×
முனாபிக்கின் பண்புகள். 1. பேசினால் பொய் பேசுவான். 2. ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான் 3. வாக்களித்தால் மாறு செய்வான். 4. வழக்காடினால் குற்றமிழைப்பான்.

    நம்பிக்கைத் துரோகம்

    ] Tamil – தமிழ் –[ تاميلي

    M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

    2014 - 1435

    الخـيانـة

    « باللغة التاميلية »

    محمد إمتياز يوسف

    2014 - 1435

    நம்பிக்கைத் துரோகம்

    அமானித மோசடி

    M.S.M . இம்தியாஸ் யூசுப் ஸலபி.

    مَاكَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

    மோசடி செய்வது எந்த நபிக்கும் தகுமானதல்ல. யார் மோசடி செய்கிறாரோ அவர் செய்த மோசடிப் பொரு ளுடன் மறுமையில் வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் தேடிக் கொண்டது முழுமையாக வழங்கப்படும். அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (3:161)

    மோசடி செய்வது இன்று சாதாரண காரியமாகி விட்டது. சுகல மட்டங்களிலும் மோசடி செய்தல் அற்பமாகி விட்டது.

    மோசடியை மூன்றுவகையாக நோக்கலாம்.

    01. வார்த்தைகளால், செயல்களால் நடத்தும் மோசடிகள்

    மனிதன் எப்போதும் ஒரு வார்த்தையை நம்பியே எதிலும் செயற்படுவான். கொடுக்கல் வாங்கலாக இருந்தாலும் வேறு விடயங் களிலாக இருந்தாலும் சொல்லப்படும் வாக் குறுதியை நம்பியே காத்திருப்பான்.

    ஒருவர் குறித்த நேரத்திற்கு வருவதாக வாக்குறுதி கொடுப்பார். ஆனால் அந்நேரத்திற்கு வரமாட்டார். இவர் வருகை யை எதிர்பார்த்திருந்தவர் ஏமாற்றமடைவார்.

    ஒரு வேலையை அல்லது பொறுப்பபை செய்து தருவதாகக் கூறி வாக்குறுதி கொடுப்பார்கள். அதனை செய்யாது விட்டுவிடுவார்கள்.

    குறித்த தினத்தில் திருப்பித் தருவதாகக் கூறி பணத்தை கடனுக்கு பெறுவார். சொன்ன மாதிரி அப்பணத்தை ஒப்ப டைக்காது இழுத்தடிப்பார்.

    இருவர் வியாபாரத்தில் கூட்டாக சேர்ந்து வியாபாரம் பண்ணுவார்கள். இடையில் அடுத்த வருடைய பங்கில் மோசடி செய்வார்.

    இப்படியாக நம்ப வைத்து கழுத்தறுக்கும் காரியங்களை பலரும் செய்வதுண்டு. இஸ்லாம் இதனை கடுமையாக எதிர்க்கின்றது. நயவஞ்ச கத்தின் பண்புகளாக குறிப்பிடு கின்றது.

    وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا

    ஒப்பந்தத்தை நிறை வேற்றுங்கள். நிச்சயமாக அந்த ஒப்பந்தம் (குறித்து அல்லாஹ்வினால்) விசாரிக்கப் படும். (17:34)

    صحيح مسلم (1 78)

    عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَلَّةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَلَّةٌ مِنْ نِفَاقٍ حَتَّى يَدَعَهَا: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ ' غَيْرَ أَنَّ فِي حَدِيثِ سُفْيَانَ: «وَإِنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ»

    நான்கு குணங்கள் ஒருவனிடத்தில் இருந்தால் அவன் தெளிவான நயவஞ்சகன். இவற்றில் ஒரு குணம் இருந்தால் அதை அவன் விடும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பகுதி அவனிடம் தங்கி விடும். (அந்நான்கு குணங்களாவன) 1.பேசினால் பொய் பேசுவான். 2. ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான் 3. வாக்களித்தால் மாறு செய்வான். 4. வழக்காடினால் குற்றமிழைப்பான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர். அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) (நூல்:புகாரி முஸ்லிம்)

