×
1. நோன்பு கடமையாவது யாருக்கு? 2. நோன்பின் கடமை என்ன? 3. நோன்பை முறிக்கும்செய்கைகள் என்ன? 4. நீண்ட இரவு, நீண்ட பகல் இருக்கும் நாடுகளில் வசிக்கு மக்கள் நோன்பு நேரங்களை கணிப்பது எப்படி?

நோன்பின் சட்டங்கள் -1

] Tamil – தமிழ் –[تاميلي

முஹம்மத் மக்தூம் பின் அப்துல் ஜப்பார்

2014 - 1435

أحكام الصيام

« باللغة التاميلية »

محمد مخدوم بن عبد الجبار

2014 - 1435

நோன்பின் சட்டங்கள் -1

A.J.M மக்தூம்

 1. நோன்பு கடமையாவதற்குரிய நிபந்தனைகள்:
 1) முஸ்லிமாக இருத்தல்,
 2) பகுத்தறிவுள்ளவனாக இருத்தல் 3) பருவமடைந்திருத்தல், 4) பிரயாண த்தில் இல்லாதிருத்தல், 5) நோன்பு நோற்க சக்தி பெற்றிருத்தல், 6) மாதவிடாய், பிரசவ இரத்தப் போக்கு போன்றவற்றிலிருந்து நீங்கியிருத்தல்.
 2. நோன்பின் கடமைகள்:
 1) ஒவ்வொரு இரவிலும் (fபஜ்ருக்கு முன்) நோன்பு நோற்பதாக உள்ளத்தில் எண்ணம் கொள்ளல், 2) fபஜ்ர் உதயமானதிலிருந்து சூரியன் மறையும் (மக்ரிப்) வரை நோன்பை முறிக்கும் காரியங்களி லிருந்து விலகி இருத்தல்.
 3. நோன்பை முறிக்கும் காரியங்கள்:
 1) உண்ணுதல், 2) பருகுதல், 3) ஊட்டச் சத்துள்ள ஊசி ஏற்றுதல், 4) வேண்டுமென்றே வாந்தி எடுத்தல், 5) உடலுறவு கொள்ளல், 6) மனைவி யரை கட்டியணைத்தல், முத்த மிடல் போன்ற சுய செயற்பாடு களினால் ஸ்கலிதம் அடைதல், 7) மாதவிடாய், பிரசவ இரத்தப் போக்கு ஏற்படல்.
 4. நோன்பை விடுவதற்குரிய பயணத்திற்கான எந்த வரையறை யும் இல்லை என்பதே சரியான கருத்தாகும். பாவமான செயலுக் காக பயணம் செல்லாமல் இருக்கும் வரை பொதுவாக எந்த பயணத்திலும் நோன்பை விட அனுமதியுள்ளது. பயணத்தில் நோன்பு நோற்கும் போது எந்த சிரமமும் இல்லை என்றால் நோன்பு நோற்பதே சிறந்தது, நோன்பு நோற்பது சிரமமாக இருந்தால் நோன்பை விடுவது சிறந்தது, நோன்பு நோற்பதால் ஏதாவது பாதிப்பு வரும் என்றால் நோன்பை விடுவது கட்டாயமாகி விடும். எனினும் அந்த நோன்பை கழா செய்திட வேண்டும்.
 5. தனது நோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையில் உள்ள நோயாளி, நோன்பு நோற்பதால் அவருக்கு எந்த சிரமமும் இல்லை என்றால் நோன்பை நோற்பது கடமையாகும். அவ ருக்கு சிரமமாக இருந்தால் நோன்பை விடுவது நல்லது; சிரமத்துடன் நோன்பு நோற்பது விரும்பத் தகாததாகும். நோன்பி னால் அவருக்கு ஆரோக்கியத் திற்கு பாதிப்பு ஏற்படும் என்றால் நோன்பு நோற்காது இருப்பது கடமையாகும். பின்பு அந்த நோன்பை கழா செய்திட வேண்டும்.
 6. வயோதிபம், நோய் போன்ற வற்றின் காரணமாக இனி எப்போதும் நோன்பு நோற்க சக்தி பெற வாய்ப்பில்லா தோர், ஒவ்வொரு நாள் நோன்புக்காகவும் ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். உணவாக சமைத்தோ, தானியங்களாகவோ கொடுக்கலாம். வயிறு நிரம்பும் அளவுக்கான உணவை அளித்திடு வதே அவசியம். சில அறிஞர்கள் அதன் அளவை வரையறுத்தும் கூறியுள்ளனர்.

