×
1. ஒரு பெண் மாதவிடாயின் காரணமாக் தீட்டுக்குரியவரார். 2. அக்காலத்தில் அவள் எதையும் தொடக்கூடாது. 3. தீட்டு நீங்கியதை அவள் பாதிரியிடம் அறிவிக்கவேண்டும். 4. பாதிரி அதனை பகிரங்கப் படுத்த புறாக்களை அறுப்பார்.

    மாத விலக்கு காலத்தில்

    பெண் தீண்டத் தகாதவள்.

    பைபிள் கூற்று

    ] Tamil – தமிழ் –[تاميلي

    M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

    2014 - 1435

    ذات الحيض في العهد الجديد

    « باللغة التاميلية »

    محمد إمتياز يوسف

    2014 - 1435

    பைபிளின் பார்வையில்

    பெண் தீண்டத் தகாதவள்

    M.S.M. இம்தியாஸ் யூசுப் ஸலபி

    ஆண் பெண் இருபாலாரிடையே உடற்கூறு ரீதியாக பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்.

    மாதவிடாய் வெளிப்படுவதன் மூலமாகத் தான் சிறுமி என்ற நிலையிலிருந்து ‘வளர்ந்த பெண்’ என்ற நிலையை ஒரு பெண் அடைகிறாள். பெண்மையின் மற்றொரு சிறப்பம்சமான தாய்மை ஏற்படுவதற்கான தகுதியும் அதன் மூலமே தீர்மானிக்கப்படுகிறது.

    உடற்கூறு ரீதியான இந்த வேறுபாட்டைக் காரணம் காட்டி பெண்களை இழிவுபடுத்தும் சடங்கு களும் சம்பிரதாயங்களும் நிறையவே உள்ளன. அதுவும் மதங்களின் பெயரால் மலிந்து கிடக்கின்றன. பைபிள் இப்படி கூறுகிறது.

    'மாதவிலக்கில் இரத்தப் பெருக்குடைய பெண் ஏழு நாள் விலக்காய் இருப்பாள். அவளைத் தொடுபவர் மாலை வரையில் தீட்டாயிருப்பர்.

    மாதவிலக்கின்போது எதன் மீது படுக்கிறாளோ எவற் றின் மீது அமர்கிறாளோ அவை அனைத்தும் தீட்டே.

    அவள் படுக்கையைத் தொடுபவர் அனைவரும் தம் உடைகளைத் துவைத்து நீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவர்கள் தீட்டாய் இருப்பர்.

    அவள் அமரும் மணையை தொடுபவன் தன் உடை களை துவைத்து தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டாய் இருப்பான்.

    அவள் படுக்கையின் மீதும் அவள் அமர்ந்த மணை யின் மீதும் இருந்த எதையாகிலும் தொட்டவனும் மாலை மட்டும் தீட்டாய் இருப்பான்.

    ஒருவன் அவளுடன் படுக்கையில் படுத்துக் கொண்டு அவள் தீட்டு அவன் மீது பட்டது என்றால் அவன் ஏழு நாள் தீட்டுடையவன். அவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டே.

    பெண் ஒருத்திக்கு உரிய மாதவிலக்கு நாட்கள் கடந் தும் உதிரப் பெருக்கு நீடித்தால் அந்த நாட்கள் எல்லாம் விலக்கு நாட்களை போல் தீட்டானவையே.

    அந்த நாட்கள் எல்லாம் அவள் படுக்கும் படுக்கை அனைத்தும் விலக்கு காலப் படுக்கைக்கு ஒத்ததே. அவள் அமரும் அனைத்தும் தீட்டுக் காலத்தைப் போன்றே விலக்காய் இருக்கும்.

    அவற்றைத் தொடுபவன் தன் உடைகளைத் துவைத்து நீரில் மூழ்க வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டாய் இருப்பான்.

    அவள் தன் இரத்தப் பெருக்கு நின்ற பின் ஏழுநாள் கழித்த பின் தீட்டற்றவள் ஆவாள்.

    எட்டாம் நாள் இரு காட்டுப் புறாக்களையோ புறாக் குஞ்சுகளையோ சந்திப்புக் கூடார (குருவின் கூடார) வாயிலில் குருவிடம் கொண்டு வருவாள்.

    குரு அவற்றில் ஒன்றை பாவம் போக்கும் பலியும் மற்றதை எரி பலியுமாக்கி அவளுக்காக ஆண்டவர் திருமுன் பாவக் கழுவாய் நிறைவேற்றுவார். (லேவி யராகம் 15:19-31)

    மாதவிடாய்க் காலத்தில் பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும், நடாத்தப்பட வேண்டும் என்று கூறும் பைபிளின் இந்த அறிவுரைகளை நன்றாகக் கவனியுங்கள். இவ் வசனங்களை மூன்று பிரிவுகளாக வகுத்து நோக்கலாம்.

