×
துல் ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள், துல் ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களை விட சிறப்பான நாட்கள் அல்லாஹ்விடம் எதுவுமில்லை

    தன்னுடைய அடியார்கள் நன்மைகளை அதிகம் பெறுவதற்கு பல சந்தர்பபங்களை அல்லாஹ் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளான். அதில் ஒன்று தான் துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 பத்து நாட்களாகும்.

    சிறப்புக்கள்.

    துல்ஹஜ் மாதத்ததின் சிறப்புக்கள் பற்றி குர்ஆன் ஹதீஸ் களில் அதிக ஆதாரங்கள் உள்ளன.

    وَالْفَجْرِ وَلَيَالٍ عَشْرٍ

    1விடியற்காலையின்மீது சத்தியமாக பத்து இரவுகள் மீது சத்தியமாக.(89:1-2)

    இவ்வசனம் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களை குறிப்பிடுவதாக இப்னு அப்பாஸ்(ரலி), சுபைர் (ரலி), முஜாஹித் (ரஹ்) போன்றோர் குறிப்பிடுகின்றனர் என இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

    2.

    صحيح البخاري (2ஃ 20)

    عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَا العَمَلُ فِي أَيَّامٍ أَفْضَلَ مِنْهَا فِي هَذِهِ؟» قَالُوا: وَلاَ الجِهَادُ؟ قَالَ: «وَلاَ الجِهَادُ، إِلَّا رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ، فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ

    (துல்ஹஜ்) பத்து நாட்களில் செய்யும் எந்த நல்லறமும் அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் செய்யும் எந்த நல்லறத் தையும் விடச் சிறந்ததல்ல” என்று நபி(ஸல்) கூறினார்கள். “ஜிஹாதை விடவுமா?” என்று நபித் தோழர்கள் கேட்டனர். “தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப் பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர” என்று நபி(ஸல்) கூறினார்கள்.

    அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) (நூல்: புகாரி

    3.

    وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَات

    “குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினைவு கூர்வார் கள்” (திருக்குர்ஆன்: 22:28)

    குறிப்பிட்ட நாட்கள் என்பது துல்ஹஜ் பத்து நாட்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள்.(நூல் தப்ஸீர் இப்னு கஸீர்)

    4.துல் ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களை விட சிறப்பான நாட்கள் அல்லாஹ்விடம் எதுவுமில்லை. அந்நாட்களில் செய்யும் நல்ல அமல்களைவிட சிறப்பான நல்லமல்கள் எதுவுமில்லை. எனவே அந்நாட்களில் நீங்கள் அதிகமாக லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹ் அக்பர், அல்ஹம்துலில்லாஹ் என்று அல்லாஹ்வை போற்றி புகழுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) (நூல் தபரானி)

    5.இமாம் ஸஹீத் இப்னு ஜபைர்(ரலி) அவர்கள் துல்ஹஜ் பத்து நாட்களில் தங்களால் முடியுமானவரை அதிகமாக நன்மைகளை செய்வதில் ஈடுபடுவார்கள்.(நூல்:தாரமி)

    6. “துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் சிறப்பின் காரணம் என்னவெனில் இஸ்லாத்தின் தலையாய வணக்கங்களான தொழுவது, நோன்பு நோற்பது, ஹஜ் செய்வது, தர்மம் செய்வது போன்ற அந்நாட்களில் ஒருங்கே அமைவதாகும். இந்நிலை வேறு நாட்களில் அமைவதில்லை” என இமாம் இப்னு ஹஜர் ஹஜ்கலானி (ரஹ்) குறிப் பிடுகின்றார்கள். (நூல் : பத்ஹூல் பாரி)

    இந்நாட்களில் விரும்பத்தக்க காரியங்கள்:

    கடமையான தொழுகைகளின் பால் விரைந்து செல்வதும் அதிகமாக சுன்னத்தான உபரியான தொழுககைகளை மேற்கொள்வதும் அல்லாஹ்வின் நேசத்தை பெற்றுத் காரியங்களாகும்.

