பௌத்த மதத் தில் மாமிச உணவு - 4
பிரிவுகள்
Full Description
மதங்களின் பார்வையில் குர்பான்
PART-4
பௌத்தத்தில் மாமிச உணவு!
] Tamil – தமிழ் –[ تاميلي
M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி
2013 - 1435
اللحوم في الديانة البوذية
( القربان في نظر الأديان)-4
« باللغة التاميلية »
محمد إمتياز يوسف
2013 - 1435
மதங்களின் பார்வையில் குர்பான்
PART-4
பௌத்தத்தில் மாமிசஉணவு! M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி
பௌத்தர்கள் பசுவை ‘‘பால் தரும் அம்மா'' என அழைக் கிறார்கள். பசுவை அறுக்காது பேண வேண்டும் என்றும் பசுவை வாங்கி விடுதலை செய்வது அல்லது சுதந்திரமாக விடுவது புண்ணியக் காரியம் என்றும் தெரிவிக்கி றார்கள்.
எல்லா உயிரினங்களுக்கும் கருணை காட்டுவது பௌத்த மதத்தின் அடிப்படை எனக்கூறி மாடு அறுப்பதற்கு எதிராக இலங்கையில் போராட்டங்கள் நடாத்து கிறார்கள். மாடு அறுப்புக்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரவேண்டும் எனக் கோரி பௌத்த துறவிகள பாதை யாத்திரை செல்கிறார்கள். ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள்.
இலங்கை அரசாங்க அனுமதியுடன் (நகர சபை சட்டத்திற்கு ஏற்ப) டென்டர் மூலம் (இலட்சக் கணக்கில் பணம் செலுத்தி) கடைகள் பெற்று இறைச்சிகடைகளை முஸ்லிம்கள் நடாத்து கிறார்கள். சமீபத்தில் மாட்டிறைச்சி கடை களுக்குள் நுழைந்த பௌத்த துறவிகள் இறைச்சிகளை தூக்கி வீசி அட்டகாசம் பண்ணினார்கள். ஒரு முறை இறைச்சி கொண்டு சென்ற வாகனத்தை இடை மறைத்து அந்த வாகனத்தையும் இறைச்சியையும் நடுத்தெருவில் வைத்து கொளுத்தினார்கள். இவ்வாறான அட்டகாசங்கள் இதற்கு முன்பு இலங்கையில் நடந்ததில்லை.
இலங்கையில் முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ்லிமல்லாத ஏனைய சமூகத்தவர்களும் மாடு வளர்க்கிறார்கள். சாப்பிடு கிறார்கள். ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் இறைச்சி சாப்பிடுவ தற்கு மாட்டை அறுப்பதற்கு பதிலாக அடித்துக் கொல்கிறார்கள். இக்கொடூரத்தை முஸ்லிம்கள் செய்வதாக பௌத்த மக்கள் எண்ணுகிறார்கள். இவ்வாறான முறை முஸ்லிம்களுக்கு தடுக்கப் பட்டுள்ளது என்பதை பௌத்த மக்கள் அறியாதுள்ளனர்.
கடும் போக்குடைய பௌத்த துறவிகள் முஸ்லிம்கள் விடயத்தில் முன்பு ஒருபொழுதும் இல்லாத வகையில் இப் பிரச்சனையில் தீவிரம் காட்டுவது பலத்த சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது. உண்மையில் பௌத்தம் மாமிசம் உண்பதை தடுக்கிறதா மாமிச உணவுக் கெதிராக கடுமையான நடவடிக்ககைளை எடுக்கிறதா என்பதை நாம் ஆராய வேண்டும்.
கழுந்தேவ கமல சிரி எனும் பௌத்த துறவி தன்னுடைய பட்டப்படிப்புக்காக கண்டியில் அமைந்துள்ள பேராதெனிய பல்கலை கழகத் திற்கு ஆய்வு கட்டுரையொன்றை சமர்பித் தார். பிறகு அதனை நூல் வடிவில் வெளியிட்டார். அதன் பெயர் “மாமிச உணவு சம்பந்தமாக பௌத்த மதத்தின் நிலைபாடு” என்பதாகும். இந்நூல் மாமிச உணவு குறித்து விரிவாக பேசுகிறது.
