×
இஸ்லாத்தின் ஓரிறை கொள்கைப் பற்றி எடுத்துக் கூறும் குர்ஆனிய வசனங்களில் ஆயதுல் குர்ஸியும் முக்கிய இடத்தைப் பெறு கின்றது.

    M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

    இஸ்லாத்தின் ஓரிறை கொள்கைப் பற்றி எடுத்துக் கூறும் குர்ஆனிய வசனங்களில் ஆயதுல் குர்ஸியும் முக்கிய இடத்தைப் பெறு கின்றது. அல்லாஹ்வின் மகத்துவம், அவனது கண்ணியம், அவனது பண்புகள், அவனது ஆற்றல்கள், அவனது வல்லமைகள் என பலதரப்பட்ட விடயங்களை உள்ளடக்கி யிருக் கிறது. ஓரிறை கொள்கையின் சிறப்பை இவ் வசனங்கள் தெளிவாக விளக்கப் படுத்து கிறது. இன்னுமொரு வார்த்தையில் கூறினால் கடவுள் ஒருவானாக இருப்பதற்குரிய தகுதியையும் நன்மையையும் குறிப்பிடுகின்றது. இது 10 வசனங்களைக் கொண்ட வாக்கியங்களாகும்.

    اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

    அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. (அவன்) நித்திய ஜீவன் (படைப்புகள் அனைத்தையும்) நிலை நிறுத்துபவன். சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ அவனுக்கு ஏற்படாது. வானங்களில் உள்ளவையம் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் பரிந்து பேசுபவர் யாரும் உண்டோ? அவர்களுக்கு முன் இருந்தவற்றையும் அவர் களுக்குப் பின் இருக்கின்றவற்றையும் அல்லாஹ் அறிகின் றான். அவன் அறிந்தவற்றில், அவன் நாடியதைத் தவிர எதையும் அவர்களால் தெரிந்து கொள்ள முடியாது. அவனது அரசாட்சி வானங்கள் மற்றும் பூமியெங்கும் வியா பித்துள்ளது. அவ்விரண்டையம் காப்பது அவனுக்குச் சுமையாகாது. அவன் உயர்ந்தவனும் மகத்துவ மிக்கவனும் ஆவான். (2:255)

    ஒவ்வொரு வசனங்களுக்கான விளக்கங்களை கவனிப் போம்.

    1. اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ

    அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.

    அனைத்துப் படைப்புகளுக்கும் அல்லாஹ் ஒருவனே என இது தெரிவிக்கிறது.(அதாவது வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே தவிர வேறில்லை. அவனுக்கு மட்டுமே வனக்கங்களை செலுத்த வேண்டும்.)

    2 . الْحَيُّ الْقَيُّومُ

    அவன் நித்திய ஜீவன் (அனைத்தையும்) நிலை நிறுத்துபவன்.

    அவன் இறப்பே இல்லாமல் எப்போதும் உயிருடன் இருக்கக் கூடிய நித்திய ஜீவன் தன் படைப்புகளை நிர்வகிக்கும் நிலையானவன். (அவனே படைப்புக்களை உண்டு பண்ணுப வன் அழிப்பவன். அவனுக்கு அழிவு இல்லை.)

    நிலை நிறுத்துபவன் என்பது அல் கய்யூம் என்பதன் பொருளாகும். இதை உமர் (ரழி) அவர்கள் அல் கய்யாம் என ஓதியிருக்கிறார்கள். இதன்படி, படைப்புகள் அனைத் துமே அல்லாஹ்விடம் தேவையாக உள்ளன. அல்லாஹ் விற்கு படைப்புகளிடம் எந்தத் தேவையுமில்லை. அவனது கட்டளையின்றி படைப்புகள் நிலைபெறாது என்று பொருள் வரும்.

