×
சுன்னா என்பது குர்ஆனின் விளக்கவரை என்பதால் அதன் முக்கியத்துவம் பற்றிய விளக்கம்

    சுன்னா குர்ஆனின் விரிவுரை

    ] தமிழ் – Tamil –[ تاميلي

    இம்தியாஸ் யூசுப்

    2013 - 1434

    السنة النبوية تفسير للقرآن الكريم

    « باللغة التاميلية »

    إمتياز يوسف

    2013 - 1434

    'சுன்னா'' அல்குர்ஆனின் விளக்கவுரை

    السنة وحي من الله

    எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி.

    அல்குர்ஆன் அல்லாஹ்வினால் அருளப்பட்டது போலவே சுன்னாவும் வஹியாக அருளப்பட்டது. குர்ஆனுக்கு விளக்கவுரையாக தூதர் நபி(ஸல்) அவர்களுடைய சொல்லும் செயலும் அங்கீகாரமும் அமைந்துள்ளது. குர்ஆனை பின்பற்றுவது போல் சுன்னாவையும் பின்பற்றவேண்டும். என அல்லாஹ் கூறுகிறான்.சஹாபாக்கள் இவ்வரண்டையும் முழுமையாக பின்பற்றினார்கள. ஆனால் பின்னால் வந்தவர்கள் சுன்னா அவசியம் இல்லை குர்ஆன் மட்டும் போதும் என வாதிட்டு வழி தவறிப் போனார்கள். இவர்களுடைய தவறான வாதங்களுக்கும் குர்ஆனைக்கொண்டே தெளிவாக பதிலளிக்க கடப்பாடு உள்ளதால் அது பற்றி விரிவாக இங்கே முன்வைக்க விரும்புகிறேன்.

    நபி(ஸல்) அவர்கள் மீது அல்குர்ஆனை இறக்கிவைத்த அல்லாஹ் குர் ஆனின் வசனங்களை விளக்கப்படுத்தி செயல் வடிவம் கொடுக்கும் பொறுப் பினை நபியிடமே வழங்கியுள்ளான். அவர்களது விளக்கங்களும் தெளிவுரை களுமே சுன்னா எனப்படும்.

    هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ

    அவன் தான் (எழுத்தறிவற்ற) உம்மிகளிடம் அவர்களிலிருந்தே ஒருதூதரை அனுப்பினான். அவர் அவனது வசனங்களை அவர் களுக்கு ஓதிக்காட்டி அவர்களைப் பரிசுத்தப்படுத்துவார். மேலும் வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்கு அவர் கற்றுக் கொடுப்பார். அவர்களோ இதற்கு முன் தெளிவான வழிகேட்டிலேயே இருந்தனர். (62:2)

    மக்களைப் பண்படுத்தி தூய்மைப்படுத்தி நேர்வழியின் பால் கொண்டு செல்லும் பணியில் அல்குர்ஆனை ஓதிக் காண்பிப்ப துடன் அதனை கற்றுக் கொடுப்பதும் நபியின் கடமையாகும் என இவ்வசனம் குறிப்பிடுகின்றது. குர்ஆனைக் கற்றுக் கொடுப்பது என்னும் போது குர்ஆன் கூறும் செய்திகளை மக்கள் விளங்கி செயற்படத்தக்க வகையில் அவர்களது மொழியிலேயே நபியின் விளக்கவுரைகள் இடம்பெறுவதாகும். இவ்வசனத்;தில் இடம் பெறும் ஷஷஹிக்மத்'' என்ற வார்த்தை யின் விளக்கம் ஷஷசுன்னா'' நபியின் வழிமுறையாகும் என இமாம் ஷாபி(ரஹ்) கூறுகிறார்கள். (நூல்: அர்ரிஸாலா)

    அல்லாஹ்வின் வஹியைக் கொண்டு (வேதத்தைக் கொண்டு) இறைத் தூதர்கள் அனுப்பப்படும்போது அந்த வஹியினை விளக்கப் படுத்தும் உரிமை யுடனே அனுப்பப்பட்டார்கள்.

    وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ

    நாம் எத்தூதரையும் (அனுப்பிடும் போது) அவர் தனது சமூகத் திற்குத் தெளிவு படுத்துவதற்காக அவர்களது மொழியிலேயே தவிர அனுப்ப வில்லை.(14:4)

    மக்கள் விளங்கிக் கொள்ளும் முறையில் அவர்களது பாஷையில் இறைத் தூதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேதங்கள் அருளப்படுவது என்பது அல்லாஹ் வின் நியதியாகும். அந்த வழிமுறையில்தான் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் அனுப்பப்பட்டார்கள்.

    وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ

    (நபியே) மனிதர்களுக்கு இறக்கப்பட்டதை நீர் அவர்களுக்குத் தெளிவுப்படுத்து வதற் காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் நாம் உம்மீது இவ்வேதத்தை இறக்கி னோம்.(16:44)

    وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

    இறைத்தூதர் எதை உங்களுக்கு கொடுத்தாரோ அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதை உங்களுக்குத் தடுத்தாரோ (அதைவிட்டும்) விலகிக் கொள்ளுங்கள். (59:7)

    அலகுர்ஆன் கூறும் சட்டவிதிகள் இபாதத்கள் வணக்க வழி முறைகள் மற்றும் வாழ்வியல் அணுகுமுறைகள் உட்பட அனை த்து விவகாரங்களுக் குமான தெளிவுகள் அல்லாஹ்வின் மூலமாகவே நபி(ஸல்) அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டன. எனவே சுன்னா மூலம் எடுத்துக்காட்டப்படும் வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று இவ்வசனங்கள் மூலம் அல்லாஹ் மக்களுக்கு உத்தரவு விடுகிறான். சுன்னாவை அல்லாஹ் அங்கீகரித்தது மட்டுமின்றி சுன்னாவின்றி குர்ஆனை அணுகக்கூடாது என்பதையும் தெளிவாக்கியுள்ளான். சுன்னாவை மறுப்பது அல்லாஹவின் வசனங்களை ஏற்க மறுப்பது போலாகிவிடும்.

    قَدْ نَعْلَمُ إِنَّهُ لَيَحْزُنُكَ الَّذِي يَقُولُونَ فَإِنَّهُمْ لَا يُكَذِّبُونَكَ وَلَكِنَّ الظَّالِمِينَ بِآيَاتِ اللَّهِ يَجْحَدُونَ

    ஷஷநபியே அவர்கள் கூறுவது நிச்சயமாக உம்மை கவலைக்குள் ளாக்குகிறது என்பதை நாம் அறிவோம். நிச்சயமாகஅவர்கள் உம்மைப் பொய்பிக்கவில்லை. எனினும் அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங் களையே பொய்ப்பிக்கின்றனர். (6:33)

    இறைத்தூதரின் வழிகாட்டல்களை ஏற்கமறுப்பவர் அல்லாஹ்வை பொய்பிப்ப வராவார் என அல்லாஹ் கடிந்துரைக்கிறான். முழு மனதுடன் எந்த அதிருப்தியுமின்றி இறைத்தூதரின் வழி நின்று சுன்னாவை பின்பற்றுபவரே உண்மையான முஸ்லிமாவார்.

