×
அல்லாஹ்வினால் அனுப்பப் பட்ட எல்லா நபிமார்களும் தொழுகையை தங்களது சமூகத்தாருக்கும், குடும்பத்தாருக்கும் போதித்தார்கள்

    தொழுகையின் முக்கியத்துவம்

    ] Tamil – தமிழ் –[ تاميلي

    M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

    2014 - 1435

    أهمية الصلاة

    « باللغة التاميلية »

    محمد إمتياز يوسف

    2014 - 1435

    தொழுகையின் முக்கியத்துவம்

    இம்தியாஸ யூசுப் ஸலபி

    இஸ்லாத்தில் இணைந்து இறை நம்பிக்கையை ஏற்ற பின் நடை முறை படுத்த வேண்டிய முதல் கடமை தொழுகையாகும். இறை நம்பிக்கை யாளர் என்று கூறிக் கொள்ளக் கூடிய ஒவ்வொ ருவரும் கண்டிப்பாக ஐந்து நேர தொழுகை களை நிலை நாட்டக் கூடியவராக இருக்க வேண்டும்.

    இறை நம்பிக்கை கோட்பாடுகளை செயற்பாட்டு ரீதியாக காண்பிக்கும் பயிற்சிக் களமே தொழுகையாகும். அந்த தொழுகையை கூட்டாக (ஜமாஅத்தாக) பள்ளி வாசலில் நிறைவேற்றும் முகமாகவே தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த அழைப்பின் மூலமாகவே நிராகரிப்பிலிருந்து விடுபட்ட சமூகமாக முஸ்லிம்கள் வாழுகிறார்கள் என்பது அறியப்படும்.

    தெழுகை என்பது கடவுளாக ஏற்றுக் கொண்டிருக்கும் ஏக வல்லவனாம் அல்லாஹ் வை நினைவூட்டுவதைத் தவிர வேறில்லை. அவனுக்கு வழிபடும் அடிமைத்துவத்தை காண்பிப்பதை தவிர வேறில்லை. முஸ்லிம் களிடையே சகோதரத்துவத்தையும் ஒருங்கி ணைப்பையும் ஏற்படுத்தி தீண்டாமையை ஒழிப்பதை தவிர வேறில்லை.

    முஸ்லிமானவர் தொழுகையை நிறைவேற்றா மல் ஏனைய அமல்களை செய்வதினால் எந்தப் பலனும் கிட்டுவதில்லை. தொழுகை சீராகி னால் ஏனைய அமல்களும் சீராகி விடும். தொழுகையின் மூலமாகவே (குப்ரிய்யத்தி லிருந்து) இறை நிராகரிப்பிலிருந்து விடு பட்ட தற்கான சாட்சி நிரூபிக்கப் படுகிறது.

    صحيح مسلم (1ஃ 88)

    سَمِعْتُ جَابِرًا، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلَاةِ»

    மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறை நிரா கரிப்பு ஆகியவற்றுக்கும் இடையே (யுள்ள வேற்றுமை) தொழுகையை விடுவதா கும் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபர் (ரலி) (நூல் : முஸ்லிம் 134.

    இறை நிராகரிப்பின் மூலமாகவே மக்களை வழிகெடுப் பதற்கு ஷைத்தான் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறான். இறை நிராகரிப்பிலிருந்து முஸ்லிமை பாது காக்கும் வழிகளை எடுத்து காட்டும் பாதையாகவே தொழுகை இருக்கிறது. எனவே இந்த தொழுகைக்கான அழைப்பை கேட்டதும் ஷைத்தானால் பொறுக்க முடியாமல் ஓடி விடுகிறான்.

