×
1. அல்லாஹ்வின் அருள் விசாலமானது 2.செய்த பாவத்திற்கு உடனே அந்த நிமிடத்திலே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரவேண்டும் 3. தவ்பாவின் மூலம் கிடைக்கும் பலன்கள் 4. மனம் வருந்தி பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்வது 5.மனிதன் மனிதனுக்கு செய்யும் தவறுகளுக்கு சம்பந்தப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.

    அல்லாஹ்வின் கருணையும் அடியார்களின் பாவமன்னிப்பும்

    ] Tamil – தமிழ் –[ تاميلي

    M.S.M.இம்தியாஸ் யூசுப்

    2014 - 1435

    لطف الله ورحمته وتوبة العباد واستغفارهم

    « باللغة التاميلية »

    محمد إمتياز يوسف

    2014 - 1435

    அல்லாஹ்வின் கருணையும் அடியார்களின் பாவமன்னிப்பும்

    M.S.Mஇம்தியாஸ் யூசுப் ஸலபி

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا

    விசுவாசிகளே! நீங்கள் கலப்பற்ற தூய மனதுடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள்.... (அல்குர்ஆன் 66:8)

    {وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ} [النور: 31

    'இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். நீங்கள் வெற்றி அடையக்கூடும்'' (24:31)

    وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ} [هود: 3

    'உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புப் கோரி பிறகு அவன் பக்கம் மீளுங்கள்'' (11:3)

    {وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ } [الحجرات: 11

    எவர் பாவமன்னிப்புக் கோரவில்லையோ அவர்கள் அநியாயக்காரர்களே! (அல்குர்ஆன் 49:11)

    அன்புள்ள சகோதரர்களே! மனிதர்களாக பிறந்த அனைவரும் பாவம் செய்யக் கூடிய வர்களே. பாவத்தை விட்டும் பாவமன்னிப்பை விட்டும் அப்பாற் பட்டவர் எவருமில்லை. நாம் செய்த பாவத்திற்கு பச்சாதப்பட்டு, அழுது கண்ணீர் வடித்து அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை வைத்தவர்களாக மன்னிப்புக் கோரவேண்டும்.

    {قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ } [الزمر: 53

    நபியே நீங்கள் கூறுங்கள் தங்களுக்கு தாங்களே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார் களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்து விட வேண்டாம். (நீங்கள் பாவத்தி லிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பு கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் அருள்பாளிப் போனுமாக இருக்கிறான். (39:53)

    கருணையுள்ள ரஹ்மான் அடியார்கள் மீது இரக்கமுள்ள ரஹ்மான் மனிதர்கள் மீது அன்பு காட்ட தயாராகவே இருக்கிறான்.

    அல்லாஹ்வுடைய இரக்க சுபாவத்தை கருணையை நபி(ஸல்) அவர்கள் இப்படி கூறுகிறார்கள்.

    صحيح البخاري (4/ 176)

    عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ رَجُلًا كَانَ قَبْلَكُمْ، رَغَسَهُ اللَّهُ مَالًا، فَقَالَ لِبَنِيهِ لَمَّا حُضِرَ: أَيَّ أَبٍ كُنْتُ لَكُمْ؟ قَالُوا: خَيْرَ أَبٍ، قَالَ: فَإِنِّي لَمْ أَعْمَلْ خَيْرًا قَطُّ، فَإِذَا مُتُّ فَأَحْرِقُونِي، ثُمَّ اسْحَقُونِي، ثُمَّ ذَرُّونِي فِي يَوْمٍ عَاصِفٍ، فَفَعَلُوا، فَجَمَعَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَقَالَ: مَا حَمَلَكَ؟ قَالَ: مَخَافَتُكَ، فَتَلَقَّاهُ بِرَحْمَتِهِ "