    இமாம் இப்னு குதைபா (ரஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ் தனது தூதருக்கு கற்றுக் கொடுத்த ஞானத்தைத் தவிர வேறு எதனையும் தூதர் (மக்களுக்கு) கற்றுக் கொடுக்கவில்லை. அவைகளை அல்லாஹ் முழுமையாக இறக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கிவைத்தான். நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) குர்ஆனைக் கொண்டு வந்ததைப் போலவே சுன்னா வையும் கொண்டு வந்தார்கள். இதுகுறித்து நபி(ஸல்)அவர்கள் கூறும்போது ஷஷகுர்ஆனும் அதுபோல ஒன்றும் (அதாவது சுன்னா வும்) கொடுக்கப்பட்டுள்ளேன்'' என்றார்கள். (நூல்: ஹிப்லுல்லா ஹிஸ் ஸூன்னா பக்கம் 42. தஃவிலுல் முஹ்தலிபுல் அஹாதிஸ் பக்கம். 166)

    இமாம் இஸ்மாயில் இப்னு அபீ அல்முஹாஜிர் (ரஹ்) கூறுகிறார்கள்: குர்ஆனை நாம் பாதுகாப்பது போலவே சுன்னாவையும் பாதுகாக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் கூறும்போது இறைத்தூதர் உங்களுக்கு கொடுத்ததை எடுத்துக் கொள் ளுங்கள்'' (59:9) என்று கூறுகிறான். (நூல்: ஹிப்லுல்லாஹிஸ் ஸூன்னா பக்கம் 42)

    சுன்னாவும்'' அல்லாஹ்விடமிருந்து நபிக்கு அருளப்பட்ட வஹி என்பதனால் சுன்னாவை நிராகரிப்பவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவராக கருதப்படுவார்.

    முஜ்மல், முபஸ்ஸல் வசனங்கள்:

    சுன்னாவை பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து அல்குர் ஆனின் கட்டளைகள் அல்லது வசனங்கள் இருவிதமாக கூறப் பட்டுள்ளதை காணமுடிகிறது.

    1. முஜ்மல் மற்றும் முபையின்

    2. முத்லக் மற்றும் முகைய்யத்

    உதாரணமாக

    وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ

    தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தையும் கொடுத்து ருகுஉ செய்வோ ருடன் நீங்களும் ருகுஉ செய்யுங்கள் (2:43) என குர்ஆன் கூறுகிறது.

    தொழுகையை நிiநாட்டும் படியும், ஸகாத் கொடுக்கும் படியும் சுருக்கமாக பொதுப்படையாக இங்கு கூறப்பட்டுள்ளது.

    தொழுகைக்கான நேரங்கள், தொழுகையை எப்படித் துவக்குவது? எப்படி முடிப்பது? தொழுகைக்காக எப்படி அணிவகுப்பது? இமாம் ஒருவரை எப்படி நிருத்துவது? தக்பீர் கட்டும் முறை, குர்ஆன் ஓதும்முறை, ருகுஉ ஸஜ்தா செய்யும் முறை, அதில் ஓத வேண்டியவைகள், ரக்அத்தின் எண்ணிக்கைகள், தொழு கையை முறிக்கும் விடயங்கள், ஸஜ்தாஸஹ்வு மற்றும் சுன்னத் தான தொழுகைகள் என்பன பற்றியும் சுன்னா விரிவாக கூறு வதையே முபையின்'' எனப்படும்.

    அது போல் ஸகாத்தின் பொருட்கள், அதன் விகிதங்கள், கொடுக்கும் முறைகள், ஸகாத் கொடுக்கக் கடமைப்பட்டவர்கள் பற்றி சுன்னா விரி வாக(முபையினா) கூறுகிறது.

    يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنْثَيَيْنِ

    இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்... (4:11)

    இந்த வசனம் பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்குள் பங்கு வைப்பதைப் பற்றியும் பிள்ளைகளின் சொத்து பெற்றோருக்கு பங்கு வைப்பதைப் பற்றியும் கட்டளை யிடுகின்ற பொதுவான கட்டளையாகும். இதனை முத்லக்'' எனப்படும்.

    இந்த பொது கட்டளையிலிருந்து விதிவிலக்குப் பெறுகின்றவர் களை சுன்னா விளக்கப்படுத்துகிறது.அதனை முகையத்'' எனப்படும்.

    ஒரு முஸ்லிம் காபிரின் சொத்திலிருந்து வாரிசுரிமை பெற மாட்டான். ஒரு காபிர் முஸ்லிமின் சொத்திலிருந்து வாரிசுரிமை பெறமாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: புகாரி)

    இந்த ஹதீஸின் மூலம் பெற்றோரும் பிள்ளைகளும் முஸ்லிம் களாக இருந்தாலே வாரிசுரிமை அவர்களுக்கிடையில் பங்கு வைக்கப்படும். பெற்றோர் காபிராக இருந்தால் பிள்ளைக்கு சொத்துக் கிடைக்காது. அதுபோல் பிள்ளை காபிராக இருந்தால் பெற்றோருக்கு சொத்தில் பங்கு கிடைக்காது. குர்ஆனுடைய சட்டங்களை சுன்னா இவ்வாறே விளக்கப் படுத்துகின்றது. குர்ஆனுடைய தெளிவுரையாக சுன்னா அமைக்கப்பட்டிருக் கிறது என்பதற்கான சான்றுகளை குர்ஆன் பின்வருமாறு முன்வைக் கிறது.

    وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا

    நீங்கள் பூமியில் பயணிக்கும் போது நிராகரித்தோர் உங்களைத் தாக்கு வார்கள் என அஞ்சினால் தொழுகையை சுருக்கிக் கொள் வதில் உங்கள் மீது குற்றமில்லை. (4:101)

    சுருக்கி தொழுவது எப்படி? எந்த தொழுகையை எத்தனை ரக்அத்களாக தொழவேண்டும்? அதன் அமைப்பு மற்றும் நேரம் என்ன என்று குர்ஆன் விபரிக்க வில்லை.

