×
மாமிச உணவு பற்றி வெவ்வேறு மதங்களின் கருத்துக்கள்

    மதங்களின் பார்வையில் குர்பான் இஸ்லாத்தில் புலால் உணவு

    ] தமிழ் – Tamil –[ تاميلي

    M.S.M. இம்தியாஸ் யூசுப்

    2013 - 1434

    الأضحية في أنظار الأديان

    « باللغة التاميلية »

    إمتياز يوسف

    2013 - 1434

    மதங்களின் பார்வையில் குர்பான்

    இஸ்லாத்தில் புலால் உணவு

    அனுமதிக்கப்பட்டவையும் தடுக்கப்பட்டவையும்.

    PART- 01

    எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி

    இந்த உலகில் மனிதன் உயிர் வாழ்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தேவையான அவசியமான வை அல்லாஹ்வினால் படைக்கப்பட்டுள்ளன. எதை உண்ண வேண்டும் எதை உண்ணக்கூடாது என்றும் விளக்கப்பட்டுள்ளது.

    மாமிசங்களைப் பொறுத்தவரை ஆடு, மாடு, ஓட்டகம் போன்றவை உண்ண அனுமதிக்கப் பட்டுள்ளது. கோரைப்பற்களால், நகங்களால் கீறி கிழிக்கும் (வராண்டும் நகமுடைய) மிருகங்க ளும், நச்சுத்தன்மை கொண்ட வன விலங்குகள், பறவைகள’, ஊர்வனவைகள் ஆகியவைகள் உண்பதற்கு தடுக்கப்பட்டுள்ளன.

    சுகாதாரத்திற்கும், போஷாக்கிற்குமுரிய உணவு வகைகளே மனிதனுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதுதான் இதன் சாரம்சமாகும். இந்த அடிப் படையிலேயே புலால் உணவு அல்லது சைவ உணவு பற்றி இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது.

    புலால் உணவு பாலூட்டும் தாய்மாருக்கும் பிள் ளைகளுக்கும் அவசியமானது என்று மருத்து வர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வாறே இரத்தத்தில் புரதம் வளர்ச்சி அடைவதற்கும் புலால் உணவு அவசியமென கண்டறியப்பட் டுள்ளது.

    மனிதன் வாழ்வதற்காக அனைத்தும் பயன்படுத் தப்படுவது போல் மனித வாழ்வுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடியவைள் அழிக்கப்படுகின்றன. விவசாயம் செய்யும் போது கூடிய அறுவடை பெற கிருமிகள் அழிக்கப்படுகின்றன. பறவைக் காய்சசலின் போது இலட்சக் கணக்கான கோழிகள் கொள்ளப் பட்டன. வயிற்றில் உள்ள பூச்சுக்களை அழிப்பதற்காக நான்கு மாதத்திற்கு ஒரு முறை மருந்து பாவிக்கப்படுகிறது. டெங்கு மெலேரியா நோய்கள் தொற்றாமல் விஷ மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. பரிசோதனை கள் மேற்கொள்வதற்காக மிருகங்கள் அடைத்து வைக்கப்பட்டு பிறகு வெட்டப் படுகின்றன இப்படியாக பல முயற்ச்சிகள் மேற்கொள்ளப் படும் போது அவைகளைப்பார்த்து எவரும் கருணையில்லாதவர்கள் கொடூரமான உள்ளம் படைத்தவர்கள் என்று விமர்சிப்பதில்லை. மனிதன், மனிதனுக்கு தீங்கு விளைவிப்பவனாக இருந்தால் அல்லது தீவிர வாதியாக இருந்தால் அவனை கொல்வது பாவமல்ல என்று விவாதிக் கிறார்கள். செயற்படுத்துகிறார்கள். இதற்காகவே நவீன் ஆயுதங்கள் கண்டுப்பிடிக்கப்படுகின்றன. பயன்படுத்தப்படுகின்றன.

    கோழி, ஆடு, பன்றி, பாம்பு, எலி உட்பட அனைத்து வகையான மிருகங்களையும் உணவுக்காக வெட்டும் போது கருணையை பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் மாட்டை உணவுக்காக அறுத்தால் மட்டும் கருணை யில்லாதவர்கள் என்று பதறுகிறார்கள்.

