×
துஆவின் கேட்பது அவசியம். ஆனால் அதற்து ஒழுங்கு முறைகள் உள்ளன. அதனை நாம் பின்பற்ற வேண்டும்

    துஆவின் அவசியமும் அதன் ஒழுங்குகளும்.

    ] Tamil – தமிழ் –[ تاميلي

    M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

    2013 - 1435

    أهمية الدعاء وآدابه

    « باللغة التاميلية »

    محمد إمتياز يوسف

    2013 - 1435

    துஆவின் அவசியமும் அதன் ஒழுங்குகளும்.

    M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

    அன்புள்ள சகோதரர்களே! அல்லாஹ்வின் நல்லடியார்களே!

    அல்லாஹுதஆலா. மனிதனை தன்னை வணங்க வேண்டு மென்பதற்காக படைத்தான். வணக்கங்களையும் வணங்கும் ஒழுங்கு முறைகளையும் நபி (ஸல்) அவர்கள் மூலம் கற்றுத் தந்தான்.

    படைத்த ரப்பிடம் சரணடைவதற்கும் சங்கடங்களை எடுத்து கூறுவதற்கும் ஒதுங்கும் தளமே பிரார்த்தனையாகும்.

    தொழுதல், நோன்பு நோற்றல், ஸகாத் கொடுத்தல், ஹஜ் செய்தல், போன்ற ஏனைய வணக்கங்களை கடமையாக்கியது போலவே (துஆவையும) பிரார்த்தனையும் வணக்கமாக்கி யுள்ளான்.

    سنن أبي داود (2 76)

    عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ' الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ

    துஆ என்பது வணக்கமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் நுஃமான் இப்னு பஷீர்(ரலி) (நூல்:திர்மிதி)

    பர்ளான ஐவேளை தொழுகையை நிறைவேற்றுவது எவ்வாறு கட்டாயம் என்று தெரிந்து வைத்துள்ளோமோ அவ்வாறே அல்லாஹ்விடம் துஆகேட்பதும் கடமையான வணக்கம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    துஆவின் சிறப்பும் அவசியமும்:

    அருளாளனான அல்லாஹ் எப்போதும் எம்மை அவதானிப்ப வனாகவும் தேவைகளை நிறைவேற்றுபவனாகவும் இருக்கி றான். தனதுஅடியார்கள் தன்னிடம் கையேந்துமாறும் அதற்கு பதிலளிப்பதாகவும் உறுதிக் கூறுகிறான்.

    وَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ إِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا

    “அல்லாஹ்விடம் அவனது அருளை கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.” (4:2)

    وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ

    “நபியே! என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அருகிலே இருக்கின்றேன் எனக் கூறுவீராக. பிரார்த்திப்பவன் என்னை அழைத்தால் அழைப் புக்கு விடையளிப் பேன். எனவே அவர்கள் நேர்வழி பெறும் பொருட்டு என்னையே அழைக்கட்டும். மேலும் என்னையே நம்பிக்கை கொள்ளட்டும்.”(2:186)

    இந்த குர்ஆன் வசனமும், ஹதீஸும் அல்லாஹ்விடம் துஆ கேட்பதன் அவசியத்தையும் முக்கியத்து வத்தையும் வலியுறுத்துவதை கவனியுங்கள்.

    துஆ கேட்பதை விட்டு விடுவது பாவமாகும்.

    தன்னிடம் பிரார்த்திக்காதவர்களைக் குறித்து அல்லாஹ் கண்டிக்கிறான்.

    وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

    “என்னை அழையுங்கள் நான் உங்களுக்கு பதிலளிப்பேன். எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடிக் கின்றார்களோ அவர்கள் இழிவடைந்தவர்களாக நரகம் நுழை வார்கள் என உங்கள் இரட்சகன் கூறுகிறான். “ (40:60)

    அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஒவ்வொரு வணக்கத்தையும் நிறைவேற்றுவதற்கு ஒரு ஒழுங்கு இருப்பது போன்று துஆ கேட்பதற்கும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அதனை அறிந்து செயல்படுத்துவது அவசியம்.

    உளத்தூய்மை இருக்க வேண்டும்:

    இஹ்லாஸ் இல்லாத எந்தவொரு அமலையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை. அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்தவர் களாக தூயஉள்ளத்துடன் அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டும்.

    وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ

    “நேரிய வழியில் நின்று கலப்பற்றவர்களாக அவனுக்கே கட்டுப் பட்டு அல்லாஹ்வை வணங்கு மாறும் தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தையும் கொடுத்து வருமாறுமே தவிர அவர்கள் ஏவப் படவில்லை. இதுதான் நேரிய மார்க்கமாகும்.” (98:5)

    அல்லாஹ்வைப் புகழ்ந்து நபியின் மீது ஸலவாத்து கூறவேண்டும்.