    மற்றோர் இடத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:

    وَمِنْ آيَاتِهِ أَنْ تَقُومَ السَّمَاءُ وَالْأَرْضُ بِأَمْرِهِ

    அவனுடைய கட்டளைப் படி வானமும் பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்று களில் உள்ளவை ஆகும். (30:25)

    3. لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ

    சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ அவனுக்கு ஏற்படாது

    அவனுடைய படைப்புகளைக் கண்காணிக்க விடாமல் அவனுக்கு மறதியோ, கவனக் குறைவோ, வேறு எந்தக் குறைபாடோ ஏற்படாது. ஒவ்வொருவரும் செய்கின்ற வற்றை அவன் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருக் கின் றான். எப்பொருளும் அவனது கண்காணிப்பிலி ருந்து தப்பி விடாது. அவனுக்கு எதுவும் மறைந்ததல்ல. (எனவே தான்) படைப்புகள் அனைத்தையும் அவன் நிர்வகிக்கின்றான் என்ற கருத்தை முழுமை யாகப் பிரதிபலிக்கும் வகையில் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ அவனுக்கு ஏற் படாது என இங்கு கூறப்பட்டள்ளது.

    4. لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ

    வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையம் அவனுக்கே உரியன.

    அனைவருமே அல்லாஹ்வின் அடிமைகள் தாம், அவனது ஆட்சி அதிகாரத்திற்கும், வலிமைக்கும் உட்பட்ட வர்கள் தாம் என்பதை இது காட்டுகிறது. மற்றோர் இடத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:

    إِنْ كُلُّ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا آتِي الرَّحْمَنِ عَبْدًا

    வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அவளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார் கள். (19:93)

    5. مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ

    அவனது அனுமதியின்றி அவனிடம் பரிந்து பேசுபவர் யாரும் உண்டோ?

    (மறுமையில் அல்லாஹ்வின் விசாரனைக்கு முன் முஸ்லிம் கள் எல்லோரும் இருக்கும் போது அவர்களின் சுவனப் பிரவேசத்தற்காக நபிமார்கள், முஃமின்கள், மற்றும் மலக்குகள் ஆகியோருக்கு பரிந்துரை செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்படும். யாருக்கு பரிந்துரை செய்வதா னாலும் அல்லாஹ்வின் அனுமதியின்றி யாரும் பேச முடியாது.)

    மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறு கின்றான்:

    وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِنْ بَعْدِ أَنْ يَأْذَنَ اللَّهُ لِمَنْ يَشَاءُ وَيَرْضَى

    அல்லாஹ் யாரை நாடி திருப்தி கொண்டு அவருக்கு (வானவர்கள் பரிந்து ரைக்கலாம் என) அனுமதியளிக் கிறானோ அவருக்கே தவிர (மற்றெவருக்கும்) அவர்க ளின் பரிந்துரை எந்தப் பயனும் தராது. (53:26)

    وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى وَهُمْ مِنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ

    மேலும், அவன் திருப்தி கொண்டோருக்காகவே தவிர (மற்றவருக்கு) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள். (21:28) என்றும் அல்லாஹ் கூறியுள்ளான்.

    இது அல்லாஹ்வின் மகத்துவத்தையும், வலிமை யையும், பெருமையையும் எடுத்துக் காட்டு கிறது. பரிந்துரைக்க யாருக்கு அல்லாஹ் அனுமதியளித்தானோ அவருக்கல்லா மல் வேறு எவருக்காகவும் எவரும் அல்லாஹ்விடம் பரிந்து பேசும் துணிவைப் பெற மாட்டார்கள்.

    பரிந்துரை (ஷஃபாஅத்) தொடர்பான ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (மறுமை நாளில்) இறையாசனத்திற்குக் கீழே வந்து (அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு (இறைவன் தரப்பிலிருந்து) “முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள், செவியேற்கப் படும். பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று கூறப்படும். அப்போது (நான் யார் யாருக்கு பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். (நூல்: புகாரி 4476, முஸ்லிம் 322)

    6. يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ

    அவர்களுக்கு முன் இருந்தவற்றையும் அவர்களுக்குப் பின் இருக்கின்றவற்றையும் அல்லாஹ் அறிகின்றான்.

