×
மக்காவிற்கு பிறகு சிறந்த தளமாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான். அதன் சிறப்பும் மகிமையும் பற்றி அதிகமான ஆதாரங்கள் செய்தி ரீதியாகவும் பிரார்த்தனை ரீதியாகவும் வந்துள்ளன. .

    மதீனாவின் சிறப்புக்களும் அதன் கண்ணியமும்

    ] Tamil – தமிழ் –[ تاميلي

    M.S.M.இம்தியாஸ் யூசுப்

    2014 - 1436

    شرف المدينة المنورة وفضائلها

    « باللغة التاميلية »

    محمد إمتياز يوسف

    2014 - 1436

    فضائل المدينة وحُرمَتها

    மதீனாவின் சிறப்புக்களும் அதன் கண்ணியமும்

    கலாநிதி அமீன் இப்னு அப்துல்லாஹ் அஷ் ஷகாவி

    தமிழில் M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

    நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மதீனா நகரம் மிகத் தூய்மையானதும் ஈமான் அடைக்களம் பெறும் நகரமுமாகும். மக்காவாசிகளான முஹாஜிர்களும், மதீனாவாசிகளான அன்சா ரீன்களும். சந்தித்ததுக் கொண்ட நகரம். நம்பிக்கைக்குரிய வானவரான ஜிப்ரீல் (அலை) நபியவர்களிடம் வஹியை கொண்டு வந்த நகரம் இது.

    அருள் பொருந்திய இம்மதினா நகரத்தை அல்லாஹ் சிறப்பித்து மேன்மை படைத்தி யுள்ளான். மேலும் மக்காவிற்கு பிறகு சிறந்த தளமாகவும் அதனை ஆக்கியுள்ளான். அதன் சிறப்பும் மகிமையும் பற்றி அதிகமான ஆதாரங்கள் செய்தி ரீதியாகவும் பிரார்த்தனை ரீதியாகவும் வந்துள்ளன.

    மதீனாவில் வாழ்வதற்கான ஆர்வம் ஊட்டப் பட்டுள்ளதுடன் மதீனாவை நாசப் படுத்த நினைப்பவருக்கான எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளன. மதீனாவின் சிறப்பும் கண்ணியமும் மகத்துவமும் குறித்து அநேக ஹதீஸ்களும் அறிவிப்புக்களும் வந்துள்ளன. அவைகளைப் பற்றி ஒவ்வொன்றாக அறிந்து கொள்வோம்

    புனிதப்படுத்தப்பட்ட நகரம்

    ، فقد روى مسلم في صحيحه مِن حَدِيثِ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رضي اللهُ عنه: أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ فَجَعَلَهَا حَرَمًا، وَإِنِّي حَرَّمْتُ الْمَدِينَةَ حَرَامًا، مَا بَيْنَ مَأْزِمَيْهَاأَنْ لَا يُهْرَاقَ فِيهَا دَمٌ، وَلَا يُحْمَلَ فِيهَا سِلَاحٌ لِقِتَالٍ، وَلَا تُخْبَطَ فِيهَا شَجَرَةٌ إِلَّا لِعَلْفٍ

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக ஆக்கினார்கள். நான் மதீனாவின் இரு கருங்கல் மலை களுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமான தாக ஆக்கினேன். மதீனாவிற்குள் இரத்தம் சிந்தப்படக் கூடாது. அங்கு போருக்காக ஆயுதம் ஏந்தப்படக்கூடாது. அங்கு உணவுக்காகத் தவிர எந்தத் தாவரமும் வெட்டப் படக்கூடாது. அறிவிப்பவர் அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) (நூல்: முஸ்லிம்)

    மதினாவின் எல்லை உர்ரத் என்று சொல்லக் கூடிய இரு மலையின் இடையிலுள்ள கிழக்காலும் மேற்காலும் உள்ள பகுதி யாகும். மேலும் அய்ர் என்ற மலையிலிருந்து தவ்ர் குகையின் யமன் ஷாம் திசை வரையிலுள்ள பகுதியாகும்.

    روى مسلم في صحيحه مِن حَدِيثِ عَلِيِّ بنِ أَبِي طَالِبٍ رضي اللهُ عنه: أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "الْمَدِينَةُ حَرَامٌ مَا بَيْنَ عَيْرٍ إِلَى ثَوْرٍ.