    ஒருவருக்கு பாம்பு கடவுளாகவும் இன்னு மொருவருக்கு பசுகடவுளாகவும் மற்றொரு வருக்கு சிங்கம் கடவுளாகவும் பிறிதொரு வருக்கு கோழி கடவுளாகவும் இருக்கலாம். அவர் கடவுளாக எடுத்துக் கொண்டதை மற்றவர் களும் கடவுளாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறமுடியாது என்பது போல் நான் உண்ணும் உணவைத்தான் நீங்களும் உணவாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற கூறவும் முடியாது.

    பசுவின் பால் பசுவின் கன்றுக்குரியது கோழியின் முட்டை அதன் குஞ்சிக்குரியது. முட்டையை எடுத்து சாப்பிடுவதானால் ஒரு உயிர் உருவாகுவது (கோழி குஞ்சு பிறப்பது) நசுக்கப் படுகிறது என்பது பற்றியோ அல்லது பசுவின் பாலை எடுத்து அருந்துவதன் மூலம் கன்றுக் குரிய பாலை பறித்து பருகுகிறோம் என்பது பற்றயோ அதன் மூலம் உயிர்வதை செய்கிறோம் என்பது பற்றியோ இவர்கள் சிந்திப்ப தில்லை. அதனை பாவமான காரியமாக காண்பதுமில்லை இந்த இடத்தில் தான் வாழ்வதற்கு இப்போஷாக்கு அவசியம் என கூறி நடைமுறைப் படுத்துகிறார்கள். இதே நிலை தான் இறைச்சியிலும் உள்ளது என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள மறந்து விட்டார்கள்.

    கண்டிப்பாக ஒருவர் புலால் உண்டே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் இஸ்லாத்தில் இல்லை என்பது போல் எந்த ஒரு மதமும் புலால் உணவை தடுக்கவில்லை என்பது தான் உண்மை. மதத் தின் அடிப்படையை தாண்டி சிலர் தீவிரமாக மாமிச உணவை கண்டிக்கி றார்கள் தடுக்கிறார்கள்.

    அனுமதிக்கப்பட்ட பிராணிகளை மாத்திரம் முறையாக அறுத்து சாப்பிடுமாறு இஸ்லாம் கூறுகிறது.

    அடித்து கொல்வது, நசுக்கி கொல்வது, உயரத்திலிருந்து தள்ளி விட்டு கொல்லுவது போன்ற முறையில் பெறும் மாமிசத்தை சாப்பிடுவது தடையாகும் . இஸ்லாம் கூறும் இந்த அடிப்படைகளை கவனியுங்கள்.

    وَالْأَنْعَامَ خَلَقَهَا لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ (5) وَلَكُمْ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسْرَحُونَ

    கால் நடைகளையும் அவனே உங்களுக்காகப் படைத்தான். அவற்றில் குளிரிலிருந்து பாதுகாப்பும் மற்றும் பல பயன்களும் இருக் கின்றன. இன்னும் அவற்றிலிருந்து நீங்கள் உண்ணவும் செய்கிறீர்கள்.(16;7)

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ أُحِلَّتْ لَكُمْ بَهِيمَةُ الْأَنْعَامِ إِلَّا مَا يُتْلَى عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّي الصَّيْدِ وَأَنْتُمْ حُرُمٌ إِنَّ اللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ

    நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறை வேற்றுங்கள். உங்களுக்கு கூறப்படுவதைத் தவிர கால்நடைகள் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளன. (5:01).

    حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَنْ تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ذَلِكُمْ فِسْقٌ

    தாமாக செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை. உங்களுக்கு தடைசெய்யப் பட்டுள்ளன. கழுத்து நெறித்து கொல்லப் பட்டவை, அடித்து கொல்லப்பட்டவை, விழுந்து செத்துப் போனவை தமக்கிடையே மோதிக் கொண்டு மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து அவற்றை உயிர் போகும் முன்) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன. (5:03)

    பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும் தடுக்கப் பட்டுள்ளன. (5:03)

    يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَمَا عَلَّمْتُمْ مِنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللَّهُ فَكُلُوا مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ

    தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை? என்று நபியே அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். தூய்மை யானவைகளும் வேட்டையாடும் பிராணிகளில் எவற்றுக்கு நீங்கள் பயிற்சியளித்து அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கற்றுக் கொடுக்கிறீர்களோ, அவை (வேட்டை யாடியவை)களும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளன என நபியே நீர் கூறுவீராக.

