×
பைபிளின் போதனைப் பிரகாரம் கற்புள்ள பெண்ணைத் தேர்ந்தெடுக்க முதலிரவு பரிசோதனையில் அவள் ஈடுபட்டாக வேண்டும். எப்பெண்ணிடம் இரத்தத்தின் அடையாளம் தெரிகிறதோ அவள் கற்புள்ள பெண். எவளிடம் அவ்அடையாளம் தென்படவில்லையோ அவள் கற்பிழந்த பெண்.

    பெண்ணின் கன்னித் தன்மையை நிரூபிக்க அக்கினிப் பரீட்சை

    ] Tamil – தமிழ் –[ تاميلي

    M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

    2014 - 1435

    المرأة في نظر العهد الحديث

    الاختبارات المهينة في إثبات بكارة المرأة البتول

    « باللغة التاميلية »

    محمد إمتياز يوسف

    2014 - 1435

    பைபிளின் பார்வையில் …..

    பெண்ணின் கன்னித் தன்மையை நிரூபிக்க அக்கினிப் பரீட்சை.

    M.S.M. இம்தியாஸ் யூசுப் ஸலபி

    பெண்களை இழிவுபடுத்தி ஆணாதிக்கத்தை மேலோங்கச் செய்வதற்கென்றே பைபிளில் தனிச் சிறப்புப் போதனைகள் உள்ளதை காணமுடிகிறது. (!)

    எந்தப் பெண்ணும் தனது கற்பு விடயத்தில் எவரும் எள்ளளவும் சந்தேகம் கொள்வதையோ, களங்கம் ஏற்படுத்துவதையோ சகித்துக் கொண்டிருக்க மாட்டாள்.

    'இவள் மானம்கெட்ட பெண், களங்கப் படுத்தப்பட்ட பெண்’ என்று யாராவது கூறினால், அந்த அபாண்டத்தைச் சகித்துக் கொண்டு இருக்க மாட்டாள். சில நேரம் உயிரை விடவும் தயங்க மாட்டாள். கற்பின் மீது பெண்கள் கொண்டுள்ள கண்ணியம், மரியாதை போன்று எந்தவொரு ஆண் மகனும் தனது கற்பின் மீது மரியாதை வைக்க இயலாது.

    அதனால் தான் கற்பழிப்புக்கு ஆளாக்கப்பட்ட பின் சில பெண்கள், உயிர் வாழ்வதை விட அதனை மாய்த்துக் கொள்வதே சிறந்தது எனக் கருதுகிறார்கள், செயற்படுத் தியும் காட்டுகிறார்கள்.

    ஆண்களுக்கும் கற்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், பெரும்பாலும் கண்டிப்பு டன் அக்கற்பை அவர்கள் பேணுவதில்லை. காரணம் பெண்களின் கற்பை சூறை யாடுவதே ஆண்கள் தானே! பெண்களின் கற்பு விட யத்தில் கண்டிப்பு காட்டுவதிலும் ஆண்கள் விடயத்தில் கவனயீனமாக இருப்பதிலும் தான் சமூக கணிப்பீடு காணப்படுகிறது. இந்நிலை தான் ஆணாதிக்கம் நிலை பெறக் காரணமாக அமைந்தது.

    பெண்களின் கற்பை, கன்னித் தன்மையை பரீட்சித்துப் பார்க்க பல்வேறு பட்ட வழிகளை இச்சமுதாயமும் ஏதோ ஒரு முறையில் கடைப்பிடித்து வருகின்றது. அப்படி ஒரு (கொடூரமான) வழியை பைபிளும் சொல்லித் தந்து நடைமுறைப்படுத்தச் சொல்கிறது. ஒருபெண் கன்னித் தன்மை யுள்ள வளா? இல்லையா? என்பதைப் பரீட்சித்துப் பார்க்க ஒரு பரிசோதனை கூடத்தை நடாத்தச் சொல்கிறது. அது ஒரு விசித்திரமான பரீட்சை, விஷமத்தனமான பரீட்சை அக்கினிப் பரீட்சை.

    ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை யிலும் மறக்க முடியாத வசந்தமான நாள் மணமுடித்த நாள். முதலிரவு நாள், ஆண்களை விடப் பெண்கள் தான் இந்நாளை அதிக பரபரப்புடன், பரவசத்துடன், எதிர்பார்ப்புடன், பயத்துடன் சந்திப்பார்கள்.

    சலசலப்புக்கள் இல்லாமல் சந்திக்கும் இரு உள்ளங் களையும் சந்தேகம் கொண்டு பார்க்கும் ஒரு சந்திப்பை அன்றைய முதலிரவில் நடாத்தி முடிக்க 'மாஸ்டர் பிளேன'; ஒன்றைக் கணவனுக்கு பைபிள் சொல்லிக் கொடுக் கின்றது.