    அயிர் எனும் இடத்திலிருந்து ஸவ்ர் எனும் இடம் வரை மதீனா நகரம் புனிதமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: அலி(ரலி) (நூல்: முஸ்லிம்)

    وروى مسلم في صحيحه مِن حَدِيثِ أَبِي هُرَيرَةَ رضي اللهُ عنه: أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "مَا بَيْنَ لَابَتَيْهَا حَرَامٌ.

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) (நூல்: முஸ்லிம்)

    மதீனா நகரம் தூய்மையானது

    மதீனாவுக்கு ‘‘தையிபா'' தூய்மையானது என நபி(ஸல்) அவர்கள் பெயர் சூட்டினார்கள்

    روى مسلم في صحيحه مِن حَدِيثِ فَاطِمَةَ بِنتِ قَيسٍ رضي اللهُ عنها فِي حَدِيثِ الجَسَّاسَةِ قَولُهُ صلى اللهُ عليه وسلم: "هَذِهِ طَيْبَةُ، هَذِهِ طَيْبَةُ، هَذِهِ طَيْبَةُ يَعْنِي الْمَدِينَةَ".

    இந்த மதீனா தூய்மையானது இந்த மதீனா தூய்மையானது இந்த மதீனா தூய்மையா னது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: பாதிமா பின்த் கைஸ்(ரலி) (நூல்: முஸ்லிம்)

    இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) கூறுகிறார்கள்: இந்நகரம் தூய்மையானது என்பதன் அர்த்தம் யாதெனில் மதீனா மண்ணும் தூய்மையானது அங்கு வாழ்பவர்களும் தூய்மையானவர்கள் என்பதாக கூறப் படுகிறது. சில அறிஞர்கள் கூறும் போது மதீனா மண்ணும் அதன் காற்றும் தூய்மையானது என்பதற்கு அதற்கு சூட்டப்பட்ட பெயர் சான்றாகும் என்கி றார்கள். அங்கு வாழ்பவர்கள் அந்த மண்ணிலிருந்தும் சுவரிலிருந்தும் நல்ல வாசiயை நுகர்கிறார்கள் இது வேறு இடங்களில் காண முடியாததாகும் என்றும் கூறுகிறார்கள். (நூல்: பத்ஹூல் பாரி)

    ஈமான் அபயம் பெறும் நகரம்

    روى البخاري ومسلم في صحيحيهما مِن حَدِيثِ أَبِي هُرَيرَةَ رضي اللهُ عنه: أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "إِنَّ الْإِيمَانَ لَيَأْرِزُ إِلَى الْمَدِينَةِ، كَمَا تَأْرِزُ الْحَيَّةُ إِلَى جُحْرِهَا"

    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் கள்: “பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல் ஈமான் எனும் இறை நம்பிக்கை மதீனாவில் அபயம் பெறும்.” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) (நூல்: முஸ்லிம்)

    மதீனாவிலுள்ளவர்கள் துன்பத்தின் போது பொறுமை காத்தல் மகத்தான நன்மைகளை பெறுவர்

    روى مسلم في صحيحه مِن حَدِيثِ أَبِي سَعِيدٍ مَوْلَى الْمَهْرِيِّ: أَنَّهُ جَاءَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ لَيَالِي الْحَرَّةِ فَاسْتَشَارَهُ فِي الْجَلَاءِ مِنَ الْمَدِينَةِ وَشَكَا إِلَيْهِ أَسْعَارَهَا وَكَثْرَةَ عِيَالِهِ، وَأَخْبَرَهُ أَنْ لَا صَبْرَ لَهُ عَلَى جَهْدِ الْمَدِينَةِ وَلَأْوَائِهَا، فَقَالَ لَهُ: وَيْحَكَ لَا آمُرُكَ بِذَلِكَ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صلى اللهُ عليه وسلم يَقُولُ: "لَا يَصْبِرُ أَحَدٌ عَلَى لَأْوَائِهَا فَيَمُوتَ إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ إِذَا كَانَ مُسْلِمًا"