    அவை உங்களுக்காக பிடித்துக் கொண்டு வந்ததை உண்ணுங்கள். (அதை வேட்டைக்கு அனுப்பும்போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயாக அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன் (5:04).

    “இறகு இல்லாத அம்பின் மூலம் வேட்டை யாடப்பட்ட பிராணி பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் பிராணி அம்பின் முனையால் கொல்லப் பட்டிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டுக் கொல் லப்பட்டிருந்தால் அது தடியால் அடித்து கொல் லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே) அதை உண்ணாதீர்கள் என்று பதிலளித்தார்கள்.

    நான் அவர்களிடம் (பயிற்சியளிக்கப்பட்ட) நாய் வேட்டையாடிய பிராணி பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள் உங்களுக்காக அது கவ்விக் கொண்டு வருவதை நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில் (பழக்கப்பட்ட) நாய் (வேட்டை பிரா ணியைக்) கவ்விப் பிடிப்பதும் (அதை முறைப் படி) அறுப்பதாகவே அமையும்.

    உங்களது நாயுடன் அல்லது உங்கள் நாய்களுடன் வேறொரு நாயையும் நீங்கள் கண்டு அந்த நாயும் உங்களது நாயுடன் சேர்ந்து வேட்டைப் பிராணியைப் பிடித்துக் கொன்று இருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால் அதை உண்ணாதீர்கள். ஏனெனில் நீங்கள் அல்லாஹ் வின் பெயரைச் சொன்னது. உங்களது நாயை அனுப்பிய போது தான் வேறொரு நாய்க்கல்ல என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரழி)இ நூல்: புகாரி).

    நான் எனது நாயை (வேட்டைக்காக) அவிழ்த்து விட்டேன் (அது வேட்டையாடிக் கொண்டு வரு வதை நான் சாப்பிடலாமா?) என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள்இ நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அந்த நாயை அவிழ்த்து விட்டிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டு வருவதை) நீங்கள் சாப்பிடுங்கள் என்று பதிலளித்தார்கள்.

    அந்த நாய் வேட்டைப் பிராணியை தின்றி ருந்தால்...? என்று கேட்டேன். அதற்கவர்கள் அப் படியென்றால் அதை உண்ணாதீர்கள். ஏனெனில் அது உங்களுக்காக அதைக் கொண்டு வர வில்லை. தனக்காகவே கவ்விப் பிடித்திருக் கிறது என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் அதீ பின் ஹாத்திம் (ரழி)இ நூல்: புகாரி).

    அல்லாஹ்வின் நபியே! நாங்கள் வேதம் கொடுக் கப்பட்ட ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் இருக் கிறோம். அவர்களுடைய பாத்திரத்தில் நாங்கள் சாப்பிடலாமா?

    மேலும் வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் நாங்கள் இருக்கின்றோம். நான் எனது வில்லாலும் பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சியளிக்கப் பட்ட எனது நாயை ஏவியும் வேட்டையாடுவேன். (இவற்றில்) எது எனக்கு ஆகுமானது? என்று கேட்டேன்.

    அதற்கு நபியவர்கள் நீங்கள் குறிப்பிட்ட வேதக் காரர்களின் (பாத்திரத்தில் உண்ணும்) விஷயம் எப்படியெனில் அவர்களின் பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்கு கிடைத்தால் அவர் களின் பாத்திரத்தில் நீங்கள் சாப்பிடாதீர்கள். வேறு பாத்திரம் கிடைக்காவிட்டால் கழுவி விட்டு அவர்களின் பாத்திரங்களில் உண் ணுங்கள்.

    அல்லாஹ்வின் பெயர் கூறி உங்கள் வில்லால் நீங்கள் வேட்டையாடிய பிராணியை உண்ணுங் கள். பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயை அல் லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி வேட்டை யாடிய பிராணியையும் சாப்பிடுங்கள்.

    பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயை அனுப்பி நீங்கள் வேட்டையாடிய பிராணியை (அது இறப்பதற்கு முன்பாக) நீங்கள் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்க முடிந்தால் அதைச் சாப் பிடுங்கள் என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸஅலபா (ரழி)இ நூல்: புகாரி 5478).

    விலங்குகளில் கோரைப் பற்கள் உடையவற்றை உண்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல் புகாரி-5527)

    தொடரும் இன்ஷா அல்லாஹ்

    (அடுத்து ஹிந்து மதத்திலுள்ளவைப பற்றி பார்ப்போம்.)