    فَلَا جُنَاحَ عَلَيْهِمَا وَإِنْ أَرَدْتُمْ أَنْ تَسْتَرْضِعُوا أَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُمْ مَا آتَيْتُمْ بِالْمَعْرُوفِ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

    நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்குச் செவிலித்தாய் மூலம் பாலூட்ட விரும் பினால் (பெற்ற தாய்க்குக்) கொடுக்க வேண்டியதை உரியமுறைப் படி கொடுத்து விடுங்கள். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் செய்பவைகளை நிச்சயமாக அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (2:233)

    பால்குடி சட்டம் பற்றிக் கூறும் இவ்வசனத்தில் பால்குடி மூலம் உண்டாகும் உறவு முறை பற்றி திருமணம் முடிக்க தடுக்கப்பட்ட வர்கள் அல்லது ஆகுமாக்கப்பட்டவர்கள் பற்றி விபரிக்கப்பட வில்லை;.

    وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِنَ اللَّهِ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

    திருடன், திருடி ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள். இது அவர்கள் செய்ததற்குக் கூலியாகவும் அல்லாஹ்வின் தண்டனையுமாகும். (5:38)

    திருட்டுக் குற்றத்திற்காக கையை வெட்டும்போது முழுமை யாக வெட்டுவதா? முழங்கையிலிருந்து வெட்டுவதா? மணிக் கட்டிலிருந்து வெட்டுவதா? என்பது பற்றியும் 100 ரூபா திருடியதற்காக கையை வெட்டுவதா? 100.00 ரூபா திருடியதற்காக கையை வெட்டுவதா? இதன் பெருமதியை தீர்மானிப்பது எப்படி? என்பது பற்றியும் குர்ஆன் விபரிக்க வில்லை.

    مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصَى بِهَا أَوْ دَيْنٍ غَيْرَ مُضَارٍّ وَصِيَّةً مِنَ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَلِيمٌ

    சொத்துக்களை பங்கீடு செய்யும் முன் ஷஷபாதிப்பற்ற விதத்தில் செய்யப் பட்ட மரண சாசனத்தையும் அல்லது கடனையும் நிறை வேற்றிய பின்னரே யாகும் இது அல்லாஹ்விடமிருந்துள்ள கட்டளையாகும் (4:12) என்றும் குர்ஆன் கூறுகின்றது.

    பெற்றோர், பிள்ளைகள், கணவன் மனைவி ஆகியோர் விட்டுச் செல்லும் சொத்து க்கள் பங்குவைக்க முன் கடன் மற்றும் மரண சாசனத்தை நிறைவேற்றி விட்டு பங்கீடு செய்யுமாறு குர்ஆன் கூறுகிறது. சொத்திலிருந்து எத்தனை விகிதம் கொடுத்து மரண சாசனத்தை நிறை வேற்றுவது? பாதிப்பற்ற முறையை எவ்வாறு தீர்மானிப்பது என்பன பற்றி குர்ஆன் விபரிக்கவில்லை.

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

    ஷஷவிசுவாசம் கொண்டோரே! நீங்கள் இறையச்சமுடையவர் களாக ஆகுவதற்காக உங்கள் மீது நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது. (2:184)

    நோன்பை நோற்குமாறு கட்டளையிடும் குர்ஆன், நோன்பை முறிக்கும் காரியங்கள் என்ன? தவிர்ந்து கொள்ள வேண்டிய விடயங்கள் என்ன? நோன்பின்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன? எத்தனை வயதில் நோன்பு நோற்க வேண்டும் என்பன பற்றி விபரிக்க வில்லை.

    وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ

    الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ

    அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவு செய்யுங்கள்'' (2:196)

    ஷஷஹஜ் குறிப்பிட்ட சில மாதங்களாகும்;.|| (2:197)

    ஹஜ் நிறைவேற்றப்படுவதற்கு குறிப்பிட்ட மாதங்கள் உள்ளதாக குர்ஆன் குறிப்பிடு கிறது. அந்த மாதங்கள் எவை என குறிப்பிட வில்லை.

    ஹஜ் மற்றும் உம்ராவுக்காக அனுமதிக்கப்பட்ட ஆடைகள் என்ன? ஆடை அணியும்முறை என்ன? இஹ்ராமின் எல்லை என்ன? ஹஜ்ஜை ஆரம்பிக்கும் முறை என்ன? ஜம்ராவில் கல்லெறி வதற்கான நேரங்கள் என்ன? எத்தனை முறை கல்லெறிதல் வேண்டும்? அதன் எண்ணிக்கைகள் என்ன? முஸ்தலி பாவிலும் அரபாவிலும் எத்தனை நாட்கள் தங்குதல் வேண்டும் என்பன பற்றி குர்ஆன் விபரிக்கவில்லை.

    إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ

    ஷஷநிச்சயமாக ஸபாவும் மர்வாஉம் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ள வைகளாகும். எவர் இவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கின்றாரோ அவர் மீது அவ்விரண்டுக்கு மிடையில் சுற்றி வருவது குற்றமில்லை. எவர் மேலதிகமாக நன்மை செய்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றியுடைய வனும் நன்கறிந்தவனுமாவான்;. (2:158)

    தவாபை எங்கிருந்து ஆரம்பிப்பது? அதன்ஒழுங்குகள் என்ன? எத்தனை தடைவகள் தவாப் செய்வது? ஸஃயை எங்கிருந்து ஆரம்பித்து எங்கு முடிப்பது? எத்தனை தடவையில் முடிப்பது என்பன பற்றி குர்ஆன் விபரிக்க வில்லை.

    إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ

    வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டின் படி நிச்;சயமாக மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும்.(9:36)

    புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்கள் எவை? அதனை எவ்வாறு அடையாளப் படுத்துவது? என்பன பற்றி குர்ஆன் விபரிக்கவில்லை.

    إِنَّ الَّذِينَ جَاءُوا بِالْإِفْكِ عُصْبَةٌ مِنْكُمْ لَا تَحْسَبُوهُ شَرًّا لَكُمْ بَلْ هُوَ خَيْرٌ لَكُمْ لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ مَا اكْتَسَبَ مِنَ الْإِثْمِ وَالَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ

    لَوْلَا إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بِأَنْفُسِهِمْ خَيْرًا وَقَالُوا هَذَا إِفْكٌ مُبِينٌ

    நிச்சயமாக எவர்கள் (அந்த) அவதூற்றைக் கொண்டு வந்தனரோ அவர்கள் உங்களில் ஒரு குழுவினரே! அதை உங்களுக் குத் தீமையாக நீங்கள் எண்ணிக் கொள்ளாதீர்கள். மாறாக அது உங்களுக்கு நன்மையானதே. அவர்களில் ஒவ்வொரு வனுக் கும் (அவதூறு கூறிய) பாவத்தில் அவனவன் சம்பாதித்தது உண்டு. அவர்களில் எவன் (இதில்) பெருமளவு பங்கெடுத் தானோ அவனுக்குக் கடுமையான வேதனையுண்டு. (24:11)

    இதை நீங்கள் செவியேற்றபோது நம்பிக்கையாளர்களான ஆண் களும் பெண்களும் தங்களைக்குறித்து நல்லதை எண்ணி ஷஇது தெளிவான அவதூறு என்று கூறியிருக்க வேண்டாமா? (24:12)

    அவதூறு சொல்லப்பட்ட செய்தி என்ன? அச்செய்திக்கு குர்ஆன் முக்கியத் துவம் கொடுப்பது ஏன்? யார் மீது அவதூறு சுமத்தப்பட்டது? அதில் பங்கெடுத்த குழுவினர் யார்? அவர்களில் தண்டனை பெற்றவர்கள் யார்? யாருடைய விடயத்தில் இவ் வசனம் இறங்கியது? என்பன பற்றி குர்ஆன் விபரிக்கவில்லை.

    وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُمْ مِنْ شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ إِنْ كُنْتُمْ آمَنْتُمْ بِاللَّهِ وَمَا أَنْزَلْنَا عَلَى عَبْدِنَا

    போரில் நீங்கள் பெற்ற கனீமத் பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ஒருபகுதி அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் நெருங்கிய உறவினர் களுக்கும் அநாதை களுக்கும் ஏழைகளுக் கும் வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்... (8:41)

    அல்லாஹ்வுக்கு கனீமத் பொருளை எப்படி வழங்குவது? அல்லாஹ் சார்ப்பாக எவரும் பெறுவாரா? என்பவைப் பற்றி குர்ஆன் விபரிக்கவில்லை.

    يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ

    ஷநீங்கள் பெண்களை விவாகரத்துச் செய்தால் அவர்களின் இத்தாவைக் கணக் கிடக்கூடிய காலத்தில் விவாகரத்துச் செய்யுங்கள். மேலும் இத்தாவை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.உங்கள் இரட்சகனான அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (65:1)

    இத்தாவை கணக்கிடக்கூடிய காலம் எது? அதனை எப்படி கண்டறிவது? எப்போது ஆரம்பித்து எப்போது முடிவுக்கு கொண்டு வருவது? இவை பற்றி குர்ஆன் விபரிக்கவில்லை.

    وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَاتُوا وَهُمْ فَاسِقُونَ

    நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நிராகரித்தத னாலும் பாவிகளாகவே மரணித்து விட்டதனாலும் அவர்களில் எவருக்காக வும் ஒருபோதும் நீர் தொழுகை நடாத்த வேண்டாம். (பிரார்த்தனைக்காக) அவனது கப்ரின் அருகில் நிற்கவும் வேண்டாம். (9:84)

    இவ்வசனம் முனாபிக்குகளுக்கு ஜனாஸா தொழுகை நடாத்துவதைக் கண்டிக்கிறது. முனாபிக்குகள் மற்றும் காபிர்களுக்கு ஜனாஸா தொழுகை நடாத்தக் கூடாது. ஆனால், ஜனாஸா தொழுகை பற்றியோ அதன்முறை மைகள் பற்றியோ குர்ஆனில் விபரிக்கப்படவில்லை. மரணித்த முஸ்லிம் ஒருவரை எப்படி குளிப்பாட்டுவது கபன் செய்வது தொழுகை நடாத்துவது அடக்கம் செய்வது என்பது பற்றி குர்ஆன் தெளிவுப் படுத்தவில்லை.

    يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

    قَدْ فَرَضَ اللَّهُ لَكُمْ تَحِلَّةَ أَيْمَانِكُمْ وَاللَّهُ مَوْلَاكُمْ وَهُوَ الْعَلِيمُ الْحَكِيمُ

    وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَنْ بَعْضٍ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ مَنْ أَنْبَأَكَ هَذَا قَالَ نَبَّأَنِيَ الْعَلِيمُ الْخَبِيرُ

    நபியே!உமது மனைவியர்களின் திருப்தியை நாடிஅல்லாஹ் உமக்கு ஆகுமாக்கியதை நீர் ஏன் தடைசெய்து கொள்கிறீர்? அல்லாஹ் மிக்க மன்னிப் பவன் நிகரற்ற அன்புடையவன்.

    நபி தனது மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக கூறிய போது அவள் அதை (மற்றொரு மனைவியிடம்) கூற அதை அல்லாஹ் அவருக்கு வெளிப்படுத்தினான். அவர் (அம்மனைவியரிடம்) அதில் சிலவற் றை அறிவிக்காது விட்டு விட்டார். அவர் அவளிடம் அது குறித்து அறிவித்த போது அவள் இதை உமக்கு அறிவித்தது யார்? எனக் கேட்டடாள். அ(தற்)வர் நன்கறிந்தவன். நுட்பமானவன் எனக்கு அறிவித்தான் எனக் கூறினார். (66:1.3)

    இவ்வசனத்தில் இரண்டு விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகின் றன. நபி ஒரு பொருளை ஹராமாக்கி இருக்கிறார். அது எது வென குறிப்பிடப்படவில்லை. இரண்டாவது, நபியின் மனைவி மார்கள் இரகசியமாக பேசிய செய்திகளை அல்லாஹ் நபிக்கு வெளிப்படுத்தி அறிவித்துள்ளான். அச்செய்தி எதுவென விபரிக் கப்படவில்லை. நபியின் வாழ்வியல் குறித்து குர்ஆன் பேசுவது ஏன்?

    الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنَ الْمُؤْمِنِينَ

    விபச்சாரி விபச்சாரன் ஆகிய இருவரில் ஒவ்வொருவருக்கும் 100 கசையடி அடியுங்கள் நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள் வோராக இருந்தால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு கருணை ஏற்பட வேண்டாம். அவ்விருவரின் தண்டனையை நம்பிக்கையாளர்களில் ஒரு சாரார் பார்த்துக் கொண்டிருக்கட்டும். (24:2)

    விபச்சாரன் விபச்சாரிக்கு தண்டனை வழங்குமாறு கூறும் இவ்வசனம், திருமணம் முடித்த விபச்சாரன் விபச்சாரிக்கா இத் தண்டனை அல்லது திருமணம் முடிக்காத விபச்சாரி விபச்சார னுக்கா இத்தண்டனை என்பதை குறிப்பிடவில்லை.

    حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ

    தானாகச் செத்ததும், பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லா தோருக்காக அறுக்கப்பட்டவைகளும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன... (5:3, 6:145)

    உண்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ளவைகளைப் பற்றிக் கூறப் படும் இவ்வசனத்தில் கடலில் செத்தவைகள் ஆகுமானவையா இல்லையா என்பதையும் பற்களாலும் நகங்களாலும் கீறிக் கிழிக்கக் கூடிய மிருகங்கள் மற்றும் பறவைகளின் மாமிசங்கள் உண்பதற்கு ஆகுமானவையா இல்லையா என்பதையும் விபரிக்கவில்லை.

    الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ أُولَئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُمْ مُهْتَدُونَ

    எவர்கள் ஈமான் கொண்டு தங்களது ஈமானுடன் அநியாயத்தை கலக்க வில்லையோ அவர்களுக்கே பாதுகாப்புண்டு. அவர்கள் தாம் நேர்வழிப் பெற்றவர்கள். (6:82)

    இவ்வசனத்தில் ஈமானுக்குரிய பாதுகாப்புப் பற்றி கூறப்படுகிறது. அநியாயம் கலந்து விட்டால் ஈமான் அழிந்து விடும் என்று எச்சரிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்படும் ஷஷஅநியாயம்''எது? முனிதன் தனக்குத் தானே செய்து கொள்ளும் அநியாயமா? முற்றவர்களுக்கு செய்யும் அநியாயமா? ஈமானுக்கு செய்யும் அநியாயமா? எந்த அநியாயத்தை குறிப்பிடுகிறது என்று குர்ஆன் விபரிக்கவில்லை.

    وَإِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ إِنَّ اللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا

    நீங்கள் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் மலசலம் கழித்து விட்டு வந்தால் அல்லது நீங்கள் மனைவியரைத் தீண்டியோ இருக்கும் நிலையில் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளவில்லையாயின் தூய்மையான மண்ணை நாடி உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் (அதைக் கொண்டு) தடவிக் கொள்ளுங்கள்.(4:43)

    தயம்மத்தின்போது கைகளை எதுவரை தடவிக் கொள்வது? இரு மணிக்கட்டு கள் வரையா? இரு முழங்கைகள் வரையா? அல்லது தோள் புஜங்கள் வரையா? என்பது பற்றி குறிப்பிடப்பட வில்லை. இது போன்ற இன்னும் பல வசனங்கள் உண்டு.

    மேலே கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வசனத்திற்குமான விளக்கவுரைகளை முன்வைத்து செயற்படுத்தி காட்டிடும் அதிகாரத்தை நபி(ஸல்) அவர்களிடம் குர்ஆன் ஒப்படைத்துள்ளது

    سنن أبي داود (4ஃ 200)

    عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «أَلَا إِنِّي أُوتِيتُ الْكِتَابَ، وَمِثْلَهُ مَعَهُ

    ஷஷகுர்ஆனும் அதுபோல் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: மிக்தாத் இப்னு மஹ்தி கரீப் (ரலி), நூல்: அபூதாவூத்)

    தனக்கு கொடுக்கப்பட்ட விளக்கம் ஓதிகாண்பிக்கப்படாத வஹீ'' என்பதை இந்த ஹதீஸ் மூலம் விளக்கப்டுத்தகிறார்கள்.

    நான் எவ்வாறு தொழ கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்'' என்றும் ஷஷஎன்னிடமிருந்து ஹஜ்ஜின் வணக்க வழிமுறைகளை எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறிய செய்திகள் புகாரி முஸ்லி மில் பதிவாகியுள்ள பிரபல்யமான ஹதீஸ்கள்.

    தொழுகை ஹஜ் உட்பட நபி (ஸல்) அவர்களால் செயற்படுத்திக் காட்டப்பட் ஒவ்வொரு செயல்முறைகளும் சஹாபாக்களால் பின்பற்றப்பட்டன. அவை அல்லாஹ் வினால் அங்கீகரிக்கவும் பட்டது. அன்று முதல் இன்று வரை அந்த ஒப்புதலையே முஸ்லிம் கள் பின்பற்றி வருகிறார்கள்.

    சுன்னாவின் அவசியம் பற்றி வலியுறுத்தும் இன்னுமொரு வழியினை அல்குர்ஆன் பின்வருமாறு முன்வைக்கிறது

    . لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا

    நபியே!) நம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உடன்படிக்கை எடுத்த போது நிச்சயமாக அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் உள்ள வற்றை அவன் நன்கறிந்து அவர்கள் மீது அமைதியை இறக்கி வைத்தான். மேலும் அவன் அவர்களுக்கு சமீபமான வெற்றியையும் வழங்கினான். (48:18)

    மக்கத்து மக்களிடம் சமாதான தூதுவராக சென்ற உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி பரவிய போது அம்மக்களை எதிர்த்து நின்று போர் புரிவதற்கு தங்க ளுடைய தோழர்களிடம் ஒரு மரத்தடியின் கீழ் நபி(ஸல்) (பைஅத்) உடன்படிக்கை செய்தார்கள். இவ்வுடன்படிக்கையை அங்கீகரித்து அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கினான்.

    அதுமட்டுமின்றி, அந்த இடத்தில் நபியிடம் செய்த பைஅத் அல்லாஹ்விடம் செய்த பைஅத்தாகும் என அல்லாஹ் உரிமை கொண்டாடுகிறான். தூதருக்கு கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராவார் என்பதை அல்லாஹ் உண்மைப்படுத்துகிறான்.

    உஸ்மான் (ரலி) தூதுவராக அனுப்பப்பட வேண்டும் என்பது பற்றியோ சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு போருக்கு ஆயத்தமாகி பைஅத் செய்யவேண்டும் என்பது பற்றியோ குர் ஆனில் எங்கும் சொல்லப்பட வில்லை. நபிகளார் மேற்கொண்ட இப்பணியை அல்லாஹ் அங்கீகரித்து நபித்தோழர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டதாகவும் அறிவிக்கிறான். குர்ஆன் மட்டும் போதும் சுன்னா அவசியமில்லை என்றால் அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கியிருக்க மாட்டான்.

    وَعَلَى الثَّلَاثَةِ الَّذِينَ خُلِّفُوا حَتَّى إِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ أَنْفُسُهُمْ وَظَنُّوا أَنْ لَا مَلْجَأَ مِنَ اللَّهِ إِلَّا إِلَيْهِ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوبُوا إِنَّ اللَّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ

    இன்னும் தாமதப்படுத்தப்பட்ட மூவரையும் அல்லாஹ் மன்னித்து விட்டான். பூமி விசாலமானதாக இருந்தும் அது அவர்களுக்கு நெருக்கடியாகி அவர்களுக்கு எதிராக அவர்களது உள்ளங்களும் நெருக்கடியாகி விட்டன. அல்லாஹ்விடமிருந்து (தப்புவதற்கு) அவனிடமேயன்றி புகலிடம் இல்லை என்பதை அவர்கள் உறுதி யாக அறிந்தனர். பின்னர் மீண்டு வருவதற்காக அவன் அவர் களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பளிப்ப வன். நிகரற்ற அன்புடையவன். (9:118)

    தாமதப்படுத்தப்பட்ட அல்லது பின்தங்கி விட்ட மூவரை அல்லாஹ் மன்னித்ததாக இவ்வசனத்தில் கூறுகிறான்.