    அன்றைய முதலிரவுப் படுக்கையில் ஒரு துணியை விரித்து வைத்து அதன் மீது உடலுறவு கொள்ளவேண்டும். அதன் போது மனைவியிடமிருந்து கசிந்த இரத்தம் அத்துணியில் படிந்திருக்க வேண்டும். இரத்தம் படிந்தி ருந்தால் தான் அவள் கற்புள்ள பெண். இரத்தக் கசிவு காணப்படவில்லையாயின் அவள் கற்பிழந்த பெண். அதாவது திருமணத்திற்கு முன்பே வேறொருவனுக்கு முந்தாணி விரித்தவள் நடத்தைக் கெட்டவள் கன்னித் தன்மையை இழந்தவள் என்று முடிவு செய்து விலக்கி விடவேண்டும்.

    திருமணத்திற்கு முன்பு தான் ஒரு கற்புள்ள பெண்ணாக வாழ்ந்ததற்கு அத்தாட்சியாக முதலிரவில் இரத்தக் கசிவு படர்ந்த அத்துணியை அவள் எடுத்துக்காட்ட வேண்டும். பத்திரப்படுத்த வேண்டும்.

    மனைவியின் கற்பின் மீது சந்தேகம் கொண்டு, கணவன் வழக்குத் தொடுத்தால் அதனை முறியடிப்பதற் காக இத்துணியை சாட்சியாக சமர்பித்திட வேண்டும். தவறும் பட்சத்தில் மனைவி மோசம் போனவள் என்று முடிவு செய்யபட்டு கல்லெறிந்து கொல்லப் படுவாள். இதனை நாங்கள் படிப்பதற்கும், கேட்பதற்கும் அசிங்க மானதாக தெரிந்தாலும் உண்மை நிலை இதுதான்!

    பெண்களுடைய கற்பை நிரூபிக்க அக்கினிப் பரீட்சை நடாத்தும் பைபிள், ஆண்களின் கற்பை நிரூபிக்க ஒரு வார்த்தையேனும் சொல்லாமல், வழியேதும் காட்டாமல் மௌனம் சாதிக்கின்றது. பின்வரும் பைபிள் வசனங்களை நிதானமாகப் படியுங்கள்.

    'ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவ ளோடு கூடிய பின் அவளை வெறுத்து, அவள் மீது அவதூறு சொல்லி, அவளது பெயரைக் கெடுத்து நான் இந்தப் பெண்ணை மணமுடித்தேன். ஆனால், அவளோடு உறவு கொண்டபோது அவள் கன்னியல்ல என்று கண்டு கொண்டேன் என்று கூறினால், அப்பெண்ணின் தந்தையும் தாயும் அவளது கன்னிமையின் அடையாளத்தை எடுத்துக்கொண்டு அவளை நகர் வாயிலிலுள்ள தலைவர் களிடம் கூட்டி வருவார்கள்.

    அப்போது அப்பெண்ணின் தந்தை தலைவர்களிடம் என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத் தேன். அவனோ அவளை வெறுக்கின்றான். அத்தோடு உன் மகளிடம் கன்னிமையைக் காணவில்லை என்று கூறி அவளைப் பற்றி அவதூறு சொல்லுகி றான். ‘இதோ என் மகளின் கன்னி மைக்கான சான்று’ என்று சொல்லுவான்.

    பின்பு அவர்கள் நகர் தலைவர்களின் முன்னர் அந்தத் துணியை விரிப்பார்கள். அப்போது அந்நகர் தலைவர்கள் அம்மனிதனைப் பிடித்துத் தண்டிப்பார்கள். பின்னர் அவனுக்கு நூறு வெள்ளிக் காசுகள் தண்டம் விதித்து அதைப் பெண்ணின் தந்தையிடம் கொடுப்பார்கள்.

    ஏனெனில், இஸ்ரயேலின் கன்னி ஒருத்தியின் மேல் அவன் அவதூறு கூறி யுள்ளான். அவளே இவனுக்கு மனைவியாக இருப்பாள். அவன் வாழ்நாள் முழுவதும் அவளைத் தள்ளிவிட முடியாது. (விவாகரத்து செய்ய முடியாது).

    ஆனால், அப்பெண்ணிடம் கன்னிமை காணப்பட வில்லை என்பது உண்மையானால், அந்தப் பெண்ணை அவள் தந்தையின் வீட்டு வாயிலுக்கு வெளியே கொண்டு வந்து அவளது நகரின் மனிதர் அவளைக் கல்லால் எறிவர். அவளும் சாவாள்.

    ஏனெனில், அவள் தன் தந்தையின் வீட்டிலிருக்கும் போதே வேசித்தனம் பண்ணி இஸ்ரயேலுக்கு இழுக்கானதைச் செய்தாள். இவ்வாறு தீமையை உன்னிடமிருந்து அகற்று. (உபாகமம் 22:13-21)

    ஒரு பெண் நடத்தைக் கெட்டவளா, ஒழுக்க முள்ளவளா என்பதை நிரூபிப்பதற்கும், நல்லவளா கெட்டவளா என்பதை தீர்மானித்து தண்டனை பெற்று கொடுப்பதற்கும் அவளிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொள்வதற்கும் முதலிரவில் விரிக்கப்படும் துணி முக்கிய சாட்சியாக கணிக்கப்படுகிறது.

