×
முஸ்லிம்கள் பரீட்சிக்கப் படுகிறார்களா? நாம் வரம்பு மீறி வாழும் போது அல்லாஹ் எமக்கு தண்டனையாக சோதனைகளை அனுப்புவான். நாம் பொறுமையுடன் சோதனைகளை சகித்து கொண்டால் எமது பாவங்களுக்கு மன்னிப்பு அளிக்கவும், சுவர்க்கத்தில் எமது நிலையை உயர்த்தவும் இவை காரணங்களாக இருக்கவும் கூடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி.

    முஸ்லிம்கள் சோதனைக்குட்படுகிறார்கள் என நீங்கள் கருதுகின்றீர்களா?

    هل تعتقدون بأن المسلمين مبتلون؟

    < தமிழ் - تاميلية >

    ஜாசிம் இப்னு தஇயன்

    اسم المؤلف

    جاسم بن دعيان

    —™

    முஹம்மத் அமீன்

    ترجمة:

    مراجعة:محمد أمين

    முஸ்லிம்கள் சோதனைக்குட்படுகிறார்கள் என நீங்கள் கருதுகின்றீர்களா?

    ஜாசிம் இப்னு தஇயான்

    முஸ்லிம்கள் பரீட்சிக்கப் படுகிறார்கள் என நீங்கள் கருதினால், கவலைப் படாதீர்கள். உங்களைப் போன்றே லட்சக் கணக்கான முஸ்லிம்களும கருதுகிறார்கள். ஒரு காலத்தில் உலகெங்கும் ஆட்சி புரிந்த இஸ்லாமிய நாகரீகம் இன்று பாதாலத்தை நோக்கி பயணம் செய்யும் பரிதாபத்தை காணும் முஸ்லிம் அல்லாதவர்களும் அதே போல் ஆச்சரியமடைகிறார்கள்.

    يُدَبِّرُ‌ الْأَمْرَ‌ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْ‌ضِ ثُمَّ يَعْرُ‌جُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُ‌هُ أَلْفَ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ ﴿٥﴾

    “வானத்திலிருந்து பூமி வரை உள்ள காரியத்தை அவன் நிர்வகின்றான்; பின்னர் (அக்காரியம்) அது நீங்கள் எண்ணுகின்ற (உங்கள்) கணக்கின்படி ஆயிரம் வருடங்களாக அதனுடை அளவு இருக்கும் (அந்த) ஒரு நாளில் அவன் பக்கம் உயரும்.” சூரா 32;5

    ஒரு சில நூற்றாண்டுகள் நாம் அனுபவித்த துன்பம், காலத்தை படைத்தவனுக்கு ஒரு நாளை விட குறைவாக

    காட்சியளிப்பது இக்குர்ஆன் வசனத்தில் விளங்குகிறது. இவ்வாறு இருந்தும் எமது அவசர சுபாவம் எம்மை முறையிட வைக்கிறது. சிறந்த நேர்வழி காட்டும் நூலாகிய குர்ஆனை உரிமை கொண்டாடும் மக்களாகிய நாம், இவ்வாறு மிகவும் கஷ்டமான நிலையில் வாட வேண்டிய நிலையில் இருப்பதற்கு காரணம் என்ன என்று புரிந்துக் கொள்ள முடியாது தவிக்கிறோம். மத்திய கிழக்கிலிருந்து மத்திய ஆசியா வரை, ஆபிரிக்கா முதல் ஆசியா வரை உள்ள ஒரு சில நாடுகளை தவிர, ஏனைய முஸ்லிம் தேசங்கள் அனைத்திலும், மார்க்கம், பொருள் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு எதிரான கொடுங் கோல் தலைவர்கள் ஆட்சி புரிகின்றனர். இந்நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் பொதுவாக வன்முறை, பயம், முன்னேற்றத்தில் தேக்கம் மற்றும் விரக்தி போன்ற சுழற்சியில் சிக்கியுள்ளார்கள். சில வருடங்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், அரபு சமுதாயங்களின் பின்தங்கிய அவல நிலை பற்றி சுட்டிக் காட்டப்பட்டது. அரபு உலகம் ஒரு வருடத்தில் வெளியிட்ட மொத்த நூல்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக ஸ்பெயின் தேசம் வெளியிட்டது என்பதை உதாரணமாக் கூறலாம். “இக்ரா” வாசி என்ற வார்த்தை யுடன் ஆரம்பித்த மதத்தை பின்பற்றும் முஸ்லிம்களுக்கு இதை விட ஒரு கேவலம் இருக்க முடியாது. கொடும்கோல் தலைவர்களின் ஆட்சியில் சீர் குலைந்த

    சமூகங்கள் மூலம் நாம் கடுமையாக சோதிக்கப் படும் இப்பரிதாபமான நிலையின் விடிவு இன்னும் எமது கண்களுக்கு தெரியவில்லை.