    உங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதர் இருந்தார். அல்லாஹ் அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கிய போது தன் பிள்ளைகளிடத்தில் உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன் என்று கேட்டார். அதற்கு அவர்கள் சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர் நான் நற்செயல் எதையும் செய்ய வில்லை. ஆகவே நான் இறந்து விட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு என்னை பொடிப்பொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னை தூவி விடுங்கள். என்று சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். அல்லாஹ் (அவரது உடல் அணுக்களை) ஒன்று திரட்டி உருவாக்கி விட்டு இப்படி செய்ய உன்னை தூண்டியது எது என்று கேட்டான். அதற்கவர் (யா அல்லாஹ்) உன் மீதுள்ள அச்சம் தான் காரணம் என்று கூறினார். உடனே அல்லாஹ் அவரைத் தன் கருணையால் அரவணைத்துக் கொண்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி) நூல்: புகாரி

    அல்லாஹ்வின் அருள் விசாலமானது. அவன் மனிதர்கள் மீது மிகுந்த அன்புள்ளவன். அவனை அஞ்சிடும் போது கருணையால் மூடிக் கொள்கிறான். எனவே நாம் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவத்திற்கு உடனே அந்த நிமிடத்திலே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரவேண்டும்.

    “மீண்டும் அந்தப் பாவத்தை செய்யமாட்டேன். அதன் பக்கம் நெருங்கமாட்டேன்” என்று உறுதிகொள்ள வேண்டும். எங்கள் பிரார்த்த னைக்கும், பாவமன்னிப்புக்கும் பதிலளிக்கக் கூடிய ஒரே கடவுள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. எனவே அவனிடமே கையேந்த வேண்டும்.

    وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ } [آل عمران: 135

    அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தை செய்து விட்டாலும், அல்லது தங்களுக்கு தாங்களே அநியாயம் செய்து கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, தங்களுடைய பாவங்களுக்கு அவனிடமே பிழை பொறுக்கத் தேடுவார்கள். அல்லாஹ் வைத் தவிர பாவங் களை மன்னிப்பவன் யார்? இவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்துகொண்டால் (அதில்) நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதிலிருந்து விலகி விடுவார்கள்) (அல்குர்ஆன் 3:135)

    நபி ஆதம் (அலை) ஹவ்வா (அலை) பாவம் புரிந்த வேளையில் உடனே அப்பாவத்திற்காக மனம் வருந்தி பாவ மன்னிப்பை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்று அல்லாஹ்விடமே கேட்டார்கள் அல்லாஹ் அவர்களுக்கு சில வாத்தைகளை கற்றுக் கொடுத்தான். அதைக் கொண்டு மன்னிப்புக் கேட்டார்கள். அல்லாஹ் இப்படி கூறுகிறான்:

    قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ [الأعراف: 23]

    அவ்விருவரும் எங்கள் இரட்சகனே. நாங்கள் எங்களுக்கே அநியாயம் செய்து கொண்டோம். நீ எங்களை மன்னித்து எமக்கு அருள் புரியவில்லையாயின் நிச்சயமாக நாம் நஷ்டவாளர்களில் உள்ளவராவோம் என்று அவ்விருவரும் பிரார்த்தித்து கூறினர்(7:23)

    பாவமன்னிப்புக்கான சந்தரப்பம்

    மனிதன் பாவம் செய்து விட்டான் என்பதற்காக அல்லாஹ் உடனே தண்டனையை இறக்கி விடுவதில்லை. மாறாக பாவமன்னிப்பக்கான அவகாசத்தை வழங்குகிறான். ஒவ்வொரு நபியுடைய சமூகமும் தவறிழைத்த போது, மாகா பாதகங்கள் செய்த போது கூட இறைத்தூதர்கள் மூலமாக பாவமன்னிப்புக் கான வழிகாட்டலை காட்டினான். அன்பும் இரக்கமுமுள்ள அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள் என்றே அவர்களுக்கு சொல்லப் பட்டது.

    நூஹ் நபியின் சமூகம் இணைவைப்பு எனும் கொடிய பாவத்தை உலகிற்கு அறிமுகப் படுத்திய போது கூட அவர்களது காரியங்கள் தவறானவை, அல்லாஹ்வினால் மன்னிக்க முடியாதவை என்பதை கூறுவதற்காக நூஹ் நபியின் மூலம் அல்லாஹ் 950 வருடங்கள் போதனை செய்தான்.