அவர் தனது முன்னுரையில் குறிப்பிடும் போது,
“புத்தர் இறைச்சி சாப்பிட்டதில்லை. இறைச்சி உண்பது பாவம் என்று உபதேசித்தார். பௌத்தர்கள் அசைவம் உண்ண வேண்டும். இல்லையேல் அவர்கள் சில் எடுப்பது தவறாகி விடும்” என்று பல அமைப்பினர் பலவகையான பிரச்சாரங்களை மேற் கொண்டு பல்வேறு பிரசுரங்களை பங்கீடு செய்கிறார்கள். இவ்வாறான சிந்தனைகள் மஹாயானா பௌத்த பிரிவினரின் காலத்தில் ஏற்பட்டது. அவர்கள் புலால் உணவை முற்றிலுமாக தடைசெய்தனர். அதற்குக் காரணம் எல்லா உயிரினங்களும் இறந்தபின் பௌத்தத்து வத்தை அடைகிறது என்பதாகும். இந்திய சமூகத்தின் சிந்தனையால் உருபெற்ற இச் சிந்தனையை மஹாயான பிரிவினர் ஏற்படுத்திக் கொண்டனர். எனவே இவர்களது இச்சிந்தனை கோட்பாட்டுக்கு தேர வாதத்தின் மாமிச உணவு கோட்பாடு கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்குகிறது. (ஆனால்) பரிசுத்த மாமிச உணவு கௌதம புத்தர் மூலம் போதிக்கப்பட்டு தேரவாத பௌத்த துறவிகள் அந்த உணவுகளை உண்டு வாழ்ந்ததும் நன்கு தெளிவான விடயமாகும். (முன்னுரை பக்கம் iii)
பௌத்த மதத்திற்குள் ஏற்பட்ட மதப்பிரிவு களால் புலால் உணவு கூடுமா, கூடாதா என்ற கருத்து வேறுபாடு தோன்றியுள்ளதாக இந்த முன்னுரை தெளிவுப்படுத்துகிறது. அதே வேளை கௌதம புத்தர் மாமிச உணவை தடுக்க வில்லை, அவரைப் பின்பற்றியோர் மாமிசம் சாப்பிட்டுள்ளனர் என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.
தனக்காக புலால் உணவை தயாரிக்க வேண்டும் என்று கோருவது புத்தரால் தடுக்கப் பட்டுள்ளது. அதாவது எனது உணவுக்காக ஒரு மிருகத்தை அறுக்க வேண்டும் என்றுபொத்த துறவி கோர முடியாது. அத்துடன் தனக்காக இந்த மிருகம் அறுக்கப் பட்டது என்று கண்ணால் காண்பது அல்லது காதால் கேட்பது என்ற நிலையில் இருக்குமானால் மட்டுமே அந்த மாமிச உணவு புத்தரால் தடுக்கப் பட்டுள்ளது. அது அல்லாமல் வேறாருவருக்காக அறுக்கப்பட்ட புலால் உணவை உண்பது தடுக்கப் படவில்லை.
இது பற்றி மஜ்ஜம நிகாயவில் ஜீவக சூத்திரத்தில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
ரஜகஹ எனும் நகரத்தில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் மாம்பழத் தோட்டத்திற்கு கௌதம புத்தர் வந்தார் அப்போது ஒரு வைத்தியர், கௌதம் புத்தரிடம் “உங்களுக்காக (உங்கள் உணவுக்காக) மிருகம் கொல்லப் படுகிறது. அதனை அறிந்து கொண்டே நீங்கள் அந்த இறைச்சியை உண்ணுகிறீர்களாம் என்று கேள்விப் பட்டேன். இவ்வாறு பலரும் பேசுகிறார்கள் இதில் உங்களுக்கு தொடர்ப்பு உண்டா? அல்லது உங்கள் மீது போலியாக குற்றம் சுமத்து கிறார்களா?” என்று கேட்டார்.
அப்போது கௌதம புத்தர் வைத்தியரை நோக்கி, “மனிதர்கள் புத்தருக்காக மிருகத்தை கொல்கிறார்கள். அதனை அறிந்து கொண்டே புத்தர் உண்ணுகிறார் என்று யாரேனும் கூறினால் அவர் என்னால் கூறப்பட்டதை கூறுகின்ற மனிதரல்ல. அவர் அசத்தியத்தையும் போலியான குற்றச்சாட்டையும் சுமத்திய வராவார்.