    02. பொறுப்புகள் மற்றும் கடமைகளில் மோசடி:

    அரச மற்றும் தனியார் நிருவாகத்திற்கோ, சமூக பணிக்கோ அல்லது இயக்கத்தின் பணிக்கோ ஒருவர் பொறுப்புதாரியாக அல்லது அதிகாரி யாக நியமிக்கப்படுகிறார். அவரை நம்பி அவருக்குரிய பணிகள் ஒப்படைக்கப் படுகிறன. அப்பணியில் அவர் நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். நீதமாக நடந்துகொள்ள வேண்டும்.

    அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பின் மூலம் அவர் சார்ந்த ஜமாஅத்தினதோ நிறுவனத்தினதோ சேவைகள் மக்களிடம் சென்றடைய வேண்டும். மக்களினது தேவை கள் நிறைவேற்ற பாடுபட வேண்டும்.

    இவருடைய பணிக்காக மாதா மாதம் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அரச அதிகாரியாக இருப்பின் மக்கள் வரிப் பணத்தின் மூலமாகவே சம்பளம் செலுத்தப்படுகிறது. ஜமாஅத்தின் பொறுப்புதாரியாக இருப்பின் மக்களின் நன்கொடைகள் மற்றும் ஸதகாக்கள் மூலம் செலுத்தப் படுகிறது.

    ஒவ்வொரு அதிகாரியும், பொறுப்புதாரியும் இந்த உண்மையை உணர்ந்து சேவை செய்ய வேண்டும். குறித்த நேரத்தில் வேலைக்கு சமூகம் தந்து தன் கடமையை செய்ய வேண்டும்.

    குறித்த நேரத்திற்கு வராமல் குறித்த நேரத்திற்கு போகாமல் தங்களுடைய சோலிகளுக்காக நேரங்களை ஒதுக்கிக் கொள்வதும் மக்களின் சேவைகளை புறக்கணிப்பதும் மாபெரும் துரோகமாகும்.

    குறைகள் இன்றி துஷ்பிரயோகமின்றி, நேர்மையாக காரியமாற்ற முன்வர வேண்டும். மக்களுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மக்களுக்குரிய பணிகளை செய்யாமல் மக்களை அவஸ்தைப் படுத்தி, நெருக்கடிக்குள்ளாக்கி, அலைய விட்டு, பிறகு லஞ்சம் பெற்றுக் கொண்டு இறுதியில் அவ் வேலையை செய்து கொடுப்பது மாபெரும் மோசடியும் துரோகமு மாகும்.

    பொதுவாக உலகில் அரச துறைகளில் இந் நிலை அதிகம் காணப்படுவதால் தான் நாட்டின் முன்னேற்றமும் அபிவிருத்தியும் முடங்கி விடுகிறது. வறுமையும் ஏழ்மையும் அதிகரிக் கின்றது. மக்களின் வாழ்வும் பின்தள்ளப் படுகிறது. சாதாரண மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்குப் பதிலாக பின்னடைவை சந்திக்கிறது.

    இந்த மோசடியும் துரோகமும் பாடசாலை மட்டங்களிலும் உண்டு. பாடசாலை நிர்வாகத் தையும், ஆசிரியர்களையும் நம்பி பெற்றோர், பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்த்து விடுகின்றனர். நல்லதொரு பிரஜையாக, சிறந்த கல்விமானாக நம் பிள்ளைகள் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இலட்சக் கணக்கில் பணம் (Donation) செலுத்துகிறார்கள். மாதாந்தம் Fees கட்டனங்கள் செலுத்துகிறார்கள். ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களுடைய கடமைகளை உணர்ந்து பாடசாலைகளில் படித்துக் கொடுப்பதை விட பாடசாலைக்கு வெளியில் தனியார் வகுப்பு நடாத்தி சம்பாதிப்பதில் கவனம் செலுத்து கிறார்கள்.