    1) மாதவிடாய் இரத்தப்போக்கு வந்து கொண்டி ருக்கும் காலம்

    2) மாதவிடாய்க்குரிய நாட்கள் முடிந்த பின்பும் ஏற்படும் இரத்தப் போக்குடைய காலம்.

    3) மாதவிடாய் நாட்களில் ஆலயத்தில் நுழையக் கூடாத காலம்.

    இவற்றில் மூன்றாவதாக கூறப்படும் காரணத்தில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இறைவனை வணங்கக் கூடிய ஆலயத்தின் பரிசுத்தத் தன்மை எப்போதும் பேணப் படவேண்டும். பக்தி மயம் நிறைந்து காணப் படக் கூடிய இடத்தில் எவ்வித அசுத்தங்களும் அசுத்தங்கள் ஏற்படக் கூடிய வைகளும் இருக்கக் கூடாது என்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

    ஆனாலும் மற்ற இரு காரணங்களிலும் நியாயங்கள் இருப்பதாகக் கூற முடியவில்லை. ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்படும் சமயத்தில் அவளை யாரும் தொடவோ அவளால் யாரும் தொடப்படவோ கூடாது. அணுகப் படவும் கூடாது.

    அவள் இருந்த இடத்தையும் படுத்த படுக்கையையும் தொடுபவன் தீட்டுப் பட்டவனாவான். அதிலிருந்து தூய்மையடை வதற்கு அவனது ஆடைகளையும் கழுவி குளித்து சுத்தமாக்க வேண்டும். தப்பித் தவறி அப்பெண்ணுடன் சேர்ந்து உறங்கி விட்டால் அவனும் ஏழு நாட்கள் தீட்டுக்குரியவனாகி விடுவதுடன் அவனது படுக்கையும் தீட்டுக் குரியதாகி விடும் என்பதெல்லாம் நியாயமான காரணங்களல்ல. பெண்ணைக் கேவலமாக தீண்டத் தகாதவளாக எந்தளவு எடுத்துக் காட்ட முடியுமோ அந்தளவு இவ்வசனங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

    மாதவிலக்கு வந்த அப்பெண்ணை குடும்பத்தை விட்டும் சமூகத்தை விட்டும் ஒதுக்கி வைக்குமாறும் தனிமையில் தள்ளி விடுமாறும் அவளுடன் உள்ள தொடர்புகளை முற்றிலும் துண்டிக்குமாறும் தெளிவாக பைபிள் சொல்கிறது. இன்னுமொரு வார்த்தையில் சொன்னால், குறிப்பிட்ட அந்த ஏழு நாட்கள் முடியும் வரை அப்பெண்ணை மனிதப் பிறவியாகக் கருதி அண்டி யிருக்கவும் கூடாது என்று பைபிள் கட்டளையிடுகிறது.

    குறிப்பிட்ட அந்த ஏழு நாட்களுக்குள் மாதவிலக்கு நிற்காது தொடர்ந்தும் இரத்தப் போக்கு ஏற்படுமாயின் அப்போதும் தீண்டத் தகாதவளாகக் கருதி அவளை ஒதுக்கி வைக்க வேண்டும். ஏழுநாட்கள் முடிந்து எட்டாம் நாள் ஆலய குருவின் தலைமையின் கீழ் தீட்டைப் போக்கும் சடங்குகளைச் செய்தாக வேண்டும்.

    இரு காட்டுப் புறாக்களையோ அல்லது புறாக் குஞ்சு களையோ கொண்டு வந்து குருவிடம் கொடுக்க வேண்டும். அவர் அவ்விரு புறாக்க ளையும் ஆலயத்திற்கு வெளியில் மக்கள் முன்னிலையில் அறுத்துப் பலியி டுவார்.

    பெண்ணுக்கு ஏற்பட்ட மாதவிலக்கை ஒரு பாவமாகக் கருதி அப்பாவத்திற்குப் பிராயச்சித்தமாக அதில் ஒரு புறாவைப் அறுத்துப் பலியிடுவார். மற்றப் புறாவை எரிபலி (சர்வாங்க தகனப் பலி) யாக்கி அறுத்துப் பலியிடுவார். அதன் பிறகு தான் குறிப்பிட்ட அப்பெண் பரிசுத்த மடைந்தவளாக சேர்த்துக் கொள்ளப்படுவாள்.

    வெட்கத்திலும் நாணத்திலும் அடக்கத்திலும் தான் பெண்மையின் அழகு தங்கியுள்ளது. எந்தப் பெண்ணுமே பெண்மையை விட்டுக் கொடுக்க விரும்பமாட்டாள். ஆனாலும் பைபிளோ பெண்மையை சிதைக்கின்ற வேலையை சிறப்பித்துச் சொல்கிறது.