    சென்று விட்ட, தற்போது இருக்கின்ற, இனி வரவிருக் கின்ற படைப்புகள் அனைத்தையும் பற்றிய முழுமையான அறிவு அல்லாஹ்வுக்கு உண்டு என்பதற்கு இது ஆதார மாகும். வானவர்கள் கூறுவதாக அல்லாஹ் குறிப்பிடும் போது,

    وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ لَهُ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذَلِكَ وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا

    (முஹம்மதே!) உம்முடைய இறைவனின் கட்டளை யிருந்தால் தவிர (உம்மிடம்) இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளவையும், பின்னுள்ளவையும் அவற்றுக்கிடையே உள்ள வையும் அவனுக்கே உரியன. உம்முடைய இறைவன் மறப்பவனாக இல்லை (19:64) என்று கூறுகின்றான்.

    7. وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ

    அவன் அறிந்தவற்றில் அவன் நாடியதைத் தவிர எதையும் அவர்களால் தெரிந்துகொள்ள முடியாது.

    அல்லாஹ், தான் அறிந்தவற்றை யாருக்குக் கற்றுக் கொடுத்து அறிவிக்கின்றானோ அவரைத் தவிர மற்ற எவராலும் அவன் அறிந்தவற்றில் எதையும் தெரிந்து கொள்ள முடியாது. தன்னைப் பற்றியும், தன் பண்புகளைப் பற்றியும் யாருக்கு அவன் தெரிவித்தானோ அவர்களைத் தவிர, மற்ற எவராலும் அவற்றைத் தெரிந்துகொள்ள முடியாது என்று பொருள் செய்யலாம்.

    يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِهِ عِلْمًا

    அல்லாஹ் மற்றோர் இடத்தில் “அவனை அவர்கள் முழு மையாக அறிந்து கொள்ள மாட்டார்கள்” (20:110) என்று குறிப்பிட்டுள்ளான்.

    8. وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ

    அவனது அரசாட்சி வானங்கள் மற்றும் பூமியெங்கும் வியாபித்துள்ளது.

    இங்கு அரசாட்சி என்பதைச் சுட்ட மூலத்தில் குர்ஸி எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. (இதற்கு ஆசனம் என்பது சொற் பொருள் ஆகும். ஆயினும்) இதற்கு அறிவு என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பொருள் செய்துள்ளார்கள். (இதன்படி அவனது அறிவு வானங்கள் மற்றும் பூமி முழுவதும் பரந்துள்ளது எனப் பொருள் செய்யலாம்.) மற்ற சிலர் குர்ஸி என்பது பாதங்கள் வைக்கும் இடம் எனக் கூறியுள்ளனர்.

    இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: இத்தொடர் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அப்போது அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்: அல்லாஹ் வின் குர்ஸி என்பது. அவனுடைய பாதங்கள் வைக்கும் இடமாகும். அல்லாஹ்வின் அரியாணையின் (அர்ஷ்) அளவை அவனே அறிவான்.

    சுத்தீ (ரஹ்) அவர்கள், அர்ஷுக்குக் கீழே தான் குர்ஸி உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறி யதாவது: ஏழு வானங்களும், ஏழு பூமிகளும் விரிக்கப்பட்டு அவை ஒன்றோடு ஒன்று சேர்க்கப்பட்டாலும், குர்ஸி யோடு ஒப்பிடும்போது அவை பாலை வனத்தில் (வீசப்பட்ட) ஒரு வளையத்தின் அளவுக்குத்தான் இருக்கும்.

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஸியோடு ஒப்பிடுகையில் ஏழு வானங்களின் அளவு, போர்க் கேடயத்தில் பதிக்கப்பட்ட ஏழு திர்ஹம்களைப் போன்ற தாகும். அபூதர் (ரழி) அவர்கள் கூறியதாவது: ஷஅர்ஷோடு ஒப்பிடும்போது குர்ஸியானது, பூமியில் பாலைவனத்தின் மேற்பகுதியில் போடப்பட்ட ஓர் இரும்பு வளையத்தைப் போன்றதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அபூதர் (ரழி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் குர்ஸி தொடர்பாகக் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! குர்ஸியோடு ஒப்பிடுகையில் ஏழு வானங்கள் மற்றும் ஏழு பூமிகளின் அளவானது. பாலை வனத்தில் வீசப்பட்ட ஒரு வளை யத்தின் அளவைப் போன்றதாகும். (பிரமாண்டத்தில்) அந்த வளையத்தை விடப் பாலைவனப் பகுதியின் அளவைப் போன்றே குர்ஸியோடு ஒப்பிடுகையில் அர்ஷின் அளவும் அமைந்துள்ளது எனக் கூறினார்கள்.

    உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் வந்து, அல்லாஹ் என்னைச் சொர்க்கத்திற்கு அனுப்ப அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மகத்து வத்தை எடுத்துரைத்துப் பின் வருமாறு கூறினார்கள். அவனது குர்ஸி வானங்கள் மற்றும் பூமியெங்கும் வியாபித்துள்ளது. பாரத்தின் காரணத்தால் (குதிரையின்) புதிய சேணம் எழுப்புகின்ற ஒலியைப் போன்று ஒரு (வகை) ஒலி குர்ஸிக்கும் உண்டு எனக் கூறினார்கள்.

    ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள், குர்ஸி தான் அர்ஷ். (அவை இரண்டும் ஒன்றுதான் எனக் கூறி வந்தார்கள். ஆனால், குர்ஸி என்பது அர்ஷ் அல்ல. (அவை இரண்டும் வெவ்வேறானவை) அர்ஷ் குர்ஸியை விட மிகப் பெரியது என்ற கருத்தே சரியானதாகும். மேற்கூறப்பட்ட நபித் தோழர்கள் மற்றும் தாபிஉகளின் கருத்துகள் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

    9. وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

    அவ்விரண்டையும் காப்பது அவனுக்கு சுமையாகாது

    அதாவது வானங்களையும் பூமியையும், அவ்விரண்டில் உள்ளவற்றையும், அவ்விரண் டிற்கும் இடையே உள்ள வற்றையும் காப்பது இறைவனுக்குச் சிரமமன்று. அவனுக்கு முடியாத காரியமன்று. மாறாக, அது அவ னுக்கு எளிதான விஷயமாகும். ஒவ்வொருவரும் செய்கின்ற வற்றை அவன் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். அனைத்து விஷயங்க ளையும் அவன் கவனித்து வருகின்றான். அவனுக்குத் தெரியாதது எதுவு மில்லை. அவனது கண்காணிப்பிலிருந்து எதுவும் தப்பிவிடாது.

    அவனைப் பொறுத்தவரை அனைத்துமே அற்பமானவை தாம். அவை மிகவும் சாதாரண மானவை. மதிப்பற்றவை. அவனுக்குப் பணியக் கூடியவை ஆகும். அவை அல்லாஹ் விடமே தேவையாக உள்ளன. அல்லாஹ்விற்கு எந்தத் தேவையுமில்லை. அவன் புகழுக்குரியவன். தான் விரும்பியதை அவன் செய்து முடிப்பான். அவன் என்ன செய்கிறான் என்று யாரும் அவனிடம் கேள்வி கேட்க முடியாது. மனிதர் கள் தாம் கேள்வி கேட்கப்படுவார்கள். அவன் ஒவ்வொன்றையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறான். கவனமாகக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். அவன் உயர்ந்தவன், மகத்துவ மிக்கவன், கண் காணிப்பாளன், அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.

    10. وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

    அவன் உயர்ந்தவனும் மகத்துவமிக்கவனும் ஆவான்.

    மற்றொர் இடத்தில்

    الْكَبِيرُ الْمُتَعَالِ

    (அவன்) பெரியவன், உயர்ந்தவன் (13:9) எனக் கூறுகிறது குர்ஆன். இதைப் போன்ற வசனங்களிலும் நபி மொழிகளிலும் வந்துள்ள அல்லாஹ்வின் பண்புகளை மனிதர்களின் பண்புகளோடு ஒப்பிடாமல், உருவகப் படுத்திப் பார்க்காமல் அப்படியே ஏற்பதுதான் சிறந்த வழியாகும். இதுவே சான்றோரின் வழியுமாகும். (நூல்: தப்ஸீர் இப்னு கஸீர்)