    நூஹ் நபி தனது சமூகத்தைப் பார்த்து

    فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا

    (மக்களே!) உங்கள் இரட்சகனிடம் பாவ மன்னிப்பு கேளுங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான்.

    يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا

    (அவ்வாறு செய்தால்) அவன் உங்களுக்கு தொடராக பொழியச் செய்வான்.

    وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا

    செல்வங்களாலும் ஆண் மக்களாலும் உங்களுக்கு அவன் உதவி செய்வான். மேலும் உங்களுக்கு தோட்டங்களை ஏற்படுத்துவான் உங்களுக்கு ஆறுகளையும் ஏற்படுத்து வான்.

    مَا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًا

    அல்லாஹ்வின் கண்ணியத்தை அஞ்சாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?

    وَقَدْ خَلَقَكُمْ أَطْوَارًا

    நிச்சயமாக அவன் உங்களை பல கட்டங்களாக படைத்தி ருக்கிறான்.

    أَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللَّهُ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا

    ஏழுவானங்களை அல்லாஹ் எவ்வாறு தட்டுத் தட்டாகப் படைத்துள்ளான். என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?

    وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا

    மேலும் அவன் அவற்றில் சந்திரனை ஒளியாக அமைத் தான். இன்னும் சூரியனை விளக்காக அமைத்தான் (என்பதை நீங்கள் பாரக்க வில்லையா?)

    وَاللَّهُ أَنْبَتَكُمْ مِنَ الْأَرْضِ نَبَاتًا ثُمَّ يُعِيدُكُمْ فِيهَا وَيُخْرِجُكُمْ إِخْرَاجًا وَاللَّهُ جَعَلَ لَكُمُ الْأَرْضَ بِسَاطًا لِتَسْلُكُوا مِنْهَا سُبُلًا فِجَاجًا

    அல்லாஹ் உங்களை பூமியிலிருந்து உற்பத்தி செய்தான். பின்னர் அவன் அதில் உங்களை மீட்டுவான். மேலும் உங்களை (அதிலிருந்தே) வெளிப்படுத்துவான். அல்லாஹ் உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான். அதில் நீங்கள் பயணம் செய்வதற்காக விசாலமான பாதை களையும் அமைத்தான்.(71:10-20)

    என்று நூஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கருனை பற்றியும் வல்லமை பற்றியும் எடுத்துக் கூறி அல்லாஹ்வின் மன்னிப்பின் பால் மீளுமாறு போதித்தார்கள். 950 வருட காலம் அந்த மக்கள் தான் செய்த தவறில் உறுதியாக இருந்ததோடு நிராகரப்பிலும் உறுதியாக இருந்தார்கள் அதன் பின்பே அந்த மக்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை இறங்கியது.

    ஓவ்வொரு சமூகத்தின் முடிவும் இதே அடிப்படையிலே தான் இருந்தது. அல்லாஹ் அன்புள்ளவன் என்பதற்காகத் தான் நபிமார்கள் மூலம் பாவமன்னிப்புக்கான வழிகாட்டலை காட்டித்தந்தான்.

    பாவமன்னிப்பு கேட்கும் போது அல்லாஹ் மிகவும் மகிச்சி யடைகிறான் என அல்லாஹ்வின் தூதர் நபிமுஹம்மத் (ஸல்) அவர்கள் விளக்கப்படுததுகிறார்கள்.

    صحيح مسلم (4/ 2104)

    حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ وَهُوَ عَمُّهُ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ حِينَ يَتُوبُ إِلَيْهِ، مِنْ أَحَدِكُمْ كَانَ عَلَى رَاحِلَتِهِ بِأَرْضِ فَلَاةٍ، فَانْفَلَتَتْ مِنْهُ وَعَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ، فَأَيِسَ مِنْهَا، فَأَتَى شَجَرَةً، فَاضْطَجَعَ فِي ظِلِّهَا، قَدْ أَيِسَ مِنْ رَاحِلَتِهِ، فَبَيْنَا هُوَ كَذَلِكَ إِذَا هُوَ بِهَا، قَائِمَةً عِنْدَهُ، فَأَخَذَ بِخِطَامِهَا، ثُمَّ قَالَ مِنْ شِدَّةِ الْفَرَحِ: اللهُمَّ أَنْتَ عَبْدِي وَأَنَا رَبُّكَ، أَخْطَأَ مِنْ شِدَّةِ الْفَرَحِ "