7. பருவ வயதை அடையாத குழந்தைகள், வயோதிபம், பைத்தி யம் போன்றவற்றின் மூலம் பகுத்தறிவை இழந்தவர்கள் போன்றோரின் மீது நோன்பு கடமையில்லை.

 8. மாதவிடாய் மற்றும் பிரசவ உதிரப்போக்கு ஏற்பட்டுள்ள பெண் கள் நோன்பு நோற்பது கூடாது, அது அங்கீகரிக்கப் படவும் மாட்டாது. நோன்பு நோற்றிருக்கும் வேளை யில் உதிரம் வெளியானால் அந்த நோன்பு Bபாதிலாகி விடும். அவர்கள் அக்காலப் பகுதியில் விட்ட நோன்புகளை கணக்கிட்டு பிறகு கழா செய்து கொள்ள வேண்டும்.
 9. கர்ப்பிணிப் பெண்களும், பாலூட் டும் தாய்மார்களும் நோன்பு நோற்பதால் தனக்கோ, குழந்தைக் கோ பாதிப்புக்கள் ஏற்படும் என்றிருந்தால், நோயாளிகளைப் போன்று அந்நிலையில் நோன்பு நோற்காது பிறகு அதனை கழா செய்து கொள்ள வேண்டும்.

10. பாரிய ஆபத்தில் மாட்டிக் கொண்ட ஒருவரை காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டு உடல் தெம்பு பெற்றால் தான் முடியுமாக இருந்தால் அச்சந்தர்ப்பத்தில் நோன்பை விட அனுமதியுள்ளது.

 11. எப்போது மரணம் வரும் என்று யாரும் அறியாததினால் நோன்பை விட்டவர்கள் முடியு மான அளவு அவசரமாக கழா செய்து கொள்வது அவசியமாகும்.
 12. தூக்கத்தில் ஸ்கலிதம் அடைதல் அல்லது மறந்த நிலையில் உணவு, பானங்களை உட்கொள்வ தன் மூலம் நோன்பு முறியாது. ஞாபகம் வந்த உடன் அதனை உட்கொள்வதை தவிர்த்து கொள்வது அவசியமாகும்.
 13. குளித்தல், பல் துலக்கல், வாய் கொப்பளித்தல், நாசிக்குத் தண்ணீர் செலுத்தல், மருத்துவ நோக்கம் கருதி உணவாக அமையாத ஊசி போட்டுக் கொள்வது, கண், மூக்கில் சொட்டு மருந்து இடுவது, ஆஸ்மா நோயாளிகள் போன்றோர் ஸ்ப்ரே பயன்படுத்துவது, மூக்கிலிருந்து அல்லது காயங்களினால் இரத்தம் வடிதல், வாசனைத் திரவியங் களைப் பயன் படுத்துவது, அவற்றை நுகர்வது போன்றவை மூலம் நோன்பு முறியாது.
 14. இரத்தம் குத்தி எடுத்தல் மூலம் நோன்பு முறியாது என்பதே அதிகமான அறிஞர்களின் நிலைப் பாடாகும்; ஆரம்பத்தில் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுப்பதின் மூலம் நோன்பு முறிந்து விடும் என்று கூறியிருந்த போதும் பிறகு அதற்கு அனுமதி வழங்கியுள்ளார் கள் என்பதை உறுதியான செய்திகள் மூலம் விளங்கிக் கொள்ளலாம். எனினும் இரத்தம் குத்தி எடுத்தல், பிறருக்கு இரத்தம் கொடுத்தல் ஆகிய செயற் பாடுகளினால் உடல் பலவீனம் அடைந்து நோன்பை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதனால், நோன்பின் பகற் காலங்களில் நிர்பந்த நிலையில் அன்றி அவற்றை தவிர்ந்து கொள்வது சிறந்தது. (அல்லாஹ் வே நன்கறிந்தவன்)

நோன்பின் சட்டங்கள் - 2

A.J.M மக்தூம்

நீண்ட பகல் உள்ள நாட்களில் நோன்பு நோற்பது எப்படி?

