من أخلاق الرسول الإصلاح والمصالحة
أعرض المحتوى باللغة الأصلية
مقالة باللغة التاميلية تبين أنه: • لا يجوز لمسلم أن يهجر أخاه أو أن يكرهه • لايجوز للمسلم أن يتبع سبل المخاصمة والشجار • كان صلى الله عليه وسلم أسوة لإصلاح الناس والمصالحة فيما بينهم
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் போதித்த நற்பண்புகள் -6
சீர்திருத்தம் மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்தல்
] Tamil – தமிழ் –[تاميلي
M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி
2014 - 1435
من أخلاق الرسول الإصلاح والمصالحة
« باللغة التاميلية »
محمد إمتياز يوسف
2014 - 1435
நபி முஹம்மத் (ஸல்) போதித்த நற்பண்புகள்.
PART.06
M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி
சீர்திருத்தம் மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்தல்
ஒரு முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமை வெறுத்த நிலையில் பகைமை மற்றும் குரோதம் கொண்ட நிலையில் வாழக் கூடாது. மனக்கசப்புக்களை உருவாக்கும் வழிகளையும் தேடக் கூடாது. பிரிவினையை தடுப்பதற்கு நல்லிணக்கமும் சீர்திருத்தமும் சிறந்த வழியாகும் என்பதை நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் செயற் படுத்திக் காட்டினார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்.
لَا خَيْرَ فِي كَثِيرٍ مِنْ نَجْوَاهُمْ إِلَّا مَنْ أَمَرَ بِصَدَقَةٍ أَوْ مَعْرُوفٍ أَوْ إِصْلَاحٍ بَيْنَ النَّاسِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا
தர்மம் (செய்தல்)அல்லது நன்மையானவற்றை (கூறுதல்) அல்லது மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியவற்றை ஏவுகின்றவனைத் தவிர அவர்களின் இரகசியப் பேச்சுக்களில் அதிகமானதில் எவ்வித நன்மையும் இல்லை. யார் இதை அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடிச் செய்கின்றாரோ அவருக்கு நாம் மகத்தான கூலியை வழங்கு வோம். 4;114
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பாடுபடு கின்றவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைந்து கொள்கிறார். மகத்தான கூலியை பெற்றுக்கொள்கிறார் என அல்லாஹ் போற்று கிறான்.
இறைத்தூதர் என்ற அடிப்படையில் மக்களுடன் இரண்டரக் கலந்து சீர் திருத்தம் செய்யும் பணியில் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இறங்கினார்கள். ஆன்மீகத் தலைவராகவும் சமூக சீர்திருத்தப் பணியின் தொண்டராகவும் இயங்கினார்கள்.
அம்ர் இப்னு அவ்ப் குடும்பத்தினர் தங்களுக் கிடையில் சண்டையிட்டுக் கொள்கின்றனர் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அவர்களுக்கிடையே சமாதானம் ஏற்படுத்திட உடனே நபியவர்கள் சில தோழர்களை அழைத்துக் கொண்டு அங்கே சென்றார்கள். தொழுகைக்கு நேரம் நெருங்கியும் நபி (ஸல்) அவர்களால் (பள்ளிக்கு) வர இயலவில்லை. உடனே, பிலால் (ரழி) அபூபக்கர் (ரழி)யை அணுகி அபூபக்கர் அவர்களே! நபி (ஸல்) அவர்கள் இன்னும் வரவில்லை. தொழுகை நேரம் வந்து விட்டது. நீங்கள் மக்களுக்கு இமாமத் செய்திட இயலுமா எனக் கேட்டார்கள். நீர் விரும்பினால் சரி என அபூபக்கர் (ரழி) கூறினார்கள். பிலால் (ரழி) இகாமத் கூற அபூபக்கர் (ரழி) முன்னே நின்றார்கள். தக்பீர் கூறினார்கள். மக்களும் தக்பீர் கூறினர்.