    மஹ்ரீயின் முன்னாள் அடிமையான அபூசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் "அல்ஹர்ரா" (போர் நடந்த) நாட்களில் சென்று, நான் மதீனாவிலிருந்து இடம்பெயர்ந்து செல்வது தொடர்பாக ஆலோசனை கேட்டேன். மேலும், அவர்களிடம் (மதீனாவின்) விலைவாசி (உயர்ந்துள்ளது) பற்றியும், எனது பெரிய குடும்பம் பற்றியும் அவர்களிடம் முறையிட்டேன். மதீனாவின் நெருக்கடியை யும் பசி பட்டினியையும் சகித்துக்கொண்டு என்னால் இருக்க முடியாது என்றும் தெரிவித்தேன். அப்போது அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், “உமக்குக் கேடு தான். அ(வ்வாறு மதீனாவைவிட்டுச் செல்வ) தற்கு உம்மை நான் அனுமதிக்க மாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மதீனாவின் இடர்பாடுகளைச் சகித்துக்கொண்டு இறந்துபோகும் எந்த மனிதருக்கும் மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக, அல்லது சான்றுரைப் பவனாக இருப்பேன். அவர் முஸ்லிமாக இருந்தால்!" என்று கூறியதை நான் கேட்டுள் ளேன்” என்றார்கள். (நூல்: முஸ்லிம்)
    وروى مسلم في صحيحه مِن حَدِيثِ أَبِي هُرَيرَةَ رضي اللهُ عنه: أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَدْعُو الرَّجُلُ ابْنَ عَمِّهِ وَقَرِيبَهُ: هَلُمَّ إِلَى الرَّخَاءِ! هَلُمَّ إِلَى الرَّخَاءِ! وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ".

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    மக்களுக்கு ஒரு காலம் வரும். அன்று ஒருவர் தம் தந்தையின் சகோதரர் மகனையும் தம் உறவினரையும் "செழிப்பான இடத்திற்கு வா! செழிப்பான இடத்திற்கு வா!" என அழைப்பார். ஆனால், அவர்கள் (உண்மை யை) அறிந்திருப்போராயின் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) (நூல்:முஸ்லிம்)

    தீயவர்களை வெளியேற்றும் நகரம்

    روى البخاري ومسلم في صحيحيهما مِن حَدِيثِ أَبِي هُرَيرَةَ رضي اللهُ عنه: أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "أُمِرْتُ بِقَرْيَةٍ تَأْكُلُ الْقُرَى يَقُولُونَ: يَثْرِبُ، وَهِيَ الْمَدِينَةُ، تَنْفِي النَّاسَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ"

    . والمراد بـ"تَأْكُلُ الْقُرَى" أي: ينصر الله الإسلام بأهل المدينة ويفتح على أيديهم القرى، فتجلب الغنائم إلى المدينة ويأكل أهلها، وأضاف الأكل إلى القرية والمراد: أهلها

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    எல்லா ஊர்களையும் தூக்கிச் சாப்பிடக் கூடிய, “யஸ்ரிப்” என மக்கள் கூறக்கூடிய ஓர் ஊருக்கு (நாடு துறந்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன். அதுதான் மதீனாவாகும். இரும்பின் துருவை (கொல்லனின்) உலை நீக்கிவிடுவதைப் போன்று மதீனா (தீய) மனிதர்களை வெளியேற்றிவிடும்.
    இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.( நூல்:புகாரி முஸ்லிம்)

    எல்லா ஊர்களையும் தூக்கி சாப்பிடக்கூடிய யஸ்ரிப் மக்கள் என்பதற்கான அர்த்தம் என்னவெனில் மதீனாவாசிகள் மூலம் அல்லாஹ் இஸ்லாத்திற்கு உதவி புரிவான். அவர்கள் மூலமாகவே பல ஊர்களின் வெற்றியையும் கொடுப்பான். கனீமத்துக் கள் (யுத்தகளத்தில் கிடைக்கும் பொருட்கள்) மதீனாவை நோக்கி கொண்டு வரப்படும். மதீனா வாசிகள் அதனை உண்பார்கள் என்பதேயாகும் (நூல் : அந்நிஹாயா பிகரீபில் ஹதீஸ் லிஇப்னி அஸீர் 1\ 434. ஷரஹ் சுன்னா லிலிபகவி 7\ 320. ஜாமிஉல் உசூல் 9\ 320