    صحيح مسلم (1ஃ 291)

    عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الشَّيْطَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ بِالصَّلَاةِ أَحَالَ لَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ صَوْتَهُ. فَإِذَا سَكَتَ رَجَعَ فَوَسْوَسَ فَإِذَا سَمِعَ الْإِقَامَةَ ذَهَبَ حَتَّى لَا يَسْمَعَ صَوْتَهُ فَإِذَا سَكَتَ رَجَعَ فَوَسْوَسَ»

    தொழுகை அறிவிப்பை ஷைத்தான் கேட்டால் அந்த சப்தத்தை கேட்காமல் இருப்பதற்காக வாயு வெளியேறிய வண்ணம் வெருண்டோடு கிறான். தொழுகை அறிவிப்பு முடிந்ததும் மீண்டும் வந்து (தொழுகையாளிக்கு) ஊசலாட் டத்தை ஏற்படுத்துகிறான்.இகாமத் சொல்லும் சப்தத்தைக் கேட்கும் போது அந்த சப்தத்தை கேட்காமல் இருப்பதற்காக (மீண்டும்) வெருண் டோடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் மீண்டும் வந்து ஊசலாட்டத்தை ஏற்படுத்து கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அபூஹூரைரா (ரலி) (நூல்:முஸ்லிம்)

    அது போல் அல்லாஹ்வுக்கு சிரவணக்கம் (ஸஜதா) செய்ய மறுத்ததனால் சபிக்கப்பட்ட ஷைத்தான் மனிதன் ஸஜதா செய்யும் போது கைசேதப்படுகிறான். ஸஜதா செய்யாத தனால் நரகவாதியான நான். மனிதன் ஸஜதா செய்வதன் மூலம் சுவர்க்க வாதியாக மாறு கிறான் என்று புலம்பு கிறான்.

    صحيح مسلم (1ஃ 87)

    عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' إِذَا قَرَأَ ابْنُ آدَمَ السَّجْدَةَ فَسَجَدَ اعْتَزَلَ الشَّيْطَانُ يَبْكِي، يَقُولُ: يَا وَيْلَهُ - وَفِي رِوَايَةِ أَبِي كُرَيْبٍ: يَا وَيْلِي - أُمِرَ ابْنُ آدَمَ بِالسُّجُودِ فَسَجَدَ فَلَهُ الْجَنَّةُ، وَأُمِرْتُ بِالسُّجُودِ فَأَبَيْتُ فَلِيَ النَّارُ

    ஆதமின் மகன் ஸஜதா வசனத்தை ஓதி சிரவணக்கம் செய்தால் ஷைத்தான் அழுதவாறே அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மகன் சிரவணக்கம் செய்யும் படி கட்டளையிடப்பட்டான்.அவனுக்கு சுவனம் கிடைக்கப் போகிறது. ஆனால் (ஆதிமனிதர்) ஆதமுக்கு சிரம் பணியும் படி எனக்கு கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே எனக்கு நரகம் தான் என்று கூறியபடி விலகிச் செல்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 133

    எனவே தொழுகையை நடைமுறைப் படுத்துவதன் மூலம் இறை நம்பிக்கை வலு பெறுகிறது. அதனை விடுவதின் மூலம் இறை நிராகரிப்பின பால் சாய்ந்து விடும் நிலைமை உருவாகிறது. இந்த உலகத்தில் ஒரு முஸ்லிம் செய்ய வேண்டிய முதல் கடமை தொழுகை என்பது போல் மறுமையில் விசாரிக்கப்படும் முதல் கேள்வியும் தொழுகை யாகும். தொழுகை இல்லாதவனுக்கு சுவனம் தடுக்கப் படுகிறது. இஸ்லாத்தையும் அதன் புனிதத்துவத்தையும் ஒரு முஸ்லிம் காக்க வேண்டுமானால் அவன் தொழுதே ஆக வேண்டும்.

    صحيح مسلم (1ஃ 45)

    عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ عَبْدُ اللهِ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ، شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَحَجِّ الْبَيْتِ، وَصَوْمِ رَمَضَانَ»

    இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. அல்லாஹ்வை வழிபட்டு அவனல்லாதவற்றை நிராகரிப்பது, தொழுகை யை கடைபிடிப்பது, ஸகாத் வழங்குவது, இறையில்லம் கஃபாவை ஹஜ் செய்வது, ரமழான் மாதத் தில் நோன்பு நோற்பது (ஆகியனவே அந்த ஐந்தாகும்) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர்(ரலி) (நூல்: முஸ்லிம் )

    இஸ்லாம் எனும் மாளிகை இந்த ஐந்து தூண்களிலே தான் கட்டப்பட்டுள்ளது. ஒரு தூண் அகற்றப் பட்டால் மாளிகை சரிந்து விடுவது போல் முஸ்லிமின் நம்பிக்கையும் சரிந்து விடும். நபி (ஸல்) அவர்கள் தங்களது பிரச்சாரத்தில் இந்த ஐந்து தூண்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக முக்கியத்துவம் கொடுத்தே அழைப்பு விடுத் தார்கள். பின் வரும் ஹதீஸை பாருங்கள்.