(தன்னுடைய பணியை முடித்துக் கொண்டு) நபி (ஸல்) அவர்கள் (தொழுகைக்காக) வரிசையில் நிற்பதற்காக வந்தார்கள்.உடனே மக்கள் கை தட்டினார்கள். அபூபக்கர் (ரழி) தன் தொழுகையில் நின்றால் எங்கும் திரும்பிப் பார்க்கவே மாட்டார்கள். மக்கள் கைதட்டலை அதிகமாக்கிய தும் திரும்பினார்கள். அப்போது அங்கே நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். (தொடர்ந்து தொழுகையை நடத்துமாறு) நபி (ஸல்) அவர்கள் அபூபக்கருக்கு சமிக்ஞை செய்தார்கள். உடனே அபூபக்கர் (ரழி) தன் கைகளை உயர்த்தி, அல்லாஹ்வை புகழ்ந்தார் கள். நேராக பின்புறம் நோக்கி வந்து, வரிசையில் நின்று கொண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று மக்களுக்குத் தொழ வைத்தார்கள்.
தொழுகை முடிந்ததும் மக்களை நோக்கி மனிதர்களே! தொழுகையில் ஏதேனும் உங்களிடம் குறுக்கிடும் போது உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் கை தட்டுகிறீர்கள்? கை தட்டுதல் பெண்களுக் குரியதாகும். தன் தொழுகையில் குறை ஏற்படுவதாகக் கருதுபவர் ‘‘ஸுப்ஹானல்லாஹ்’’ என்று கூறட்டும். ஸுப்ஹானல்லாஹ் என ஒருவர் கூறுவதைக் கேட்கும் எந்த இமாமும் திரும்புவார் என்று கூறி விட்டு, (அபூபக்கர் (ரழி) அவர்களை நோக்கி) அபூபக்கரே உமக்கு நான் சமிக்ஞை செய்தும் மக்களுக்கு நீர் தொழவைக்க உம்மைத் தடுத்தது எது? என்று கேட்டார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் முன்னிலையில் அபூ குஹாபாவின் மகனுக்குத் தொழுகை நடத்தும் தகுதியில்லை என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுல் அப்பாஸ் (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்)
சீர்திருத்தப்பணிக்கும் தொழுகைக்கும் ஒரேஅளவு முக்கியத்து வம் கொடுத்துள்ளதை இச் சமவம் நமக்கு காண்பிக்கிறது.
இரு நண்பர்கள் கொடுக்கல் வாங்கள் விடயத்தில் பிரச்சனைப் பட்ட போது அவர்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்திட நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்வந்தார்கள்.
எனக்கு அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத் அல் அஸ்லமீ (ரழி) அவர்கள் சிறிது பணம் தர வேண்டியிருந்தது. அவரை நான் சந்தித்து (கடனை திருப்பிக் கேட்டு) நச்சரித்தேன். (எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் சப்தங்கள் உயர்ந்தன.
(அவ்வழியாக) நபி (ஸல்) அவர்கள் எங்களை கடந்து சென்றார்கள். (அப்போது) கஅப் (ரலி)! என்று (என் பெயரை கூறி அழைத்து பாதி (கடனைத் தள்ளுபடி செய்துவிடு) என்பது போல் தமது கரத்தால் சைகை செய்தார்கள். அவ்வாறே பாதியைப் பெற்றுக் கொண்டு பாதியைத் தள்ளுபடி செய்துவிட்டேன். (அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரழி), நூல்: புகாரி
யாரோ இருவர் பிரச்சனைப் படுகிறார்கள், நமக்கு என்ன வேலை என்று ஒதுங்கிப் போகாமல் அப்பிரச்சினையை கவனத்தில் எடுத்து சுமுக தீர்வுக்கு வழிகாட்டி விட்டு செல்கிறார்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்.
நபிகளார் மீது கொண்ட அளப்பெரிய நம்பிக்கையின் காரணமாக அவர்கள் கூறிய வார்த்தைகளை செவிமடுத்த ஒரு தோழர், மற்ற தோழருக்கு கடனில் அரைப்பகுதியை விட்டுக் கொடுக்கிறார். இருவரும் அன்புடன் பிரிந்து செல்கிறார்கள்.