    துஆவை ஆரம்பிக்கும்போது அல்லாஹ்வை போற்றி, நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி ஆரம்பிக்க வேண்டும்.

    سنن الترمذي ت شاكر (5 516)

    عَنْ أَبِي عَلِيٍّ الجَنْبِيِّ، عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ، قَالَ: بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ إِذْ دَخَلَ رَجُلٌ فَصَلَّى فَقَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِلْتَ أَيُّهَا المُصَلِّي، إِذَا صَلَّيْتَ فَقَعَدْتَ فَاحْمَدِ اللَّهَ بِمَا هُوَ أَهْلُهُ، وَصَلِّ عَلَيَّ ثُمَّ ادْعُهُ». قَالَ: ثُمَّ صَلَّى رَجُلٌ آخَرُ بَعْدَ ذَلِكَ فَحَمِدَ اللَّهَ وَصَلَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّهَا المُصَلِّي ادْعُ تُجَبْ». هَذَا حَدِيثٌ حَسَنٌ وَقَدْ رَوَاهُ حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنْ أَبِي هَانِئٍ الخَوْلَانِيِّ. وَأَبُو هَانِئٍ اسْمُهُ: حُمَيْدُ بْنُ هَانِئٍ، وَأَبُو عَلِيٍّ الجَنْبِيُّ اسْمُهُ: عَمْرُو بْنُ مَالِكٍ

    நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பள்ளியில்) இருக்கும் போது ஒரு மனிதர் பள்ளிக்குள் நுழைந்து தொழுது விட்டு யாஅல்லாஹ் என்னை மன்னிப்பாயாக எனக்கு அருள்புரிவாயாக என்று பிரார்த்தித்தார்.அப்போது நபி (ஸல்) அவர்கள் தொழுகை யாளியே அவசரப்பட்டு விட்டீர். நீ தொழுது விட்டு உட்கார்ந்து பிரார்த்திக்கும் போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கு ஏற்றவாறு புகழ்ந்துவிட்டு என் மீது ஸலவாத் கூறி பிரார்த் திப்பாயாக எனக் கூறினார்கள். பிறகு இன்னுமொரு மனிதர் (தொழுது விட்டு பிரார்த்திக்கும் போது) அல்லாஹ்வை புகழ்ந்து நபியின் மீதுஸலவாத்து கூறி பிரார்த்திதார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தொழுகையாளியே பிரார்த்தனை செய், பதிலளிக்கப்படும் என கூறினார்கள். அறிவிப்பவர், பழாலா இப்னு உபைத்(ரலி) (நூல்- திர்மதி. ஷெய்க் நாசிருத்தீன் அல்பானி(ரஹ்) இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்கிறார்கள்)

    அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களை கூறி கேட்டல்

    அல்லாஹ்வுக்கென்று அழகிய பெயர்கள் மற்றும் பண்புகள் இருக்கின்றன அவைகளை கூறி பிரார்த்திக்க வேண்டும்

    وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ

    “அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே அவனை பிரார்த்தி யுங்கள். அவனது பெயர்களில் திரிபு படுத்துவோரை விட்டுங்கள். அவர்கள் செய்து கொண்டிருந் தவற்றிக்காக அவர்கள் கூலி வழங்கப் படுவார்கள்.” (7:180)

    قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيًّا مَا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى

    “அல்லாஹ் என்று அழையுங்கள் அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எவ்வாறு அழைத்தாலும் அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன என்று நபியே நீர் கூறு வீராக.” (17: 110)

    சப்தத்தை உயர்த்தாமல் தாழ்ந்த குரலில் கேட்க வேண்டும்.

    அமைதியாக, நாம் எதை கேட்கிறோம் என்று உணர்ந்தவர் களாக, உள்ளத்தை ஒருமுகப்படுத்தி தாழ்ந்த குரலில் பிரார்த் திக்க வேண்டும்.

    ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ

    وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ

    “உங்கள் இரட்சகனை பணிவாகவும் மெதுவாகவும் அழையுங்கள் நிச்சயமாக அவன் வரம்பு மீறுபவர் களை நேசிக்க மாட்டான். பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின் அதில் நீங்கள் குழப்பம் விளைவிக்காதீர்கள். அச்சத்தோடும் ஆசையோடும் அவனை அழையுங்கள்.நிச்சயமாக அல்லாஹ் வின் கருணை நன்மை செய்வோருக்கு நெருக்கமாகவே இருக்கின்றது.” (7:55,56)

    وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ إِنَّ الَّذِينَ عِنْدَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَيُسَبِّحُونَهُ وَلَهُ يَسْجُدُونَ

    “உமது இரட்சகனை உம்மனதில் காலயிலும் மாலையிலும் பணிவாகவும் மெதுவாகவும் உயர்ந்த சப்தமின்றியும் நினைவு கூறுவீராக. அலட்சியம் செய்வோரில் நீரும் ஆகிவிடவேண்டாம். நிச்சயமாக உமது இரட்சகனிடம் இருப்பவர்க (ளானவானவர்க)ள் அவனை வணங்குவதை விட்டும் பெருமையடிக்க மாட்டார்கள்.அவர்கள் அவனை துதித்துக் கொண்டும் அவனுக்கே சுஜூது செய்து கொண்டும் இருக்கின்றனர்.” (7:205.206)

    كهيعص ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهُ زَكَرِيَّا إِذْ نَادَى رَبَّهُ نِدَاءً خَفِيًّا قَالَ رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُنْ بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا

    “காப். ஹா. ஐன் சாத். இது உமது இரட்சகன் தனது அடியாராகிய ஸகரீயாவுக்குப் புரிந்த அருளை நினைவு கூறுவதாகும். அவர் தனது இரட்கனை மெதுவாக அழைத்ததை (எண்ணிப் பார்ப்பீராக.) எனது இரட்சகனே எனது எழும்பு பலவீன மடைந்து விட்டது. தலை நரையால் மினுங்குகிறது. எனது இரட்சகனே உன்னை பிரார்த்திப்பதால் நான் துர்ப் பாக்கியவானாக இருந்ததில்லை என்று கூறினார்.” (19:1-4)

    அல்லாஹ்வின் ரஹ்மத்தில் நம்பிக்கை வைத்து கேட்டல்:

    துஆ கேட்கும்போது அல்லாஹ்வின் அருள் மீது நம்பிக்கை வைத்தவர்களாக ஆசை கொண்டவர்களாக கேட்க வேண்டும். என்னை படைத்த ரப்பு என்னை கைவிடமாட்டான் என்ற உறுதியான நம்பிக்கையில் துஆ கேட்கவேண்டும்

    “அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். நிச்சயமாக இறைநிராகரிப்பாளர்கள் தான் அல்லாஹ்வின் அரு ளில் நம்பிக்கை இழப்பார்கள் என்று கண்டிக்கிறான்.” (அல்குர்ஆன் 12:87)

    قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

    “தமக்குத் தானே (அனியாயம் செய்து) வரம்பு மீறிய எனது அடியார்களே. நீங்கள் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். அவன் மிக்க மன்னிப்பவன் நிகரற்ற இரக்க முடையவன் என நபியே நீர் கூறுவீராக. (39:53)

    இருகரங்களை ஏந்தி பிரார்தித்தல்

    தேவைகளை முறைப்பாடுக்ளை அல்லாஹ்விவிடம் முன்வைக் கும் போது அவசரப்படாமல் இருகரங் களையும் ஏந்தி பிரார்த் திக்க வேண்டும்.

    سنن أبي داود (2 78)

    عَنْ سَلْمَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ رَبَّكُمْ تَبَارَكَ وَتَعَالَى حَيِيٌّ كَرِيمٌ، يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ إِذَا رَفَعَ يَدَيْهِ إِلَيْهِ، أَنْ يَرُدَّهُمَا صِفْرًا حكم الألباني: صحيح

    நிச்சயமாக உங்கள் இரட்சகன் வெட்கமுள்ளவன். கொடையாளன். தனது அடியார் இரு கரம் ஏந்தி கேட்கும் போது வெறுங்கையுடன் திருப்பு அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி) (நூல்: அபூதாவுத் ஷெய்க் நாசிருத்தீன் அல்பானி (ரஹ்) இந்தஹதீஸ் ஸஹீ ஹானது என்கிறார்கள்)

    உறுதியுடன் கேட்டல் வேண்டும்.

    யா அல்லாஹ் நீ விரும்பினால் எனக்கு தந்து விடு நீ விரும்பினால் விட்டுவிடு என்ற அமைப்பில் துஆ செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இவ்வாறு பிரார்த்திப்பது இறையருளில் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் வேறொரு இறைவனிடம் தன் தேவைகளை கேட்டு பெறுவதாக கூறுவதா கவும் அமைந்து விடும். எனவே நாம் இந்த முறையில் பிரார்த்திப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும்.

