இந்து மதத்தில் மிருகங்களை அறுத்து பலியிடுவது
பிரிவுகள்
Full Description
இந்து மதத்தில் மிருகங்களை அறுத்து பலியிடுவது
] தமிழ் – Tamil –[ تاميلي
M.S.M. இம்தியாஸ் யூசுப்
2013 - 1434
القربان في الديانة الهندوكية
« باللغة التاميلية »
محمد أمتياز يوسف السلفي
2013 - 1434
மதங்களின் பார்வையில் குர்பான்
PART-3
இந்து மதத்தின் பார்வையில்
புலால் உணவு.
எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி
இந்து மதத்தில் புலால் உணவு உண்பது தடுக்கப் பட்டுள்ள விடயமாக கருதப்படுகிறது. பசுவைக் குறித்து கூறும் போது பசுமாதா எனஅழைக்கிறார்கள். அதாவது பசுவை பால் தரும் அண்ணையாக மதிக்கிறார்கள். எனவே பசுவை உணவுக்காக அறுப்பதை பாவமாக கருதுகிறார்கள்.
பசுவை பாதுகாக்க வேண்டும், மாட்டிறைச்சி உண்ணக் கூடாது, மாடு அறுக்க இடம் கொடுக்கக் கூடாது என்று பலமான பிரச்சாரங்கள் ஒரு சிலரால் முன் முன் வைக்கப்படுகின்றன. இதற்கான இயக்கங்களும் உருவாக்கப்பட்டன.
இப்பிரச்சாரத்தின் விளைவாக கலகங்களும் போராட் டங்களும் இந்தியாவில் நடந்துள்ளன.
இன்னுமொரு சாரார் கடவுளுக்கு அர்ப்பணிப்புக்காக கோழி, ஆடு போன்ற மிருகங்களை கோயில்களில் அறுத்துப் பலியிடுகிறார்கள். இலங்கையில் வருடாந்தம் பத்ரகாளி அம்மன் கோயிலில் பூசைக்காக நூற்றுக் கணக்காக கோழி மற்றும் ஆடுகள் அறுக்கப்பட்டு வந்தன. இதனை தடுப்பதற்காக சிங்கள கடும்போக்கு உடையவர்கள் நீதிமன்றத்தை அணுகினார்கள். நீதி மன்றமும் வணக்க ஸ்தலங்களில் அறுத்துப் பலியிடல் கூடாது என தீரப்பு வழங்கியது.
இந்துக்கள் இந்த முடிவை எதிர்த்து மீண்டும் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, விற்பனைக்காக மிருகங்களை அறுக்க முடியும், என்று நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் மூலம் மிருகங்களை மாமிசத்துக்காக அறுக்க முடியும் என்று அனுமதி கிடைத்தது.
கடவுளுக்காக அறுத்துப் பலியிட முடியும் எனக் கூறி செயற்படுபவர்களும் உணவுக்காக மாடுகளை அறுத்துப் பலியிடக் கூடாது என எதிரப்புத் தெரிவிப்பவர்களும், முரண்பட்ட இரு விதங்களில் செயற்படும் இந்த நேரத்தில் இந்து மதத்தின் அடிப்படை வேத நூல்கள் என்ன சொல்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இந்த அடிப்படையை பார்ப்பதற்கு முன் மாடுகளை அறுத்தல் கூடாது என்ற தீவிரமான போராட்டம் எவ் வாறு உருவானது என்ற வரலாற்று உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இத்தீவிர போராட்டம் இந்து மதத்திற்கு அப்பால் சென்று அரசியலுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் என்றும் இது கடந்த நூற்றாண்டின் இறுதியில் தான் முன்னெடுக்கப்பட்டது என்றும் திரு அருட் செல்வன் என்பவர் இந்தியா டுடே பத்திரிகைக்கு எழுதிய செய்தியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்
19ம் நூற்றாண்டில் இருந்துதான் பசுவைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறும் இயக்கங்கள் அரசியல் ரீதி யாக மக்களை ஒன்று திரட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கின.
1882ல் தயானந்த சரஸ்வதி என்பவர் கோரக்சினி சபை என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து பசுவை முன் நிறுத்தி மக்களை ஒன்று திரட்டும் முயற்சியில் இறங் கினார்.
