லுக்மான் அவர்கள் பெயர் சொல்லி தனது மகனை அழைக்காமல் “எனது மகனே!” என்று உரிமையோடு அழைப்பது குடும்ப உறவின் முக்கியத்தை காட்டுவதற்கே. மகனின் கவனத்தை தன் பக்கம் திருப்பி தான் கூறப்போவதை சரிவர செவி தாழ்த்தி கேட்குமாறு அவர் அழைப்பு விடுக்கிறார். அதன் பின் அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் முக்கியமான விஷயம் எது என்பதை தனது மகனுக்கு நினைவு படுத்துகிறார். அல்லாஹ் வுடன் ஏனையவர்களை பங்குதாரர்களாக்கும் மக்கள், அகிலத்தை படைத்து போஷிப்பவனுக்கு மிகப்பெரிய குற்றத்தை செய்து விட்டார்கள். அப்படிப்பட்ட மனிதர் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படுவதற்கும், என்றும் தீராத தண்டனைக்கு ஆளாவதற்கும் தானே காரணமா கியதால் அவர் தனக்கு பெரும் தீங்கு விளைவித்துக் கொண்டார்.
சூரா 4- 48
- சூரா லுக்மான் 31 – 14
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَىٰ وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ ﴿١٤﴾
அதே குர்ஆன் வசனத்தில் இஸ்லாத்தில் அல்லாஹ்வை வணங்குவதற்குப் பின் மிகவும் முக்கியமான அம்சமாகிய பெற்றோரின் உரிமைகளை பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான். பெற்றோருக்கு அன்பு செலுத்துவது, அவர்களுக்கு மரியாதை செய்வது, கௌரவப் படுத்துவது போன்ற செயல்கள் இஸ்லாமிய வாழ்க்கை முறையில் மிகவும் முக்கிய அம்சம்கள் என்பதை இது எடுத்துக் கூறுகிறது.
சூரா 17 – 23
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا ﴿٢٣﴾
பெற்றோருக்கு அன்பு காட்ட வேண்டிய கடமைகளை பற்றி முஹம்மது ரசூல் (ஸல்) அவர்கள் உறுதிப் படுத்தி கூறினார்கள். ஒரு முறை சகாபி ஒருவர், “இஸ்லாத்தின் பல்வேறு நற்காரியங்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான காரியம் எது?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். “உரியநேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது.” என்று நபி (ஸல்) பதிலளித்தார்கள். “அதற்கு அடுத்தது என்ன?” என்று அந்த சகாபி கேட்ட போது “பெற்றோர்களுக்குறிய கடமைகளை செய்வது.” என்று முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ஆதாரம் இப்னு கையும் அல் ஜவ்சிய்யா (ரஹ்) பொறுமையும் நன்றிக் கடனும் என்ற நூலிலிருந்து.
சூரா லுக்மானின் 14ம் வசனத்தின் இறுதியில் வரும் பகுதியில், பிள்ளை வளர்ப்பதற்கு ஒரு தாய் அனுபவிக்கும் பெரும் துன்பங்களையும், அதற்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டியது பிள்ளையின் கடமை என்றும் அல்லாஹ் உறுதியாக கட்டளையிடுகிறான். அதே வசனத்தில், நாம் அனைவரும் அல்லாஹ்விடமே மீளவேண்டும் என்ற காரணத்தால், அல்லாஹ் வுக்கு அடி பணிவது எமது முதற் கடமை என்றும், அதனை அடுத்து பெற்றோருக்கு அன்பும், பரிவும் காட்ட வேண்டும் என்று அல்லாஹ் எமக்கு நினைவு படுத்துகிறான்.
- சூரா 31- 14
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَىٰ وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ ﴿١٤﴾
அதன் பின் லுக்மான் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வின் சக்தியையும், அதனது ஆதிக்கத்தையும் பற்றி தனது மைந்தனுக்கு எடுத்துக் கூறுகிறார்கள். அல்லாஹ்வுடைய அறிவு அங்க சம்பூர்ணமானது. இவ்வுலகில் நடப்பவை பற்றியும், நடக்க இருப்பவை பற்றியும் அல்லாஹ் ஏற்கெனவே அறிவான். அல்லாஹ் வின் சக்தி முழுமையானது. அதனை பற்றி கேள்வி கேட்கவோ, எதிர்ப்பு கூறவோ அல்லது பாராமுகமாக இருக்கவோ எவராலும் முடியாது.