    நபி(ஸல்) அவர்களின் பணியாளரான அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். தன்னுடைய அடியான் பாவமன்னிப்புக் கோரி தன் பக்கம் மீளும்பொழுது அது பற்றி அல்லாஹ் அதிக அளவு மகிழ்ச்சி அடைபவனாக இருக்கிறான். அது உங்களில் ஒருவர் அடையும் மகிழ்ச்சியை விட அதிக மாகும். (இதற்கான உவமை என்னவென்றால்) அவர் ஒரு பொட்டல் பூமியில் தனது வாகனத்தில் பயணமாகிக் கொண்டிருந்தார். திடீரென அது அவரை விட்டும் காணா மல் போய்விட்டது! அவரது உணவும் பானமும் அதிலே தான் இருந்தன. இனி அந்த வாகனம் கிடைக்கப் போவ தில்லை என அவர் நிராசை அடைந்து ஒரு மரத்தருகே வந்து அதன் நிழலில் ஓய்வாகப் படுத்திருந்தார். தன் வாகனம் கிடைக்கு மென்ற நம்பிக்கையே அவருக்கில்லை. இந்நிலையில் திடீரென அந்த வாகனம் தனக்கு முன்னால் வந்து நின்று கொண்டிருப்பதை காண்கிறார். உடனே அதன் கடிவாளத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சிப் பெருக்கோடு யாஅல்லாஹ்! நீதான் என் அடிமை! நான் உன் எஜமானன் என்று அதிக அளவு மகிழ்ச்சியி னால் கூறுகிறார்.அவரது வார்த்தை தவறியது. (நூல்: முஸ்லிம்)

    தண்ணீரோ பூற்பூண்டுகளோ இல்லாத பாலை வன பூமியில் ஒட்டகப் பயணத்தை மேற்கொள்பவர் தன்னு டைய தாகத்திற்கும் பசிக்கும் உணவுகளை தயார்படுத்திக் கொண்டு செல்கிறார். இந்நிலையில் திடீரென அந்த ஒட்டகம் தவறிவிடுகிறது. இப்போது இம்மனிதனின் நிலை எப்படி இருக்கும். வாழ்கையில் நம்பிக்கை இழந்து செத்து தொழைந்தோம் என்று கண்ணீரோடு இருப்பான். திடீரென அந்த ஒட்டகம் உணவுடனும் பானத்துடனும் வந்து கண்முன்னே நிற்கும் போது உயிர் திரும்பி வந்தது போல் இருக்கும். இப்போது அவனுக்கு கிடைக்கும் சந்தோசம் மட்டிட முடியாது அதுபோல் அடியான் செய்த பாவங் களுக்கு மன்னிப்பு கோரும் போது அல்லாஹ் மிகவும் சந்தோசடைகிறான்.

    صحيح مسلم (4/ 2113)

    عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ، وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ، حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا

    அபூ மூஸா அல் - அஷ்அரி(ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நிச்சயமாக அல்லாஹ், பகலில் பாவம் செய்த மனிதன் பாவமீட்சி தேடட்டும் என்பதற்காக இரவில் தனது கையை விரித்து வைக்கிறான். இரவில் பாவம் செய்தவன் பாவமீட்சி தேடட்டும் என்று பகலில் கையை விரித்து வைக்கிறான். (இது) சூரியன் மேற்கில் இருந்து உதயமாகும் வரையில் (நடந்து கொண்டிருக்கும்) நூல்: முஸ்லிம்.

    அடியான் செய்யும் பாவங்களுக்காக மன்னிப்பு வழங்க அல்லாஹ் காத்துக் கொண்டிருக் கிறான். என்பதை இந்நபி மொழி மூலம் நபி(ஸல்) அவர்கள் விளக்கப் படுத்துகிறார்கள்.

    தவ்பாவின் மூலம் கிடைக்கும் பலன்கள்.