1880 களிலும் 1890களிலும் இந்த மோதல்கள் தீவிரமாக இருந்தன. 1888ல் வடமேற்கு மாகாண உயர் நீதிமன்றம் பசு ஒரு புனிதப் பிராணி அல்ல என்று வழங்கிய தீர் ப்பு மோதல்களை மேலும் கூர்மைப் படுத்தியது. 1893ல் உ.பி. மாநிலத்தில் என்ன ஆஜம்கரில் பசு தொடர்பாக நடை பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். இது தொடர்பாக 1912-1913ல் அயோத்தியிலும் 1917ல் ஷாபாத் திலும் மிக மோசமான மோதல்கள் நடை பெற்றன.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் பசு என்ற பிராணி மக்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்தும் கருவியாகத் தொடர்ந்து நீடித்து வந்துள்ளது.
1966ல் புதுடெல்லியில் வகுப்புவாதக் கட்சிகளும், அமைப்புகளும் ஒன்று சேர்ந்து பசு அறுப்பை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டுமெனக் கோரி போராட்டம் நடத்தின.
1979ல் சர்வோதய தலைவர் என்ற அழைக்கப்படும் ஆச்சாரிய வினோ பபாவே, நாடு முழுவதும் பசு அறுப்பு தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரி பட்டினிப் போராட்டம் நடத்தினார். இது தொடர் பாக அரசு விரைவில் சட்டம் இயற்றும் என்று அன் றைய பிரதமர் மெரார்ஜி தேசாய் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர் தனது போராட்டத்தைக் கைவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்திய அரசியல் களத்தில் பசு ஒரு முக்கிய விவாதப் பொரு ளாக இருந்ததில்லை. இந்நிலையில் பிரதமர் வாஜ்பாய், ஹிமாச்சல் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பசு வைப் பற்றி உரையாற்றி அதனை மீண்டும் ஒரு முக்கிய அரசியல் ஆயுதமாக்க முயன்றுள்ளார்'' என குறிப்பிடுகிறார்.
மாடு அறுப்பது இந்து மதத்தின் கொள்கைக்கு விரோத மானது என்று எவரும் வேதத்தை ஆதாரம் காட்டி போராட்டம் நடாத்தியதில்லை. பசுவின் மீது பற்றுக் கொண்டவர்கள் என்பவர்கள் தான் எதரிப்புப் போராட் டத்தை நடாத்தியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.
அதேவேளை சாப்பிடுவதற்கும், கடவுளுக்கு பலியிடு வதற்கும் பசு உட்பட பல பிராணிகள் அறுக்கப்படுவ தற்கும் வேதம் அனுமதிக்கிறது. அதனை முன்னோர் கள் நடைமுறை படுத்தியுமுள்ளனர் என்பதை திரு அருட் செல்வன் இப்படி குறிப்பிடுகிறார்.
அசுவமேதம் என்பது மிக முக்கியமான யாகமாகும். இது குறித்து ரிக் வேதத்தில் தான் முதலில் குறிப் பிடப்பட்டுள்ளது. வேறு பல வேதங்களும் இது குறித்து விவரிக்கின்றன. இந்த யாகத்தின்போது 600க்கும் மேற் பட்ட விலங்குகளும் (இவற்றில் காட்டுப் பன்றி போன்ற காட்டுப் பிராணிகளும் அடங்கும்) பறவைகளும் பலியிடப்படும். இந்த யாகத்தின் முடிவில் 21 பசுக்கள் பலியிடப்படும். (லூயிஸ் ரேணு எழுதிய Vedic India பக்கம் 109)
ராஜசுயா, வாஜ்பாய் போன்ற பொது யாகங்களின் போது மலடான பசு கடவுளுக்கு பலியாகக் கொடுக்கப் பட்டன. பங்கஸரா டியசாவா என்னும் யாகத்தின்போது மூன்று வயதிற்குக் குறைவான கன்று போடாத 17 பசுக்கள் பலியிடப்பட்டன. (Religion and Philosophy of the Veda and upanishads என்ற நூலில் ஏ.பி.கீ.த் வெளியீடு: மோத்திலால் பனார்ஸிதாஸ் 1970 பக்கம் 324 மற்றும் History of Dharmasastra நூலில் பி.வி. கேனே பாகம் 2)
''கத்தூமஸ்ய, சவ்தராமணி, பாசுபாண்டா அல்லது நிருதபாசுபண்டா போன்ற பலயாகங்களில் கால்நடை கள் உட்பட விலங்கினங்கள் பலியிடப்படுவது பற்றிய குறிப்புகள் உள்ளன. பண்டைய ஆரியர்களின் செல் வத்தில் முக்கிய அங்கமாக கால்நடைகள் விளங்கி யுள்ளன. தங்கள் கால்நடைகளுக்காக கடவுள்களிடம் பூசை செய்ததுடன், தங்கள் கடவுள்களை திருப்திப் படுத்த அவற்றை பலியிடவும் செய்தார்கள்.