    صحيح مسلم (1ஃ 353)

    فَقَالَ: سَأَلْتُ عَنْ ذَلِكَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «عَلَيْكَ بِكَثْرَةِ السُّجُودِ لِلَّهِ، فَإِنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ سَجْدَةً، إِلَّا رَفَعَكَ اللهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْكَ بِهَا خَطِيئَةً

    “நீ சுஜூதுகளை அதிகமாகிக் கொள். நீ அல்லாஹ்வுக்காக செய்யும் ஒரு சுஜூதின் மூலம் அல்லாஹ் உனக்கு ஒரு அந்தஸ்தை உயர்த்தி ஒரு தவறை அழித்து விடுவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) நூல் முஸ்லிம்)

    2. நோன்பு நோற்றல். இதுவும் சாலிஹான் அமல்களில் உள்ளதாகும்.

    “நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ்மாதத்தின் ஒன்பதாவது நாள் ஆஷூராவுடைய நாள் மற்றும் ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருந் தார்கள்” என நபி(ஸல்)அவர்களின் சில மனைவிமார்கள் அறிவிக்கிறார்கள்.(நூல்:அஹ்மத் அபூதாவுத் நஸாயீ)

    துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களில் நோன்பு நோற்பது மிகவும் விரும்பத்தக்கது என இமாம் நவவி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

    3. தக்பீர் கூறி அல்லாஹ்வை போற்றி புகழ்தல்.

    இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் மேலேயுள்ள ஹதீஸ் இதனை குறிப்பிடு கின்றன.

    இப்னு உமர்(ரலி) அவர்கள் அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் பாதையில் செல்லும் போதும் சந்தைக்கு செல்லும் போதும் தக்பீர் கூறுவார்கள். மக்களும் அவர்கள் இருவரது தக்பீரை கேட்டு தக்பீர் கூறுவார்கள்.

    மேலும் உமர்(ரலி) மினாவில் தம் கூடாரத்தில் தக்பீர் கூறுவார்கள். அதைப் பள்ளியில் உள்ளவர்கள் செவியுற்று அவர்களும் தக்பீர் கூறுவார்கள். மேலும் கடைவீதியில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். முடிவில் மினா தக்பீர் முழக்கத்தால் அதிரும்.

    இப்னு உமர்(ரலி) அவர்கள் மினாவில் தங்கியிருக்கும் அந்நாட்களில் தொழுகை களுக்குப் பின்னாலும் தங்களது விரிப்பிலும் இருக்கையிலும் இருக்கும் போதும் நடக்கும் போதும் தக்பீர் கூறுவார்கள். எனவே இப்னு உமர்(ரலி) மற்றும் அபூ ஹூரைரா (ரலி)ஆகியோரது தக்பீரை கேட்டு மக்கள் தக்பீர் கூறியுள்ளதால் தக்பீரை சப்தமிட்டு கூறுவது முஸ்தஹப்பாகும்.

    எனவே நாங்களும் மறைந்து போன இச்சுன்னாவை உயிர்பிக்கவேண்டும்.

    தக்பீர் கூறும் வாசக அமைப்புக்கள்:

    சஹாபாக்கள் தாபீயீன்கள் தக்பீர் கூறிய பல வாசக அமைப்புக்கள் பின்வருமாறு காணப் படுகின்றன.

    - الله أكبر، الله أكبر، الله أكبر كبيرا .

    - الله أكبر، الله أكبر، لا إله إلاّ الله، والله أكبر، والله أكبر، ولله الحمد.

    - الله أكبر، الله أكبر، الله أكبر، لا إله إلاّ الله، والله أكبر، الله أكبر، ولله الحمد

    அறபாவுடைய நாளில் நோன்பு நோற்றல்:

    صحيح مسلم (2ஃ 818)

    أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ، وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ،

    அறபா நாளில் நோன்பு நோற்பது முந்திய வருடத்தினதும் அதற்கடுத்த வருடத்தினதும் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என எண்ணுகிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

    அறிவிப்பவர்:அபூ கதாதா(ரலி) நூல்: முஸ்லிம்

    அறபாவில் தங்கும் ஹாஜிகள் அந்நாளில் நோன்பு நோற்கக் கூடாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் அந்த நாளில் நோன்பு நோற்காதவர்களாக இருந்துள்ளார்கள்.

    www.islamway.com