- “என் மகனே! உன்னுடைய தொழுகையை சரிவர நிறைவேற்றுவாயாக....”சூரா 31 -17
يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَىٰ مَا أَصَابَكَ ۖ إِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ ﴿١٧﴾
லுக்மான் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து தனது மகனுக்கு சரிவர தொழுகையை நிறைவேற்றும் படி உபதேசம் செய்தார்கள். எப்படி தொழுவது என்பது மாத்திரமின்றி, நாம் ஏன் தொழ வேண்டும், தொழுகையின் முக்கியத்துவம் என்ன என்பது பற்றியும் ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு அரபு மொழியில் ஸலாஹ் என்று கூறுவார்கள். அந்த வார்த்தை தொடர்பு என்ற பொருளை குறிக்கும். சகல வல்லமை பொருந்திய அல்லாஹ்வுடன் தொடர்ப்பு கொள்ளவும், அந்த தொடர்ப்பை பாதுகாக்கவும் உள்ள ஒரே வழி தொழுகை மாத்திரமே. உரிய நேரத்தில் தொழுவதன் மூலம், நாம் ஏன் இவ்வுலகில் வாழ்கிறோம் என்பதை நினைவு படுத்தும் அதே சமயம், எமது சிந்தனைகளையும், செயலையும் பாவத்தை விட்டும் நீங்கி, அல்லாஹ்வின் பாதையில் திருப்புவதற்கு உதவியாக அமைகிறது.
- “நன்மையை கொண்டும் (பிறரை) ஏவுவாயாக. பாவமான காரியங்களை விட்டும் (மனிதர்களை) விலக்கு வாயாக” சூரா 31 – 17
يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَىٰ مَا أَصَابَكَ ۖ إِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ ﴿١٧﴾
அரசன் அடிமை, ஆண் பெண் ஆகிய ஒல்வொரு விசுவாசியின் மீதும், நன்மையை ஏவுவதும் தீமையை விட்டு தடுப்பதும் கடமையாகும். “உங்களில் யாரேனும் ஒரு பாவத்தை கண்டால், அவர் அதனை தன கைகளால் தடுக்கட்டும்; அவரால் அதனை செய்ய முடியாவிட்டால் தன் வாயால் (வார்த்தையால்) தடுக்கட்டும். அதுவும் செய்ய முடியாவிட்டால், தனது உள்ளத்தால் (அது பிழை என வெறுக்கட்டும்). இமானின் மிகவும் பலகீனமானது இதுவாகும்.
- “மேலும், உனக்கேற்படும் கஷ்டங்களை நீ பொறுமையுடன் சகித்துக் கொள்வாயாக.” சூரா 31 -17
يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَىٰ مَا أَصَابَكَ ۖ إِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ ﴿١٧﴾
தன் மகனுக்கு சரிவர தொழுகையை நிறைவேற்றும் படியும், நன்மையை ஏவி தீமையை தடுக்கும் படியும், தனது மகனுக்கு உபதேசம் செய்யும் லுக்மான் (ரஹ்) அவர்கள் இது சம்பந்தமாகவும், ஏனைய விஷயங்களிலும் மக்களுடன் பொறுமையுடன் செயல் புரிவது சிறப்பு என எடுத்துக் கூறுகிறார்கள். முஹம்மது (சல்) அவர்களின் மருமகனாகிய, அலி (ரழி) அவர்கள் பொறுமை என்பது “அல்லாஹ்விடம் உதவி கோருவது” என விளக்கம் கூறினார்கள். அல்லாஹ்வை நினைவு படுத்தல், அவனது மகிமையை பற்றி சிந்தித்தல் என்பது பொறுமை யின் திறவுகோலாகும். என்றென்றும் நிலைத்தி ருக்கும் சுவர்க்கத்தின் திறவு கோல் பொறுமை யாகும். இதன் காரணத்தால் இது ஒரு உன்னத மான அறிவுறையாகும்.
- “இன்னும் (பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே. சூரா 31 – 18.