    உளத்தூய்மையுடன் அல்லாஹ்விடம் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்கும் போது அல்லாஹ்வின் மன்னிப்பும் நேசமும் அருளும் கிடைக்கும்.

    إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ

    பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மை யாக இருப்போரையும் நேசிக்கின்றான் (2:222).

    அல்லாஹ்வின் நேசம் மனிதர்களுடைய நேசம் போன்ற தல்ல. அல்லாஹ் ஒருவனை நேசித்து விட்டால் வானம் பூமியிலுள்ளவர்களும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். அந்த ஏற்பாட்டை அல்லாஹ்வே செய்கிறான்.

    அத்துடன் பாமன்னிப்பு கோருபவர்களுக்கு மலக்குகளும் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்கிறார்கள். மன்னிப்பு கோருகிறார்கள்.

    الَّذِينَ يَحْمِلُونَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ

    அர்ஷை சுமந்துக் கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹ் செய்து கொண்டும் இருக்கிறார்கள். அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர். ஷஷஎங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து இருக்கிறாய். எனவே பாவ மீட்சி கோரி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! (40:7).

    தாங்கள் செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்கும் போது அந்த பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி விடுகிறான். பாவ மன்னிப்பு கோருவது அடியார்களின் பண்பாகவும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

    إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا

    ஆனால், (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமான் கொண்டு, ஸாலிஹான (நற்)செய்கைகள் செய்கிறார்களோ–அவர்களு டைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப் போனாகவும் மிக்க கிருபையுடையோ னாகவும் இருக்கின்றான் (25:70).

    பாவமன்னிப்பு கோருவதால் அந்த மன்னிப்பை அல்லாஹ் வழங்கி சுவனத்தை பரிசாக வழங்கவும் தயாராக இருக் கிறான்.

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا عَسَى رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ يَوْمَ لَا يُخْزِي اللَّهُ النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ نُورُهُمْ يَسْعَى بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ يَقُولُونَ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

    ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள். உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும். (தன்) நபியையும், அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களை யும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும். அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப் பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறிப் (பிரார்த்தனை செய்து) கொண்டிருப்பார்கள். (66:8).

    பாவமன்னிப்பின் மூலம் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நன்மைகள் பலதை நூஹ் (அலை) அவர்கள் தன் சமூகத்திற்கு எடுத்துக் கூறியதை மேலேயுள்ள வசனங்கள் மூலம் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

    மேலும் பின் வரும் வசனத்திலும் பாவமன்னிப்பு கோருபவர்கள் குறிப்பிட்ட காலம் வாழ்வதற்கு அவகாசம் வழங்கப் படுவார்கள் என்றும் குறிப்பிடுகிறான்.

    وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِنْ تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ

    மேலும் உங்கள் இரட்சகனிடம் நீங்கள் பாவமன்னிப்புக் கோரி பின்னர் அவன் பால் மீளுங்கள். குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்கு அழகிய முறையில் வாழ்க்கை வசதிகளை அவன் வழங்குவான். அருளுக் குரியோர் அனைவருக்கும் தனது அருளையும் வழங்குவான். நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக நான் மாபெரும் (மறுமை) நாளின் வேதனையை உங்கள் மீது அஞ்சுகிறேன்.(11:3)

    வரட்சி வறுமை குழந்தை பாக்கியமின்மை போன்ற இன்னல்கள் பாவங்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்தலாம். பாவமன்னிப்பின் மூலமே இவைகளை நீக்கிக் கொள்ளவும் முடியும். எனவே அல்லாஹ் இடத்தில் பாவமன்னிப்பின் மூலம் சரணடைய வேண்டிய வர்களாக அடியார்கள் இருக்கிறார்கள். கருணையுள்ள அல்லாஹ் அடியார்களின் பாவமன்னிப்புக்காக எண்ணற்ற நன்மைகளை வழங்க தயாராக இருக்கிறான்.

    மனிதனுக்கு இழைக்கும் குற்றங்களுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரலாமா?