    தாங்கள் பொறுப்பேற்ற பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் பிள்ளைகளின் குறைகளைக் கண்டு நிவர்த்தி செய்யாமல் காலம் நேரத்தை வீணடித்து, மாணவர்களின் எதிர்காலத்தை நாசப் படுத்தி, மாத சம்பளத்தைப் பெறுவார்களானால் இவர்களும் நம்பிக்கைக்கு மோசடி செய்பவர்களே!

    நாட்டை நிர்வகிக்கக் கூடிய தலைவரும் மக்கள் பணிக்காக பாராளுமன்ற அமைச்சர்களாக உறுப்பினர்களாக பதவி வகிப்போரும் தங்கள் பதவிகளை மக்கள் நலனுக்காக, சேவைக்காக, சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிக்க வேண்டியவர்களாக உள்ளனர். தங்கள் பதவி பட்டங்களில் இருந்து கொண்டு நாட்டை சூரையாடுவதோ அல்லது பரம்பரைக்கு சொத்து சேர்ப்பதோ இவர்களுடைய பணியல்ல. நாட்டையும் நாட்டு மக்களின் வாழ்க்கை நிலையையும் முன்னேற்று வதே இவர்களுடைய பணியாகும். இதற்கு மாற்றமாக செயற்படுவதனாலேயே மக்களின் வாழ்வாதரம் மோசமாக மாறிவிடுகிறது. நாட்டில் சுரண்டல்களும் பொருளாதார வீழ்ச்சியும் காணப்படுகிறது. முக்கள் நம்பிக்கை யுடன் ஒப்படைத்த பொறுப்பை இவர்கள் மோசடி செய்கிறார்கள்.

    எஜமான்கள் தொழிலாளிகளின் உரிமைகளில் துரோக மிழைப்பதோ தொழிலாளிகள் தங்கள் பொறுப்புக்களை துஷ்பிரயோகம் செய்வதோ பெரும் மோசடியாகும். கூலிக் கேற்ற பணிகனை வழங்குவது முதலாளியின் கடமை. சம்பளத்திற்கு ஏற்ப பணி புரிவது தொழிலாளி களின் கடமை. இக்கடமைகளில் இழைக்கப் படும் குற்றங்களே பெரும் மோசடிகளாகும்.

    பெற்றோர் தங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் விடத்தில் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள். இவர்களு டைய பிள்ளைகளுக்கு மார்க்கம் போதித்து பண்பாடு களுடன் சிறந்த பிரஜையாக வளர்த்தெடுக்கும் பெறுப்பிலிருந்து பெற்றோர் ஒதுங்கி விட முடியாது. பிள்ளைகள் என்போர் அல்லாஹ் வினால் ஒப்படைக்கப்பட்ட அமானித மாகும். இந்த அமானிதம் குறித்து விசாரிக்கப் படுவார்கள். இவ்வாறாக பலரும் பல பொறுப்புக்களில் உள்ளார்கள். ஒவ்வொரு வருடைய பொறுப்பும் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவதுடன் தண்டிக்கவும் படுவார்கள்.

    صحيح مسلم (3ஃ 1459)

    عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «أَلَا كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالْأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ، وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ، وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ، وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلَا فَكُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ»،

    அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புத் தாரிகள் உங்கள் பொறுப்புக்கள் பற்றி மறுமையில் விசாரிக்கப் படுவீரகள். தலைவரும் பெறுப்பாளியே அவர் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவார். ஒருவர் தன் மனைவி குறித்து பொறுப்பாளி. அவர் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவார். ஒரு பெண் தன் கணவனின் வீட்டுக்கு பொறுப்புத் தாரியாவாள். அவள் பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவாள். ஒரு ஊழியர் தன் எஜமானன் விஷயத்தில் பொறுப்புத்தாரி யாவார். அவன் தன் பொறுப்புப் பற்றி விசாரிக்கப்படுவான். ஓவ்வொருவரும் பொறுப்புத்தாரிகள். தங்கள் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்:இப்னு உமர்(ரலி) புகாரி முஸ்லிம் 653

    உலகில் தங்கள் பொறுப்பில் நீதமாக நடந்து கொண்டவர்கள் மறுமையில் மக்கள் முன்னிலையில் கொளரவப் படுத்தப்படும் காட்சியையும் நபி(ஸல்) அவர்கள் பின்வரு மாறு கூறிப்பிடுகிறார்கள்.