    صحيح مسلم (1ஃ 50)

    عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ مُعَاذًا، قَالَ: بَعَثَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّكَ تَأْتِي قَوْمًا مِنْ أَهْلِ الْكِتَابِ، فَادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنَّ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنِّي رَسُولُ اللهِ، فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ، فَأَعْلِمْهُمْ أَنَّ اللهَ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ، فَأَعْلِمْهُمْ أَنَّ اللهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ فِي فُقَرَائِهِمْ، فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ، فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ، وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ، فَإِنَّهُ لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللهِ حِجَابٌ»

    அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்)அவர்கள் என்னை யெமன் நாட்டுக்கு அனுப்பி வைத்த போது, முஆதே! நீர் வேதம் கொடுக்கப் பட்ட சமுதாயத்திடம் செல்கிறீர். அவர்களிடம் அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்றும் உறுதி மொழி அளிக்கும் படி அவர்களுக்கு அழைப்பு விடு. இதற்கு அவர்கள் கட்டுப் பட்டால், அல்லாஹ் அவர்கள் மீது ஒவ்வொரு நாளும் ஐந்து (நேரம்) தொழுகை களை கடமையாக்கி யுள்ளான் என்று அவர்க ளுக்கு தெரிவித்துவிடு. இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்கள் மீது நிச்சயமாக அல்லாஹ் ஸகாத்தை கடமையாக்கியுள்ளான். அவர் களின் பணக்காரர்களிடமிருந்து எடுத்து அவர்களில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு தெரிவித்து விடு. இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் (அவர்களிடம் ஸகாத்தை வசுலிக்கும் போது ) அவர்களின் செல்வங்களில் (நடுத்தரமான வற்றை விடுத்து) உயர்ந்தவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம் என உன்னை எச்சரிக்கி றேன். அநீதி இழைக்க பட்டவனின் பிரார்த்த னைக்கு அஞ்சிக் கொள். ஏனெனில் அதற்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையேதும் இல்லை என கூறினார்கள். அறிவிப்பவர்: முஆத் (ரலி)(நூல்: முஸ்லிம்)

    முஸ்லிமல்லாதவருக்கு இஸ்லாத்தின் அடிப்படைகள் ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து ரைப்பது போலவே இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிமுக்கும் அந்த அடிப்படைகளை முறைப்படி செயற்படுத்த கடமையாக்கப் பட்டுள்ளது.

    தொழுகையுடன் இணைந்த நல்லறங்கள் ஒன்றிணையும் போதும் அவை தூயஉள்ளத்து டன் நிறைவேற்றும் போதும் அல்லாஹ் விடத்தில் மகத்தான கூலி கிடைக்கப்படு கின்றது.

    قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ

    நம்பிக்கையாளர்கள் வெற்றியடைந்து விட்டார்கள். அவர்கள் தமது தொழுகையில் உள்ளச்சமுடையவர்களாக இருப்பார்கள். (23:1,2)

    إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

    நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நல்லறங்களும் புரிந்து தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுக்கின்றார்களோ அவர்களது கூலி அவர்களது இரட்சகனிடம் உண்டு. அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை. துக்கப் படவுமாட்டார்கள். (2:277)

    قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى

    (தன்னை) தூய்மை படுத்தி, தனது இரட்சகனின் பெயரை நினைவு கூர்ந்து தொழுதவன் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டான். (87:14)

    இந்த வணக்கத்தை நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மாத்திரமன்றி ஏனைய நபிமார்களும் குறிப்பிட்டார்கள் என்பதை அல் குர்ஆனில் குறிப்பிடுகிறான். ஒரு சில நபிமார்களின் செய்திகளை கவனியுங்கள்.