குதிரை, காளைகள் மற்றும் பசு மாமிசங்கள் அக்னி பகவானுக்கு மிகவும் விருப்பமானவையாக திகழ்ந்தன. (ரிக் வேதம் V111.42.11, X.91.14ab) சோமா என்பது ஒரு பானத்தின் பெயர் மட்டுமல்ல. அது ஒரு கடவுளின் பெயராகவும் விளங்கியது. அந்தக் கடவுளுக்கு கால் நடைகள் உட்பட விலங்கினங்கள் உணவாகப் படைக்கப்பட்டன. (ரிக்வேதம் X.91.14ab) அஸ்வினுக்கும் பசுக்கள் பலி கொடுக்கப்பட்டன.
ஹிந்து வேதங்களில் 250 விலங்கினங்கள் பற்றி குறிப் பிடப்பட்டுள்ளது. இவற்றில் 50 பலியிடுவதற்குத் தகுதி யானவையாகக் கூறப்படுகின்றன. பலியிடுவதற்குத் தகுதியான இவை கடவுள்களுக்குப் பூசை படைக்கவும் மனிதர்கள் உட்கொள்ளவும் தகுதியானவையாகும்.
வேதங்கள் கூறும் யாகங்களிலும், உணவுப் பழக்கங் களிலும், மாமிசங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. பசு இறைச்சி மிகவும் விரும்பப்பட்ட உணவாகப் பொது வாகக் கருதப்பட்டுள்ளது என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது. தைத்திரிய பிராஹ்மன என்ற மதநூல் மிகத் தெளிவாக நிச்சயமாக பசு உணவாக உள்ளது (அத்தோ அன்னம் வை கால் ; III.9.8) என்று குறிப்பிடுகின்றது. சதாப்தா பிராஹ்மனஈ பசுவின் மிருதுவான இறைச்சியை உண்பதற்கு உறுதியாக இருந்த யக்ஞவல்கிய முனிவரைப் பற்றிக் குறிப் பிடுகின்றது. (III.1.2.21)
இதன் பின்னர் வந்த கிர்யசூத்திரா, தர்மசூத்திரா போன்ற பிராமண வேத நூல்களும் விலங்கினங்களை பலியிடுவதையும், மாட்டிறைச்சி உண்பதையும் அங்கீகரித்துள்ளதைக் காண முடிகின்றது. விருந்தினர் களுக்கு வரவேற்பு விருந்தளிப்பது குறித்து (ரிக் வேதம் இதனை அர்கியா என்றும், இதன் பின்னர் வந்தவை மதுபார்க்கா என்றும் குறிப்பிடுகின்றன) குறிப்பிடும் போது விருந்தின் போது தயிர், தேன் ஆகியவற்றுடன் பசு அல்லது காளை மாட்டின் இறைச்சியும் பரிமாறப் பட்டதாகக் குறிப்பிடுகின்றது. வரவேற்பு விருந்தின் போது இறைச்சி இடம் பெறுவதை சில வேதங்கள் கட்டாயமாக்கியுள்ளன. (அஸ்கிரிய சூத்திரம் 1.24.33, கதா கிரய சூத்திரம் 24,20, சங்கிரய சூத்திரம் II.15.2, பார்கிய ராய சூத்திரம் 1.3.29) இதனால்தான் விருந்தினரை கோக் னா (இவருக்காக பசுபலியிடப்பட்டது என்று பொருள்) என்று பனினி வர்ணிக்கிறது. பூணூல் போடும் வைபவத்தின் போது பசுத் தோலினால் செய்யப்பட்ட மேலாடையை அணியாவிட்டால், அந்த வைபவம் புனிதமானதாகாது என்று பார்கிராய சூத்திரம் (11.5.17-20) குறிப்பிடு கின்றது.