    صحيح مسلم (3 1458)

    قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ، عَنْ يَمِينِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ، وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ، الَّذِينَ يَعْدِلُونَ فِي حُكْمِهِمْ وَأَهْلِيهِمْ وَمَا وَلُوا

    தமது அதிகாரம், தமது குடும்பம், தாங்கள் வகிக்கும் பொறுப்புக்கள் ஆகியவற்றில் நீதமாக நடந்து கொண்ட வர்கள், அல்லாஹ்விடத்திம் ஒளியிலான மேடைகளில் இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்ப வர். அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி). நூல்: முஸ்லிம்.)

    உலகத்தில் குறிப்பிட்டதொரு இடத்தில் இருந்து கொண்டு தங்கள் பணியில் முறையாக நடந்து கொண்டவர்கள் மறுமையில் கோடான கோடி மக்கள் முன்னிலையில் ஒளியிலான மேடையின் மீது நிறுத்தப்பட்டு எடுத்து காட்டப்படுகிறார்கள்.

    03. நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருட்களை (அசையும் அசையாச் சொத்துக்களை) பணத்தை கையாடல் பண்ணுவது:

    குறிப்பிட்ட பணிக்காக செலவளிக்கப்படும் பணத்திற்கான வரவு செலவு கணக்குகளை காண்பிக்காமல் மறைத்து விடுவது, விபரங்களை அழித்து விடுவது போன்ற காரியங்களை மேற் கொள்வது மோசடிகளா கும். இத்தகைய மோசடிகளை இன்று பல அரச மற்றும் தனியார் நிறு வனங்களில் காணப் பட்டாலும் கொள்கைக்காக உருவாக்கப்பட்ட தாகக் கூறிக் கொள்ளும் நிறுவனங்களிலும் காண முடிகிறது.

    இவர்களுடைய பொறுப்புக்களைப் பற்றிக் கேட்டால் வரவு-செலவு கணக்குகளை ஒப்படைக்குமாறு கோரினால் முறையாக அவைகளை ஆவணங்களுடன் காண்பிக்காமல் திரிவுபடுத்தி விடுகிறார்கள் அல்லது காலம் கடத்துகிறார்கள். கணக்கு கேட்பவர்களிடம் கோபப்படுவதும், சண்டித்தனம் காண்பிப்பதும் பயமுறுத்துவதும் இவர்களுடைய அசாதாரண பண்புகளாகும். சில இடங்களில் இது போன்ற நிகழ்வுக்காக கொலை கூட நடந்திருக்கிறது.

    மோசடி மற்றும் துஷ்பிரயோக குற்றத்திற் காக இவர்களை துரத்தி விட்டால் மீண்டும் இதே போன்று வேலை யைத் தான், அதாவது பணத்தோடு தொடர்பான பணியைத் தான் தேர்ந்தெடுப்பார்கள். இத்தகையவர்களால் அந்த நிறுவனத்தின் பணியும் முடங்கி விடுவ தோடு, மக்களிடையே அவநம்பிக்கையை பெற்றதாகவும் ஆகி விடுகிறது.

    தன்னை முஸ்லிமாக கூறிக் கொள்பவர் ஒருபோதும் அமானிதத்திற்கு மோசடி செய்ய மாட்டார். மோசடி செய்பவர் முஸ்லிமாக இருக்கவும் மாட்டார். மக்களுக்குக் காண்பிப் பதற்கு சிறந்த பணியாளராக ஊழியராகக் காட்டிக் கொண்டாலும் அல்லாஹ் விடத்தில் பாவியாகவே கணிக்கப்படுவான்.