எனக்காக (எனது உணவுக்காக) கொல்லப் பட்ட மிருகம் என்று கண்ணால் கண்டவை அல்லது காதால் கேட்டவை அல்லது சந்தேகிக்கப்படுபவை ஆகிய மூன்று முறை களிருந்தும் தவிர்ந்த சுத்தமான உணவை உண்ணுகிறேன். அதை உண்ணுமாறும் துறவிகளுக்கு கூறுகிறேன்.” என்று கௌதம புத்தர் பதிலளித்தார். (பக்கம் 69, 76)
சீஹ என்ற ஒரு தளபதி கௌதம புத்தருக்கும் பிரதான பௌத்த துறவிகள் சிலருக்கும் உணவு கொடுப்பதற்காக தனது பணியாளனை சந்தைக்கு அனுப்பி அங்கு விற்கப் படும் இறைச்சியை வாங்கிவரச் செய்து மாமிசத்துடன் உணவு பரிமானார். இதனை அறிந்த சிஷ்யர்கள் சீஹ தளபதி மிருகமொன்றை கொன்று துறவிகளுக்கு உணவு கொடுத்தார் எனக் கூறி வீதியில் இறங்கி பெரும் கோஷம் எழுப்பினர். அப்போது கௌதம புத்தர் துறவிகளை ஒன்று சேர்த்து தமக்காக வைக்கப்பட்ட மாமிச உணவை உண்ணக் கூடாது. எந்தவொரு துறவியும் அதனை அறிந்து கொண்டே உண்பாராயின் அவர் பாவம் புரிந்தவராவார். மேலும் தனக்காக (தனது உணவுக்காக) கொல்லப்பட்ட மிருகம் என்று கண்ணால் கண்டவை அல்லது காதால் கேட்டவை அல்லது சந்தேகிக்கப்படுபவை என்ற மூன்று நிலையிலிருந்து விடுபட்ட சுத்தமான உணவை உண்ண முடியும் என்று பௌத்தர் உபதேசித்தார். (பக்கம் 70)
இக்குறிப்பு பல விடயங்களை விளக்குகிறது. கௌதம புத்தரை பின்பற்றக் கூடியவர்கள் புலால் உணவு உண்ணக் கூடியவராக இருந்துள்ளனர்.
மாமிசம் சாப்பிடும் சீடரின் விருந்துக்கும் புத்தர் சமூகம் அளித்துள்ளார்.
புத்தருக்காக என்று விஷேசமாக அறுக்கப்படாத மாமிசத்தை உணவாக பரிமாறிய போது அதனை புத்தர் சாப்பிட்டுள்ளார். ஆனால் தனக்காக அறுக்கப்பட்ட மாமிசம் என்று அறிந்தால் அதனை உண்ணக்கூடாது என அறிவுறுத்தி யுள்ளார்.
இதன்மூலம் கௌதம புத்தர் சுத்தமான முறைகளில் மாமிச உணவு சாப்பிட்டது உண்மை என்றும் மாட்டிறைச்சி சாப்பிட்டது உண்மை என்றும் புலனாகிறது. (பக்கம்79)
மேலும் திரி பிட்டகையில் அங்குத்தர நிகாயாவில் மனாப தாய் சூத்திரத்தில் குறிப்பிடப் பட்டவாறு, புத்தர் பன்றியின் மாமிசத்தை உண்டதற்கும் ஆதாரம் உள்ளது என்று கழுந் தேவ கமலசிரி தேரர் குறிப்பிடுகிறார் (பக்கம் 85)
ஸ்ரீ தம்மாநந்த தேரர் என்பவர் மாமிச உணவு பற்றி பின்வருமாறு விளக்கப் படுத்துகிறார்.
ஒருவனுடைய சுத்தம், அசுத்தம், அவன் சாப்பிடுகின்ற உணவுகளை கவனத்தில் கொண்டு முடிவு செய்யலாகாது.
மீன், இறைச்சி போன்றவை சாப்பிடுவதால் மனிதன் அசுத்தமடைவதில்லை. ஆனால் குரோதம், வைராக்கியம், மற்றவரை அவமானப்படுத்தல் போன்ற தீய எண்ணங்க ளால் மனிதன் அசுத்த மடைகிறான்.
பௌத்தர்கள் உணவுக்காக மீன் மற்றும் இறைச்சி எடுக்கக் கூடாது என்ற கடுமையான சட்டம் பௌத்த மதத்தில் இல்லை.
வேண்டுமென்றே மிருகங்களைக் கொல்லக் கூடாது என்றும் தனக்காக மிருகங்களை கொல்லுமாறு கேட்கக் கூடாது என்றும் தான் புத்தர் செய்த எச்சரிக்கையாகும்.
எப்படி இருந்தாலும், ஒருவர் மீன் மற்றும் இறைச்சி சாப்பிடாமல் தவிர்ந்து, மரக்கறி வகைகளை உணவுக்காக எடுப்பாராயின் அது சிறந்த காரியமாகும்.
புத்தர் மரக்கறி வகைகளை மட்டும் சாப்பிட வேண்டும் என பௌத்த துறவிகளுக்கு உபதேசிக்காத அதே நேரம், அவர்கள் தமது ஆத்ம கௌரவத்தை மற்றும் பாதுகாப்புக்காக பத்து வகையான உணவுப் பொருட்களிலிருந்து தவிர்ந்திருக்குமாறு உபதேசம் செய்தார்கள். அவையாவன:
மனித மாமிசம்
யானை மாமிசம்
குதிரை மாமிசம்
நாய் மாமிசம்
பாம்பு
சிறுத்தையின் மாமிசம்
புலி(இரு நிரங்கள் சார்ந்த புலி) மாமிசம்
கரடியின் மாமிசம்
நரி மாமிசம்
சிங்கத்தின் மாமிசமாகும்.