    எமது இந்த நிலைக்கு யார் பொறுப்பு?​

    ​சோதனைகளை மக்கள் எப்போதும் கெடுதலாகத்தான் கருதுவார்கள். சில வேளை உண்மையாக இருக்கலாம். நாம் வரம்பு மீறி வாழும் போது அல்லாஹ் எமக்கு தண்டனையாக சோதனைகளை அனுப்புவான். அதே நேரம், நாம் பொறுமையுடன் சோதனைகளை சகித்து கொண்டால் எமது பாவங்களுக்கு மன்னிப்பு அளிக்கவும், சுவர்க்கத்தில் எமது நிலையை உயர்த்தவும் இவை காரணங்களாக இருக்கவும் கூடும். ஆனால் சோதனை யில் இருந்து தப்பிக்கவே முடியாது என்பது தான் உண்மை. குர்ஆனின் மிகத் தெளிவான வசனங்களில் அல்லாஹ் இவற்றை குறிப்பிடுகிறான்.

    وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَ‌اتِ ۗ وَبَشِّرِ‌ الصَّابِرِ‌ينَ ﴿١٥٥﴾ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَ‌اجِعُونَ ﴿١٥٦﴾ أُولَـٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّ‌بِّهِمْ وَرَ‌حْمَةٌ ۖ وَأُولَـٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ ﴿١٥٧﴾

    “விசுவாசம் கொண்டோரே! பயம் மற்றும் பசியில் இருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள், கனிக(ளின் விலைச்சல்)கள் ஆகியவற்றில் குறைவைக் கொண்டும் நிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம்; மேலும் (நபியே! இவற்றைப்) பொறுத்துக் கொண்டவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீறாக! அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுக்கு ஏதேனும் ஒரு துன்பம் பீடித்தால், ‘நிச்சயமாக நாம் அல்லாஹ் வுக்காகவே இருக்கின்றோம்; நிச்சயமாக நாம் அவன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கின்றோம்.’ என்று கூறுவார்கள். அத்தகையோர் - அவர்கள் மீதுதான் அவர்களுடைய இரட்சகனுடமிருந்து நல்லாசிகளும், கிருபையும் ஏற்படுகின்றன. மேலும், அவர்கள் தாம் நேர் வழியையும் பெற்றவர்கள்.” 2 - 155 முதல் 157 வரை.

    இந்த விஷயத்தை பற்றி நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் மேலும் விளக்கம் கொடுக்கிறது.

    ஒரு மூமினின் விவகாரங்கள் மிக்க ஆச்சரிய மானவை. அவனுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் அவன் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கிறான், அது அவனுக்கு நல்லது. அவனுக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் அவன் பொறுமையுடன் இருக்கிறான். இதுவும் அவனுக்கு நல்லது. ஆதாரம் முஸ்லிம்.

    இதே செய்தியை பின் வரும் மேலும் இரண்டு ஹதீஸ்கள் உறுதிப் படுத்துகின்றன.

    விசுவாசம் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்கள் உடலில், குடும்பத்தில் மற்றும் சொத்துக்களில் தொடச்சியாக துன்பங்கள் ஏற்பட்டுக் கொண்டே யிருக் கும், அவர்கள் எந்த வித பாவங்களின் பாரமுமின்றி அல்லாஹ்வை சந்திக்கும் வரை. ஆதாரம் புஹாரி.

    அல்லாஹ் ஒருவனுக்கு நன்மைசெய்ய நாடினால், அவனை பலவேறு இடுக்கன்களுக்கு ஆளாக்குவான். ஆதாரம் அஹ்மத்.

    ஒருவருக்கு எல்லாமே நலமாக அமையும் போது, - உடலாரோக்கியம், பெற்றோருக்கு கீழ்படிந்து வாழ்வில் வெற்றி பெற்ற பிள்ளைகள், நிறைய சொத்துக்கள் – என்பன இருப்பின், தன்னுடைய செல்வங்களுக்காக அல்லாஹ்வுக்கு நன்று கூற மறக்க நேர்ந்தால், அதே செல்வங்கள் உண்மையில் அவருக்கு பெரும் சோதனையாக மாறக் கூடும். ஆனால் வசதியோ அல்லது கஷ்டமான வாழ்க்கையோ எதுவாயினும், அவை அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நிஃமத்துகளே. ஆகையால், வசதியும், கஷ்டமும் கலந்த எமது வாழ்க்கை அல்லாஹ்வினால் ஒரு நோக்கத்துக்காகவே அருளப் படுகின்றது என்று சுருக்கமாக கூறலாம்.