    ஊரார் முன்னிலையில் ஒருபெண்ணின் மானமும் மரியாதையும் ஏலம் போடும் அசிங்கத்தையே இங்கு காணமுடிகிறது. முதலிரவில் விரிக்கப்பட்ட துணியே ஒரு பெண்ணின் கற்பையும் வாழ்வையும் தீர்மானிக்கும் என்று பைபிள் சாட்சி சொல்கிறது. இது விஞ்ஞானமா? அஞ் ஞானமா? பெண்களைக் கேவலப் படுத்த இதை விட வேறு வார்த்தைகள் தேவையா?

    ஒரு பெண் பருவ வயதை அடையு முன் அல்லது அடைந்த பின் ஓடி ஆடி விளையாடும் போது வீட்டு வேளைகளில் ஈடுபடும்போது உடற்பயிற்சி செய்யும் போது அல்லது தொழில் புரியும் போது அவளது ‘கன்னித் திரை’ கிழிவதற்கு அதிக வாய்ப்புள்ள நிலையில் திருமணம் முடித்த முதலிரவில் அவளது கன்னித்திரை கிழிந்து இரத்தம் கசிவதன் மூலமாகத்தான் ‘கற்புள்ள பெண்’ என்று நிரூபிக்கப்படவேண்டும் என்று கூறுவதை சாதாரண அறிவு படைத்த மனிதன் கூட ஏற்றுக் கொள்ள மாட்டான்.

    ஒருபெண் தனது வீட்டுக்குள்ளேயே அடங்கி ஒடுங்கி பத்தினித்தனமாக, ஒழுக்க முள்ளவளாக, நாணமுள்ளவளாக வாழ்ந்தாலும், முதல் இரவில் இரத்தத்தின் அடையாளம் காணப்பட வில்லையாயின் அவள் ஒழுக்கம் கெட்ட பெண், வேசித்தனம் பண்ணிய பெண் என்று சொல்வது அவளது பெற்றோரையும் சந்தேகப் பார்வையைக் கொண்டு பார்க்க வைக்கின்றது.

    பைபிளின் போதனைப் பிரகாரம் கற்புள்ள பெண்ணைத் தேர்ந்தெடுக்க முதலிரவு பரிசோதனையில் அவள் ஈடுபட்டாக வேண்டும். எப்பெண்ணிடம் இரத்தத்தின் அடையாளம் தெரிகிறதோ அவள் கற்புள்ள பெண். எவளிடம் அவ்அடையாளம் தென்படவில்லையோ அவள் கற்பிழந்த பெண்.

    வேறு வார்த்தையில் சொன்னால் அவள் ஒரு விபச்சாரி. விபச்சாரத்தில் ஈடுபட்டால் மட்டும் விபச்சாரி யல்ல. முதலிரவு பரிசோதனையில் தோல்வியடைந்தாலும் விபச்சாரிதான்.

    எனவே விபச்சாரிக்கான தண்டனையை அவளுக்கு நிறைவேற்ற கல்லெறிந்து கொல்லவேண்டும். அவளுடன் இப்பிரச்சினை முடியாது. அப்பெண் ‘வேசிப் பெண்’ என்ற பெயரைப் பெற்றதும் அவளது குடும்பமும் ‘அந்த சமாச்சாரத்தின் வீடு’ என்று பெயர் பெற்று விடும். ஊராரின் ஓரக் கண்பார்வைக்கு ஆளாகிவிடும்.

    பெண்கள் தங்களது மானத்தை, மரியாதையை, கற்பை காக்க வேண்டுமானால் இப்பரிசோதனைக்கு ஏதாவது ஒரு வழி பண்ணியாக வேண்டுமானால் ‘கன்னி யாஸ்திரிகளாக’ தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தாக வேண்டும். அல்லது வாளா வெட்டியாக இருந்தாக வேண்டும். கிறிஸ்தவ மற்றும் யூத பெண்கள் இவ்விரண் டில் ஒன்றை தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும் அல்லது இப்போதனைகளை விலக்கி விட்டு வாழ வேண்டும்.

    கணவன் மனைவியின் மீது வீண்பழியை சுமத்த நினைத்தால் அல்லது பிரிந்து போக முடிவுசெய்தால் ‘இந்த இரத்தப்பரிசோதனை’ முறை அவனுக்கு கைகொடுக்கும்.

    விசாரணையின் போது இரத்தம் தோய்ந்த துணியைக் மனைவி ஆதாரமாக எடுத்துக்காட்டி தான் நடத்தைக் கெட்டவளல்ல என நிரூபிக்கும் பட்சத்தில் கணவனுக்கு எந்தத் தண்டனையும் வழங்காமல் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டு விடுவிக்கப் படுகின்றான்.

    அதுமட்டுமன்றி அபாண்டம் சுமத்தப் பட்ட அப் பெண்ணும் அக்கணவனோடு சேர்ந்து வாழ வேண்டும். அவன் ஒரு போதும் அவளை விவாகரத்து செய்யவும் கூடாது.

