இபாதத்தும் அதன் வகைகளும்
பிரிவுகள்
Full Description
இபாதத்தும் அதன் வகைகளும்
] Tamil – தமிழ் –[ تاميلي
M.S.M.இம்தியாஸ் யூசுப்
2014 - 1435
العبادات وأنواعها
« باللغة التاميلية »
محمد إمتياز يوسف
2014 - 1435
இபாதத்தும் அதன் வகைகளும்.
M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி
அல்லாஹ் மனு, ஜின், மற்றும் உலக படைப்பை தனக்கு கட்டுப்பட்டு வழிப்பட வேண்டும் என்பதற்காக படைத்தான். இபாதத்களையும் அதனை மேற் கொள்ளும் வழி முறைகளையும் தன்னுடைய தூதர்கள் மூலம் காட்டிக் கொடுத்தான்.
அல்லாஹ் கூறுகிறான்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْقٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونِ إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ
என்னை வணங்குவதற்கேயன்றி மனிதர்களை யும், ஜின்களையும் நான் படைக்க வில்லை. அவர்களிடமிருந்து எந்த வாழ்வாதாரத்தையும் நான் விரும்பவில்லை. இன்னும் அவர்கள் எனக்கு உணவளிக்க வேண்டும் எனவும் நான் விரும்பவில்லை. நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப் பவனும் பலமிக்கவனும் உறுதி யானவனுமாவான். (51:56-58)
அல்லாஹ் மனிதர்களுடைய வணக்க வழிபாடுகளை விட்டும் தேவையற்றவன். ஆனால் மனிதர்கள் அந்த வணக்கங்களின் பால் தேவையுடையவர்களாக உள்ளனர். அந்த வணக்கங்களை முறையாக நிறைவேற்றும் போதே சுவனத்தை அடையமுடியும். அதில் இணைவைப்பை இணைக்கும் போது நரகத்தை அடைய நேரிடுகிறது.
எனவே இந்த இபாதத்தை பொறுத்தவரை உள்ளத்தால், உடல் உறுப்புக்களால் மேற் கொள்வதாக உள்ளது. இது பற்றி அஷ்ஷெய்க் சாலிஹ் அல் பவ்ஸான் இப்படி கூறு கிறார்:
திக்ரு செய்தல், தஸ்பீஹ் செய்தல், லாஇலாஹ இல்லல்லாஹ் என கூறுதல், குர்ஆன் ஓதுதல், தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத் கொடுத்தல், நோன்பு நோற்றல், ஹஜ் செய்தல், ஜிஹாத் செய்தல், நன்மையை ஏவி தீமையை தடுத்தல், சொந்தங்களுக்கும் அனாதைகளுக் கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உபகாரம் செய்தல் ஆகியன உடல் உறுப்புக்க ளாலும் உள்ளத்தாலும் மேற் கொள்கின்ற இபாதத்களாகும்.
அவ்வாறே அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிப்பது, அல்லாஹ்வை அஞ்சு வது, அவன் பால் மீளுவது, அவனது மார்க்கத் திற்கு உளத்தூய்மையுடன் கட்டுப்படுவது, அவனது தீர்ப்பில் திருப்தி கொள்வது, அவன் மீது பொறுப்புச் சாட்டுவது, அவனது அருளில் ஆதரவு வைப்பது, அவனது தண்டனையை அஞ்சுவது என்பன போன்ற முஃமினின் செயற்பாடுகளும் இந்த இபாதத்தில் உள்ளடங் குகின்றன.
அது போல் தூங்குவது, உண்பது பருகுவது, தொழில் ஈடுபடுவது, மணம் முடிப்பது போன்ற அன்றாட பழக்க வழக்கங்களையும் தூய்மை யான எண்ணத்துடன் மேற் கொள்ளும் போது அவையும் இபாதத்களாகி விடுகின்றன. (நூல் :கிதாபுத் தவ்ஹீத்)
அஷ்ஷெய்க் முஹம்மத் இப்னு சுலைமான அத்தமீமி (ரஹ்) தன்னுடைய உசூலுத்தீனில் இஸ்லாமியி எனும் நூலில் இபாதத் பற்றி பின்வருமாறு விளக்கப் படுத்துகிறார்கள்.
இபாதத் என்பது அல்லாஹ்வுக்கு பணிந்து நடத்தல் எனப்படும்.
சொல்லாலும், செயல்களாலும், வெளிப்படை யாகவும், மறைமுகமாகவும் அல்லாஹ் விரும்பு கின்ற பொருந்திக் கொள்கின்ற அனைத்து காரியங்களுக்கும் இபாதத் எனப்படும்.
இபாதத்தின் வகைகள்.
அல்லாஹ் ஏவிய இபாதத்கள் அதிகமாகும். அதில் இஸ்லாம், ஈமான், இஹ்ஸான்.
அல்லாஹ்விடம பிரார்த்தனை செய்தல் (துஆ கேட்டல்);
அல்லாஹ்வை பயப்படுதல்;
அல்லாஹ்வின் மீது ஆதரவு வைத்தல்;
அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்தல்;
அல்லாஹ்வின் மீது ஆசை வைத்தல்;
அல்லாஹ்வுக்காக உள்ளச்சத்துடன் இருத்தல்;
அல்லாஹ்விடம் உதவி தேடுதல்;
அல்லாஹ்வுக்கு அறுத்துபலியிடல்;
அல்லாஹ்வுக்கு நேர்ச்சை வைத்தல் போன்ற அனைத்து காரியங்காரியங்களும் உள்ளடங் கின்றன.
