بدع باسم (ليلة البراءة) في ليلة النصف من شعبان

أعرض المحتوى باللغة الأصلية anchor

translation நூலாக்கம் : முஹம்மத் இம்தியாஸ்
1

பராஅத் இரவு என்ற பெயரில்

3.7 MB DOC
2

பராஅத் இரவு என்ற பெயரில்

674.3 KB PDF

مقالة باللغة التاميلية فيها بيان وتوضيح لبدع تنتشر بين المجتمع الإسلامي في العالم باسم ليلة البراءة، وهي النصف من شعبان، منها: صلوات مخصوصة، والإطعام، والدعاء، وغيرها مما لا يوجد له دليل في الكتاب والسنة، وبيان أن السنة هي صيام أغلب الشهر.

    பராஅத் இரவு என்ற பெயரில்

    ] Tamil – தமிழ் –[ تاميلي

    M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

    2014 - 1435

    بدع باسم ليلة البراءة في ليلة النصف من شعبان

    « باللغة التاميلية »

    محمد إمتياز يوسف

    2014 - 1435

    பராஅத் இரவு என்ற பெயரில்..

    எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி

    இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் அமல்கள் (செயற் பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள் இபாதத்கள் ஒரு புறமிருக்க முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள் மறுபுறம் மலையாக குவிந்து நிற்கின்றன.

    அமல்களை நிர்ணயிப்பது அல்லாஹ்வும், அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே தவிர முஸ்லிம்களோ முஸ்லிம்களுடைய வழித் தோன்றல்களோ அல்ல! என்ப தை முஸ்லிம்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

    மார்க்கத்தில் எல்லை மீறி செல்கின்ற போது தனி மனித வழிபாடும், மூடநம்பிக்கைகளும், வழிகேடுகளும் தோற்றம் பெறுகின்றன. இறுதியில் கைசேதப்பட்டவனாக மனிதன் நரகில் நுழைகிறான். இந்த அபாயத்திலிருந்து பாதுகாப்ப தற்காகத் தான் நபியவர்கள் மார்க்கத்தில் எல்லை மீறி செல்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன். (நூல் முஸ்லிம்)

    என்றும் எங்களுடைய கட்டளையில்லாமல் எவர் ஒரு செயலை (அமலை) செய்கிறாரோ அது நிராகரிக்கப்படும் என்றும் கண்டித் துள்ளார்கள். (நூல்: முஸ்லிம்)

    எனவே எந்த ஒரு அமலை செய்வதானாலும் அதற்கு நபிவழியில் ஆதாரமுண்டா? என்று பார்க்க வேண்டும். இருந்தால் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஒதுங்கி விட வேண்டும். இதுவே சுன்னாவை கடை பிடிக்கும் ஒழுங்கு முறையாகும்.

    இன்று பராஅத் இரவு என்ற பெயரில் முஸ்லிம்களால் ஒரு இரவு விசேடமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய இரவில் நின்று வணங்கியும், நோன்பு நோற்றும் மூன்று வகையான பிரார்த்தனைகளை

    1. உணவு விஸ்தீரணம்,

    2. நீண்ட ஆயுள்,

    3.எல்லாவித துன்பங்களை விட்டும் நீங்கியிருத்தல் போன்ற துஆக்களை கேட்டும் மூன்று யாசீன் ஒதியும் விஷேடமான தொழுகைகளை நடாத்தியும் இன்னும் இது போன்ற செயல்களையும் செய்கிறார்கள். பள்ளி வாசல்களிலும் விசேடமான நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப் படுகின்றன. வீடுகளும் அலங்கரிக்கப்பட்டு நீய்யத்து சாப்பாடு எனும் பெயரில் விஷேட உணவும் வழங்கப் படுகின்றன.,

    “யார் பராஅத் இரவில் மூன்று யாசீனை ஒதி, ரொட்டியும், வாழைப் பழத்தையும் கொடுக்கி றாரோ, அவைகள் மறுமை நாளில் குடையாக நிழல் தரும். அதாவது வாழைப்பழம் குடையின் பிடியாகவும், ரொட்டி மேல் துண்டாகவும் வரும் என்று ஒரு கதையையும் வழமையாக, பழமை யாக சொல்லி வருகிறார்கள்.

    பராஅத் இரவின் பெயரால் செயற்படும் காரியங்களுக்கு ஆதாரங்கள் உண்டா? என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

    سنن ابن ماجه - (ج 4 ; ص 301)

    1378 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنْبَأَنَا ابْنُ أَبِي سَبْرَةَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ

    قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلَا كَذَا أَلَا كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ

    سنن ابن ماجه بحاشية السندي - (ج 3 ; ص 178)

    1378 - قَوْله ( فَقُومُوا لَيْلهَا )

    وَفِي الزَّوَائِد إِسْنَاده ضَعِيف لِضَعْفِ اِبْن أَبِي بُسْرَة وَاسْمه أَبُو بَكْر بْن عَبْد اللَّه بْن مُحَمَّد أَبِي بُسْرَة قَالَ فِيهِ أَحْمَد بْن حَنْبَل وَابْن مُعِين يَضَع الْحَدِيث .

    “ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்துவிட்டால் அவ்விரவில் நின்று வணங்குங் கள். பகலில் நோன்பு பிடியுங்கள். அன்றைய நாளில் சூரியன் மறைந்த பின் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி வந்து ‘என்னிடம் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா? நான் அவருக்க மன்னிப்பு வழங்குகிறேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவருக்கு உணவளிக்கிறேன். சோதனைக்கு ஆளாவன வர் உண்டா? அவருக்கு நிவாரணம் வழங்குகிறேன்’ என்று சுபுஹ் நேரம் வரை கேட்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரழி) அறிவிக்கிறார்கள். இந்தச் செய்தி இப்னு மாஜாவில் பதிவாகியுள்ளது.

    இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இப்னு அபீ சப்ரா என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமாவர். இவர் பொய்யான ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர் என இமாம் அஹ்மத் (ரஹ்) இப்னு ஹன்பல் (ரஹ்) இமாம் இப்னு முயீன் (ரஹ்) குறிப் பிடுகிறார். எனவே இந்த ஹதீஸைக் கொண்டு செயல்பட முடியாது.

    سنن الترمذي - (ج 3ص 193)

    670 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ

    فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَخَرَجْتُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ

    وَفِي الْبَاب عَنْ أَبِي بَكرٍ الصِّدِّيقِ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْحَجَّاجِ و سَمِعْت مُحَمَّدًا يُضَعِّفُ هَذَا الْحَدِيثَ و قَالَ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ وَالْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ لَمْ يَسْمَعْ مِنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ

    ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்: நான் (ஸல்) அவர்களை இரவில் படுக்கையில் காணாததால் அவர்களைத் தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் பக்கீ மையவாடியில் இருந்தார்கள். அப்போது ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவில் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி ஆட்டின் உரோமத்தின் எண்ணிக்கையை விட அதிகமாக பாவ மன்னிப்பு வழங்குகிறான் என்று நபி (ஸல்) கூறினார்கள் என்று ஆயிஷா (ரழி) அறிவிக்கும் செய்தி திர்மிதியில் பதிவாகியுள்ளது.

    இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் மற்ற அறிவிப்பாளரான யஹ்யா இப்னு அபூ கஸீல் என்பவரிடம் எதையும் செவியுற்றதில்லை. இது பலஹீன மான செய்தி என்று இமாம் புகாரி (ரஹ்) விமர்சனம் செய்கிறார்கள் என இமாம் திர்மிதி (ரஹ்) குறிப்பிடுகிறார்க்ள. எனவே இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டும் செயல்பட முடியாது.

    سنن ابن ماجه - (ج 4ص 303)

    1380 - حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعِيدِ بْنِ رَاشِدٍ الرَّمْلِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ الضَّحَّاكِ بْنِ أَيْمَنَ عَنْ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ

    عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ

    سنن ابن ماجه بحاشية السندي - (ج 3ص 180)

    وَفِي الزَّوَائِد إِسْنَاده ضَعِيف لِضَعْفِ عَبْد اللَّه بْن لَهِيعَة وَتَدْلِيس الْوَلِيد بْن مُسْلِم وَاَللَّه أَعْلَم

    ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் இணைவைப் பவனுக்கும் குரோதம் பாரட்டு பவனையும் தவிர அல்லாஹ் தன்னுடைய எல்லா படைப் பினங்களுக்கும் மன்னிப்பு வழங்குகிறான்.. என நபி (ஸல்) கூறினார்கள். (இப்னுமாஜா)

    இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் இப்னு லஹீஆ என்பவர் பலஹீனமானவர் என்றும் வலீத் இப்னு முஸ்லிம் செய்திகளை இருட்டடிப்பு செய்பவர் என்றும் ஹதீஸ் துறை அறிஞர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

    எனவே ஷஃபான் பதினைந்தாம் இரவின் சிறப்பு மற்றும் நோன்பு பற்றி வரக்கூடிய எந்தச் செய்தியும் ஸஹீஹான தாக இல்லை என்று ஹதீஸ் கலை இமாம்களே தெளிவுப் படுத்து கிறார்கள். உண்மை இவ்வாறு இருக்கும்போது பலஹீனமான செய்திகளைக் கொண்டு எப்படி அமல் செய்ய முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.

    அதுமட்டுமல்ல ஷபராஅத் இரவு என்று குறிப்பிட்டு எந்த ஒரு ஹதீஸும் வரவில்லை. இதற்கு எப்படி இந்த பெயரை சூட்டினார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.

    இந்த இரவில் நோன்பு நோற்றால் தப்பில்லை யே அதுவும் நன்மைதானே என்று மேலேயுள்ள விபரங்களை தெரிந்த பின் சில நேரம் கேட்கலாம்.

    தப்பில்லையே! நன்மை தானே என்று நாமாக சமாதானம் கூறிக் கொள்ளவோ ஆறுதல் அடையவோ எமக்கு எந்த அதிகார முமில்லை. எதை, எப்படி, எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த முறையில் செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக் கூறுவதற்குதான் அல்லாஹ் இறைத் தூதரை அனுப்பி வைத்தான். இறைத் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தராத எந்த செயலும் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மேலே யுள்ள ஹதீஸ் தெரிவிக்கின்றது.

    இமாம் நவவீ (ரஹ்) அவர்கள்: ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் விசேடமான தொழும் தொழுகை, மோசமான நிராகரிக்கக் கூடிய பித்அத்கள். (இதற்கு மார்க்கத்தில் அனு மதியில்லை) என்று கூறுகிறார்கள். நூல்: அஸ்ஸுனனு வல்முப்த திஆது)

    இது தவிர ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் நிரூபனமாகும் சுன்னத்தான நோன்புகளை நோற்க பழகிக் கொள்ள வேண்டும். எனவே உண்மையை அறிந்து கொண்ட பின் அதனடிப்படையில் செயல்பட அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக.

    பிரிவுகள்