    صحيح البخاري (8 74)

    عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ' لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ: اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ، اللَّهُمَّ ارْحَمْنِي إِنْ شِئْتَ، لِيَعْزِمِ المَسْأَلَةَ، فَإِنَّهُ لاَ مُكْرِهَ لَهُ '

    யாஅல்லாஹ் நீ விரும்பினால் என்னை மன்னித்து விடு நீ விரும்பினால் எனக்கு அருள் புரி என்று உங்களில் எவரும் பிரார்த்திக்க வேண்டாம். அவர் கேட்டும் விடயத்தில் உறுதியுடன் கேட்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) நூல்: புகாரி

    அவசரப்படாமல் கேட்டல் வேண்டும்:

    صحيح مسلم (4 2096)

    عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لَا يَزَالُ يُسْتَجَابُ لِلْعَبْدِ، مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ، مَا لَمْ يَسْتَعْجِلْ» قِيلَ: يَا رَسُولَ اللهِ مَا الِاسْتِعْجَالُ؟ قَالَ: يَقُولُ: «قَدْ دَعَوْتُ وَقَدْ دَعَوْتُ، فَلَمْ أَرَ يَسْتَجِيبُ لِي، فَيَسْتَحْسِرُ عِنْدَ ذَلِكَ وَيَدَعُ الدُّعَاءَ

    ஒரு அடியான் பாவமானதையோ அல்லது உறவைத் துண்டிப் பதையோ வேண்டிப் பிரார்த்திக்காத வரையிலும் அவசரப் படாத நிலையிலும் அவரது பிரார்த்தனைக்கு பதிலளிக்கப் பட்டு கொண்டே இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்.அப்போது அல்லாஹ்வின் தூதரே அவசரப்படுவது என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. நான் பிரார்த்திக்கிறேன் பதிலளிக்கப்பட வில்லை நான் பிரார்த்திக்கிறேன் பதிலளிக்கப்பட வில்லை என்று கூறி சலிப்படை வதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) நூல் : முஸ்லிம்)

    ஹராமிலிருந்து தவிர்ந்து கொள்ளல் வேண்டும்:

    அன்புள்ள சகோதரர்களே! எங்களது துஆக்கள் அல்லாஹ் வினால் அங்கீகரிக்கப்பட வேண்டு மென்று நாம் விரும்பினால் எமது வாழ்வை ஹராமிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    صحيح مسلم (2 703)

    عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا، وَإِنَّ اللهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ، فَقَالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا، إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} المؤمنون: 51 وَقَالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} البقرة: 172 ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ، يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟ '

    மனிதர்களே அல்லாஹ் தூய்மையானவன். நிச்சயமாக அவன் தூய்மையைத் தவிர வேறு எதனையும் ஏற்றுக் கொள்வதில்லை. நிச்சயமாக அல்லாஹ் இறைத்தூதர்களுக்கு ஏவியதைத்தான் மு.ஃமின்களுக்கும் ஏவியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்: தூதர்களே! நல்லவற்றிலிருந்து உண்ணுங்கள். நல்லமல்(காரியங்கள்) புரியுங்கள். (23:51) என்றும்

    விசுவாசம் கொண்டவர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய வற்றிலிருந்து நல்லவற்றையே உண்ணுங்கள் (2:172) என்றும் கூறுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு

    தூசி படிந்த, பரட்டைத் தலையுடன் நீண்ட பிரயாணத்தை மேற்கொள்ளக் கூடிய ஒரு மனிதனின் நிலையைப் பற்றி இப்படிக் கூறினார்கள்: (இந்த மனிதன் பிரயாணத்தில்) தனது இரு கரங்களையும் வானத்தை நோக்கி உயர்த்தியவனாக யா அல்லாஹ்! யா அல்லாஹ்! (என்று அழைத்து அவருடைய தேவைகளை அல்லாஹ்விடம் முறையிட்டு) பிரார்த்திக்கிறார். ஆனால், அவருடைய உணவோ ஹராமாக இருக்கிறது. அவரு டைய பானமோ ஹராமாக இருக்கிறது. அவருடைய மொத்த வாழ்வோ ஹராமாக இருக்கிறது. இதன் காரணமாக அல்லாஹ் எப்படி அவருக்கு பதிலளிப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அறிவிப்பவர்; அபூஹூரைரா(ரலி) (நூல் :முஸ்லிம்)

    திட்டுதல், சாபமிடுதலைத் தவிர்த்தல் வேண்டும்:

    துஆ ஒரு முஃமினுடைய மிகப் பெரிய ஆயுதம். ஆயுதம் துருப் பிடிக்காமல் இருக்க தீட்டி கூர்மையாக்கிக் கொள்வதுபோல் எமது துஆவும் பிரயோசனமுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

    துஆவின்போது எங்களுக்கெதிராகவோ பிள்ளைகளுக்கு எதிரா கவோ அல்லது மற்றவர்களுக்கு எதிராகவோ ஏசி, திட்டி, சபித்து துஆ செய்யக் கூடாது. நாம் யாரை சபித்து பிரார்த்தனை செய்கிறோமோ அவர் அந்த சாபத்திற்கு தகுதியுடையவராக இல்லையென்றால் சபித்தவருக்கே அந்த சாபம் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.

