انا غير مقتنع بعبادة الأصنام قصة هندوسي متشدد اعتنق الإسلام

أعرض المحتوى باللغة الأصلية anchor

translation நூலாக்கம் : முஹம்மத் அமீன்
1

சிலை வணக்கம் சரியென எனக்குப் படவில்லை

4.51 MB DOC
2

சிலை வணக்கம் சரியென எனக்குப் படவில்லை

439.63 KB PDF

مقالة باللغة التاميلية القصة تتحدث عن فصة هندوسي متشدد أسلم بعد قراءته لترجمة معانى القرآن الكريم.

    انا غير مقتنع بعبادة الأصنام

    قصة هندوسي متشدد ثم اعتنق الإسلام

    சிலை வணக்கம் சரியென எனக்குப் படவில்லை

    < تاميلية தமிழ் >

    Author' name

    முஹம்மத் உமர் ராவ்

    جريدة عرب نيوس

    http://www.arabnews.com/islam-perspective/news/740111

    —™

    Translator's name: ஜாசிம் இப்னு தஇயன்

    Reviser's name:முஹம்மத் அமீன்

    ترجمة:جاسم بن دعيان

    مراجعة:محمد أمين

    சிலை வணக்கம் சரியென எனக்குப் படவில்லை

    http://www.arabnews.com/islam-perspective/news/740111

    அரப் நிவூஸ் பத்திரிகையில் 2015 மே மாதம் 1ம் திகதி பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.

    தமிழில் ஜாசிம் இப்னு தஇயான்

    இந்தியாவை சேர்ந்த முஹம்மத் உமர் ராவ் என்ற பெயர் கொண்ட ஒருவர் தனது இள வயதில் முஸ்லிம்களை மிகக் கடுமையாக வெறுத்தார். குர்ஆன் ஒரு பொய் என மக்கள் முன் நிரூபித்து முஸ்லிம்களை கேவலப்படுத்தும் ஒரே நோக்கத்தில் குர்ஆனை வாசிக்க ஆரம்பித்தார். ஆனால் அதன் பிரதிபலனாக அது வரை தான் பின்பற்றிய இந்து மதத்துக்கு சாதகமான சான்றுகள் எதுவும் இல்லை என்பதை அவர் குறுகிய காலத்தில் உணர்ந்தார். இறைவன் தன்னை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் செய்து தனக்கு பெரும் அருள் புரிந்தான் என்று அவர் இப்போது கூறுகிறார்.

    அவரது வாழ்க்கை சரிதையை சற்று கேட்போம்.

    அல்லாஹ்வின் மார்க்த்தை ஏற்றுக் கொள்ள எனக்கு அல்லாஹ் அருள் புரிந்தான். இந்தியாவை தாய் நாடாகக் கொண்ட எனதுபெயர் முஹம்மத் உமர் ராவ். ஆறு வருடங்களுக்கு முன் எனது 18வது வயதில் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். முஸ்லிம் அல்லாத ஏனைய மக்களும் உண்மை என்னவென்று தேடவும், அதனை பற்றி சிந்திக்கவும் ஆரம்பிப்பார்கள் என்ற நம்பிக்கையில் எனது வாழ்க்கை சரிதையை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். எனது வாழ்க்கை அனுபவங்களை, எனது சமூகத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களுடன் பகிர்ந்துக் கொண்ட போது, எனது முடிவு சரியானது என்றும் நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை உன்னதமானது என்றும் அவர்களும் ஏற்றுக் கொண்டனர். அதன் பின் குர்ஆனை வாசிக்க ஆரம்பித்த அவர்களும் சில நாட்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர், அல் ஹம்து லில்லாஹ். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.