(ஆதாரம்: What is Buddist belief சிங்கள மொழி பக்கம் 248).
பௌத்தத்தின் தெளிவான நிலைபாடு பற்றி பௌத்த தேரர்கள் உரிய ஆதாரங்களுடன் முன் வைத்தாலும் இந்த உண்மைக்கு புறம்பாக கடும் போக்குடைய பௌத்த துறவிகள் முஸ்லிம் களுக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டு முஸ்லிம்களை மிலேச்சர்களாக சித்திரக்கிறார்கள்.
இது பற்றி பௌத்த துறவியான வஜித தேரர் இப்படி கூறுகிறார்.
முஸ்லிம்கள் மாட்டிறைச்சி சாப்பிடும் மிளேச்சர் கள், பெரும் பாவிகள், மாட்டிறைச்சிகளை சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் என்று சிங்கள மக்கள் மத்தியில் சில தீவிரவாத பிக்குகள் பிரச்சாரம் செய்கிறார்கள். இதன் உண்மைக் கதை என்ன வென்று தெரியுமா? கூடுதலாக இறைச்சி சாப்பிடுபவர்கள் சிங்களவர்களாகிய நாங்களே.
முஸ்லிம்களாகிய நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில இறைச்சிகளை மட்டுமே சாப்பிடுவீர்கள். அறுக்கும் போது நோவினை களை கொடுக்காது, ஹலால் என்று தெரிந்த அனுமதிக்கப்பட்ட இறைச்சிகளை மட்டுமே சாப்பிடுவீர்கள். ஆனால் நம்மவர்கள், மயில், ஆமை, ஆடு, பன்றி, மாடு, கோழி என்று எல்லா இறைச்சிகளையும் சாப்பிடுகிறார்கள். நாற்றம் வீசும் இறைச்சி உட்பட எல்லா இறைச்சி களையும் சாப்பிடுவார்கள். கபற கொயாவை மட்டும் விட்டு வைத்துள்ளார்கள். காரணம் அதில் நச்சுத் தன்மை உள்ளது. அது மட்டும் தான் தப்பித்துள்ளது. ஆனால் முஸ்லிம்கள் அங்கும் இங்கும் கிடைக்கும் இறைச்சிகளை சாப்பிடுவதில்லை. எவ்வளவு தான் பசியிருந் தாலும், ஆசையிருந்தாலும் தேர்ந்தெடுக்கப் பட்ட இறைச்சிகளை மட்டுமே முஸ்லிம்கள் சாப்பிடு வார்கள்.
தங்களுடைய வாயிற்றுக்குள் எல்லா இறைச்சிகளையும் போட்டு விழுங்குகின்ற வர்கள் “அதோ பார். அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள்” என்று முஸ்லிம்களை நோக்கி விரல் நீட்டுவது எவ்வளவு பாவம், குற்றம்.
இறைச்சி சாப்பிடுவது நல்லதா கெட்டதா? மிருகத்தை கொல்வது நன்மையா தீமையா என நான இங்கு விபரிக்க வரவில்லை. இரு சாராரும் இறைச்சி சாப்பிடுகிறார்கள். முஸ்லிம் களாகிய நீங்கள் தேர்ந்தெடுத்த இறைச்சிகளை சாப்பிடுகிறீர்கள். எமது பௌத்த, சிங்கள மக்களுக்கு இறைச்சியை கண்டாலே இருக்க முடியாது. எனவே மாமிசம் சாப்பிடுவது சம்பந்தமாக முஸ்லிம்கள் குறித்து கூறப்படும் செய்தி மிக அநியாயமானது.” என்கிறார். (இந்த உரை கடந்த 2013 ரமழான் மாதத்தில் மஹியங்கனை என்ற பகுதியில் முஸ்லிம்கள் ஏற்பாடு செய்த நிகழ்வில் விஜித தேரோ கலந்து கொண்டு ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும்)
எது எப்படி யிருந்த போதும் புலால் உணவில் பௌத்த மதம் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கும் போது சில பௌத்த துறவிகளும் அவர்களை பின்பற்றும் ஒரு சிலரும் புத்தரின் போதனைகளுக்கு மாற்றமாகச் சென்றே கடும் போக்குடன் நடக்கிறார்கள் என்பது இன்று தெளிவாகிறது.