    அல்லாஹ்விடம் மட்டும் கையேந்துதல் வேண்டும்:

    அல்லாஹ்வின் நல்லடியார்களே! மனிதன் தனக்கு வரக்கூடிய கஷ்டங்களையும் துன்பங்களையும் அல்லாஹ்விடம் மட்டுமே முறையிட வேண்டும். எல்லா தேவைகளையும் அவனிடமே கேட்க வேண்டும்.

    அல்லாஹ்வை விட்டு விட்டு அல்லாஹ் அல்லாதவர்களிடம் (மகான்கள், அவ்லியாக்கள் என்று கபுரடியில் சென்று) பிரார்த் திப்பது அல்லாஹ்வினால் மன்னிக்க முடியாத குற்றமாகும். பெரும் பாவமாகும். இந்தப் பாவத்தை பற்றி (ஷிர்க்) இணை வைத்தல் என்று அல்லாஹ் கண்டிக்கிறான்.

    எவர் இணைவைத்தாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை ஹராமாக்கி விட்டான். அவர் ஒதுங்குமிடம் நரகம்தான் என்று கூறுகிறான். எனவே நாம் இந்த கொடிய பாவத்திலிருந்து பாதுகாத்து நித்திய ஜீவனான அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்.

    وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لَا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُونَ

    அல்லாஹ்வை யன்றி மறுமை நாள் வரை தனக்கு எந்தப் பதிலையும் அளித்திடாதோரை அழைப்பவனை விட மிகவும் வழி கெட்டவன் யார்? அவர்களோ இவர்களின் அழைப்பை உணராத வர்களாக இருக்கின்றனர். (46:5)

    மறுமைக்காகவும் பிரார்த்தித்தல்:

    நாம் துஆ செய்யும்போது இவ்வுலக வாழ்க்கைக்காக மட்டும் துஆ செய்யாமல் மறு உலக வாழ்க்கைக்காகவும் சேர்த்து துஆ செய்ய பழகிக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வே அந்த துஆவையும் கற்றுத் தருகிறான்.

    رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

    எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நல்லதை தா! மறுமையிலும் நல்லதை தா! எங்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றிவிடு.(2:201)

    துஆ அங்கீகரிக்கப்படும் நேரங்கள்:

    அன்புள்ள சகோதரர்களே! காற்றுள்ளபோது தூற்றிக் கொள்ள வேண்டும். காலம் அறிந்து பயிரிட வேண்டும் என்று கூறுவது போல் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் நேரங்களை அறிந்து செயல்பட வேண்டும்.

    அவை கீழ்வருமாறு;

    · பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடைப்பட்ட நேரம்,

    · தொழுகைக்குப் பிறகு

    · தஹஜ்ஜத்துடைய வேளையில்,

    · கஷ்டத்திற்குள்ளாகி இருக்கும் நேரத்தில்

    · அரபா தினத்தில்;

    · லைலதுல் கத்ர் இரவில்;

    · பிரயாணம் மேற்கொள்ளும் நேரங்களில்;

    · சேவல் கூவும் நேரம் போன்ற சந்தர்ப்பங்கள் சிலவற்றைக் குறிப்பிடலாம்.

    · அவ்வாறே அநியாயத்திற்குள்ளானவன் கேட் கும் துஆவும்;

    · பிள்ளைகளுக்காக கேட்கும் பெற்றோரின் துஆவும் அல்லாஹ்வினால் உடனே அங்கீகரிக் கப்படும்.

    நாம் எமது நலனில் மட்டும் அக்கறை கொண்டு பிரார்த்திக்காமல், மற்ற முஸ்லிம்களுடைய நலனிலும் அக்கறை கொண்டு பிரார்த்திக்க பழகிக் கொள்வதோடு பெற்றோர்களுக்காக பிரார்த்தனை செய்யும் பிள்ளைகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். அல்லாஹுதஆலா எங்களுடைய வணக் கங்களை ஏற்றுக் கொண்டு நல்லோர் கூட்டத்தில் எம் அனைவரையும் சேர்த்துக்கொள்வானாக.