    இந்தியாவில் மத்திய வகுப்பைச் சேர்ந்த வைதீகமான பிராமண குடும்பத்தில் நான் பிறந்தேன். எனது பெற்றோர்கள் தனியார் நிறுவணங்களில் தொழில் புரிந்தார்கள். எனது தாய் ஒரு ஆசிரியை, எனது தந்தை Textile Engineer உத்தியோகம் புரிந்தார். எனது தாய் மாமாவிடம் ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட மார்க்க கல்வி பயின்றேன். எனது குடும்பத்தில் பயின்ற வைதீகமான ஹிந்து மதக் கல்வி, முஸ்லிம்களுக்கு எதிராகவே எப்போதும் இருந்தது மாத்திரமன்றி, இந்த வெறுப்பு உணர்ச்சி எனது உள்ளத்தில் உறுதியாக வேரூண்றி வளர்ந்தது. இந்தியாவின் RSS (ராஷ்திரீய ஸவயங் சேவக்) எனும் இந்து தீவிரவாத இயக்கத்தில் சில வருடங்கள் அங்கத்தவராக செயல் பட்டேன். முஸ்லிம்களை கண்டாலே என்னுள் தீவிர வெறுப்பு கொழுந்து விட்டு எரியும். எமது பொதுக் கூட்டங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களின் தொழுகை நேரத்தை அறிவிக்க விடுக்கப் படும் அதான் அழைப்பு மக்கள் செவியில் கேட்காத முறையில், சினிமா பாட்டுக்களை போட்டு ஸ்பீக்கர் சப்தத்தை அதிகரித்து வைப்பேன். ஒவ்வொரு நாளும் நான் வாழும் நகரில் உள்ள எல்லா கோவில்களுக்கும் சென்று பூஜை செய்வது எனது வழக்கம். இவ்வாறு பூஜை செய்வதன் காரணமாக எனது வைதீக குடும்பத்தில் அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் ஆளானேன்.

    ஒரு முறை கோடை காலத்தில், முஸ்லிம் வர்த்தக நிலையமொன்றில் தற்காலிகமாக தொழில்செய்யுமாறு எனது தாய் என்னிடம் கூறினாள். ஆனால் சிறு பிராயம் முதல் முஸ்லிம்களை முற்றாக வெறுத்த காரணத்தால், இதற்கு நான் இணங்கவில்லை. எனது தாயும் இந்த விஷயத்தில் என்னை வற்புறுத்தவில்லை. அதன் பின் சில காலம் முஸ்லிமல்லாத வர்த்தகர்களிடம் தற்காலிகமாக தொழில் புரிந்ததால் எனது பெற்றோர்கள் என்னை தொந்தரவு செய்ய வில்லை. இந்த உத்தியோகத்திலும் எனக்கு விருப்பம் இல்லாது போன காரணத்தால், அதிலிருந்து விழகி, எனது படிப்பில் கவணம் செலுத்த ஆரம்பித்தேன். நன்றாக கல்வி கற்று இதை விட உயர்ந்த உத்தியோகம் செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். ஆனால் எனது தாயும் சகோதரிகளும் மேலும் இரண்டு மாதங்கள் தொடர்ந்து அதே முஸ்லிம் முதலாளியிடம் தொழில் செய்தார்கள். அந்த முஸ்லிமை பற்றி மிகவும் உயர்ந்த அபிப்பிராயம் வைத்திருந்த அவர்கள் அவரை பற்றி எப்போதும் புகழ்ந்து பேசுவார்கள்.