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ اللَّـهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ ﴿١٨﴾
மற்றவர்களையும் விட நீங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் செயல் புரியாதீர்கள். விசுவாசிகள் பின்பற்ற வேண்டிய உயர்ந்த நடத்தை பணிவு, அடக்கம் என்பவையாகும். பணிவு எம்மை சுவர்க்கத்தின் பக்கம் அழைத்துச் செல்லும்; அதற்கு நேர்மாறாக அகம்பாவம் நம்மை நரகத்தின் பக்கம் அழைத்துச் செல்லும். இப்லீஸின் அகம்பாவமும் அவனுடைய பணிவின்மையும், சுவர்க்கத்திலிருந்து வெளி யேற்றப்பட மாத்திரமின்றி, அவனும் அவனை பின்பற்றியவர்களும் நிரந்தரமாக நரகத்தில் தங்கி யிருக்குமாறு செய்து விட்டது. மற்றவர்களை விட தான் சிறந்தவர் என்று முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் நடந்துக் கொள்ள வில்லை. அதே போல், உடலை வருத்தி செய்யும் எந்த ஒரு தொழிலையும் என்னார் ஒதுக்க வில்லை. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஏனைய தொழிலாளர்களுடனும், வேலையாட்களுடனும் மகிழ்ச்சியோடு இனைந்து வேலையை பகிர்ந்துக் கொண்டதாக சகாப்பாக்கள் அறிவித்தனர்
- “மேலும், பூமியில் கர்வமாக நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் தற்பெருமைக்காரர், கர்வம் கொண்டோர் எவரையும் நேசிக்க மாட்டான்.”
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ اللَّـهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ ﴿١٨﴾
பூமியில் அகந்தையுடன் நடந்து செல்வது, கர்வத்தின் இன்னமொரு அடையாளமாகும். இதன் மூலம் பணிவின் முக்கியத்துவத்தை தனது மைந்தனுக்கு லுக்மான் (ரஹ்) அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். அல்லாஹ்வின் சன்னி தானத்தில் எல்லா மனிதர்களும் சமமானவர்கள். அவர்களை தரம் பிரித்துக் காட்டுவது அவர்களது இறையச்சமே. முஹம்மத் நபி (ஸல்) அவர்களும், அன்னாரது தோழர்களும், ஆரம்ப காலத்தில் வாழ்ந்த முஸ்லிம் பரம்பரையும் பணிவு எனும் நற்பன்பை பற்றி நன்கு அறிந்திருந்தார்கள். பூமியில் ஆணவமின்றி நடந்து சென்ற ஒரு முஸ்லிம் தலைவனின் வாழ்க்கையை சற்று பார்ப்போம்.
உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில், அன்னார் தனது படையுடன் டமாஸ்கஸ் நகரத்தை நோக்கி பயணம் செல்லும் போது அபு உபைதா (ரலி) அவர்கள் அன்னாருடன் இருந்தார். பாதையில் இருந்த ஒரு சிறிய குளத்தை கடப்பதற்காக, உமர் (ரலி) ஒட்கத்திலிருந்து இறங்கி, தனது இரு காலணிகளை கழற்றி தனது தோளில் தொங்க விட்டுக் கொண்டார்கள். தனது ஒட்டகத்தின் கயிற்றை கழற்றி, அவர்கள் இருவரும் நீரில் இறங்கினார்கள். தனது படையினர் அனைவரின் எதிரில் உமர் (ரலி) இவ்வாறு செய்வதை கண்ட அபு உபைதா (ரலி) “மூமின்களின் தலைவரே! உங்கள் மக்கள் அனைவரின் முன்னிலையில் நீங்கள் இவ்வளவு எளிமையாக எவ்வாறு நடந்துக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “உங்கள் மீது நாசம் உண்டாவதாக அபு உபைதா! உங்களை தவிர வேறு யாராவது இவ்வாறு சிந்தித்து இருந்தால் (நடப்பது வேறு). இப்படிப்பட்ட சிந்னைகள் முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும். நாங்கள் எவ்வளவு தாழ்ந்த நிலையில் வாழ்ந்த மனிதர்கள் என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வில்லையா? அல்லாஹ் எங்களை உயர்ந்த நிலைக்கும், கௌரவத்துக்கும் இஸ்லாத்தின் மூலம் உயர்த்தி யுள்ளான். நாங்கள் யார் என்பதை மறந்து, எங்களை உயர்த்திய இஸ்லாத்துக்கு பதிலாக வேறு எதையோனும் நாடினால், யார் எங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்தினானோ, அவன் எங்களை நிச்சயமாக தாழ்ந்த நிலைக்கு இழுத்துக்கொண்டு போய் சேர்த்து விடுவான்.” என்று கூறினார்கள். (Dr. அலி முஹம்மத் எழுதிய “உமர் இப்னு அல் கத்தாப் அவர்களின் வாழ்க்கையும் காலமும்” என்ற நூலிலிருந்து)
- “மேலும் உன் நடையில் மத்திய தரத்தை கடை பிடிப்பாயாக.”
وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ ۚ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ ﴿١٩﴾
“நாம் விட்டுச் சென்ற காலடித் தடங்கள் மூலம் எம்மை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்” என அமெரிக்க பழமொழி ஒன்று கூறுகிறது. பூமியின் மீது மென்மையாக நடக்கும் படியும், பாரமான காலணிகள் அணிந்து சந்தர்ப்பம் அறியாமல் தடைகளை உடைத்துக் கொண்டு நுழையக் கூடாது எனவும் லுக்மான் (ரஹ்) தன் மகனுக்கு உபதேசம் செய்கிறார். பொறுமையும், எளிமையும் ஒரு மனிதனின் இயற்கை சுபாவங்களாக அமைய வேண்டும் என்பதை அன்னார் எடுத்துக் கூறுகிறார். ஒவ்வொரு விசுவாசியும் எளிமை, மென்மை, கருணை ஆகிய குணங்களின் எடுத்துக் காட்டாக வாழ வேண்டும்
10. “மேலும், உன் சப்தத்தை தாழ்த்திக் கொள்வாயாக. (ஏனென்றால்) நிச்சயமாக சப்தங்களிலெல்லாம் மிக வெறுக்கத் தக்கது கழுதைகளின் சப்தமே! (என்று கூறினார்)
11. وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ ۚ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ ﴿١٩﴾
இறுதியில் லுக்மான் (ரஹ்) அவர்கள் குரலை தாழ்த்திக் கொள்ளுமாறு தன் மகனுக்கு உபதேசம் செய்வதை பார்க்கிறோம். குரலை உயர்த்தி, கடினமான வார்த்தைகள் உபயோகிக்கும் போது அக் குரல் கழுதைகளின் சப்தத்தை போல் இருப்பதாக அவர் கூறுகிறார். குரலை உயர்த்தி சப்தமிடுவதன் மூலம் உள்ளங்களை வெற்றி கொள்ள முடியாது. மாறாக மக்களின் கோபத்தையும், வெறுப்பையும் தான் சம்பாதித்துக் கொள்ள முடியும்.
விவேகம் உள்ள லுக்மான் (ரஹ்) அவர்கள், தன் அருமை மைந்தனுக்கு பத்து விஷயங்கள் பற்றி நல்லுதேசம் செய்தார். லுக்மான் (ரஹ்) அவர்கள் ஏக இறைவன் மீது நம்பிக்கை என்ற பிரதான ஸ்தானத்திலிருந்து தனது போதனைகளை ஆரம்பம் செய்வதை நாம் முக்கியமாக கவணிக்க வேண்டும். அத்துடன் வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு வேறு எவரையும் இணை வைக்கும் குற்றத்துக்கு ஒரு போதும் மன்னிப்பு கிடைக்காது என்றும் தெளிவாக சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு இறை விசுவாசத்தின் அத்திவாரத்தை அமைத்த பின், ஒரு விசுவாசி அகம்பாவம், தற்பெருமை போன்ற கீழ்தரமான எண்ணங்களை நீக்கி, வாழ்வில் அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டிய அழகிய பண்பாடு களையும் தன் மகனுக்கு எடுக்துக் கூறுகிறார். எமது பிள்ளைகளுக்கு இந்த 10 உபதேசங்களை எடுத்துக் கூறும் பெற்றோர்களாகிய நாம், எமது பிள்ளைகளின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு அடித் தளம் போடுகிறோம் என்பதில் எந்த சந்தேகமு மில்லை. பிள்ளைகளும் தமது பெற்றோர்களும், பொறுப்பானவர்களும் போதிக்கும் இவ்விஷயங் களை சரிவர பின்பற்றி நடந்தால், அதுவே அவர்களுக்கு சிறந்தது.
உங்கள் கருத்தை அறிவிக்கவும்.