சொல்லாலும் செயலாலும் அல்லாஹ்வுக்கு நன்றி கூறல்
பிரிவுகள்
Full Description
www.arabnews.com பத்திரிகையில் 22ம் திகதி ஜனவரி 2015 ல் Islam in Perspective பக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்
எமது நன்றியின் அடிப்படையில் ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. அல்லாஹ்வின் அருட் கொடைக்காக நீங்கள் நன்றி கூறினால், அல்லாஹ் அவற்றை அதிகரித்து, ஆசீர்வாதமும் கொடுப்பான். ஆனால் நீங்கள் நன்றி காட்டாவிட்டால், அவன் கொடுத்த அருட் கொடைகள் நீங்கி, அவற்றுக்குப் பதிலாக, ஆஃஹிரா வுக்கு முன்பாக தண்டனைகளை இவ்வுலகிலேயே உடனடியாக தொடங்கச் கூடும்.
அல்லாஹ்வின் பரக்கத் எனப்படும் ஆசீர்வாதம் நல்ல சௌக்கியம், சக்தியுள்ள உடம்பு, கேட்கும், பார்க்கும் புலன்கள், நல்லறிவு, உடல் உருப்புகள் அனைத்தும் சரிவர செயல் படுதல் போன்ற பல்வேறு வகைகளை கொண்டது. இஸ்லாத்தை உறுதியாக பற்றிப் பிடித்து, அதனை கவணத்தில் கொண்டு, அதனை விளங்கிக் கொள்வது இஸ்லாத்தில் பெரும் பாக்கியமாகும். இதனை பற்றி கீர்த்தி மிக்க அல்லாஹ் இவ்வாறு குர்ஆனில் கூறுகிறான்.
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّإِثْمٍ ۙ فَإِنَّ اللَّـهَ غَفُورٌ رَّحِيمٌ ﴿٣﴾
“இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்.” அல் குர்ஆன் 5 – 3
எமக்கு கிடைத்த மிகப்பெரிய அருட்கொடை தீனாகும் (மார்க்கமாகும்). தனது அடியார்களுக்கு அவனது மார்க்கத்தை விளக்கி கொடுப்பதற்காக ரசூல்மார் களையும் கிரந்தங்களையும் அல்லாஹ் அனுப்பி, முஸ்லிம்களாகிய உங்களை அதனை ஏற்றுக் கொள்ளச் செய்தான்.
இதுவே அல்லாஹ்வுக்கு நாங்கள் அதிகமாக நன்றி கூற வேண்டிய மிகப் பெரிய அருட்கொடையாகும். இன்றைய உலகில் காணக் கிடக்கும் குப்ர் எனும் இறை நிராகரிப்பு, ஷிர்க் எனும் அல்லாஹ்வுக்கு எதனையும் எவரையும் இணை வைத்தல், மாயை, பரவலாக காணக் கிடக்கும் பொய், பித்தலாட்டம், லஞ்சம் பேன்ற உலக வாழ்க்கையின் மாயை களையும், மரணத்தின் பின் உள்ள வாழ்க்கையை பற்றிய கவலையில்லாத தன்மையையும் காணும் போது, இஸ்லாத்தின் மூலம் நமக்கு கிடைத்த அருட்கொடைக்கு நாம் நன்றி செலுத்த கடமை பட்டுள்ளோம் என்பது விளங்குகிறது.
அத்துடன் கொமியூனிஸம், நாஸ்திகம் ஆகியவையின் தீமைகள் தெளிவாக உள்ளன. இவைகள் அல்லாஹ் வையும், அவனது ரசூல்மார்களையும், வேத கிரந்தங்களையும் மறுக்கும் படி எமக்கு அறிவின்றன.
அதே போல் இன்னுமொரு கூட்டம், கப்ர் வணக்கம், சிலை வணக்கம் ஆகியவைகளில் ஈடுபட்டு அல்லாஹ்வுக்கே உரிய வணக்கத்தை திசை திருப்பி விடுகின்றனர்.
இன்னும் பலர் பித் ஆ எனும் புதுமை புகுத்தல், மூட நம்பிக்கை, மற்றும் பல் வேறு பாப காரியங்களில் ஈடு பட்டு வருகின்றனர்.
இஸ்லாத்துக்கு மாற்றமான கருத்துக்களையும், அதன் விளைவு களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, எமக்கு கிடைத்த அல்லாஹ் வின் அளவற்ற அருளை கற்பனை செய்து பார்க்கவும் முடியாது.