    ஊரார் முன்னிலையில் களங்கம் சுமத்தப்பட்டு, பிறகு நிரபராதி என்று விடுதலை செய்யப்படும் அப் பெண்ணின் சம்மதமில் லாமல் மீண்டும் அக்கொடிய வனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தீர்வு சொல்வது நீதியாகுமா? என்று கேட்டால் அது தான் நீதி என வேதாகமம் சொல்கிறது!

    ‘தகுந்த சாட்சியத்தின் படி நீ குற்றமற்றவள் என்று நிரூபணமாகிறது. எனவே நீ விரும்பினால் கணவனுடன் சேர்ந்து வாழலாம் அல்லது பிரிந்து போகலாம்’ என்று தீர்ப்பு கூறப்பட்டால் பெண்ணுக்கு ஆறுதலாக இருக்கும். நீதியாக இருக்கும். அவளது வாழ்க்கைப் பிரச்சினையை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு அவளிடம் உள்ளதே தவிர மூன்றாம் தரப்பிடம் இல்லை.

    நீதி சொல்வதாக இருந்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பத்திற்கு முதலிடம் கொடுத்து அவளது சம்மதத்துடன் தான் தீர்ப்புச் சொல்ல வேண்டும். அவள் முடிவு செய்ய வேண்டிய வாழ்வை இன்னுமொருவர் முடிவு செய்வது பெண்ணுக்கு இழைக்கப்பட்ட துரோகமேயன்றி வேறில்லை.

    களங்கமற்ற அப்பெண் ஊருக்கும் உலகத்திற்கும் காட்டுவதற்கு தன் கணவனோடு வாழ்க்கைப்படுவாளே தவிர சந்தோசமான இன்பகரமான வாழ்க்கைக்கு அவள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டாள். வேண்டாத உறவை வேண்டு மென்று திணிக்கிறது பைபிள்.

    இந்நிகழ்வுக்குப் பின் கணவன் சந்தோசமாக ‘ஜாலி யாக’ ஊர் சுற்றிக் கொண்டிருப்பான். மனைவியோ தீயில் வெந்த புழுவைப் போல் துடிதுடித்தவளாக வாழ்நாள் முழுவதும் கண்ணீரோடு காலத்தை கழித்துக் கொண்டிருப்பாள். இச்சட்டம் பெண்ணின் கற்போடு மட்டும் விளையாட வில்லை. அவளுடைய வாழ்க்கையோடும் விளையாடும் ஒரு விபரீதமான விளையாட்டு.

    ஒவ்வொரு ஆணும் தங்களுடைய கண்ணித்தன்மையை முதலிரவில் நிரூபித்து காட்டவேண்டும் என்று பெண்கள் கேட்டால் யூத கிறிஸ்தவ மதகுருமார்களால் பதில் சொல்ல முடியுமா? உண்மை என்னவென்றால் தப்பு செய்யும் ஆண்களைக் காப்பாற்றுவதிலும் அப்பாவி பெண்களைக் குற்றம்பிடிப்பதிலும் பைபிள் உரிய கவனம் செலுத்தி யுள்ளதாக தெரிகிறது. முதலிரவு பரிசோதனைக்கு அடுத்து இன்னுமொரு பரிசோதனை முறையையும் பைபிள் விபரிக்கிறது.

    மனைவி கணவனுக்கு துரோகம் இழைத்ததாக, வேறொருவனுடன் உடலுறவு கொண்டதாக - கணவன் சந்தேகம் கொண்டால் அச்சந்தேகத்தை போக்கும் முகமாக மனைவியை கசப்பு நீர் பரிசோதனைக்கு உட்படுத்தி தீர்வு காணவேண்டும். என பைபிள் பின்வருமாறு கூறுகிறது.

    ‘அவன் தன் மனைவியை குருவின் முன் கொண்டு வர வேண்டும். அவளை முன்னிட்டுத் தேவைப்படும் பத்தில் ஒரு ஏப்பா வாற்கோதுமை உணவைப் படைக்க வேண்டும. அவன் அதன் மேல் எண்ணெய் ஊற்றவோ தூபப் பொருள்கள் தூவவோ கூடாது. ஏனெனில் அது நினைவு படுத்தும் உணவுப் படையல் அதாவது குற்றத்தை நினைவூட்டக்கூடிய சினத்தின் உணவுப் படையல். பின் குரு அவளைக் கூட்டிக் கொண்டு வந்து ஆண்டவர் முன் நிறுத்துவார்.

    மதகுரு ஒரு மண்பாத்திரத்தில் புனித நீர் எடுத்து திருக் கூடாரத்தின் தரையில் இருந்து கொஞ்சம் துகள் (தூசியை) எடுத்து நீரில் போடுவார்.

    மதகுரு அப்பெண்ணின் தலைமுடியைக் கலைத்து விட்டு வெஞ்சினத்தின் உணவுப் படையலாகிய நினைவு படுத்தும் உணவுப் படையலை அவள் கைகளில் வைப்பார் சாபத்தைக் கொண்டு வரும் கசப்பு நீரையும் குரு தன் கையில் வைத்திருப்பார்.