இரு நண்பர்களுக்கிடையில் அல்லது இரண்டு குடும்பங்களுக் கிடையில் அல்லது கணவன் மனைவிகளுக்கிடையில் அல்லது இரண்டு சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை, நல்லிணக் கத்தை ஏற்படுத்திட மேற் கொள்ள முடியுமாயின் அதனைச் செய்து ஒற்றுமையை ஏற்படுத்து மாறும், பேச்சு வார்த்தைகளில் பொய்யை கூறி உண்மையை நாடுவதன் மூலம் இணக்கப் பாட்டை மேற்கொள்பவர் சீர்திருத்தவாதியாகவும் தர்மம் புரிந்த வராகவும் கணிக்கப்படுகிறார் என்றும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வழிகாட்டி னார்கள்.
தர்மம் என்பது அல்லாஹ்வின் திருப்திக்காக மேற் கொள்ளும் வணக்கமாகும். அந்த வணக்கத்தை இறை விசுவாசம் கொண்ட ஆணும் பெண்ணும் செய்ய வேண்டும்.
حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ مُحَمَّدٍ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ: «تَعْدِلُ بَيْنَ الِاثْنَيْنِ صَدَقَةٌ،
இரண்டு பேர்களுக்கிடையில் நீதியை நிலை நாட்டுவது தர்ம மாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரழி), நூல் புகாரி, முஸ்லிம்)
أَنَّ أُمَّهُ أُمَّ كُلْثُومٍ بِنْتَ عُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ، وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الْأُوَلِ، اللَّاتِي بَايَعْنَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرَتْهُ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يَقُولُ: «لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ، وَيَقُولُ خَيْرًا وَيَنْمِي خَيْرًا
மனிதர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தி வைக்க நல்லதை சொல்லியோ அல்லது நல்லதை கூறி இருப்பவரோ பொய்யர் அல்ல என நபி(ஸல்) கூறினார்கள்.
இன்னுமொரு அறிவிப்பில் மனிதர்களிடம் பொய் பேச மூன்று விடயங்களில் அனுமதிக்கப் பட்டுள்ளது.
- யுத்த களம்
- மனிர்களிடையே சமாதானம் ஏற்படுத்தல்
3. கணவன்-மனைவியிடமும் மனைவி கணவனிடமும் (நன்மையை நாடி) பொய் பேசுவதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு குல்ஸூம் (ரழி), நூல்: முஸ்லிம்)
சமூக ஒற்றுமைக்கும் சமாதான நிலவரத்திற்கும் பொய் பேச வேண்டி ஏற்பட்டால், அல்லாஹ்வுக்கு அஞ்சி அதற்காக மட்டுமே பொய் பேசி நல்லிணக்கததை ஏற்படுத்திட அனுமதிக்கப் பட்டுள்ளது. பிணக்கையும் பிளவையும் தடுப்ப தற்கே இவ்வழி சொல்லப்படுகிறது என்பதை மறந் திடலாகாது. இதனையே அல்குர்ஆன் வலியுறுத்து கிறது.
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களுக் கிடையில் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள்.(8;1)
சமாதானத்திற்காக, நீதியை நிலை நாட்டுவதற்காக, சீர் திருத்தப் பணியில் ஈடுபடும் போது உண்மையான நீதியையும் நல்லிணக்கத்தையும் பாரபட்சமின்றி கொண்டு வருதற்காகவே செயற்பட வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்காக நீதியை நிலைநாட்டுபவர்களாகவும் அதற்கு சாட்சியாளர்களாகவும் இருங்கள். ஒரு கூட்டத்தின் மீதுள்ள வெறுப்பு நீங்கள் நீதி செலுத்தாதிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுவே பயபக்திற்கு மிக நெருக்க மானதாகும். மேலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ் நீஙகள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கிறான்.(5:8)
நேர்மையான மனிதனுக்கு நேர்மையான பார்வை அவசிய மானதாகும். அதனையே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள்
தானும், தனது பணியும் என்று ஒரு முஸ்லிம் ஒதுங்கி வாழ முடியாது, வாழக் கூடாது. சுயநலமுள்ள மனிதனாக வாழ்வதற்கு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. சமூகத்துடன் இரண்டறக் கலந்து சமூகப் பணியினை மேற் கொண்டு, பண்பாட்டினை கட்டியெழுப்பப் பாடுபட வேண்டும். பிறர் நலம் நாடும் சமூக சிந்தனையுள்ள மனிதனே சிறந்த முஃமின் என்பதே நபி (ஸல்) அவர்களின் இப் போதனைகளின் சுருக்கமாகும்.