இதற்கான ஆதாரமாவது அல்லாஹ் கூறுகிறான்:
وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்குரியன வாகும். எனவே அல்லாஹ்வுடன் வேறெவரை யும் அழைக்க வேண்டாம். (72:18)
وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
உமது இரட்சகன் தன்னையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்றும் பெற்றோருக்கு நன்மை செய்யுமாறும் கட்டளையிட்டுள்ளான்.(17:23)
இபாதத்களில் ஏதேனும் ஒன்றை அல்லாஹ் அல்லாதவருக்கு செய்தால், அவர் நிராகரிப்பா ளராக, இணைவைப்பாளராக ஆகிவிடுவார்.
இதற்கான ஆதாரமாவது அல்லாஹ் கூறுகிறான்.
وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِنْدَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ المؤمنون: 117
மேலே குறிப்பிட்ட இபாதத்களின் வகைகள் குறித்து ஆதாரங்களுடன் பின்வருமாறு. இமாம் அஷ் ஷெய்க் முஹம்மத் இப்னு சுலைமான அத்தமீமி (ரஹ்) அவர்கள் தெரிவுப் படுத்துகிறார்கள்.
துஆ கேட்டல் (வணக்கம்) இபாதத் ஆகும்.
அல்லாஹ் கூறுகிறான்.
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ
என்னை அழையுங்கள், நான் உங்களுக்கு பதிலளிப்பேன், எவர்கள் என்னை வணங்கு வதை விட்டும் பெருமையடிக்கின்றார்களோ அவர்கள் இழிவடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள் என உங்கள் இரட்சகன் கூறுகிறான்.(40:60)
سنن أبي داود (2ஃ 76)
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ
துஆ என்பது வணக்கமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் இப்னு பஷீர்(ரலி) நூல் அபூதாவுத்)
அச்சம் கொள்வது இபாதத் ஆகும்;
அல்லாஹ் கூறுகிறான்.
إِنَّمَا ذَلِكُمُ الشَّيْطَانُ يُخَوِّفُ أَوْلِيَاءَهُ فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ}
ஷைத்தான் தனது தோழர்களைப் பற்றி (உங்களுக்கு) பயமுறுத்துகிறான். எனவே நீங்கள் அவர்களை அஞ்சாதீர் கள் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் என்னையே அஞ்சுங்கள்.(3:175)
ஆதரவு வைத்தல் இபாதத் ஆகும்
அல்லாஹ் கூறுகிறான்.
{فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا
எவர் தனது இரட்சகனின் சந்திப்பை ஆதரவு வைக்கின்றாரோ அவர் நல்லறம் செய்யட்டும் மேலும் தனது இரட்சகனின் வணக்கத்தில் எவரையும் இணையாக்கா திருக்கட் டும்.(18:110)
தவக்குல் வைத்தல் (பொறுப்புச் சாட்டுதல்) இபாதத் ஆகும்
وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
நீங்கள் முஃமின்களாக இந்தால் அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டுங்கள்.(5:23)
وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ
எவர் அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன்.(65:6)
ஆசை கொள்ளுதல் இபாதத் ஆகும்
إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ}
நிச்சயமாக அவர்கள் நன்மையானவற்றில் விரைபவராகவும் ஆசையுடனும் அச்சத்துடனும் எம்மை அழைப் போராகவும் இருந்தனர். மேலும் அவர்கள் எம்மையே அஞ்சுபவராக இருந்தனர்.(19:90)
அச்சம் கொள்ளுதல் இபாதத் ஆகும்
فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِي}
அவர்களுக்கு அஞ்சவேண்டாம், என்னையே அஞ்சுங்கள். (2:150)
அல்லாஹ்வின் பால் மீளுதல் இபாதத் ஆகும்
وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ
உங்கள் இரட்சகனிடம் மீண்டு அவனுக்கே கட்டுப்பட்டு விடுங்கள். (39:54)
உதவிதேடுதல் இபாதத் ஆகும்.
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ}
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகி றோம்.(1:5)
நீர் உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடுவீராக. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்; அஹ்மத் திர்மதி)
பாதுகாவல் தேடுதல் இபாதத் ஆகும்.
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (1) مِنْ شَرِّ مَا خَلَقَ
அதிகாலையின் இரட்சகனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.(113:1.)
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ}
மனிதர்களின் இரட்சகனிடம் உதவி தேடுகிறேன். (114:1)
அறுத்து பலியிடல் இபாதத் ஆகும்.
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (162)
لَا شَرِيكَ لَهُ} الأنعام: 162، 163
நிச்சயமாக எனது தொழுகை. எனது வணக்க வழிபாடுகள். எனது வாழ்வு. எனது மரணம் ஆகியவை அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது என (நபியே) கூறுவீராக. அவனுக்கு எவ்வித இணையு மில்லை.(6:162
நேர்ச்சை இபாதத் ஆகும்.
يُوفُونَ بِالنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًا كَانَ شَرُّهُ مُسْتَطِيرًا
அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். இன்னும் தீங்கு பரவிகாணப்படும் ஒரு நாளை பயப்படுவார்கள். (76:7)
அல்லாஹ் அல்லாதவருக்கு அறுத்து பலியிடுபவரை அல்லாஹ் சபிப்பானாக என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்:முஸ்லிம்)
(நூல்: உசூலுத்தீனில் இஸ்லாமியி)