    மேலேயுள்ள (3:161) குர்ஆன் வசனத்தில் மோசடி செய்வது எந்தவொரு நபிக்கும் தகுமானதல்ல என்று அல்லாஹ் உறுதியாக கட்டளையிடுவதன் மூலம் சமூகத்தின் வழி காட்டியாக பொறுப்புக்குரியவராக இருப்பவர் முதல் சாதாரணமானவர் வரை எவரும் மோசடி செய்யவே கூடாது என்பது தெளிவாகிறது.

    صحيح مسلم (3 1460)

    إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ يَسْتَرْعِيهِ اللهُ رَعِيَّةً، يَمُوتُ يَوْمَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لِرَعِيَّتِهِ، إِلَّا حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ»

    அல்லாஹ் ஒருவருக்கு பொறுப்பை வழங்கி அவர் தன் பொறுப்பில் மோசடி செய்தவராக மரணிப்பாரானால் அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை தடை செய்து விடுவான் என நபி(ஸல்) கூறினார்கள்.

    அறிவிப்பவர்:மஃகல் இப்னு யஸார்(ரலி) நூல்: புகாரி முஸ்லிம் )

    மோசடி செய்பவர் மரணிக்கும் போதே பாவியாக மரணிப்பதுடன் சுவனத்தையும் தடுத்துக் கொண்டவராக மரணிக்கிறார். அமானித மோசடிக்காரர்கள் இவ்வுலகில் தப்பினாலும் மறுமையில் தப்பவே முடியாது. இந்த உலகில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு - மறைந்து கொண்டு - மோசடி செய்தாலும் மறுமையில் எல்லா மக்கள் முன்னிலையில் மோசடிக்காரன் அடையாளப் படுத்தப் படுவான் . இவன் தான் மோசடி செய்தவன் என்று காட்டப்படுவான்.

    صحيح مسلم (3 1359)

    عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' إِذَا جَمَعَ اللهُ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ يَوْمَ الْقِيَامَةِ، يُرْفَعُ لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ، فَقِيلَ: هَذِهِ غَدْرَةُ فُلَانِ بْنِ فُلَانٍ '،

    ஆரம்பமானவர்கள், இறுதியானவர்கள் (என்று) அனைவரையும் அல்லாஹ் மறுமையில் ஒன்று திரட்டுவான். (அப்போது) மோசடி செய்த ஒவ்வொருவருக்கும் ஒரு கொடி உயர்த்தப்படும். இது இன்னாரின் மோசடியாகும். என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) (நூல்: புகாரி முஸ்லிம்)

    மோசடிக்காரன் ஒவ்வொருவருக்கும் மறுமை நாளில் அவனது பின்பக்கமாக கொடி இருக்கும். அவனது மோசடியின் அளவுக்கு ஏற்ப அது உயர்த்தப் பட்டிருக் கும். அறிந்து கொள்ளுங்கள் மக்களை ஏமாற்றும் தலைவனை விட பெரும் மோசடிகாரன் எவனுமில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்:அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) நூல்;முஸ்லிம்.

    மோசடி பெரும் குற்றம் என்று தெரிந்த பின்பும் மோசடிக் காரன் யார் என்று அறிந்த பின்பும் அந்த மோசடிக்கும் மோசடிக் காரனுக்கும் துணையாக, ஆதரவாகப் பேசக் கூடிய சிலரை பார்த்திருக்கிறோம். அரசாங்க அதிகாரி களாக, அரசியல்வரிகளாக இருப்பின், தங்கள் பலத்தை பயன்படுத்தி மோசடிக்காரர்களை பாதுகாப்பதும், பணம் படைத்தவர்கள் பணத்தை வாரி செலவிட்டு மோசடிக்காரனை பாதுகாப்பதும் சட்டத்தை விலை கொடுத்து வாங்குவதும் அப்பாவிகளை அச்சுருத்துவதும் என்ற நிலையைப் பார்க்கிறோம்.

