×
உலகின் அற்ப இன்பங்களை அடைந்து கொள்வதற்காக ஒருவருக்கொருவர் பேராசைக் கொண்டு போட்டிப் போட்டுக் கொள்வதால், பொறாமை உணர்வு வளர ஆரம்பிக்கின்றது. இதனால் வெறுப்புணர்வு தூண்டப்பட்டு சண்டைச் சச்சரவுகள் அதிகரிக்கின்றன. இதன் விளைவால் அழிவும், நாசமும் ஏற்படுமே தவிர எந்த வளர்ச்சியையோ, முன்னேற்றத்தையோ மக்கள் அடைந்து கொள்ள முடியாது.

    இஸ்லாத்தின் பார்வையில் உலக ஆசையும், அதிகார மோகமும்

    ] Tamil – தமிழ் –[ تاميلي

    A.J.M மக்தூம்

    2015 - 1436

    الطموحات الدنيوية والرغبة في السلطة في نظر الإسلام

    « باللغة التاميلية »

    محمد مخدوم عبد الجبار

    2015 - 1436

    இஸ்லாத்தின் பார்வையில் உலக ஆசையும், அதிகார மோகமும்

    A.J.M.மக்தூம்

    "فوالله ما الفقر أخشى عليكم ولكني أخشى أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها وتهلككم كما أهلكتهم" رواه البخاري ومسلم

    “அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு வறுமை ஏற்படுவதைப் பற்றி நான் பயப்பட வில்லை! ஆனால் உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் மீது உலக ஆதிக்கம் விரிவாக்கப்பட்டது போல உங்கள் மீதும் ஏற்பட்டு விடுமோ என்றுதான் நான் பயப்படுகிறேன். நீங்கள் உலகை தேடி அலைவதில் முன் சென்றவர்களை போல் நீங்களும் ஒருவருக்கொருவர் போட்டியிடு வீர்கள். அது, உங்களுக்கு முன் சென்ற வர்களை அழித்துவிட்டதைப்போல உங்களை யும் அழித்து விடலாம் என்றே நான் பயப்படுகிறேன்” என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    உலகின் அற்ப இன்பங்களை அடைந்து கொள்வதற்காக ஒருவருக்கொருவர் பேராசைக் கொண்டு போட்டிப் போட்டுக் கொள்வதால், பொறாமை உணர்வு வளர ஆரம்பிக்கின்றது. இதனால் வெறுப்புணர்வு தூண்டப்பட்டு சண்டைச் சச்சரவுகள் அதிகரிக்கின்றன. இதன் விளைவால் அழிவும், நாசமும் ஏற்படுமே தவிர எந்த வளர்ச்சியையோ, முன்னேற்றத் தையோ மக்கள் அடைந்து கொள்ள முடியாது என்பதையே மேற்கண்ட ஹதீஸ் உணர்த்துகிறது.

    பதவி மோகம், புகழாசை, பேராசை, பெருமை ஆகிய தீய பண்புகளே இன்று சமூகத்தில் தோன்றியுள்ள பல்வேறு பிரச்சினைகள், குழப்பங்கள், நெருக்கடிகள் போன்றவற்றுக்கு மூல காரணியாக விளங்குகின்றன என்ற உண்மையை நம்மில் பலரும் உணர்ந்து கொள்வதில்லை.

    இறைத் தூதர் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி எமக்கு உணர்வூட்டி விட்டு சென்றுள்ளார்கள்.

    وَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ذِئْبَانِ ضاريان أرسلا في زريبة غَنَمٍ بِأَكْثَرَ إِفْسَادًا فِيهَا مِنْ حُبِّ الشَّرَفِ وَالْمَالِ وَالْجَاهِ فِي دِينِ الرَّجُلِ الْمُسْلِمِ رواه الترمذي

    ஆட்டு மந்தையில் விடப்பட்ட பசியுள்ள இரு ஓநாய்களால் ஆடுகளுக்கு ஏற்படும் நாசத்தையும், அழிவையும் விட பாரிய குழப்பத்தை ஒரு மனிதனுடைய உலக ஆசையும், அதிகார மோகமும் அவனுடைய மார்க்கத்தில் எற்படுத்தி விடும் என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி)

    எல்லை மீரிய பொருளாசையும், பதவி மோகமும் ஒரு முஸ்லிமுடைய மார்கத்திலும், இறை விசுவாசத்திலும் ஏற்படுத்தும் பாதிப்பின் அளவை தெளிவு படுத்தும் சிறந்ததோர் உதாரணத்தை இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் எடுத்துக் கூறியுள்ளார்கள். இதனையே நோக்காகக் கொண்டு ஒருவன் செயற்படுகின்ற போது இந்த உலகில் பாரிய அழிவையும், நாசத்தையும் அவன் சம்பாதித்துக் கொள்வதோடு, உலகின் அற்ப பொருளுக்காக மறுமையிலும் பெறும் நஷ்டத்தை அடைகிறான் என்பது தெளிவாகிறது.