    எந்தப் பெண்ணும் தன்னுடைய மாத விலக்குக் காலத்தைப் பற்றிப் பறைசாற்றிக் கொண்டிருக்க மாட்டாள். இன்னுமொருவருக்கு தெரியும்படி முக்கியமாக பிற ஆண்களுக்கு தெரியும் படி நடந்து கொள்ளவும் மாட்டாள். ஆனால், பைபிளின் கட்டளைப் பிரகாரம் ஒவ்வொரு பெண்ணும் மாதவிலக்குப் பற்றி அறிவித்தேயாக வேண்டும். அவளுடைய அந்த நாட்களின் ரகசியம் ஆலயத்தின் குருவுக்குத் தெரிந்தாக வேண்டும். அந்தப் பகுதியிலுள்ள பெண்களுக்கு அல்லது ஆலயத்திற்கு வரக் கூடிய பெண்களுக்கு எப்போது எந்த திகதியில் எந்த நாளில் ‘அந்த நாள்’ வரும் என்பது ஆலய குருவுக்கு (பாதிரியாருக்கு) சுவாரஸ்யமான விஷயம் தான்!

    ஒரு பெண்ணின் மாதவிடாய் இயற்கையாக, உடல் ரீதியாக வெளிப்படும் இரத்தப் போக்காக அல்லது ஒரு உபாதையாக கணிக்காமல் பாவமான காரியமாகவே பையிளில் சித்தரிக்கப் படுகிறது. இப் பாவத்திலிருந்து அவள் விடுபடு வதற்கு இரு புறாக்களை ஆலய குருவின் கையில் ஒப்படைத்து அறுத்துப் பலியிடுவதன் மூலமே பரிசுத்தமுள்ளவளாக முடியும்.

    இச்சடங்குகளின் மூலம் பெண்கள் அவமானச் சின்னங்களாக நிறுத்தப் படுகிறார்கள் என்பதைத் தவிர வேறெதுவு மில்லை. மூட நம்பிக்கையை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து மதச் சாயம் பூசி அரங்கேற்றப் படுகிறது.!

    பைபிளை ஏற்றுக்கொண்ட எந்தப் பெண்ணாவது தன்னுடைய மாதவிடாய் முடியும் போது ஆலயத்திற்கு முன் சென்று புறாவை அறுத்து பலியிடும் இச்சடங்கு சம்பிர தாயத்தை செய்வதற்குத் துணிவாளா? தன்னுடைய மனைவி மற்றும் மகளின் மாதவிலக்கு சடங்குகளை ஏற்பாடு செய்ய எந்த ஆண் மகனாவது முன்வருவானா? அல்லது எந்த கண்ணியாஸ்திரியாவது பாதிரியாருக்கு முன் புறாவை பலியிட்டு மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்து கொள்வாளா? அல்லது தூய்மை அடைந்த வளாகத் தான் இருக்கிறாளா? என்பதை மனச் சாட்சிப் படி கூற வேண்டும்.

    நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான புறாக்களை பலியிடுவதிலும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் ஆலய குருக்கள் தங்களுடைய பணிகளை செய்து கொண்டிருக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு இலட்சக் கணக்கான புறாக்களை பலியிடுவது மட்டு மல்லாமல் அவற்றின் உற்பத்திற்கான வழிகளையும் செய்தாக வேண்டுமே!

    பெண்கள் மாதவிடாய் மூலம் அசுத்தம் அடைவது போல் ஆண்களும் விந்து வெளிப்படுவதன் மூலம் அசுத்தமடைகின்றனர். ஆனால் எந்த பரிகாரத்தையும் ஆண்களுக்கு பைபிள் சொல்ல வில்லையே! அது ஏன் என கேட்கக்கூடாதா?

    ‘விந்து ஒழுகினாலும் உடலினுள் அடக்கி வைத்தாலும் (ஆண்மகன்) தீட்டாகிறான்' என்கிறது வேதாகமம். (லேவியராகம். 15:1-3) அப்படி என்றால் எல்லா ஆண்களை விட கர்த்தருக்காக தங்கள் உணர்ச்சி களையும் உணர்வுகளையும் அடக்கி ஆலயங்களுக்குள் அடங்கியிருக்கும் குருமார்களின் நிலையை என்ன வென்று சொல்வது?

    திரு பவுலின் பேச்சுக்காக ஆசைகளை அறுத் தெறிந்து திருமணத்தை துறத்தி விட்டு துறவரத்தை ஏற்றிருக்கும் இவர்களின் வாழ்வின் யதார்த்தம் தான் என்னவோ?