    إِن يَمْسَسْكُمْ قَرْ‌حٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْ‌حٌ مِّثْلُهُ ۚ وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللَّـهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ ۗ وَاللَّـهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ ﴿١٤٠﴾

    “உங்களுக்கு (உஹுது போரில்) காயம் ஏற்பட்ட தென்றால், வந்த ஜனங்களுக்கும் அதே போன்று (பத்ரில்) காயம் ஏற்பட்டது. அந்த (சோதனையான) நாட்களை மனிதர்களுக்கிடையில் மாறி மாறி வரும்படி நாம் செய்கின்றோம். ஏனென்றால், (உங்களில்) உண்மையில் விசுவாசம் கொண்டவர்கள் யரென்று அல்லாஹ் அறி(வித்து விடு)வதற்காகவும், உங்களில் தியாகிகளை எடு(த்தறிவி)ப்பதற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்).மேலும் அனியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.” சூரா 3; 140

    இன்னுமொரு வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு அறிவிக்கிறான்.

    أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللَّـهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَيَعْلَمَ الصَّابِرِ‌ينَ ﴿١٤٢﴾

    (விசுவாசம்கொண்டோரே!) உங்களில் (அல்லாஹ்வுக் காக) யுத்தம் செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் பரிசோதித்து அறியாமலும், இன்னும் (துன்பங்களை)

    பெறுமையுடன் சகித்துக் கொள்பவர்கள் யார், என்பதை அவன் அறியாமலும், நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா?” சூரா 3; 142.

    எம்மை சுற்றி இன்று நடைபெறும் சம்பவங்களை நோக்கும் போது, எராளமான முஸ்லிம்கள் எமக்கு ஏற்படும் சோதனைகளை தவறான முறையில் கையாளு வதை போல் தோன்றுகிறது. அவர்கள் மற்றவர்களை பிழை கூறி குற்றம் சாட்டுகிறார்கள். சமுதாயத்தில் கொந்தளிப்பு ஏற்படும் போது பதவிக்காகவும், பணத்துக்காகவும், தம்மையும் தமது உறவுகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது முஸ்லிம் சகோதரர்களை காட்டிக் கொடுக்கிறார்கள். ஒரு சில சந்தர்ப்பங்களில், தமது முஸ்லிம் சகோதரனின் எதிரியாக மஸ்ஜிதுகளை தாக்கவும், சத்தியத்தின் பக்கம் குரலெழுப்பிய மார்க்க அறிஞர்களை கைது செய்யவும், அவர்களை கொலை செய்யவும் செயல் புரிகிறார்கள்.

    இந்த அறிவீனமான சம்பவங்கை பற்றி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரித்தார்கள்.

    “கொலை செய்பவன், தான் ஏன் அந்தக் கொலையை செய்தான் என்றோ, கொலை செய்யப் பட்டவன், தான் ஏன் கொல்லப்பட்டான் என்றே

    அறியாத ஒரு (இருண்ட) காலம் வரும்.” ஆதாரம் முஸ்லிம்.

    இராக், அப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில் நடைபெறும் சம்பவங்கள் எமக்கு இதனை நினைவு படுத்துகின்றதா?

    இன்று நடைபெறும் சோதனைகளக்கு முக்கிய காரணங்கள் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள ஒற்றுமை யின்மையும், ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கம் தன்மையும் தான். மற்றவர்கள எம்மை அழிப்பதில் உறுதியாக கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறார்கள் என்பதை விட எமக்கு எதிராக நாமே செயல் புரிவது எமது அழிவுக்கு காரணாக அமைந்துள்ளது.

    அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?

    முதலாவதாக, எவ்வளவு துன்பங்கள் நேர்ந்தாலும் சத்தியத்தின் பாதையில் நாம் ஒன்று பட்டு செயல் புரிய வேண்டும்.

    முஸ்லிம்கள் மீது முஸ்லிம்களால் ஏற்படும் அழிவும் முஸ்லிம்களுக்கு எதிராக உலகமெங்கும் இயற்றப்படும் கொடுமையான சட்டங்களும், தற்காலிகமானது, சில காலத்தின் மறைந்து விடும் என நாம் நினைக்கக் கூடாது. இதனை விட கொடூரமாக ஏனைய சமுதாயங்கள்

    சோதனைகளுக்கு ஆளாக்கப் பட்டன என குர்ஆன் எமக்கு அறிவிக்கிறது.

    أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم ۖ مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّ‌اءُ وَزُلْزِلُوا حَتَّىٰ يَقُولَ الرَّ‌سُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَىٰ نَصْرُ‌ اللَّـهِ ۗ أَلَا إِنَّ نَصْرَ‌ اللَّـهِ قَرِ‌يبٌ ﴿٢١٤﴾ أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم ۖ مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّ‌اءُ وَزُلْزِلُوا حَتَّىٰ يَقُولَ الرَّ‌سُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَىٰ نَصْرُ‌ اللَّـهِ ۗ أَلَا إِنَّ نَصْرَ‌ اللَّـهِ قَرِ‌يبٌ ﴿٢١٤﴾

    (விசுவாசம் கொண்டோரே!) உங்களுக்கு முன் செய்று விட்டார்களே அத்தகையவரின் உதாரணம் (சோதனை நிறைந்த நிலைகள்) உங்களுக்கு வராத நிலையில் நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா? அவர்களை வறுமையும், பிணியும் பீடித்தன. தூதரும், அவருடன் விசுவாசம் கொண்டவர்களும், அவ்வாஹ்வுடைய உதவி எப்போது (வந்து சேரும்) என்று கூறும் வரை அவர்கள் (இன்னல்கள் பலவற்றால்) அலைகழிக்கப் பட்டு விட்டார்கள். ‘தெரிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக மிகச் சமீபத்திலிருக்கிறது’ (என்று கூறப்பட்டது) சூரா 2; 214.

    சஹாபி ஒருவர் முஸ்லிம்களுக்கு மக்காவில் ஏற்படும் பெரும் துன்பங்களைப் பற்றி ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டபோது அன்னார் அதிருப்தி அடைந்தார்கள். ஏனைய நபிமார்களை பின்பற்றிய மக்களுக்கு நேர்ந்த துன்பங்களை பற்றி நபி (ஸல்) அவர்கள் அந்த சந்தர்ப்பத்தில் அந்த சஹாபிக்கு எடுத்துக் கூறினார்கள்.

    கடந்த சில நூற்றாண்டுகளில் முஸ்லிம்களுக்கு பெரும் வளர்ச்சியும், வசதிகளும் கிடைத்தன என்பது உண்மை. ஆனால் முஸ்லிம்கள் சத்திய வழியை விட்டு நீங்கி, பெரும் மாட மாளிகை கட்டுவதிலும், கீழ்தரமான ஆசைகளின் பின்னால் சென்று தம்மை இழிவு நிலைக்கு தாமே இட்டுச் சென்றார்களோ அப்போது, அவர்கள் தமக்கு முன் சென்ற சமூகத்தின் அதே விதியை தாமும் அழைத்துக் கொண்டார்கள்.

    முஸ்லிம்களை அல்லாஹ் இவ்வாறு எச்சரிக்கை செய்கிறான்.

    وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّـهَ فَأَنسَاهُمْ أَنفُسَهُمْ ۚ أُولَـٰئِكَ هُمُ الْفَاسِقُونَ ﴿١٩﴾

    (விசுவாசிகளே!) அல்லாஹ்வை (நிராகரித்து அவனை முற்றிலும்) மறந்து விட்டார்களே அத்தகைய

    வர்களை போன்று நீங்களும் ஆகி விடவேண்டாம்; ஏனென்றால், (அல்லாஹ்வாகிய) அவன் அவர்கள் தங்களையே மறக்குமாறு செய்து விட்டான். அத்தகையோர் (அல்லாஹ்வின் வழிபாட்டிலிருந்து) வெளியேறியவர்(களான பாவி)கள் ஆவார்கள். சூரா 59;19

    அப்படிப்பட்ட மக்களை அல்லாஹ்வுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் என்று அல்லாஹ் அழைக்கிறான். அவர்களுக்கு இழைக்கப் படும் தண்டனைகள் அவர்கள் செய்துக் கொண்ட குற்றங்களுக்காகவே என்று கூறும் அல்லாஹ்,

    تِلْكَ آيَاتُ اللَّـهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ ۗ وَمَا اللَّـهُ يُرِ‌يدُ ظُلْمًا لِّلْعَالَمِينَ ﴿١٠٨﴾

    “மேலும், அல்லாஹ் அகிலத்தார்க்கு அநீதி (செய்ய) நாட மாட்டான்.” 3;108 என்று உறுதி கூறுகிறான்.