நோன்பு என்பது ஃபஜ்ர் உதயமானதிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பை முறிக்கும் காரியங்களில் இருந்து விலகி இருப்பதாகும். இதுவே இஸ்லாம் நிர்ணயித்துள்ள கால எல்லையாகும். இது அனைத்து நாடுகளில் வசிப்பவர்களுக்கும் பொதுவானதாகும். பகல் மற்றும் இரவு நேரங்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னுமொரு நாட்டுக்கு வித்தியாசமானதாகவே இருக்கும். குறிப்பிட்ட சில பகுதிகளில் குளிர் காலத்தில் பகல் நேரம் மிகவும் குறைவானதாக இருக்கும் அதே நேரத்தில் கோடைக் காலத்தில் பகல் மிக மிக அதிகமாகவும் இருக்கும். இப்படியான பகுதிகளில் உள்ளவர்கள் குளிர் காலத்தில் ரமழானை அடைந்தால் மிகவும் எளிதாக இருப்பது போன்றே கோடைக் காலத்தில் கடும் சிரமத்தை எதிர்நோக்குவர்.

இங்கே பகல் காலம் கூடுதல், குறைவாக அமைவதை பொருட்படுத்தப் படமாட்டாது. இறைவனோ, இறைத் தூதரோ அப்படியான தோர் விதி விலக்கை குறிப்பிடவும் இல்லை. எனவே ஃபஜ்ர் உதயமாகுவது மற்றும் சூரியன் மறைவதின் மூலம் இரவையும், பகலையும் பிரித்தறியும் நிலை இருந்தால் அதனைப் பின்பற்றி பகல் காலங்களில் நோன்பு நோற்பது அவசியமாகும்.

இறைவன் அல் குர்ஆனில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளான்:

இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள் (அல் குர்ஆன் 2:187)

இறைத்தூதர் அவர்கள் (ஸல்) கூறினார்கள். "இரவு முன்னோக்கி, பகல் பின்னோக்கி சென்று, சூரியன் மறைந்து விட்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யவேண்டும" (புகாரி, முஸ்லிம்)

அனுபவத்தின் மூலமோ, நம்பத்தகுந்த வைத்தியர் ஒருவரின் அறிவுறுத்தலுக்கு அமையவோ நோய் அல்லது வேறேதேனும் பாதிப்புக்கள் ஏற்படும் என்பதனால் நீண்ட நாள் நோன்பை பூர்த்தி செய்ய முடியாத நிலை இருந்தால் அதனை பிறகு ஏதேனும் ஒரு நாளில் கழா செய்து கொள்ளலாம்.

அல் குர்ஆனில் இறைவன் பின்வரு மாறு குறிப்பிடுறான்:

ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களில் தவற விட்ட நோன்புகளை) வேறு நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. (அல் குர்ஆன் 2:185)

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. (அல் குர்ஆன் 2:286)

சிரமத்துடன் நோற்கும் நோன்புக்கு அதற்கேற்ப இறைவனே அளவின்றி கூலி வழங்கும் பொறுப்பை தன் கையில் வைத்துள்ளான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நோன்பு அளவில்லாத நன்மைகளைப் பெற்றுத் தரும் நல்லறம் என்பதால் சிறு, சிறு கஷ்டங்களுக்காக அந்த உயரிய வணக்கத்தை உதாசீனம் செய்து நன்மைகளை இழந்த துர்பாக்கிய நிலைக்கு நாம் ஆளாகி விடாமல் தற்காத்துக் கொள்வதும் அவசியமாகும்.

பல மாதங்களுக்கு சூரியன் உதிக்காத, அல்லது மறையாத பிரதேசங்களில் வசிப்பவர்கள் ஒரு நாளை 24 மணித்தி யாலங்களாக மதிப்பிட்டு அவர்க ளுக்கு அண்மையில் உள்ள ஒரு பிரதேசத்தின் மதிப்பீட்டுக்கு அமைய தொழுகை மற்றும் நோன்பை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். (அல்லாஹ்வே நன்கறிந்தவன்)