    அதன் பின்னர் குரு அவளை ஆணையிடச் சொல்லிக் கூற வேண்டியது, “நீ உன் கணவனின் அதிகாரத்துக்கு உட் பட்டிருக்கும் போது வேறு எந்த மனிதனும் உன்னோடு படுக்காமலும் நீ ஒழுக்கக்கேட்டுக்கு உடன் படாமலுமிருந் தால் சாபங்களைக் கொண்டு வரும் இக்கசப்பு நீர் உன்னை ஒன்றும் செய்யாது

    ஆனால் நீ உன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டி ந்தும் நெறி தவறி, உன்னையே கறைப்படுத்தி, உன் கணவன் தவிர வேறொருவன் உன்னோடு படுத்திருக்க உடன் பட்டால், குரு அப்பெண்ணைச் சாப ஆணை இடச் சொல்லி அவளிடம்’ ஆண்டவர் உன் தொடைகள் அழுகி விழவும், உன் வயிறு வீங்கவும் செய்து உன் மக்களிடையே உன்னை ஒரு சாபமாகவும் ஆணைக் கூற்றாகவும் ஆக்குவார்.

    சாபத்தைக் கொண்டு வரும் இந்த நீர் உன் குடல்களில் இறங்கி உன் வயிற்றை வீங்கச் செய்து உன் தொடை களை அழுகி விழச் செய்யட்டும் என்பார் அதற்கு அப் பெண் ‘ஆமென், ஆமென்’ என்பாள்.

    பின்னர் குரு இச்சாபங்களை ஓர் ஏட்டில் எழுதிக் கசப்பு நீரால் அவற்றை அழித்து விடுவார். சாபத்தைக் கொண்டு வரும் அக்கசப்பு நீரை அப்பெண்ணை குடிக்கச் செய்வார். சாபத்தைக் கொண்டு வரும் அந்நீர் அவளுக்குள் சென்று கொடிய வேதனையை உண்டாக்கும்.

    குரு வெஞ்சினத்தின் உணவுப் படையலைப் பெண்ணின் கையிலிருந்து வாங்கி அதை ஆண்டவர் முன்னிலையில் ஆரத்தியாகக் காட்டிப் பலிபீடத்துக்குக் கொண்டு வருவார்.

    குரு அந்த உணவுப் படையலிலிருந்து அதன் நினைவுப் பகுதியாக ஒரு கைப்பிடி எடுத்து அதனைப் பீடத்தின் மேல் எரித்து விடுவார். இறுதியாக அப்பெண் அந்நீரைக் குடிக்கச் செய்வார்.

    அவன் அவளை நீர் குடிக்கச் செய்யும்போது அவள் உண்மையிலேயே தன்னைக் கறைப்படுத்தித் தன் கணவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருந்தால் சாபத்தைக் கொண்டு வரும் நீர் அவளுக்குள் போய் கொடிய வேதனையை உண்டாக்கும், அவள் வயிறு வீங்கி, தொடைகள் அழுகிவிடும், அவள் தன் மக்களிடையே ஒரு சாபமாக இருப்பாள்.

    ஆனால் அப்பெண் கறைபடாது தூயவளாயி ருந்தால் அவளுக்கு ஒரு கேடும் வராது, அவள் குழந்தையைக் கருத்தரிப்பாள்.

    வெஞ்சினத்தின் வேளைகளில் இதுவே சட்டம். அதாவது ஒரு மனைவி தன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறி தவறித் தன்னையே கறைபடுத் தியிருந்தால், அல்லது வெஞ்சினத்தின் ஆவி ஒரு மனிதன் மேல் வந்து அவன் தன் மனைவி மேல் வெகுண்டெழுந்தால் அவன் அவளை ஆண்டவர் திருமுன் நிறுத்துவான். குரு இச்சட்டத்தை யெல்லாம் அவளிடம் செயல்படுத்துவார்.

    ஆடவன் (கணவன்) தன் குற்றப்பழி அற்றவனாவான், பெண்ணோ தன் குற்றப்பழியைச் சுமப்பாள் (எண்ணா கமம். 5:11-31.)

    மனைவி மீது கணவன் சந்தேகம் கொண்டதற்காக ஊரார் முன்னிலையில் கசப்பு நீர் பரிசோதனை நடாத்துவது போல் கணவனுடைய நடத்தையிலும் சந்தேகம் கொள்ளும் மனைவிக்காக பரிசோதனை செய்யாமல் விடுவது ஏன்? ஆண்களுக்கும் இது போன்ற சட்டங்களை சொல்லாமல் விட்டது ஏன்?

    மனைவி மீது சந்தேகம் கொண்டு கசப்பு நீர் பரிசோதனை நடாத்துவதன் மூலம் குற்றத்தை நிரூபிக்க முடியுமாக இருந்தால் இன்றைய உலகில் தேங்கி கிடக்கும் இத்தகைய வழக்குகளை இப்பரிசோதனைகள் மூலம் நடாத்தி முடிக்கலாமே. விளம்பரப்படுத்தி ஆசிர்வாத கூட்டங்களை நடாத்துவது போல் கசப்புநீர் பரிசோதனை கூட்டங்களையும் தெருதெருவாக நடாத்தி குடும்ப வாழ்வை பாதுகாக்கலாமே. மதகுருமார்கள் முன்வராதது ஏன்?