    (பரகத்) அருள் வளம் பெற்ற நகரம்

    روى مسلم في صحيحه مِن حَدِيثِ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رضي اللهُ عنه: أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي صَاعِنَا اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مُدِّنَا، اللَّهُمَّ اجْعَلْ مَعَ الْبَرَكَةِ بَرَكَتَيْنِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا مِنَ الْمَدِينَةِ شِعْبٌ وَلَا نَقْبٌ إِلَّا عَلَيْهِ مَلَكَانِ يَحْرُسَانِهَا حَتَّى تَقْدَمُوا إِلَيْهَا".

    இறைவா! எங்கள் நகரில் எங்களுக்கு வளம் சேர்ப்பாயாக! இறைவா! எங்கள் (பெரிய அளவையான) "ஸாஉ"வில் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! எங்கள் (சிறிய அளவையான) "முத்"துவிலும் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! எங்கள் "ஸாஉ"விலும், எங்கள் "முத்"துவிலும், எங்கள் நகரத்திலும் எங்களுக்கு வளம் சேர்ப்பாயாக! இறைவா! இப்போதுள்ள வளத்துடன் இரு (மடங்கு) வளத்தை ஏற்படுத்துவாயாக!" (என்று நபி(ஸல்) பிரார்த்தித்தார்கள். பிறகு) "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! மதீனாவின் அனைத்து கணவாய்களிலும் சாலை முனைகளிலும் இரு வானவர்கள் இருந்து அதைக் காவல் புரிந்து கொண்டேயிருக்கின்றனர்; நீங்கள் மதீனா சென்றடையும் வரை (அவ்வாறு காவல் புரிந்து கொண்டிருக்கின்றனர்)" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) (நூல்: முஸ்லிம்)

    தஜ்ஜாலும் கொள்ளை நோயும் நுழைய முடியாத நகரம்

    روى البخاري ومسلم في صحيحيهما مِن حَدِيثِ أَبِي هُرَيرَةَ رضي اللهُ عنه: أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "عَلَى أَنْقَابِ الْمَدِينَةِ مَلَائِكَةٌ، لَا يَدْخُلُهَا الطَّاعُونُ وَلَا الدَّجَّالُ".

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவின் நுழைவாயில் களில் வானவர்கள் இருப்பர். மதீனாவிற்குள் கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது.- அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) (நூல்:புகாரி முஸ்லிம்)

    நன்மை நாடி பயணிக்கக் கூடிய பள்ளிவாசல் அமைந்த நகரம்

    روى البخاري ومسلم في صحيحيهما مِن حَدِيثِ أَبِي هُرَيرَةَ رضي اللهُ عنه: أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: الْمَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِ الرَّسُولِ صلى اللهُ عليه وسلم، وَالمَسْجِدِ الْأَقْصَى". والصلاة فيه مضاعفة،

    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (ஜெரூசலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (அதிக நன்மையை எதிர் பார்த்து) பயணம் மேற்கொள்ளப்படாது.
    அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) (நூல்: புகாரி முஸ்லிம்)

    روى البخاري ومسلم في صحيحيهما مِن حَدِيثِ أَبِي هُرَيرَةَ رضي اللهُ عنه: أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا، أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ

    ல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ந்த மஸ்ஜிதுந் நபவீ ஆலயத்)தில் தொழுவ தானது, மற்ற பள்ளிவாசல்களில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிடச் சிறந்ததா கும். கஅபா (அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹராம்) பள்ளிவாசலைத் தவிர" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" அறிவிப்ப வர்: அபூ ஹுரைரா(ரலி) (நூல்:புகாரி முஸ்லிம்)

    குபா பள்ளி வாசல் அமைந்த நகரம்

    روى الإمام أحمد في مسنده مِن حَدِيثِ سَهْلِ بنِ حُنَيْفٍ رضي اللهُ عنه: أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "مَنْ خَرَجَ حَتَّى يَأْتِيَ هَذَا الْمَسْجِدَ يَعْنِي مَسْجِدَ قُبَاءَ فَيُصَلِّيَ فِيهِ، كَانَ كَعَدْلِ عُمْرَةٍ".