    • இப்ராஹீம் நபி

    رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ

    எங்கள் இரட்சகனே! புனிதமான உனது வீட்டுக்கு அருகில் விவசாயமில்லாத பள்ளத் தாக்கில் தொழுகையை நிலை நாட்டுவதற்காக என் சந்ததியில் சிலரை, நிச்சயமாக நான் குடியமர்த்தி யுள்ளேன். எனவே எங்கள் இரட்சகனே! மனிதர்கள் சிலரின் உள்ளங்களை அவர்கள் பால் நாட்டம் கொள்ளச்செய்வாயாக. அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு உண வளிப்பாயாக. (14:37)

    رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

    எங்கள் இரட்சகனே! என்னையும் என் சந்ததியிலுள் ளோரையும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக. எங்கள் இரட்சகனே! எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக. (14:40)

    • இஸ்மாயில் நபி –

    وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِنْدَ رَبِّهِ مَرْضِيًّا

    (இஸ்மாயில் நபியாகிய) அவர் தனது குடும்பத்தாருக்கு தொழுகையையும், ஸகாத்தை யும் ஏவக் கூடியவராகவும் இருந்தார். இன்னும் அவர் தனது இரட்சகனிடம் பொருந்திக் கொள்ளப் பட்ட வராகவும் இருந்தார். (19:53)

    • இஸ்ஹாக் நபி –

    وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ

    இஸ்ஹாக், மற்றும் யாஃகூப் நபி ஆகிய) இவர்களை நமது கட்டளைப் பிரகாரம் நேர்வழி காட்டும் தலைவர்களாக நாம் ஆக்கினோம். மேலும் நல்லவற்றை செய்யுமாறும், தொழுகை யை நிலை நாட்டுமாறும், ஸகாத்தை கொடுக்கு மாறும் நாம் இவர்களுக்கு வஹீ அறிவித்தோம். மேலும் அவர்கள் எம்மையே வணங்குப வர்களாகவும் இருந்தனர். (21:73)

    • மூஸா நபி –

    إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي

    (மூஸாவே!) நிச்சயமாக நானே அல்லாஹ். என்னைத் தவிர (உண்மையாக) வணங்கப் படத் தகுதியானவன் வேறு யாருமில்லை. எனவே என்னையே நீர் வணங்குவீராக. என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக (என அல்லாஹ் கூறினான்) 20:14)

    • சுஐப் நபி

    قَالُوا يَا شُعَيْبُ أَصَلَاتُكَ تَأْمُرُكَ أَنْ نَتْرُكَ مَا يَعْبُدُ آبَاؤُنَا أَوْ أَنْ نَفْعَلَ فِي أَمْوَالِنَا مَا نَشَاءُ إِنَّكَ لَأَنْتَ الْحَلِيمُ الرَّشِيدُ

    சுஐபே! எமது மூதாதையர்கள் வணங்கியதை அல்லது எமது செல்வங்களில் நாம் விரும்பியவாறு நடந்துக் கொள் வதை விட்டுவிட வேண்டும் என்று உமது தொழுகை உமக்கு ஏவுகிறதா? நிச்சயமாக நீர்தான் சகிப்புத் தன்மையு டையவரும், நேர்வழி பெற்றவருமாவீர் என (ஏளனமாக அவர் சமூகத்தினர்) கூறினர். (11:87)

    • லுக்மான் (அலை)

    يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ

    என்னருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டு வாயாக. நன்மையை ஏவி தீமையை விட்டும் தடுப்பாயாக. எனக்கு ஏற்படும் (துன்பங்கள்) வற்றின் மீதும் பொறு மையாக இருப்பீராக. நிச்சயமாக இது உறுதி மிக்க காரியங்களில் உள்ளதாகும். (என லுக்மான் (அலை) தனது மகனுக்கு கூறினார்) 31:17

    • முஹம்மத் நபி

    وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى

    (நபியே!) உமது குடும்பத்தருக்கு தொழுகை யைக் கொண்டு ஏவி, நீர் அதில் பொறுமை யாகவும் இருப்பீராக. நாம் உம் மிடம் எவ்வித ஆகாரத்தையும் கேட்கவில்லை. மாறாக நாமே உமக்கு ஆகாரமளிக்கின்றோம். இறுதி முடிவு பய பக்திக்கே உண்டு. (20:132)