    இன்னும் சிலர் மோசடிக்காரர்களைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாது சகஜமாக எடுத்துக் கொள்வதையும் பார்க்கிறோம். இத்தகையவர்கள் தங்களது வாழ்க்கையில் எவனாவது மோசடி செய்தால் நம்பிக்கைத் துரோகமிழைத்தால் சீரிப்பாய்கிறார்கள். பொது பணிகளில் அசட்டையாக இருக்கிறார்கள்.

    இவர்கள் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வை யும் விசாரணையையும் நம்பியிருந்தால் நிச்சயமாக இப்படி நடக்கமாட்டார்கள்.

    மோசடியையோ, நம்பிக்கை துரோகத்தையோ கண்டால் அவனுக்கெதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தலைவர்கள் பின் நிற்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

    மோசடிக்காரர்கள் இந்த உலகில் எவ்வளவு தான் அனுப வித்தாலும் மறுமையில் மோசடி செய்த பொருட்களுடன் வந்து அலறுவார்கள்

    மோசடி செய்த பொருளை மறுமையில் மக்கள் முன்னிலையில் சுமந்து வரக்கூடியதாக அல்லாஹ் ஆக்கி, அந்த பாவத்திலிருந்து தப்ப முடியாதவனாகவும் அல்லாஹ் ஆக்கி விடுவான் எனறும் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக் கின்றார்கள்.

    صحيح مسلم (3 1461)

    عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ، فَذَكَرَ الْغُلُولَ، فَعَظَّمَهُ وَعَظَّمَ أَمْرَهُ، ثُمَّ قَالَ: ' لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ بَعِيرٌ لَهُ رُغَاءٌ، يَقُولُ: يَا رَسُولَ اللهِ، أَغِثْنِي، فَأَقُولُ: لَا أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ، لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ فَرَسٌ لَهُ حَمْحَمَةٌ، فَيَقُولُ: يَا رَسُولَ اللهِ، أَغِثْنِي، فَأَقُولُ: لَا أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ، لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ شَاةٌ لَهَا ثُغَاءٌ، يَقُولُ: يَا رَسُولَ اللهِ، أَغِثْنِي، فَأَقُولُ: لَا أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ، لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ نَفْسٌ لَهَا صِيَاحٌ، فَيَقُولُ: يَا رَسُولَ اللهِ، أَغِثْنِي، فَأَقُولُ: لَا أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ، لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ رِقَاعٌ تَخْفِقُ، فَيَقُولُ: يَا رَسُولَ اللهِ، أَغِثْنِي، فَأَقُولُ: لَا أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ، لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ صَامِتٌ، فَيَقُولُ: يَا رَسُولَ اللهِ، أَغِثْنِي، فَأَقُولُ: لَا أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ '،

    ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களி டையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது தொடர்பாக பேசினார்கள். அது கடுமையான குற்றம் என்பதையும் அதன் நிலை மிக மோசமானது என்பதையும் எடுத்துரைத்தார்கள். பின்னர் பின்வருமாறு கூறினார்கள்.

    மறுமை நாளில் தமது கழுத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து கொண்டு வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். அப்போது நான், உனக்கு அல்லாஹ்விடமிருந்து எந்த உதவியும் என்னால் பெற்றுத் தர முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகில் சொல்லி விட்டேன் என்று கூறிவிடுவேன்.

    அவ்வாறே மறுமை நாளில் தமது கழுத்தில் கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையைக் கொண்டு வந்து அல்லாஹ் வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். அப்போது நான், உனக்கு அல்லாஹ்விடமிருந்து எந்த உதவியும் என்னால் பெற்றுத்தர முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகில் சொல்லி விட்டேன் என்று கூறிவிடுவேன்.