    இன்று கிறிஸ்தவ மதகுருமார்கள் மீது சிறுவர் மற்றும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் கற்பழிப்பு குற்றங்கள் வெளிப் படையாக சுமத்தப்பட்டதையடுத்து ஆலயங்கள் ஆட்டம் கண்டு நின்றன. தலை குணிவை சந்தித்து வருகின்றன. மதகுருமார் களால் ஆயர்களால் பாதிக்கப்பட்டடவர்கள் கற்பை பறிகொடுத்த கன்னியா ஸ்திரிகள் இக்குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார்கள். இக்குற்றச் சாட்டுகளுக்கு கசப்பு நீர் பரிசோதனைகள் மூலம் தீர்வு கொண்டு வரலாமே. கிறிஸ்தவ ஆன்மீக தலைமை பீடங்கள் மௌனம் காப்பது ஏன்?

    மதகுருமார்கள், ஆயர்கள் குற்றவாளிகள் என அடை யாளம் கண்ட பின்பும் வேதாகமத்தின் பிரகாரம் கல் லெறிந்து தண்டனை வழங்காமல் தப்பிக்கவிடுவது ஏன்?

    மனைவியுடைய பரிசுத்த தன்மையை மட்டும் பரிசீலித்து வேலி போடமுனையும் பைபிள், ஆண்களின் விஷயத்தில் எத்தகைய கட்டுப்பாட்டையும் கவனத்தில் எடுக்கவில்லை, எடுக்கவும் மாட்டாது என்பதற்கு இன்னு மொரு சான்றைப் பாருங்கள்.

    அன்றொரு நாள் தாவீது நண்பகலுக்குப் பின் தன் படுக்கையினின்று எழுந்து அரண்மனை மாடியில் உலாவுகையில், அவருக்கு எதிரே தம் மேல்மாடியில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டார். அப்பெண் மிகவும் அழகாக இருந்தாள்.

    அப்பொழுது அரசர் அப்பெண் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பி, அவள் எலியாமின் மகளும் ஏத்தையனான உரியா சின் மனைவியுமான பெத்சாபே என்று அறிந்து கொண்டார் பின்னர் தாவீது ஆள் அனுப்பி அவளை வர வழைத்தார். அவள் அவரிடம் வந்த போது அரசர் அவளோடு படுத்தார். பிறகு அவள் தன் தீட்டு நீங்கத் தன்னைத் தூய்மைப்படுத்தினாள்.

    கருவுற்றவளாய்த் தன் வீடு திரும்பிய பின், தான் கருவுற்றிருப்பதாகத் தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்.

    அப்போது தாவீது யோவாபிடம் ஆள் அனுப்பி ‘ஏத்தை யனான உரியாசை என்னிடம் அனுப்பிவை’ என்று சொன்னார். அப்படியே யோவாப் ஏத்தையனான உரியாசைத் தாவீதிடம் அனுப்பி வைத்தான்.

    உரியாசு தாவீதிடம் வந்த போது, அவர் அவனை நோக்கி, யோவாபும் மக்களும் நலமாய் இருக்கிறார்களா? போர் எவ்வாறு நடந்து வருகிறது? என்று விசாரித்தார்.

    பிறகு தாவீது உரியாசை நோக்கி, ‘உன் இல்லத்திற்குப் போய் உன் கால்களைக் கழுவு’ என்றார். உரியாசு அரண் மனையிலிருந்து புறப்பட்ட போது, அரச உணவு அவனுக்குப் பின்னால் அனுப்பப்பட்டது.

    உரியாசோ தன் இல்லத்திற்குப் போகாமல் தன் தலைவரின் மற்ற ஊழியர்களோடு அரண்மனை வாயிலில் படுத்துக் கொண்டான்.

    உரியாசு தன் இல்லத்திற்குச் செல்லவில்லை என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாசை நோக்கி, ‘நீ பயணத்தி லிருந்து வந்தவனல்லவா? நீ உன் வீட்டுக்குப் போகாதது ஏன்? ‘ என்று கேட்டார்.

    உரியாசு தாவீதைப் பார்த்து, “கடவுள் பேழையும் இஸ்ராயேலும் யூதாவும் கூடாரங்களில் இருக்க, என் தலைவன் யோவாபும் என் அரசரின் சேவகரும் வெளியே தங்கியிருக்க, நான் உண்ணவும் குடிக்கவும், என் மனைவியுடன் படுக்கவும் என் வீட்டிற்குள் போவேனோ? உம்மேலும் உம் உயிர் மேலும் ஆணை! நான் அப்படிச் செய்யவே மாட்டேன்’ என்றான்.

    அப்போது தாவீது உரியாசை நோக்கி, “இன்றும் நீ இங்கேயே இரு. நாளை நான் உன்னை அனுப்பி வைப்பேன்’ என்றார். அப்படியே உரியாசு அன்றும் மறு நாளும் யெருசலேமில் தங்கி இருந்தான்.