    ஏக இறை கொள்கைகளை கைகொள்ளுதல், தொழுகையை நிலை நாட்டல், ஸகாத் கொடுத்து வருதல் என்ற அடிப்படைகள் ஆரம்பம் முதல் இறுதி நபி (ஸல்) வரை அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

    அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனது கொள்கை களை பற்றிப் பிடித்து வாழ்வதற்கு இந்த தொழுகை ஒன்றே வழியாகும். குடும்பத்தின் தலைவன் தன் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களை (மனைவி மக்களை) தொழு மாறு ஏவவேண்டும் என கண்டிப்பான கட்டளையாக அல்லாஹ் இந்த நபிமார்களின் செய்திகள் மூலம் தெரிவிக்கிறான். அது போல் சமூகத்திற்கு வழிகாட்டக் கூடியவர்கள் போத னைகள் செய்யக் கூடியவர்கள் கூட முதலில் இத் தொழு கைக் குறித்து ஏவவேண்டும் என்பதையும் தெளிவுப் படுத்துகிறான்.

    அல்லாஹ்வின் ஆட்சி நிலைபெறும் போது அதிகாரம் படைத்தவர்கள் தொழுகையை முறைப்படி நிலை நாடடக் கூடியவர்களாக திகழ்வார்கள் என்று அல்லாஹ் கூறு கிறான்.

    {الَّذِينَ إِنْ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ

    இவர்களுக்கு நாம் பூமியில் அதிகாரத்தை ஏற்படுத்தினால் இவர்கள் தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும் கொடுத்து நன்மையை ஏவி தீமையை விட்டும் தடுப்பார்கள். காரியங் களின் முடிவு அல்லாஹ்விடமே இருக்கிறது. (22:41)

    இஸ்லாமிய ஆட்சியில் முன்னுரிமை பெறும் விடயங்களில் தொழுகை இடம் பெறுவதுடன் இறை கோட்பாடுகளுக்கு முரண்படும் காரியங் களை தடுக்கின்ற பணியும் இடம் பெறும்.

    அது போல் தொழுகையை முறைப்படி அமுல்படுத்தும் போது அத்தொழுகை பாவ அழுக்குகளிலிருந்து தூய்மைப் படுத்துகிறது.

    وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ

    பகலின் இரு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலைநிறுத்து வீராக. நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றிவிடும்.(11:114)

    صحيح مسلم (1ஃ 462)

    عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: وَفِي حَدِيثِ بَكْرٍ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهْرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ مِنْهُ كُلَّ يَوْمٍ خَمْسَ مَرَّاتٍ، هَلْ يَبْقَى مِنْ دَرَنِهِ شَيْءٌ؟» قَالُوا: لَا يَبْقَى مِنْ دَرَنِهِ شَيْءٌ، قَالَ: «فَذَلِكَ مَثَلُ الصَّلَوَاتِ الْخَمْسِ، يَمْحُو اللهُ بِهِنَّ الْخَطَايَا»

    உங்களின் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது.அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கிறார். அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சி யிருக்குமா எனக்கூறுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சி யிருக்காது என நபித் தோழர்கள் கூறினர். இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: முஸ்லிம்

    மானக்கேடான காரியங்களை செய்யத் தூண்டும் ஷைத்தனின் உணர்வுகள் மற்றும் செயற்பாடுகளை விட்டும் ஒரு முஸ்லிமை தூரப்படுத்தி இறை நேசத்தின் பால் நெருக்கி வைக்கும் விடயமாகவும் இத் தொழுகை அமைய பெற்றுள்ளது.

    اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ

    தொழுகையை நிலைநாட்டுவீராக. நிச்சயமாக தொழுகை மானக்கேடானதையும் வெறுக்கத் தக்கதையும் விட்டும் தடுக்கின்றது. அல்லாஹ் வை நினைவு கூறுவது மிகப் பெரியதாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறி வான்.(29:45)

    தொழுகையாளிகள் பாவம் செய்கிறார்களே தொழுததால் எந்த நன்மையையும் காண முடியவில்லையே என்று சிலர் கேட்பதுண்டு. உண்மைத்தான். இது தொழுகையின் கோளாறு அல்ல. தொழுகையாளியின் கோளாறாகும்.