    எவர் குபா பள்ளிக்கு வந்து தொழுகிறாரோ அவர் ஒரு உம்ரா செய்தவராக கணிக்கப் படுவார் அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஹனீப்(ரலி) நூல்: அஹ்மத்

    சுவனப் பூஞ்சோலை அமைந்த நகரம்

    روى البخاري ومسلم في صحيحيهما مِن حَدِيثِ أَبِي هُرَيرَةَ رضي اللهُ عنه: أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ، وَمِنْبَرِي عَلَى حَوْضِي".

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் எனது இல்லத்திற்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலையாகும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) (நூல்:புகாரி முஸ்லிம்)

    . இறைத்தூதர் நேசித்த உஹத் மலை அமைந்த நகரம்

    ، روى البخاري ومسلم في صحيحيهما مِن حَدِيثِ أَبِي حُمَيْدٍ رضي اللهُ عنه قَالَ: "أَقْبَلْنَا مَعَ النَّبِيِّ صلى اللهُ عليه وسلم مِنْ غَزْوَةِ تَبُوكَ، حَتَّى إِذَا أَشْرَفْنَا عَلَى الْمَدِينَةِ قَالَ: هَذِهِ طَابَةُ، وَهَذَا أُحُدٌ جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ"

    அபூ ஹுமைத் அப்துர் ரஹ்மான் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் "தபூக்" போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். பிறகு நாங்கள் (போரை முடித்துக்கொண்டு மதீனாவிற்கும் சிரியாவிற்கும் இடையே உள்ள) "வாதில் குரா" எனும் இடத்திற்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் விரைந்து மதீனா செல்லப் போகிறேன். எனவே, உங்களில் விரும்பிய வர் என்னுடன் விரைந்து வரலாம். விரும்பி யவர் (இங்கே யே) தங்கியிருக்கலாம்” என்று சொன்னார் கள். நாங்கள் புறப்பட்டு மதீனாவை நெருங்கியபோது, இது "தாபா" (தூய நகரம்) ஆகும்; இது உஹுத் மலை; இது நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கிறோம்" என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூஉமைத் (ரலி) (நூல்: புகாரி முஸ்லிம்)

    அருள் வளம் பெற்ற வாதில் அகீக் பள்ளத்தாக்கு அமையப் பெற்ற நகரம்

    روى البخاري في صحيحه مِن حَدِيثِ عُمَرَ بنِ الخَطَّابِ رضي اللهُ عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى اللهُ عليه وسلم يَقُولُ: "أَتَانِي اللَّيْلَةَ آتٍ مِنْ رَبِّي، فَقَالَ: صَلِّ فِي هَذَا الْوَادِي الْمُبَارَكِ، وَقُلْ: عُمْرَةً فِي حَجَّةٍ"

    "என்னுடைய இறைவனிடத்திலிருந்து வரக் கூடிய (வான) வர் இன்றிரவு வந்து ‘இந்த அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீ ராக. இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்து விட்டதாக மொழிவீராக!’ எனக் கட்டளையிட்டார்” என்று நபி(ஸல்) அவர்கள் அகீக் எனும் பள்ளத்தாக்கில் கூறக் கேட்டேன். அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: புகாரி

    உயர் ரக அஜ்வா பேரீத்தப் பழம் உள்ள நகரம்

    روى البخاري ومسلم في صحيحيهما مِن حَدِيثِ سَعدٍ رضي اللهُ عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللِه صلى اللهُ عليه وسلم يَقُولُ: "مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً، لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْيَوْمِ سُمٌّ وَلَا سِحْرٌ"

    தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) நூல்: புகாரி முஸ்லிம்

    தீயவர்களை வெளியேற்றும் நகரம்

    روى البخاري ومسلم في صحيحيهما مِن حَدِيثِ جَابِرِ بنِ عَبدِ اللهِ رضي اللهُ عنهما: أَنَّ أَعرَابِيًّا بَايَعَ رَسُولَ اللهِ صلى اللهُ عليه وسلم عَلَى الإِسلَامِ، فَأَصَابَ الأَعرَابِيَّ وَعَكٌ بِالمَدِينَةِ، فَأَتَى الأَعرَابِيُّ إِلَى رَسُولِ اللهِ صلى اللهُ عليه وسلم فَقَالَ: "يَا رَسُولَ اللهِ أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى رَسُولُ اللهِ صلى اللهُ عليه وسلم، ثُمَّ جَاءَهُ فَقَالَ: أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى، ثُمَّ جَاءَهُ فَقَالَ: أَقِلْنِي بَيْعَتِي فَأَبَى، فَخَرَجَ الْأَعْرَابِيُّ، فَقَالَ رَسُولُ اللهِ صلى اللهُ عليه وسلم: إِنَّمَا الْمَدِينَةُ كَالْكِيرِ، تَنْفِي خَبَثَهَا وَيَنْصَعُ طَيِّبُهَا.

    ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வ தாக)விசுவாசப் பிரமாணம் செய்தார். (பின்னர்) அந்தக் கிராமவாசிக்கு மதீனாவில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. ஆகவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! என் விசுவாசப் பிரமாணத்தி லிருந்து என்னை விடுவித்துவிடுங்கள்" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதை ஏற்க) மறுத்துவிட்டார்கள். பின்னர் (மீண்டும்) வந்து, “என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்” என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் மறுத்து விட்டார்கள். பிறகு (மீண்டும்) வந்து, “என் விசுவாசப் பிரமாணத்தி லிருந்து என்னை நீக்கிவிடுங்கள்" என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் மறுத்து விடவே, அந்தக் கிராமவாசி (மதீனாவிலிருந்து) வெளியேறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மதீனா, (கொல்லனின்) உலை போன்றதே ஆகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும், அதிலுள்ள நல்லவர்கள் தூய்மையாவார்கள்” என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) (நூல்: புகாரி முஸ்லிம்

    மதீனா வாசிகளை கேடு விளைவிக்க நினைப்பவர்களை அழித்து விடும் நகரம்

    ، روى البخاري ومسلم في صحيحيهما مِن حَدِيثِ سَعدِ بنِ أَبِي وَقَّاصٍ رضي اللهُ عنه: أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "مَنْ أَرَادَ أَهْلَ الْمَدِينَةَ بِسُوءٍ، أَذَابَهُ اللهُ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ"

    மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவனை, நீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ், கரைந்து போகச் செய்து விடுவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) (நூல்: புகாரி முஸ்லிம்

    وفي رواية لمسلم: "وَلَا يُرِيدُ أَحَدٌ أَهْلَ الْمَدِينَةِ بِسُوءٍ، إِلَّا أَذَابَهُ اللهُ فِي النَّارِ ذَوْبَ الرَّصَاصِ، أَوْ ذَوْبَ الْمِلْحِ فِي الْمَاءِ

    "மதீனாவாசிகளுக்குத் தீங்கிழைக்க எவரேனும் விரும்பினால் “நெருப்பில் ஈயம் கரைவதைப் போன்று” அல்லது “தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று” அவரை அல்லாஹ் கரைத்துவிடுவான்” என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: முஸ்லிம்)

    . روى الإمام أحمد في مسنده مِن حَدِيثِ السَّائِبِ بنِ خَلَّادٍ رضي اللهُ عنه: أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "مَنْ أَخَافَ أَهْلَ الْمَدِينَةِ ظُلْمًا أَخَافَهُ اللهُ، وَعَلَيْهِ لَعْنَةُ اللهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لَا يَقْبَلُ اللهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفًا وَلَا عَدْلًا

    எவர் மதீனா வாசிகளை அனியாயமாக அச்சுருத்துகிறாரோ அவரை அல்லாஹ்வும் அச்சுருத்துவான். அவர் மீது அல்லாஹ்வினதும் மலக்குகளினதும் மக்கள் அனைவரினதும் சாபம் உண்டாகும். மறுமையில் அவரிடமிருந்து எந்த நியாயத்தையும் ஏற்கமாட்டான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

    அறிவிப்பவர் : ஸாஇப் இப்னு கல்லாத் (ரலி) நூல்: அஹ்மத்

    உங்கள் கருத்துக்களை அறிவிக்க;

    [email protected]