    நான் என்றென்றும் வெறுத்து ஒதுக்கும் இந்த முஸ்லிம் மனிதரை பற்றி எனது வீட்டில் இருப்பவர்களே சிலாகித்து பேசுவதை கேட்பதற்கு எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. மாறாக அந்த மனிதர் மேல் உள்ள எனது வெறுப்பு மேலும் அதிகரித்தது. அத்துடன் எங்கள் குடும்ப வருமானத்துக்காக நான் எந்த பொறுப்பும் ஏற்றுக் கொள்ள வில்லை என்ற காரணத்துக்காக என்னை வீட்டிலுள்ள அனைவரும் கேவலமாக பேசத் தொடங்கினார்கள். வேறு வழியில்லாது, நான் வெறுத்து ஒதுக்கிய அதே முஸ்லிம் மனிதரிடமே மீண்டும் வேலையில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. எனினும் என்னுள் இருந்த வெறுப்பு எனும் தீ அடங்கவில்லை. இந்த தடவை வேலைக்கு சென்ற பின், அந்த மனிதரை இன்னும் கூடுதலாக வெறுக்க வேண்டிய ஒரு சம்பவம் அங்கு நடந்தது. அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக அறிந்த போது என்னுள் உள்ள கோபம் கொதித்து எழுந்தது. அதன் விளைவாக புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த மனிதனுக்கு என்னுடைய மதத்தின் சிறப்பை உணர்த்த வேண்டும் என்ற சவால் ஒரு வெறியாக என்னுள் மாறியது. இயற்கையாக கடவுள் எனக்கு அளித்த பொது அறிவின் அடிப்படையில் பல்வேறு மதங்களை ஒப்பிடும் ஆய்வு முறைகளை Comparative Religion பற்றி அந்த நொடியில் இருந்து படிப்பதற்கு தீவிரமாக ஆரம்பித்தேன்.

    இஸ்லாத்தை கேவலப் படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக இஸ்லாத்தைப் பற்றி முழுமையாக கற்று தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற நினைவு என்னை ஆட்டிப் படைத்தது. அப்துல்லாஹ் யூசுப் அலி மொழி பெயர்த்த ஆங்கில குர்ஆனை வாசிக்கத் தொடங்கினேன் இதன் காரணமாக எனது பள்ளிக்கூட மாணவ வாழ்க்கையில் முழுமையான மாற்றமும் ஏற்பட்டது. இஸ்லாத்தைப் பற்றியும் குர்ஆனையும் படிக்கத் தொடங்கிய பின் பல்வேறு சந்தேகங்களும் பயமும் என் உள்ளத்தில் தோன்ற ஆரம்பித்தன. நான் இந்து மதம் என்ற பெயரில் இது வரை செய்து வந்த அத்தனையும் பிழை என்றும், வெறும் கற்பனைகளை, மூட நம்பிக்கைகளை, கட்டுக் கதைகளை தான் இது வரை மதம் என்ற பெயரில் பின் பற்றி இருக்கிறேன் என்ற உண்மையை உணர ஆரம்பித்தேன். என்னுள் ஆயிரம் கேள்விகள் எழுந்தன. எதை நோக்கி நான் பயணம் செய்கிறேன்? நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? என்னுடைய கடமை என்ன? இந்த உண்மை செய்தி எங்கள் அனைவருக்கும் கிட்டாத காரணம் என்ன? இப்படிப் பட்ட கேள்விகள் உள்ளத்தை குடையத் தொடங்கின. இதன் உண்மையை தேடி அறிய எனது பள்ளி வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்க முன் வந்தேன். கடவுளை சித்திரம் வரையவும், சிலைகள் செய்யவும் முன் வரும் யாராவது கடவுளை கண்ணால் கண்டார்களா? எனது பெற்றோர்களை கேட்டேன், என்னை சுற்றியுள்ள சகலரிடமும் கேட்டேன். ஒருவரும் பதில் அளிக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு உண்மையை மாத்திரம் சொன்னார்கள். கடவுளை ஒருவரும் கண்ணால் காணவில்லை - இந்த உண்மையை குர்ஆன் பல இடங்களில் ஏற்கெனவே கூறியுள்ளது. இறுதியில் நான் வாசித்த சில புராண கதைகள், எனது ஹிந்து மத விசுவாசத்தை முழுமையாக சிதறடித்தது. பிள்ளையார், சாமுண்டீஸ்வரி, ராமன், சீதை ஆகியோரின் புராணங்கள் உண்மை என எனக்கு எந்த வகையிலும் தோன்ற வில்லை. அவர்களை கடவுள்கள் என்பதை கற்பனை செய்து பார்க்கவும் என்னால் முடியவில்லை. சிலை வணக்கத்துக்கு எதிராக ஹிந்துக்களின் வேதப் புத்தகங்களில் எழுதப் பட்டிருக்கும் போது, நாங்கள் ஏன் அதனையே பிடிவாதமாக செய்கிறோம்? என்று என் பேற்றோர்களை கேள்வி கேட்ட போது, எமது முன்னோர்கள் இதனை செய்தார்கள், அதனால் நாங்களும் அதனை பின்பற்ற வேண்டும் என்று என் அன்னை என்னை திட்டினாள். அடுத்த நாள் குர்ஆனை திறந்து பார்த்தேன்.

    وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّـهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا ۗ أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ ﴿١٧٠﴾

    மேலும், (இவ்வேதமாகிய) “அல்லாஹ் இறக்கி வைத்ததை பின்பற்றுங்கள்" என அவர்களுக்கு கூறப் பட்டால், “இல்லை! நாங்கள் எங்களுடைய மூதாதையர் களை எதன் மீது கண்டோமோ, அதையே நாங்கள் பின்பற்றுவோம்." என்று கூறுகிறார்கள். அவர்களுடைய மூதாதையர்கள், எதையுமே விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா?. சுரா 2-170.

    அதே சூராவில் இன்னுமொரு வசனத்தையும் கண்டேன்.

    لْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ ۖ لَهَا مَا كَسَبَتْ وَلَكُم مَّا كَسَبْتُمْ ۖ وَلَا تُسْأَلُونَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ ﴿١٣٤﴾

    அது ஒரு சமூகம், அது திட்டமாக சென்று விட்டது. அது சம்பாதித்தது அதற்கே (உரியது). இன்னும் நீங்கள் சம்பாதித்தவை (அதன் பலன்) உங்களுக்கே. மேலும் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். சூரா 2 -134.

    இந்த வசனத்தை வாசித்த போது நான் உண்மை யிலேயே அதிர்ச்சியடைந்தேன். முந்திய இரவு நான் கேட்ட கேள்வியும், அதற்கு என் அன்னை கொடுத்த பதிலும் அந்த குர்ஆன் வசனத்தில் கண்டேன். இந்த வசனம் என் சிந்தனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இறைவனுக்கு இணை வைக்கும் சிர்க் எனும் பெரும் பாவத்துக்கு மன்னிப்பு கிடையாது என்று அறிந்த பின், மெதுவாக சிலை வணக்கத்தை நிறுத்திக் கொண்டேன். ஐயர் என்ற முறையில் நான் சிலைகளுக்கு செய்ய வேண்டிய பூஜைகளையும் நிறுத்திக் கொண்டேன். அதன் பின் மற்றவர்களுக்குத் தெரியாமல் மிகவும் இரகசியமாக இஸ்லாத்தை பின் பற்ற ஆரம்பித்தேன்.

    குர்ஆனை தொடர்ந்து வாசித்த போது, தமக்கு ஏதேனும் உலகலாவிய இலாபம் இருந்தால் மாத்திரம் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாகவும், அவர்கள் முழு மனதுடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் இவர்கள் முனாபிக் எனும் நாவஞ்சகர்கள் என்றும் சூரா பகரா குறிப்பிடுதை கண்டேன். இன்னு மொரு வசனம் இவ்வாறு கூறியது.

    الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ ﴿٣﴾

    “இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூர்ணமாக்கி வைத்து விட்டேன். இன்னும், உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன். என்னுடைய அருட் கொடையை உங்களின் மீது முழுமையாக்கி விட்டேன். இன்னும் இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்." சூரா 5;3. இந்த வசனத்தை கண்ட பின் என் உள்ளத்தில் எழுந்த சகல கேள்விகளுக்கும் சரியான பதில் குர்ஆனில் காணக் கூடியதாக இருப்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

