இலகு நடையில் இஸ்லாமியக் கொள்கை
இலகு நடையில் இஸ்லாமியக் கொள்கை
முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் பல காரணங்களுக்காக வேண்டி கருத்து வேறுபாட்டுடன் இருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் நியதாக உள்ளது . இத்தகைய கருத்துவேறுபாடுகள் சிலரின் அறிவீனத்தாலும் சிலர் தன் விருப்பப்படி செயற்படுவதாலுமே உருவாகின்றன .
இவ்வாறு நிகழக்கூடிய கருத்துவேறுபாடுகள் , உண்மையான வழியைத் தேடிட வேண்டுமென பெருமுனைப்போடு செயற்படும் ஓர் முஸ்லிமிடத்தில் நபி * அவர்களும் , அவர்களின் தோழர்களும் அறிவிலும் , அதை செயற்படுத்துவதிலும் எவ்வாறு செயற்பட்டார்களோ அத்தகைய வழியைத் தேடுவதற்கும் , அவ்வழியைப் பின்பற்றி நடப்பதற்குமான அவசியத்தை உருவாக்குகிறது . வாசகர்களே , உங்கள் கைகளில் தவழும் இப்புத்தகத்தில் இஸ்லாத்தின் பெரும் ஆபத்தான பகுதியாக இருக்கும் " நம்பிக்கை சார் கோட்பாடுகள் ” பகுதியில் நபி அவர்களும் , அவர்களின் தோழர்களும் மேற்கொண்டவற்றைப் பற்றிய முழு விபரங்களையும் சுருக்கமாக இந்நூலாசிரியர் கோர்வை செய்து தந்துள்ளார் . இவற்றில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டுமென்பதற்காக இது விடயத்தில் வழிதவறியவர்களின் கூற்றுக்கள் யாது என்பதைப் பற்றிய தெளிவும் வழங்கப்பட்டுள்ளது .
இந்நூலாசிரியருக்கு சிறந்த நற்கூலிகளை வழங்கி , அவரின் அனைத்து செயற்பாடுகளையும் அல்லாஹ் பொருந்திக்கொள்ள வேண்டுமென நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் . மேலும் இந்நூலுக்காக மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்புப் பணி , வடிவமைப்பு , அச்சுவடிவம் , மேற்பார்வை போன்ற அனைத்துப் பணிகளையும் செய்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலிகளை வழங்க வேண்டுமெனவும் நாம் பிரார்த்திக்கிறோம் . இதனை முஸ்லிம்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இதன் கூலிகள் அனைத்தும் கிடைக்கவேண்டுமெனவும் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் .
மொழிபெயர்க்கப்பட்ட விடயங்கள்
- العربية - Arabic
- नेपाली - Nepali
- italiano - Italian
- Bahasa Indonesia - Indonesian
- فارسی - Persian
- Türkçe - Turkish
- Soomaali - Somali
- Kurdî - Kurdish
- bosanski - Bosnian
- Shqip - Albanian
- اردو - Urdu
- नेपाली - Nepali
- සිංහල - Sinhala
- español - Spanish
- Français - French
- Deutsch - German
- English - English
- Русский - Russian
- Ўзбек - Uzbek
- বাংলা - Bengali
- Tiếng Việt - Vietnamese
- Српски - Serbian