    தாவீது அவனைத் தன் முன்னிலையில் உண்ணவும், குடிக்கவும் அழைத்து அவனுக்குப் போதை ஊட்டினார். ஆயினும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல் மாலை யிலேயே வெளியே போய் அரசரின் சேவகரோடு தன் படுக்கையில் தூங்கினான்.

    காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதம் எழுதி, அதை உரியாசின் கையில் கொடுத்து அனுப்பினார்.

    அக்கடிதத்தில், “போர் கடுமையாக நடக்கும் இடத்தில் உரியாசை நீர் படை முகத்தில் நிறுத்தி அவன் வெட்டுண்டு சாகும்படி விட்டுவிடும்.” என்று எழுதப்பட்டிருந்தது.

    அவ்வாறு யோவாப் நகரை முற்றுகை யிடுகையில் மிக்க ஆற்றல் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்திருந்த இடத்தில் உரியாசை நிறுத்தினான்.

    வீரர் நகரிலிருந்து வெளிப்போந்து யோவாபோடு போரிட்ட போது தாவீதின் வீரருள் பலர் விழுந்து மடிந்தனர். ஏத்தையனாகிய உரியாசும் இறந்தான். (2சாமுவேல் 11:2-17)

    உரியாசின் மனைவி தன் கணவர் இறந்துவிட்டதைக் கேள்வியுற்று அவருக்காகப் புலம்பி அழுதாள். துக்க காலம் முடிந்ததும் தாவீத ஆளனுப்பி அவளைத் தம் வீட்டுக்கு கொண்டு வந்தார். அவள் அவருக்கு மனைவியாகி ஆண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள்...(2சாமுவேல் 11:26 -27)

    ஒரு அன்னிய பெண் குளிப்பதைக் கண்டால் உடனே அந்த இடத்தை விட்டு அகன்று விடுவது தான் நாகரீகம். சாதாரண மனிதனுக்கு தெரிந்த இந்நாகரீகம் மன்னரும் தீர்க்கதரிசியுமான தாவீதுக்கு தெரியாமல் போயுள்ளது. குளித்துக் கொண்டிருக்கும் அப்பெண்ணை பார்த்தது மட்டுமல்லாமல் அவள் அழகில் மதிமயங்கி அவள் பற்றிய முழு விபரங்களை சேகரித்துக் கொள்கிறார்.

    அவள் மணம் முடித்த பெண். அவள் கணவன் உரியாசு என்பவன் நாட்டின் பாதுகாப்பு படையின் சிப்பாய்யாக உள்ளான் என்பதை அறிந்த பின்பும் அதிகார நிலையில் அவளை அரண்மனைக்கு வரவழைத்து உறவு கொள்கிறார். அவளும் கர்ப்பமடைகிறாள். கருவுற்றிருப்பதைக் குறித்து மன்னருக்கு சொல்லி அனுப்புகிறாள். உடனே மன்னர் அவளது கணவன் உரியாசை வளைத்துப் போட்டு சமாளிக்கப் பார்க்கிறார். தனது கையினாலே உணவு பரிமாறி, மது குடிக்கக் கொடுத்து, போதையூட்டி அன்பளிப் புகள் வழங்கி ராஜமரியாதையுடன் கவனித்து விட்டு, மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கூறி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறர். ஆனால் உரியாசு வீட்டுக்கு போவதில்லை என்பதை அறிந்ததும் அவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார்.

    உரியாசு, நாட்டுக்கும் நாட்டு மன்னனுக்கும் விசுவாசமாக உள்ள ஒரு போர் வீரன். போருக்கு அவனை அனுப்பி வைத்து கடுமையாக போர் நடக்கும் சமயத்தில் களத்தில் முன்னணியில் நிறுத்தி வைத்து வெட்டுண்டு போகும்படிக்கு தளபதிக்கு கடிதம் எழுதி அக்கடிதத்தை உரியாசு இடமே கொடுத்து அனுப்புகிறார். எதுவும் அறியாத உரியாசு அக்கடிதத்தை தளபதியிடம் ஒப்படைக்க தளபதியும் காரியத்தை கச்சிதமாக முடித்து விடுகிறார். அதன் பின் உரியாசின் மனைவியை தாவீத் சொந்தப் படுத்திக் கொள்கிறார். ஒரு தீர்க்கதரிசி செய்கின்ற காரியமா இது?

    அநியாயமாக ஒருஉயிரை கொன்று, அடுத்தவன் மனைவியை சூரையாடிய மன்னரும் தீர்க்தரிசியுமான தாவீதுக்கு எந்த தண்டனையும் எவரும் கொடுக்கவில்லை. ஏன் கர்த்தர் கூட கொடுக்கவில்லை. கர்த்தரின் பார்வை யில் தீயகாரியமாக மட்டுமே இது தெரிந்திருக்கிறது. ஒளிவு மறைவு இல்லாமல் அதிகார பலத்துடன் நடந்த இப்பாவத்திற்கு எவ்வித கசப்பு நீர் பரிசோதனை யுமில்லை. கல்லடி தண்டனையுமில்லை. பஞ்சாயத்து விசாரணையு மில்லை.