    கஃப் இப்னு மாலிக்(ரலி) ஹிலால் இப்னு உமைய்யா (ரலி) முராரா இப்னு ரபிஉ (ரலி) ஆகிய மூன்று நபித்தோழர்கள் தான் தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாது பின்தங்கிவிட்டவர்கள். அவர்களை நோக்கி ஷஷஎழுந்து செல்லுங்கள். உங்கள் விஷயமாக அல்லாஹ் தீர்ப்புக்கூறுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறி சமூகப் பகிஷ்கரிப்பு செய்தார்கள். அல்லாஹ்வு டைய இவ்வசனம் இறங்கும் வரை அதாவது 50 நாட்கள் கடக்கும் வரை பகிஷ்கரிப்பு நீடித்தது. ஆனால் இப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளுவது சம்பந்தமான எந்தொரு அறிவிப்பும் குர்ஆனில் கூறப்படவில்லை. நபி(ஸல்) அவர்கள் மேற்கொண்ட இந்நடவடிக்கை (சுன்னா) சரியானதுஎன்பதை அங்கீக ரித்து பகிஷ்கரிப்பை முடிவுக்கு கொண்டு வந்தது இவ்வசனம்.

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا

    விசுவாசம் கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இன்னும் இத்தூத ருக்கும் உங்களில் அதிகாரமுடையோருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் முரண்பட்டுக் கொள்வோராக இருந்தால் அதனை அல்லாஹ்விட மும் இத்தூதரிடமும் (தீர்வை வேண்டி) திருப்பி விடுங்கள். இதுவே மிகச் சிறந்ததும் அழகான முடிவுமாகும். (4:59)

    إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَإِذَا كَانُوا مَعَهُ عَلَى أَمْرٍ جَامِعٍ لَمْ يَذْهَبُوا حَتَّى يَسْتَأْذِنُوهُ إِنَّ الَّذِينَ يَسْتَأْذِنُونَكَ أُولَئِكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ فَإِذَا اسْتَأْذَنُوكَ لِبَعْضِ شَأْنِهِمْ فَأْذَنْ لِمَنْ شِئْتَ مِنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمُ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ

    அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்ட வர்களே முஃமின்களாவர். பொதுவான ஒரு காரியம்குறித்து (ஆலோசிக்க) அவருடன (நபியுடன்); அவர்கள் இருந்தால் அவரிடம் அனுமதி பெறும்வரை (அங்கிருந்து) அவர்கள் செல்ல மாட்டார்கள். (24:62)

    தங்களுக்கேற்படும் பிரச்சனைகள் குறித்து நபியுடன் அமர்ந்து கலந்தா லோசித்து பின்பற்றுமாறும், ஏதேனும் ஒருவிடயத்தில் பிணங்கிக் கொண்டால் அதற்கான தீர்வை பெறுவதற்கு நபி (ஸல்) அவர்களிடம் மீளு மாறும் இவ்வசனங்கள் கூறி சுன்னாவை நிலைநிறுத்துகின்றது.

    فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا

    (நபியே) உம் இரட்சகன் மீது சத்தியமாக. அவர்கள் தமக்கிடை யில் ஏற்பட்ட சர்ச்சையில் உம்மை நீதிபதியாக்கி பின்னர் நீர் வழங்கும் தீர்ப்பை தம்மனங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாது ஏற்று, அதற்கு முற்றிலும் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள். (4:65)

    நபித்தோழர்களிடையே பிரச்சினை எழுந்தபோது அதற்கான தீர்வைப் பெறுவதற்கு நபி(ஸல்) அவர்களிடம் இரு தோழர்களும் வந்தார்கள். நபிய வர்கள் வழங்கிய தீர்ப்பை ஒருவர் ஏற்க மற்றவர் அதிருப்தியை வெளியிட்டார். நபி(ஸல்) அவர்களது தீர்ப்புக்கு கட்டுப்படாததை கண்டித்து அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கி சுன்னாவுக்கு அடிபணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்திக் கூறுகிறான்.

    சுன்னாவின் வியாக்கியானம் அவசியம் என்பதை வலியுறுத்தும் இன்னுமொரு விளக்கத்தினை குர்ஆன் முன்வைப்பதை பாருங்கள்.

    நாஸிஹ் மன்ஸூஹ் :

    அல்குர்ஆனில் நாஸிஹ் மன்ஸூஹ் என இருவகை வசனங்கள் உண்டு. முதலில் இறங்கிய சட்ட வசனத்தை மன்ஸூஹ் என்றும் அந்த சட்டத்தை ரத்துசெய்து இரண்டாவதாக இறங்கிய வசனத்தை நாஸிஹ் என்றும் கூறப்படும்.

    مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

    ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததை அல்லது அதைப் போன்றதைக் கொண்டு வருவோம். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நீர் அறிய வில்லையா? (2:106) சட்டங்கள் மாற்றப்பட்டு புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். இவ்வாறு கொண்டுவரப்பட்ட சில வசனங்கள் பின்வருமாறு:

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ

    நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் கூறுவது என்னவென்று அறியாதவாறு போதையுடையோராக இருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள். (4:43)

    يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ

    (நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும் கேடும் மனிதர்களுக்கு (சில) பயன்களும் இருக் கின்றன. எனினும் அவ்விரண் டின் பயனை விடகேடு மிகப் பெரியதாகும்|| எனக் கூறிவீராக. (2:219)

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

    ஷைத்தான் விரும்புவதெல்லாம் மது சூதாட்டம் என்பவற்றின் மூலம் உங்களுக்கிடையில் பகைமை யையும் குரோதத்தையும் ஏற்படுத்தவும் உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் மற்றும் தொழுகையை விட்டும் தடுத்து விடவுமே ஆகும். எனவே நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (5:90-91)

    மது மற்றும் போதைப் பற்றி மூன்று விதமாக இவ்வசனங்கள் கூறுகின்றன. வெளிப்படையாகப் பார்க்கும்போது இம்மூன்று வசனங்களும் கருத்து ரீதியில் முரண்பாடான தோற்றத்தைத் தருகின்றன. இவ்வசனங்கள் ஒரே நேரத்தில் இறங்கியவையா? அல்லது வௌ;வேறு சந்தர்ப்பங்களில் இறங்கிய வையா? முதலில் இறங்கிய வசனம் எது? இறுதியில் இறங்கிய வசனம் எது? நாஸிஹ் எது? மன்ஸூஹ் எது? என்பதை குர்ஆன் கூறாத அதே வேளை சுன்னா அது பற்றி தெளிவாக்கிறது. முதலில் 2:229 வசனமும் அதன் பின் 4:43 வசனமும் அதன் பின் 5:90-91 வசனமும் அருளப்பட்டன.

    وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا وَصِيَّةً لِأَزْوَاجِهِمْ مَتَاعًا إِلَى الْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِي مَا فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ مِنْ مَعْرُوفٍ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

    உங்களில் மனைவியரை விட்டு இறக்கும் தருவாயில் இருப்பவர்கள் தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (குடும்ப உறவினர் களிடம்) மரணசாசனம் (வஸீயத்) செய்ய வேண்டும். ஆயினும் தங்கள் விஷயத்தில் நல்ல முடிவை மேற்கொண்டு அவர்களாக (மனைவியர்கள்) வெளியேறினால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன் ஞானமிக்கவன். (2:240)

    وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ بِالْمَعْرُوفِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

    ஷஷஉங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அந்த மனை வியர் நான்குமாதங்களும்; பத்து நாட்களும் (மணம் முடிக்காமல்) காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தங்கள் விஷயமாக நல்ல முறையில் முடிவுசெய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தவன்.|| (2:234)

    கணவனின் மரணத்திற்காக ஒரு வருடம் இத்தாவை கடைப் பிடிப்பது என்று முதல் வசனம் கூறுகிறது. அடுத்தவசனம் 4 மாதங்கள் 10 நாட்கள் என்கிறது. இவ்விரு வசனங்களில் முதல் இறங்கிய வசனம் எது? இறுதியாக இறங்கிய வசனம் எது?

    என்பதை சுன்னா விளக்கப்படுத்துகிறது. முதலில் இறங்கிய 2:240 வசனத்தை மாற்றி 2:234 வசனம் இறங்கியது.

    كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ إِنْ تَرَكَ خَيْرًا الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُتَّقِينَ

    உங்களில் ஒருவருக்கு மரணம் வரும்போது அவர் ஏதேனும் செல்வத்தை விட்டுச் செல்வாராயின் அவர் தன் பெற்றோருக்கும் nருந்கிய உறவினர் களுக்கும் நல்ல முறையில் வஸீயத் (மரண சாசனம்) செய்வது உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது. பயபக்தி யாளர்களுக்கு இது கடமையாகும். (2:180)

    இவ்வசனத்தில் தான் விட்டுச் செல்லும் சொத்துக்களின் பங்கீடு சம்பந்தமாக பெற்றோருக்கும் நெருங்கிய உறவினர் களுக்கும் வஸீயத் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

    4:12 வசனத்தில் நெருங்கிய உறவினர்கள் பற்றி குறப்பிடப்படாத அதே வேளை பெற்றோருக்கு கொடுக்கப்பட வேண்டிய பங்கு விகிதத்தை குறிப்பிடுகிறது. வஸீயத்| மரண சாசனத்திற்குப் பிறகே சொத்துக்கள் பங்கீடப்பட வேண்டும்' எனவும் குறிப்பிடு கிறது. இந்த வஸீயத்திற்கு உட்படுபவர்கள் யார்? அவர்களை எப்படி அடையாளம் காண்பது? என்பது பற்றி கூறப்படாத அதே வேளை அதனை சுன்னாவின் துணைக் கொண்டு புரிய வேண்டும். இவ்விரு வசனங்களில் முதலில் இறங்கிய 2:180 வசனம் மாற்றப்பட்டு 4:12 வசனம் இரண்டாவதாக இறக்கப்படது.

    ஷஷசிறந்த சமூகம்| (3:110) என்று அல்லாஹ்வினால் நற்சான்று கொடுக்கப்பட்ட சஹாபா சமூகம் அல்குர்ஆனை மட்டும் பின்பற்றி யதா அல்லது சுன்னாவையும் சேர்த்து பின்பற்றியதா என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். வஹியை கண்ணால் கண்ட அந்த சமுதாயம் அல்லாஹ்வையும் அவனது தூதரின் வழி முறைகளை யும் ஏற்று பின்பற்றியதால் தான் சிறந்த சமூகம்' என போற்றப்பட்டது. இந்த உண் மையைப் புரிந்துக் கொண்டால்; சுன்னாவின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது இலகுவாகி விடும். சுன்னா நிராகரிக்கப்பட்டால் நினைத்தவர்க ளெல்லாம் நினைத்தமாதிரி மார்க்கத்தைத் திரிபுபடுத்திச் செல்;லவும் ஏராளமான ஹராம்களை ஹலாலாக்கிடவும் வேண்டி வரும். அதுமட்டு மல்லாது பாரதூர மான இன்னுமொரு செய்தியும் இதில் உண்டு. சுன்னாவை நிராகரிப்பது என்பது நபியுடைய சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் பொய்யானவை போலியானவை. சமூகத்தை மார்க் கத்தின் பெயரால் தப்பான வழிக்கு நபி கொண்டுப் போய் சேர்த் துள்ளார் என்று கூறுவதற்கு சமனானதாகும்.

    தவறான வாதங்கள்:

    குர்ஆன் மட்டும் போதும்|| சுன்னா தேவையில்லை என மறுக்கக்கூடிய ஒரு சிலர் பின்வரும் இருவசனங்களை தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக முன்வைக் கிறார்கள்.

    مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ ثُمَّ إِلَى رَبِّهِمْ يُحْشَرُونَ

    வேதத்தில் எதையும் நாம் விட்டு வைக்கவில்லை. (6:38)

    وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ

    அனைத்தையும் தெளிவுப்படுத்தக் கூடியதாகவும் நேர்வழி யாகவும் அருளாக வும் நாம் இவ்வேதத்தை உம்மீது இறக்கி னோம். (16:89)

    இவ்விரு வசனங்களும் சுன்னா தேவையில்லை என கூறப்படு தாக வாதிடுகிறார்கள். இவர்களது வாதம் தவறானது என்பது இங்கே பளிச்சென்று தெளிவாகிறது.