    பாவமன்னிப்பை பொறுத்தவரை பிரதானமான ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வுடைய விடயத்தில் - அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய இபாதத் களில்- தவறிழைக்கும் போது அதற்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்க தயாராக இருக்கிறான்.

    ஆனால் மனிதன் மனிதனுக்கு செய்யும் தவறுகளுக்கு சம்பந்தப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். ஒரு மனிதனுக்கு குற்றமிழைத்து விட்டு யாஅல்லாஹ் என்னை மன்னிப்பாயாக என்று கூறினால் அல்லாஹ் மன்னிக்கப் போதில்லை. யாருக்கு குற்றமிழைத்தோமோ அந்த மனிதனிடம் நேரடியாக சென்று மன்னிப்பு கோர வேண்டும். இதனை கவனத்தில் கொண்டே மன்னிப்பு கோர வேண்டும்.

    பாவமன்னிப்பு வருடத்திற்கு ஒரு முறை கேட்க வேண்டுமா?

    சகோதரர்களே! பாவமன்னிப்பு கேட்பதற் கென்று விஷேட மான ஒரு தினம் இஸ்லாத்தில் கிடையாது! இடைத்தரகர் ஒருவரை நியமித்து அவர் மூலமாக தவ்பா கேட்க வேண்டும் என்ற நடைமுறையும் இஸ்லாத்தில் கிடையாது. தான் செய்த பாவத்தை உணர்ந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து தனக்கு தெரிந்த பாஷையில் உடனே பாவ மன்னிப்புக் கேட்டு அல்லாஹ் விடம் மன்றாட வேண்டும் என்பதை மேலே யுள்ள இவ்வசனங்கள் கூறுவதை கவனத்தில் கொள்ளுங்கள். அவ்வாறே ஐவேளை தொழுகைகள் முடிந்த பின்பும் பாவமன்னிப்பு கேட்ப தற்கான முறையில் துஆக்களை நபி யவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அவைகளை பாடமாக்கி கருத்துக்களை உணர்ந்து ஓதுவதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.

    ரமழான் 27ம் இரவு பாவமன்னிப்புக்கான தினமா?

    பெரும்பாலான மக்கள் ரமழான் மாதம் நோன்பு 27 நள்ளிரவில் பள்ளிவாசலில் (ஆண்கள், பெண்கள்) ஒன்று கூடி இமாம் சொல்லிக் கொடுக்கும் தவ்பாவை கிளிப் பிள்ளை மாதிரி திருப்பிச் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள்.

    நேற்று செய்த பாவம், இன்று செய்த பாவம், நாளை செய்யும் பாவம், முன் செய்த பாவம், இருட்டில் செய்த பாவம், வெளிச்சத்தில் செய்த பாவம்... என்று பாவத்தை கோர்வை செய்து ஒரு வருடத்திற்கான பாவமன்னிப்பை மொத்தமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் கேட்டு விட்டு அடுத்த வருடம் ரமழான் நோன்பு 27ல் மீண்டும் பள்ளிக்கு வந்து நள்ளிரவில் தவ்பா கேட்கிறார்கள். இப்படியான ஒரு வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் தனது உம்மத்திற்கு காட்டித் தரவில்லை. அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தராத எந்த வழி முறையும் மார்க்கமாக மாட்டாது. எனவே முஸ்லிம்கள் இந்த பழக்கத்தை விட்டுவிட்டு மௌத்தை நினைத்து தினம் தோறும் தௌபாச் செய்ய வேண்டும்.

    நான் ஒரு நாளைக்கு 70 தடவைக்கும் அதிகமாக அல்லாஹ் விடத்திலே பாவ மன்னிப்புத் தேடுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)

    அப்படியாக இருந்தால் நாம் எத்தனை தடவைகள் ஒரு நாளைக்குத் தௌபாச் செய்ய வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

    எனவே நாளாந்தம் நாமும் அல்லாஹ்விடம் தௌபாச் செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். மரணம் நெருங்கும் வரை காத்திருக்கக்கூடாது.

    وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا

    இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங் களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன் என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை. இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனை யையே நாம் சித்தப் படுத்தி வைத்துள்ளோம் (4:18).