    மாறாக தாவீதின் கள்ள உறவு மூலமாக பிறந்த குழந்தையை கர்த்தர் சாகடித்து விடுகிறார். எப்பாவமும் அறியாத பச்சிளம் குழந்தை தண்டனைக்கு ஆளாகிறது. இதுவே தாவீதுக்கு வழங்கப்பட்ட தண்டனை என கூறப்படுகிறது. (பார்க்க.2 சாமு வேல்12:13-20) இதுதான் தேவநீதியா? அல்லது வேத புத்தகமா?

    இன்னுமொரு தீர்க்கதரிசியின் கதையை பாருங்கள். சாலமோனுக்கு எழுநூறு அரசகுலப் பெண்கள் மனைவியர் களாகவும், முந்நூறு பெண்கள் வைப்பாட்டிகளாகவும் இருந்தார்கள். அப் பெண்கள் அவரது இதயத்தைத் தவறான வழியில் திருப்பி விட்டார்கள்.(1ம் அரசர் 11:3.)

    ஒருவனுக்கு சட்டப்பூர்வமாக எத்தனை மனைவியும் இருக்கலாம். ஆனால் சட்டத்திற்கு புறம்பாக ஒரு வைப்பாட்டிக் கூட இருக்கக் கூடாது.

    வேலியே பயிரை மேய்வது போல் பாவங்க ளுக்கும் அசிங்கங்களுக்கும் முன்னோடிகளாக தீர்க்கதரிசிகள் ஆக்கப்பட்டிருக்கும் போது சாதாரண மனிதர்களின் நிலையை கேட்கவும் வேண்டுமா? ஆண்கள் புரியும் இத்தனை பாவங்களையும் பைபிள் கண்டு கொள்ளாத அதே நேரம் ஒரு பெண் தவறினாலோ அல்லது தவறியதாக சந்தேகம் கொண்டாலோ அவளுக்குரிய உச்சக் கட்ட தண்டனையை கூறி அமுல்படுத்தி அசிங்கப் படுத்துகிறது.

    கற்பழிக்கப்பட்ட பெண்ணின் விடயத்திலும் பைபிள் இதேபோன்று விபரீதமான ஒரு தீர்வை பின்வருமாறு கூறுகிறது.

    'மணமாகாத ஒரு கன்னிப் பெண்ணை ஒருவன் கண்டு அவளைப் பலவந்தப் படுத்தி அவளோடு உறவு கொண்டது கண்டு பிடிக்கப்பட்டால் அப்பெண்ணின் தந்தைக்கு அவளோடு உறவு கொண்டவன் ஐம்பது வெள்ளிக் காசுகள் தரவேண்டும். அவன் அவளைக் கெடுத்து விட்டதால் அவளை மனைவியாக்கிக் கொள்ள வேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் அவளை மண முறிவு செய்ய முடியாது. (உபகாமம்: 22:29)

    கன்னிப் பெண்ணை அடைய விரும்பும் ஆணுக்கு அப் பெண்ணின் சம்மதம் கிடைக்காத போது அவளை பலாத்காரம் பண்ணி விட்டால் தானாகவே அடைந்து கொள்ள முடியும் என்று ஆண்களுக்கு (Legal points கொடுத்து) நற்போதனை செய்கிறது பைபிள் என்று சொல்வதில் தவறாகுமா?

    கற்பை பறிகொடுத்த பெண்ணுக்கு கிடைக்கும் நீதி அக்காமுகனை மணம் முடிப்பது. காமுகனுக்குக் கிடைக்கும் தண்டனை கற்பழித்த பெண்ணை மனைவியாக்கிக் கொள்வது! என்ன அற்புதமான தீர்ப்பு!

    அதே வேளை முதலிரவின் போது மனைவியிடமிருந்து இரத்தம் கசியாத காரணத்தால் அவளை கற்பிழந்த பெண் என்று குற்றம் சுமத்தி கல்லெறிந்து கொல்லுமாறு கட்டளையிட்டுகிறது. பாவம் ஒருபக்கம், பழி இன்னு மொரு பக்கம். பாதிக்கப்பட்டு நிற்பதோ ஒன்றுமறியாத அபலைப் பெண்கள்தான்.

    இதுதான் பைபிள் வழங்கும் பெண்ணுரிமையா? பைபிளுக்குச் சொந்தம் கொண்டாடும் மக்கள் இந்த அவலத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    (தீர்க்கதரிசிகளான தாவீத் மற்றும் சாலமோன் ஆகியோர் நற் பண்புள்ளவர்கள் என்று அல்குர்ஆன் கூறுகிறதே தவிர கெட்ட நடத்தையுள்ள தீய குணமுடையவர்களாக போதிக்க வில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.)

    இஸ்லாம் பெண்ணுடைய விடயத்தில் இதற்கு மாற்றமான நடைமுறை சாத்தியமான அழகான வழிகளை காண்பித்து பெண்ணின் கண்ணியத்தை காப்பாற்றுகிறது.