பிணத்தை மூட பசுவின் அடர்த்தியான கொழுப்பு பயன் படுத்தப்பட்டதாக ரிக் வேதம் கூறுகின்றது (X.14-18)
அடுத்த உலகில் மரணித்தவர் சவாரி செய்வதற்கு வசதியாக பிணத்துடன் சேர்த்து ஒரு காளை மாட்டை எரிப்பதும் சடங்காக இருந்து வந்துள்ளது. ஒரு குறிப் பிட்ட நாட்களுக்குப் பிறகு பிராமணர்களுக்கு உணவு வழங்குவதும் இறுதிச் சடங்கின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. இறந்தோருக்காக பசு அல்லது காளை மாட்டின் மாமிசமும் பெரும்பாலும் படைக்கப் பட்டது (அதர்வண வேதம் X11.1,48) இன்னும் பல சடங்குகளின் போதும் விலங்கினங்கள் பலியிடப் படுவது குறித்து வேதங்கள் குறிப்பிடுகின்றன.'' என்று விளக்கப்படுத்துகிறார்.
Dr, ஜாகிர் நாய்க் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர் கள் இந்து மதம் மற்றும் இஸ்லாமிய புனித கிரந்தங் களின் அடிப்படையில் கடவுள் கோட்பாடு எனும் தலைப்பில் 21.01.2006 அன்று பேலஸ் கிரவுண்ட் பெங் களுரில் நடாத்திய பகிரங்கக் கருத்தரங்கின் முடிவில் கலந்து கொண்ட பார்வையாளர் ஒருவர் புலால் உணவு உண்ணுவது சம்பந்தமாக கேட்ட கேள்விக்கு Dr, ஜாகிர் நாய்க் பின்வருமாறு பதிலளித்தார்.
இந்து மதம் புலால் உண்பதை தடைசெய்திருப்பதாக பொதுவாக தவறான கருத்து மக்களிடம் உண்டு. (உண் மை அவ்வாறல்ல.)
உண்ணுவதற்கென்றே உள்ளவற்றை நீங்கள் சாப்பிட் டால் அது பாவமாகாது. ஏனென்றால் இறைவன் இவற் றை சாப்பிடுவதற்காகவும் வேறு சிலவற்றை சாப்பிடப் படுவதற்காகவுமே படைத்துள்ளான். (மனுதர்மம் அத்தி யாயம் 05, வசனம் 31.)
அர்ப்பணிப்புக்காக சில மிருகங்களை நீங்கள் கொன்றால் அது பாவமாகாது. ஏனெனில் பலியிட்ட அர்ப்பணிப்புக்காக சில மிருகங்களை இறைவன் படைத்துள்ளான். (மகாபாரதம்: அனுஷாஷன பர்வ அத்தியாயம் 88).
பாண்டவர்களில் மூத்த சகோதரராகிய யதிஷ்திறன், யாகப் பூஜை நடாத்த நாம் எந்த வகை பொருட்களை அர்ப்பணித்தால் நம் மூதாதையர்கள் ஆத்ம திருப்திய டைவர் என்று கேட்டார். யாகப் பூஜைக்காக செய்யப் படும் அர்ப்பணங்களில் பலாபலன் எவ்வளவு காலத் திற்கு செல்லும் என்பதை தரும் படியல் மகாபாரத்தில் காணப்படுகிறது.
யாக பூஜைக்காக மூலிகை மற்றும் தாவர வகைகள் - ஒரு மாதத்திற்கும்
மீன் வகைகள் - இரண்டு மாதத்திற்கும்
ஆட்டிறைச்சி மூன்று மாதத்திற்கும்
முயல் இறைச்சி நான்கு மாதத்திற்கும்
வெள்ளாடு இறைச்சி ஐந்து மாதத்திற்கும்
பன்றி இறைச்சி ஆறு மாதத்திற்கும்
பறவை இனங்கள் ஏழு மாத்தத்திற்கும்
மான் இறைச்சி எட்டு மாதத்திற்கும்
எருமை இறைச்சி 11 மாதத்திக்கும்
மாட்டிறைச்சி ஒரு வருடத்திற்கும்
காண்டா மிருகம் அல்லது வெள்ளாட்டின் இரத்தம் தோய்ந்த இறைச்சியை யாகபூஜைக்காக படைத்தால் மூதாதையர்களுக்கு காலவரையற்ற ஆத்ம திருப்தி ஏற்படுமாம்.