    எனினும், அவனிடமிருந்து காலத்துக்கு கட்டுப் படாத ஒரு வாக்குறுதி - அல்லாஹ்வுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தை நிறைவு செய்பவர்களுக்கு வெற்றி அளிப்பதாக அளித்த வாக்குறுதி என்றென்றும் உள்ளதாக அல் குர்ஆன் கூறுகிறது.

    وَعَدَ اللَّـهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْ‌ضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْ‌تَضَىٰ لَهُمْ

    وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا ۚ يَعْبُدُونَنِي لَا يُشْرِ‌كُونَ بِي شَيْئًا ۚ وَمَن كَفَرَ‌ بَعْدَ ذَٰلِكَ فَأُولَـٰئِكَ هُمُ الْفَاسِقُونَ ﴿٥٥﴾

    “உங்களில் விசுவாசம் கொண்டு நற்கருமங்களை யும் செய்கிறார்களோ, அத்தகையவர்களுக்கு முன்னர் சென்றவர்களை அதிபதிகளாக்கிய பிரகாரமே, இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதிகளாக்கி வைப்பதாகவும், அவன் அவர்களுக்குப் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக உறுதிப் படுத்தி வைப்பதாகவும், அவர்களுடைய பயத்திற்குப் பிறகு அமைதியைக் கொண்டு நிச்சயமாக மாற்றி விடுவதாகவும் - அல்லாஹ் வாக்களிக்கின்றான். அவர்கள் எனக்கு யாதொன்றையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள். இதன் பின்னர் (உங்களில்) எவர் நிராகரிப்பவராகி விட்டாரோ நிச்சயமாக அவர்கள்தாம் (அல்லாஹ்வின் கட்டளையை ஏற்காத) பாவிகள்.” சூரா 24;55

    அடுத்ததாக, முஸ்லிம்கள் சோதனைக்கு ஆளாக்கப் படுகிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டால் அது நல்லதொரு ஆரம்பமாகும். இந்த அறிவு எமது யதார்த்த நிலையை நேர்மையாக ஏற்றுக் கொள்ள உதவியாகும். அதற்கு அடுத்து ‘நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கை, எமக்கு இந்த சோதனை ஏற்பட காரணம் என்ன?’ என

    ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்வது. சோதனைகள் அல்லாஹ்வின் கட்டளைப்படி ஏற்படுகின்றன என்பது போன்று எமது நடவடிக்கைகளும் அல்லாஹ்வின் கட்டளையில் ஒரு பகுதியாகும். எல்லாவற்றையும் விட நாம் இதனை விளங்கிக் கொண்டு பொறுமையுடனும், விடா முயற்சியுடனும் தொடர்ந்து செயல் பட்டால் அச்சோதனைகள் எம்மை சுத்திகரிப்பு செய்வதற்கும், எமது பாவங்களுக்கு மன்னிப்பளிக்கவும், எமது நிலையை உயர்த்தும் படிக்கட்டாகவும் அமையும்.

    சோதனைகளில் அடங்கியுள்ள நன்மைகள் எப்படி யிருப்பினும், நாம் எம்மை நேர்வழி படுத்தும் முயற்சியை நிறுத்தக் கூடாது. இவ்வாறு செய்யும் முயற்சிகள் அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணாக மாறாது. ஒரு முஸ்லிம் தமக்குள் இருப்பதை மாற்றிக் கொள்ளும் வரை அல்லாஹ் அவர்களது நிலையை மாற்ற மாட்டான் என்பதை முஸ்லிம்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.

    பாமர மக்கள் தமது அன்றாட வாழ்வில் கஷ்டப்படும் போது, அவற்றை கண்காணிக்கும் முஸ்லிம்கள், தமது இறை பக்தியையும் மீறி முஸ்லிஹூன் என்ற நிலைக்கு மாறி செயல் பட வேண்டும். அதாவது தமது சமுதாயத்தின் நிலையை முன்னேற்ற முயற்சி செய்ய வேண்டும்.

    முஸ்லிம்களின் இன்றைய சமூக நிலை அந்தகார இருட்டைப் போன்று தோன்றினாலும், அல்லாஹ் எமக்கு அளித்த வாக்குறுதியை நாம் நினைவு படுத்தி ஆறுதல் பெறவேண்டும்.

    فَإِنَّ مَعَ الْعُسْرِ‌ يُسْرً‌ا ﴿٥﴾ إِنَّ مَعَ الْعُسْرِ‌ يُسْرً‌ا ﴿٦﴾

    “ஆகவே நிச்சயமாக கஷ்டத்துடன் இலேசு இருக்கிறது. நிச்சயமாக கஷ்டத்துடன் இலேசு இருக்கிறது.” சூரா 94;6.

    முடிவுற்றது.