    அல்லாஹ்வின் கிருபையால், நான் அறிந்த அளவில், என்னால் முடிந்த முறையில் என் குடும்பத்த வர்கள் மத்தியில் இஸ்லாத்தை எடுத்துக் கூற முனைந்தேன். எஞ்ஜினியர் கல்வியை படித்து முடிக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருந்தது. அதே நேரத்தில் என் பெற்றோருக்கும், வீட்டில் உள்ளவர் களுக்கும் இஸ்லாத்தின் உண்மையை சொல்லிக் கொடுத்து நேர் வழி காட்டினால், எதிர் காலத்தில் அனைவருக்கும் பெரும் நன்மை ஏற்படும் என்று உறுதியாக நம்பினேன். ஆனால் இறுதி வருட டிப்லோமா பரீட்சை முடிந்த பின் என் வாழ்வில் பெரும் எதிர்ப்பையும் சோதனையையும் சந்திக்க நேர்ந்தது. என் குடும்பத்தை விட்டும் வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்ற அவல நிலை எனக்கு ஏற்பட்டது. சில காலம் கழிந்த பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட எனது ஒரு சகோதரியும் வீட்டை விட்டு வந்து என்னுடன் சேர்ந்து கொண்டாள். சுமார் ஒரு வருட காலம் வீட்டை விட்டு விழகி, ஒழுங்கான தொழிலின்றி, நிரந்தர வருமானமும் இன்றி கஷ்டப்பட வேண்டிய நிர்க்கதி எமக்கு ஏற்பட்டது. ஆனால் நாங்கள் ஏற்றுக் கொண்ட புதிய உண்மை மார்க்கத்தில் உறுதியாக வாழ எங்களுக்கு எல்லா வகையிலும் உதவி புரிந்த அல்லாஹ் வுக்கே எல்லா புகழும் சேரும். அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்.

    أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ ﴿٢﴾

    மனிதர்களே! “நாங்கள் விசுவாசம் கொண்டோம்" என்று அவர்கள் கூறுவது கொண்டு (மாத்திரம்) அவர்கள் விட்டு விடப் படுவார்கள் என்றும், அவர்கள் சோதனைக் குள்ளாக்கப் பட மாட்டர்கள் என்றும் எண்ணிக் கொண்டார்களா? சூரா அன்கபூத் 29; 2.

    ஐந்து நேர தொழுகையை சரிவர நிறைவேற்ற முடியாத காரணத்தால் எனது தொழிலை விட்டும் விழக நேர்ந்தது. ஆனால் சில காலம் கழிந்த பின் அல்லாஹ் எங்களுக்கு நற் பாக்கியம் கிடைக்கக் கூடிய வாசல் கதவுகளை திறந்து வைத்தான், அல் ஹம்து லில்லாஹ். எனக்கு கிடைத்த வேலை வாய்ப்புகள் அத்தனையும் இயந்திர தொழில் துறையை சார்ந்தது. இதில் காரியால நேரத்தில் தான் கடமையாற்ற வேண்டும் என்று இல்லை. மாறாக ஷிப்ட் முறையில் மாறி மாறி வேலை செய்ய வேண்டும். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டுத் தொழுகை நிறைவேற்றுவதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக இயந்திர தொழில் துறை சார்ந்த வேலையை விட்டு விழக வேண்டிய தேவை ஏற்பட்டது. ஐங்கால தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்ற வாய்ப்பளிக்கும் வேலையொன்று கிடைக்காமல் ஒரு வருட காலத்துக்கும் மேல் மிகவும் கஷ்டப்பட்டேன்.

    இறுதியில், அல்லாஹ்வின் அருளால் கல்லூரி ஒன்றில் வருடம் ரூபாய் 2,000/- சம்பளத்தில் ஒரு உத்தியோகம் கிடைத்தது. இப்போது அதை விட உயர்ந்த உத்தியோகத்தில் வேலை பார்க்கிறேன். சகல வல்லமை பொருந்திய அல்லாஹ், அவனது கருணையில் எங்களையும் சேர்த்துக் கொண்டான். அல்ஹம்து லில்லாஹ். இந்த நிறைவு ஒன்றே எங்களுக்கு போதும். இதை விட வேறு ஒன்றும் எங்களுக்கு தேவையில்லை.

    முடிவுற்றது.