    அதே போன்று மறுமைநாளில் தமது கழுத்தில் வெள்ளி யையும் தங்கத்தையும் சுமந்து கொண்டு வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். அப்போது நான், உனக்கு அல்லாஹ்விடமிருந்து எந்த உதவியும் என்னால் பெற்றுத் தர முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகில் சொல்லி விட்டேன் என்று கூறிவிடுவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்)

    صحيح مسلم (3 1463)

    عَنْ عُرْوَةَ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ: اسْتَعْمَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنَ الْأَسْدِ، يُقَالُ لَهُ: ابْنُ اللُّتْبِيَّةِ - قَالَ عَمْرٌو: وَابْنُ أَبِي عُمَرَ - عَلَى الصَّدَقَةِ، فَلَمَّا قَدِمَ قَالَ: هَذَا لَكُمْ، وَهَذَا لِي، أُهْدِيَ لِي، قَالَ: فَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ، فَحَمِدَ اللهَ، وَأَثْنَى عَلَيْهِ، وَقَالَ: ' مَا بَالُ عَامِلٍ أَبْعَثُهُ، فَيَقُولُ: هَذَا لَكُمْ، وَهَذَا أُهْدِيَ لِي، أَفَلَا قَعَدَ فِي بَيْتِ أَبِيهِ، أَوْ فِي بَيْتِ أُمِّهِ، حَتَّى يَنْظُرَ أَيُهْدَى إِلَيْهِ أَمْ لَا؟ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَا يَنَالُ أَحَدٌ مِنْكُمْ مِنْهَا شَيْئًا إِلَّا جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى عُنُقِهِ بَعِيرٌ لَهُ رُغَاءٌ، أَوْ بَقَرَةٌ لَهَا خُوَارٌ، أَوْ شَاةٌ تَيْعِرُ '، ثُمَّ رَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْنَا عُفْرَتَيْ إِبْطَيْهِ، ثُمَّ قَالَ: «اللهُمَّ، هَلْ بَلَّغْتُ؟» مَرَّتَيْنِ

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்த் குலத்தைச் சேர்ந்த இப்னுல் லுத்தபிய்யா என்றழைக்கப்பட்ட ஒருவரை ஸகாத் பொருட்களை வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் (ஸகாத் பொருட்களை யெல்லாம் வசூலித்துக் கொண்டு) வந்து இவை உங்களுக்குரியவை. இவை எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்று கூறினார்.

    அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை மீது நின்று கொண்டு ‘ஒரு வேலை நிமித்தம் நாம் அனுப்பி வைக்கின்ற அதிகாரியின் நிலை என்ன? (என்று பார்த்தீர்களா? அவர் பணியை முடித்து விட்டு திரும்பி வந்து) இவை உங்களுக்கு ரியவை இவை எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்று கூறுகிறாரே. அவர் (மட்டும் எங்கும் செல்லாமல்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு தமக்கு அன்பளிப்பு வழங்கப் படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டும்.

    முஹம்மதின் உயிர் யாருடைய கையில் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களில் ஒருவர் அந்தப் பொருட்களிலிருந்து எதை எடுத்துக் கொண்டு வந்தாலும் மறுமை நாளில் அதைத் தமது கழுத்தில் சுமந்தவாறு தான் வருவார். ஒரு ஒட்டகமாக இருந்தால் கத்திக் கொண்டி ருக்கும். அது மாடாகவோ ஆடாகவோ இருந்தாலும் கத்திக் கொண்டிருக்கும் என்று கூறினார்கள். பின்னர் அன்னாருடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவிற்குத் தம்முடைய கைகள் இரண்டையும் உயர்த்தி, யா அல்லாஹ்! நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மூன்று முறை கூறினார்கள். (அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம், அபூதாவூத்)

    மறுமையில் மோசடிக்காரனுக்கு விமோசனம் இல்லை. அவன் தப்பிப்பதற்கு வழியுமில்லை என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவுப் படுத்துகிறார்கள். எனவே இந்த உலகில் பாதிக்கப்பட்டவனுக்கு மறுமையில் நிச்சயமாக நீதி உண்டு என்பதை மறந்து விடலாகாது.