எனவே புலால் உண்பதற்கு இந்து மதம் அனுமதி அளிக்கிறது. ஆனால், பிற மதங்களின் தாக்கத்தால் அந்த மதங்களின் மாறுபட்ட நபிம்பிக்கைகளால் பலர் சைவ உணவு வழக்கத்துக்கு மாறியுள்ளனர்.
அவர்களுடைய வாதம் என்னவென்றால்-
வாழும் உயிரினங்களை கொல்லக் கூடாது என்பதே. ஆகவே ஒரு செடியை கொன்றால் நீங்கள் ஒரு உயிரி னத்தை கொல்கிறீர்கள். ஆகவே அது ஒரு பாவச் செயல். இன்று தாவரமும் உயிரினம் என்பதை உணர முடியாது.. ஆகவே தாவரங்களை கொல்வது வலியை உணர முடியாது என்றார்கள். ஆகவே தாவரங்களை கொல்வதை விட மிருகங்கள் கொல்வது பாவம் என்று நமக்கு கருத்து தெரிவிக்கிறார்கள்.
இன்று முன்னேறியுள்ள விஞ்ஞானம், தாவரங்களாலும் வலியை உணர முடியும் என்ற உண்மையை நமக்கு தெரிவிக்கிறது. அவற்றால் அழவும், மகிழவும் முடியும்.
ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நண்பர் என்னோடு வாதிட்டார்.
அவர் கூறும் போது, தாவர வகைகளுக்கும் உயிர் உண்டு. அவற்றால் வலியை உணர முடியும் என்றும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தாவர வர்க்கத்திற்கு இரண்டு அல்லது மூன்று புலன்கள்தான் உண்டு. மிருக இனத்திற்கோ ஐந்து புலன்கள் உண்டு. ஆகவே தாவர வர்க்கத்திற்கு மிருகஇனத்தை காட்டிலும் இரண்டு புலன்கள் குறைவு. தாவர இனத்தை கொல்வதை விட மிருக இனத்தை கொல்வது மிகப் பெரிய பாவமாகும் என்றார்.
இந்தக் கருத்தை வாதத்திற்காக ஏற்றுக் கொள்கிறேன். மிருகங்களை விட தாவர இனத்திற்கு புலன்கள் குறைவு. அவற்றால் வலியை உணராமல் இருக்கலாம்.
எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் செவிடராகவும் ஊமையாகவும் இருக்கிறார். அவருக்கு இரண்டு புலன்கள் குறைவு. அவரை ஒருவர் கொலை செய்துவிட்டார் என்று வைத் துக் கொள்ளுங்கள். கொலை செய்யப்பட்டவருக்கு நீதிமன்றத்தில் புலன்கள் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி தண்டனையை குறைக்கும்படியோ விடுதலை செய்யும்படியோ கூற முடியுமா?
மாறாக ஒரு அப்பாவியை கொலை செய்திருப்பதாக கொலையாளிக்கு அதிக பட்ச தண்டனை வழங்குமாறு வாதாடுவேன்.
ஆகவே இஸ்லாத்தை பொறுத்த வரை ஒன்றுக்கு ஐந்து புலன்கள் அல்லது மூன்று புலன்கள் என்பது பிரச்சி னையில்லை.
எது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதை உண் ணுங்கள் என்று இறைவன் சொல்கிறான்.
அதாவது ஒருவர் தான் முழுமையான சைவ உணவு பிரியர் என்று சொல்வாரானால் அதில் எந்தப் பிரச்சி னையுமில்லை.
ஆனால் யாராவது ஒருவர் அசைவ உணவு உண்பது பாவம் என்றால் அவருடன் வாதிடுவேன். மற்றப்படி சைவ உணவு பிரியர்களாக நீங்கள் இருப்பது எங்கள் அனைவருக்கும் நல்லது. ஏனெனில், இந்தியாவிலுள்ள அனைவரும் அசைவ உணவுக்கு திரும்பி விட்டால் இறைச்சியின் விலை அதிகரித்துவிடும்.
எனவே இந்து மதத்தின் அடிப்படை புலால் உணவு உண்பதையோ கடவுளுக்காக அறுத்துப் பலியிடுவதை யோ தடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.