இஸ்லாம் எமக்களித்த பெரும் பாக்கியத்தின் விளைவு இறுதியில் எமக்கு கிடைக்கும் ஜன்னா எனும் சுவர்க்கமாகும். அங்கு பெரும் அந்தஸ்து, என்றென்றும் நிலையான மகிழ்ச்சி, அல்லாஹ்வுக்கு நெருக்கமாக கிடைக்கும் ஸ்தானம், மரணமே இல்லாத வாழ்வு, என்றும் மாறாத ஆடை அலங்காரம், இளமை ஆகிய அனைத்தும் மனிதர்களுக்கு உண்டு.
அங்கு செல்பவர்கள், அல்லாஹ்வின் நிலையான அருளும், தேக சுகமும், மாறாத இளமையும் பெறுவார்கள். உயர்த்தியான அதிபதியின் துணையும் அவர்களுக்கு கிடைக்கும்.
அவர்களை முத்தகூன் என்ற இறை பக்தியுடைய வர்கள் என அல்லாஹ் பெயர் சூட்டுகிறான். சூரா 2- 2
إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ ﴿٥١﴾ فِي جَنَّاتٍ وَعُيُونٍ ﴿٥٢﴾ يَلْبَسُونَ مِن سُندُسٍ وَإِسْتَبْرَقٍ مُّتَقَابِلِينَ ﴿٥٣﴾ كَذَٰلِكَ وَزَوَّجْنَاهُم بِحُورٍ عِينٍ ﴿٥٤﴾ يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَاكِهَةٍ آمِنِينَ ﴿٥٥﴾ لَا يَذُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلَّا الْمَوْتَةَ الْأُولَىٰ ۖ وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيمِ ﴿٥٦﴾ فَضْلًا مِّن رَّبِّكَ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ﴿٥٧﴾
“நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் அச்சமற்ற இடத்தில் இருப்பார்கள். சுவனபதி (யின் சோலை) களிலும், நீர் ஊற்றுக்களி(லே (அவற்றினிடையே) யும் இருப்பர்கள். ஒருவரை ஒருவர் முன் நோக்கியவர் களாக மெல்லியதும், திடமானதுமான பட்டாடைகளை அணிந்து இருப்பார்கள். இவ்வாறே (அது நடைபெறும்) மேலும் ஹூருல் ஈன் (எனும் கண்ணழகிகளாகிய கன்னிகை)களையும் நாம் அவர்களுக்கு திருமணம்செய்து வைப்போம். அச்சமற்றவர்களாக கனி வர்க்கங்கள் ஒவ்வொன்றையும் அங்கு கேட்டு கொண்டும் இருப்பார் கள். முந்திய மரணத்தைத் தவிர அவற்றில் அவர்கள் (வேறு யாதொரு) மரணத்தையும் சுவைக்க மாட்டார்கள். மேலும், நரக வேதனையை விட்டும் அவர்களை (அல்லாஹ்வாகிய) அவன் காத்துக் கொண்டான். (நபியே! இது) உமது இரட்சகனின் பேரருளாக (வழங்கப் படுகிறது) அது தான் மகத்தான வெற்றியாகும்.” சூரா 44 51 முதல் 57 வரை.
இவற்றை விபரிக்கும் பல் வேறு குர்ஆன் ஆயத்துக் கள் உள்ளன.
குப்ர் எனும் இறை நிராகரிப்பிலும், வழிகேட்டிலும் ஈடு பட்ட மக்கள் அவமானமான தங்குமிடத்தை சேர்ந்தடைந்து, கடும் தண்டனைக்கு ஆனாவார்கள். நரகநெருப்பும், (நரகத்தில் வளரும் பயங்கரமான மரமுமான) சக்கூம் மாத்திரம் அவர்ளுக்கு கிடைக்கும் அந்த நிரந்தர இடத்தை அடைந்தவர்களுக்கு கொடுக்கப் படும் வேதனை ஒருபோதும் முடிவு பெறாது. அதில் வசிப்பவர்கள் சாகவும் மாட்டார்கள். சங்கைக்குரிய அல்லாஹ் அவர்களை பற்றி இவ்வாறு அறிவிக்கிறான்.
وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ نَارُ جَهَنَّمَ لَا يُقْضَىٰ عَلَيْهِمْ فَيَمُوتُوا وَلَا يُخَفَّفُ عَنْهُم مِّنْ عَذَابِهَا ۚ كَذَٰلِكَ نَجْزِي كُلَّ كَفُورٍ ﴿٣٦﴾ وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ ۚ أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ ۖ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِيرٍ ﴿٣٧﴾
“இன்னும் நிராகரித்து விட்டார்களே அத்தகையோர் – அவர்களுக்கு நரகநெருப்பு உண்டு. அவர்களுக்கு (இறப்பு ஏற்படவேண்டுமென) தீரப்பு செய்யப்பட மாட்டாது. (அவ்வாறு தீர்ப்பு செய்யப்பட்டால் தானே) அவர்கள் இறப்பெய்துவார்கள்! அதன் வேதனையி லிருந்து அவர்களுக்கு (ஒரு சிறிதும்) குறைக்கப்படவு மாட்டாது. இவ்வாறே ஒவ்வொரு நிராகரிப்பாருக்கும் நாம் கூலி கொடுப்போம்.
அ(ந்நரகத்)தில் அவர்கள், ‘எங்கள் இரட்சகனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றி விடு. (இனி) நாங்கள் செய்துக் கொண்டிருந்ததல்லாத நற்செயலையே செய்வோம்’ என்று பெரும் சப்தமிடு வார்கள். (அதற்கு அல்லாஹ்) நல்லுணர்ச்சி பெறக் கூடியவன், நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான நீண்ட காலம் வரை, நாம் அதில் உங்களை (வாழ) விட்டு வைத்திருக்கவில்லையா? மேலும்,. (இது பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருந்தார். ஆதலால் (நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். அநியாயக்கார்ர்களுக்கு எந்த உதவியாளருமில்லை” (என்று கூறுவான்.) சூரா 35;36,37
இந்த விஷயம் பற்றி ஆழமாக சிந்தித்து எங்களுக்கு கிடைத்த அல்லாஹ்வின் கிருபையை அறிந்துக் கொண்ட மக்கள், அவற்றுக்கு நன்றி செலுத்தும் முகமாக இவ்வாறு கிடைத்த அருட்கொடைகளை பின்பற்றி, தனக்கு இறுதி வரை உதவி செய்யும் படி அல்லாஹ் விடமே துஆ செய்ய வேண்டும். அவர் அல்லாஹ்வின் கட்டளையை தொடர்ந்து பின் பற்றி, பாவங்களை விட்டும் நீங்குவதுடன், பிழையான வழிகள், அல்லாஹ்வின் கிருபையை விட்டும் தூரமாக்கும் பித்னாக்கள் ஆகியவைகளிருந்து அல்லாஹ்விடமே பாதுகாவல் தேட வேண்டும்.
அல்லாஹ்விடமிருந்து கிடைத்த மாபெரும் கிருபை யாகிய இஸ்லாத் துக்கு அடுத்ததாக, தனது உடல் நலம், பாதுகாப்பு, மற்றும் தாய் நாடு, குடும்பம், காணி பூமி ஆகியவற்றில் பாதுகாப்பு போன்றவற்றுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி கூற நாம் கடமை பட்டுள்ளோம்.
அல்லாஹ்வின் அருளை பெற்றிருப்பதன் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவும், அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இருக்கலாம். அதே நேரத்தில், அதே கிருபை அல்லாஹ்வை மறுப்பதற்கும், தவறான வழிகளில் செல்வதற்கும் ஒரு சோதனையாகவும் அமைய முடியும். சில வேளை களில் மார்க்கத்தை விட்டு வழி தவறிய ஒருவருக்கு அருளப்பட்ட பாதுகாப்பு, உடலாரோக்கியம், செல்வம் என்பவை அவருக்கு சோதனையாகும் இருக்கக் கூடும். இந்த நிலையில் இருக்கும் போது நீங்கள் மரித்தால், மீண்டும் எழுப்பப் படும் நாளில் இப்படிப் பட்ட சோதனைகளும், துன்பங்களும் உங்களுக்கு எதிரான சாட்சியாக மாறி, உங்கள் வேதனையையும் தண்டனையையும் அதிகரிக்கும்.
அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த கிருபைகளுக்கு நன்றிக் கடன் செலுத்த ஒரே வழி, அல்லாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் விசுவாசம் கொள்வதும், அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பதும், அவன் அளித்த கிருபையை ஒத்துக் கொள்வதுமாகும்.