    நபிகளாரின் இந்த உதாரணத்தை சற்று உற்று நோக்கினால் இத்தீய பண்புகளின் கொடூரத்தை புரிந்து கொள்ளலாம். இந்த குறுகிய ஆசையை அடைந்து கொள்ள எந்த குற்றச் செயல் களையும் அச்சமின்றி செய்ய துணிந்து விடும் எத்தனையோ மனிதர்களை நாம் அன்றாடம் காண்கின்றோம். இவர்கள் பொய், புரட்டு, மோசடி, களவு, கொள்ளை ஏன் கொலை போன்ற எந்த குற்றச் செயல்களை அரங்கேற்றியேனும் அவர்களின் இலக்கை அடைய தலைப் பட்டு விடுகின்றனர். இதன் மூலம் பாரிய குழப்ப நிலை தோன்றி விடுகிறது. அழிவும், நாசமும் ஏற்படுகிறது. அச்சம் நிறைந்த நிம்மதியற்ற வாழ்வுக்கு அது வழிகோல்கிறது.

    இப்படியாக ஒருவன் எந்த கட்டுப்பாடோ, வரையறையோ இன்றி உலகின் அற்ப பொருள் மற்றும் அதிகாரங்களில் மோகங்கொள்ளும் போது அவனுள் அது மிருகப் பண்பை உருவாக்கி விடுகிறது. இதனால் யாரை பலித் தீர்த்தேனும் அவன் ஆசையயை அடைய முற்பட்டு விடுகிறான். இதனால் பிறருக்கு ஏற்படும் அநீதங்கள், பாதிப்புக்கள், துன்பங்கள் பற்றியும் அவன் அலட்டிக் கொள்ளவும் மாட்டான். இதனால்தான் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இவ்விரு தீய பண்புகள் பற்றி எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

    பிறிதோர் ஹதீஸில் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்,

    عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنْ الدُّنْيَا . رواه مسلم


    இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைராஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின் றார்கள்: குழப்பங்களின் போது இறை வழிப் பாடுகளின் பக்கம் விரையுங்கள்; (ஏனெனில் விரைவில் குழப்பங்கள் உருவாகும்) அதன் போது காரிருளில் சிக்கிய மனிதன் தடுமாற்றத்தில் காணப் படுவது போன்று பாரிய குழப்பங்கள் தோன்றி மனிதர்களைத் தடுமாற்றத்தில் ஆக்கிவிடும், அப்போது காலையில் இறை விசுவாசியாக இருந்தவன் மாலையில் காபிராக மாறிவிடுவான். மாலையில் இறை விசுவாசியாக இருந்தவன் காலையில் காபிராக மாறிவிடுவான். உலகின் அற்ப பொருள்களுக்காக தனது மார்க்கத்தை விற்கும் நிலை உருவாகிவிடும். (முஸ்லிம்)

    ஒரு காலத்தில் பாரிய குழப்பங்கள் ஏற்படும், அதன் போது மனிதர்கள் செய்வதறியாது தடுமாற்றத்தில் இருப்பார்கள் என்பதை இறைத் தூதர் (ஸல்) முன்னரே அறிவித்து சென்று விட்டார்கள். மேலும் பணம், பதவி, பட்டம், மதிப்பு போன்ற உலகின் அற்ப பொருள்களுக்காக தனது மார்க்கத்தையே விற்று அதனை அடைய முயற்சி செய்யும் அளவுக்கு ஈமானில் பலகீனமானவர்கள் அக்காலத்தில் தோன்றுவார்கள் என்பதையும் மேற் குறிப்பிடப் பட்டுள்ள செய்தி தெளிவு படுத்துகிறது. அதே நேரத்தில் அக்குழப்ப நிலையிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி அதிகமதிகம் நல்லறங்களில் ஈடுபடுவதே என்பதையும் இந்த செய்தி உணர்த்துகிறது.

    எனவேதான் இறைவன் தனது அருள் மறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்,

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ

    ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கி விட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்த வர்கள். (63:9)

    ஆகவே இத்தீய பண்புகளின் பிடியில் மாட்டிக் கொள்ளாமல் நம்மனைவரையும் இறைவன் தற்காத்து ஈருலகிலும் வெற்றியடைந்தோரில் நம்மையும் ஆக்கியருள்வானாக... ஆமீன்