    தொழுகையை உள்ளச்சத்துடனும் அதன் உயிரோட்டத்தை உணர்ந்தும் ஓதப்படக் கூடிய வசனங்கள் மற்றும் துஆக் களின் கருத்துக்களை புரிந்தும் ஓதவேண்டும்.

    மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற கட்டளைகள் வழிகாட்டல்கள் அல்குர்ஆனில் உள்ளடக்கப் பட்டுள்ளது. நன்மை தீமைகள் விளக்கப்பட்டுள்ளது போல் நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமும் தீமை செய்பவர்களுக்கு தண்டனைகளும் கூறப்பட் டுள்ளது. இந்த யதார்த்தத்தை புரிந்து விளங்கி குர்ஆன் வசனங்களை ஓதும் போது அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுகின்ற செயற்பாடு களை அணுக முடியாமல் போகும். ஒரு நாளைக்கு ஐந்து நேரங்களும் இத்தகைய பயிற்ச்சி வழங்கப்படுவதனால் தொழுகை அவனை தூய்மைப்படுத்துகிறது பாவங்கள் அவனை விட்டும் தூர விலக்குகிறது. இதுவே தொழுகையின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்தொழுகைகளை நிறைவேற்றுவதற்கும் ஐந்து நேரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அந்த நேரங்களை முறையாகப் பேண வேண்டும்.

    إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا

    நிச்சயமாக தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது(4:103)

    صحيح مسلم (1ஃ 89)

    عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «الصَّلَاةُ لِوَقْتِهَا» قَالَ: قُلْتُ ثُمَّ أَيٌّ؟ قَالَ: «بِرُّ الْوَالِدَيْنِ» قَالَ: قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ»

    செயல்களில் (அமல்களில்) சிறந்தது எது என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். தொழுகையை அதற்குரிய நேரத்திற்கு தொழுவதாகும் என கூறினார்கள். பிறகு எது என கேட்டேன். பெற்றோருக்கு நன்மை செய்வது என்றார்கள். பிறகு எது என்று கேட்டேன். அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிவது என்றார்கள்.

    அறிவிப்பவர். இப்னு மஸ்ஊத்(ரலி) நூல்: புகாரி முஸ்லிம்.

    குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறை வேற்றாமல் பால் படுத்து வதை அல்லாஹ் கண்டிக்கிறான். அல்லாஹ் விரும்புகிற பிரகாரமே அவன் கடமையாக்கிய தொழுகை களை பேண வேண்டும்.

    فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا (59) إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ شَيْئًا

    அவர்களுக்குப் பின் (கெட்ட) வழித் தோன்றல்கள் உரு வாகினர். அவர்கள் தொழுகையை பாழ்ப்படுத்தி மனோ இச்சை களைப் பின்பற்றினர். எனவே அவர்கள் இழிவை யே சந்திப்பர்.( 19:59)

    பிரயாணத்தின் போதும், யுத்தகளத்தில் நிற்கும் போதும் இத்தொழுகையை பேணும் வழிமுறை களை அல்லாஹ் குர்ஆனில் தெளிவுப் படுத்து கிறான்.ஆகவே ஒரு முஸ்லிம் தன்னுடைய இறுதி மூச்சுவரை இத் தொழுகை கடைப் பிடித்தாக வேண்டும். நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தங்களது இறுதி நாட்களின் போது கூட இந்த உம்மத்திற்கு தொழுகையை குறித்தே எச்சரிக்கை செய்தார்கள. அவர் கள் கடுமையான சுகவீனத்தில் இருந்த போது கூட இரு நபித் தோழர்களின் தோள்பட்டைகளை பிடித்துக் கொண்டு தரையில் கால்கள் தேய்ந்த நிலையில் பள்ளிக்கு வந்து தொழுதார்கள். கடைசி நேரம் வரை ஒரு முஸ்லிம் தொழுகையை விட்டு விடக் கூடாது என்பதை நபி (ஸல்) அவர்கள் முன்மாதிரியாக இருந்து காட்டியுள்ளார்கள்.