அழகிய வார்த்தைகள் மூலம் அவனை புகழ்ந்து துதி பாடி, அருள் புரிந்த அவன் மீது அன்பு வைத்து, அவனை அஞ்சி, அவனை நேரில் காண்பதை எதிர் பார்த்து, அவனுடைய வழிக்கு மக்களை அழைத்து, அவனுடைய உரிமைகளை சரிவர நிறைவேற்றுவதன் மூலம் நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி கூறலாம்.
அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் விசுவாசம் கொள்வது எனும் செயல் தூதர்களில் மிகச் சிறந்தவராகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது விசுவாசம் வைத்து அன்னாரது ஷரீஆவை பின்பற்றுவதில் அடங்கியுள்ளது.
வணக்கத்துக்குரிய ஒரே இறைவன் அல்லாஹ் மாத்திரமே என்றும் படைத்தவன், பராமரிப்பவன், அனைத்தையும் அறிந்தவன் அவனே என்றும் நம்பிக்கை கொள்வது தனது நன்றிக் கடனை தெரியப் படுத்தும் ஒரு வழியாகும். வணக்கத்துக்குரிய அவனே அகிலங்களுக்கெல்லாம் அதிபதி. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்கு உரிய வேறு யாரும் இல்லை. சகல கீர்த்தி மிக்க, உயர்த்தியாகிய அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களையும், உயர்ந்த பண்புகளையும், அவன் தனது தன்மையில், அழகிய திருநாமங்களில், பண்புகளில் முழுமையானவன் என்று விசுவாசம் கொள்வது எமது நன்றிக் கடனின் ஒரு அம்சமாகும். அவனுக்கு இணையான, துனையான யாரும் இல்லை, அவனது படைப்புகளுடன் அவனை ஒரு போதும் உவமை படுத்த முடியாது. சகல கீர்த்தியும் உயர்த்தியும் கொண்ட அல்லாஹ் அல் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்.
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ ﴿١١﴾
“அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கியவன்.” சூரா 42-11
قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾
உயர்த்தியான அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். “(நபியே!) நீர் கூறுவீராக. அவன் - அல்லாஹ் ஒருவனே. அல்லாஹ் (யாவற்றையும் விட்டும்) தேவையற்றவன். (யாவும் அவன் அருளையே எதிர் பார்த்திருக்கின்றன) அவன் எவரையும்) பெற வில்லை. (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை. மேலும் அவனுக்கு நிகராக எவருமில்லை.” சூரா112; 1-4
வணக்குத்துக்குரிய ஒரே இறைவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே என்று நம்புவது உண்மையான விசுவாசத்தின் அத்தியவசியமான அம்’சமாகும்.
இந்த விஷயம் சம்பந்தமாக உயர்த்தி மிக்க அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ
“நபியே! உமதிரட்சகன் – அவனைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று கட்டளையிட்டிருக்கின்றான்.” சூரா 17 ; 23
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾
அத்துடன், “(எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.” சூரா 1;5
فَادْعُوا اللَّـهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ ﴿١٤﴾
“ஆகவே, நிராகரித்துக் கொண்டிருப்போர் வெறுத்த போதிலும், நீங்கள் அல்லாஹ்வை – முற்றிலும் வணக்கத்தை அவனுக்கே கலப்பற்ற வர்களாக்கி வைக்கிறவர்களாக (பிரார்த்தித்து) அழையுங்கள்.”சூரா 40;14
ا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿٢١﴾
“மனிதர்களே! உங்களுடைய இரட்சகனை நீங்கள் வணங்குங்கள். அவன் எத்தகையவன் என்றால் உங்களையும் உங்களுக்கு முன்னி ருந்தோர்களையும் படைத்தான். (அதனால்) நீங்கள் பயபக்தி உடையவர்கள் ஆகலாம்.” 2;21
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ ﴿٥٦﴾
“மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே தவிர நான் அவர்களை படைக்க வில்லை.” சூரா 51;56
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّـهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ ﴿٥﴾
“இன்னும் அல்லாஹ்வை – அவனுக்காகவே வணக்கத்தை கலப்பற்றதாக ஆக்கியவர்களாக (அனைத்து தீயவழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின் பால்) சாய்ந்தவர்களாக அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், தொழுகையை அவர்கள் நிறைவேற்றுவதற் காகவும், சகாத்தை அவர்கள் கொடுப்பதற்காகவும் தவிர (வேறெதையும்) அவர்கள் (அதில்) கட்டளையிடப் படவில்லை. இன்னும், இது தான் நேரான மார்க்கமாகும்.” சூரா 98;5.
முதல் பாகம் முற்றுப்பெறும்.