    முதலாவதாக வேதத்தில் எதையும் நாம் விட்டுவைக்கவில்லை|| எனற வசனம் அல்குர்ஆனை குறிப்பிடும் வசனமல்ல. ஷஅல்கிதாப்| என்று இங்கு கை யாளப்பட்டுள்ள வார்த்தை லவ்ஹூல் மஹ்புல் என்னும் பதிவேட்டை குறிப்பிடும் வார்த்தையாகும். லவ்ஹூல் மஹ்புல் என்னும் பதிவேட்டில் எதையும் குறிப்பிடாமல் நாம் விட்டு வைக்கவில்லை|| என்பதைத் தான் இவ்வசனம் குறிப்பிடுகிறது என இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடுகிறார்கள். (தப்ஸீர் தபரி)

    இரண்டாவதாக அனைத்தையும் தெளிவுப்படுத்தக் கூடியதாக இவ்வேதம் அருளப்பட்டதாககுறிப்பிடும் வசனம் (16:89)'' சுன்னா வின் அவசியமின்றி குர்ஆனை விளங்க முடியும் என்பதை விளக் கப்படுத்து வதற்காக அருளப்படவில்லை. குர்ஆன் மட்டும் போதும் என்பதற்காக இவ் வசனம் அருளப்பட்டிருக்குமானால் தொழுகை நோன்பு உட்பட (மேலே நாம் குறிப்பிட்டுள்ள விடயங்கள்) அனைத் தையும் குர்ஆன் முறையாக விளக்கப் படுத்தியிருக்க வேண்டும். தூதருடைய செயற்பாடுகளை செயலற்றதாக ஆக்கியிருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக தூதருடைய செயல் முறை களை அங்கீகரித்து அவைகளை பின்பற்ற வேண்டும் என்று கட்டளை யிட்டு வசனங்கள் அருளப்பட்டன. இறைத்தூதர் மூலமாக காண் பிக்கப்படும் விளக்கங்களே குர்ஆனை விளக்கப்படுத்தும் வழி காட்டியாக எடுத்துக் காட்டுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

    அடுத்ததாக இவர்கள் எடுத்துக் காட்டும் இவ்விரு வசனங்கள் அல்குர்ஆனில் இறுதியாக இறக்கப்பட்ட வசனங்கள் அல்ல. இவ்விரு வசனங்கள் இறக்கபட்ட போதும் தூதரின் வழிகாட்டல் கள் தேவைப்பட்டன. இறக்கப்பட பின்பும் தூதரின் வழி காட்டல்கள் தேவைப்பட்டன என்பதை அவர்கள் சிந்திக்க மறந்து விட்டார்கள்.

    நபி(ஸல்) மூலமாக கொடுக்கப்படும் அல்குர்ஆனின் விளக்கவுரை அல்லாஹ் வினால் கொடுக்கப்பட்ட தெளிவுரை என்பதற்கு அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்.

    لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِه إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ

    (நபியே! குர்ஆன் இறக்கப்படும்போது) அதற்காக நீர் அவசரப்பட்டு உமது நாவை அசைக்க வேண்டாம். நிச்சயமாக அதனை ஒன்று சேர்ப்பதும் அதனை ஓதும்படி செய்வதும் எமது பொறுப் பாகும். எனவே நாம் அதனை ஓதிக் காட்டினால் அந்த ஓதலை நீர் பின்தொடர்வீராக பின்னர் அதனைத் தெளிவுப்படுத்துவது நிச்சயமாக எம்மீதுள்ள பொறுப்பாகும். (75:16-19)

    ஷஷதெளிவுப்படுத்துவது நமது பொறுப்பு|| என்ற அல்லாஹ்வின் வார்த்தை மிக ஆழமானதும் அற்புதமானதுமாகும். சுன்னாவும் வஹியின் அடிப்படைத் தான் என்பது குர்ஆன் கூறும் உறுதியான சான்றாகும்.

    ஜிப்ரீல் (அலை) ஓசை வடிவில் குர்ஆனை கொண்டு வந்தது போல் பேச்சு வடிவில் (மனித உருவில் வந்து) சுன்னாவை படித்துக் கொடுத்தார்கள் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் காணப்படுகிறன. உதாரணத்திற்கு பின்வரும் ஹதீஸை குறிப்பிடலாம்.

    நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அருகில் இருந்த போது தூய வெண்ணிற ஆடை அணிந்த அடர்ந்த கறுப்பு நிறத்தில் தலைமுடியுடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாள மும் அவரிடம் காணப்பட வில்லை. எங்களில் எவருக்கும் அவரை (யார் எனத்) தெரியாது.

    அவர் நபி(ஸல்) அவர்களின் அருகில் தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக் கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடை கள்மீது வைத்தாரர். பிறகு முஹம்மதே! இஸ்லாம் என்றால் என்ன என்று எனக்குத் தெரிவியுங்கள் என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஷஇஸ்லாம் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும் தொழுகையைக் கடைப்பிடிப்பதும் ஸகாத்தை வழங்கிவருவதும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதும் சென்று வர சக்திப் பெற்றால் இறையில்லம் கஃபாவை ஹஜ் செய்வதும் ஆகும்'' என்று பதிலளித்தார்ககள். அதற்கு அம்மனிதர் உண்மைதான் கூறினீர்கள் என்றார். அவரே கேள்வியும் கேட்டு அவரே உறுதியும் செய்கிறாரே என்று அவர் கூறியதைக் கேட்ட நாங்கள் ஆச்சரியமடைந்தோம்.

    அடுத்து அவர், ஈமான் என்றால் என்ன என்று எனக்குத் தெரிவியுங்கள் என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அல்லாஹ் வையும் அவனது வானவர் களையும் அவனதுவேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதிநாளையும் நீங்கள் நம்புவதாகும்;, நன்மைத் தீமை அனைத்தும் விதியின் படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதாகும்'' என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைத்தான் கூறினீர்கள் என்றார்.

    அடுத்து அவர், இஹ்ஸான் என்றால் என்ன என்று எனக்குத் தெரிவியுங்கள் என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஷஷஅல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிப்படுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் அவன் உங்களைப் பார்க்கிறான்'' (என்பதே இஹ்ஸான் ஆகும்)என கூறினார்கள்.

    அம்மனிதர், மறுமைநாளைப் பற்றி (அது எப்போது வரும் என்பது பற்றி) எனக்குத் தெரிவியுங்கள் என்றார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ஷஷகேள்விக் கேட்கப்படுபவர் (அதாவது நான்) கேட்பவரை விட (அதாவது உங்களை விட) அதிகம் அறிந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள்.

    அம்மனிதர் மறுமையின் அடையாளங்கள் பற்றி எனக்குத் தெரிவியுங்கள் என்றார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒர் அடிமைப் பெண் தன் எசமானியைப் பெற்றெடுப்பதும், காலில் செருப்பில்லாத அரை குறை ஆடைகளை அணிந்துள்ள ஏழை களான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக் கொண்டு உயர மான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் பார்ப்பதும் (அதன் அடையாளங்களில் உள்ளது) ஆகும்;'' என்று கூறினார்கள்.

    பிறகு அம்மனிதர் சென்று விட்டார். நீண்ட நேரம் நான் அங்கேயே இருந்தேன். பின்னர் என்னிடம் நபி(ஸல்) அவர்கள், உமரே! கேள்வி கேட்ட அம்மனிதர் யார் என்று உமக்கு தெரி யுமா என்று கேட்டார்கள். நான் ஷஷஅல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிந்தவர்கள்'' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஷஷஅவர் தாம் ஜிப்ரீல் (அலை) அவர்கள். உங்களது மார்;க்கத்தைக் கற்றுக் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர்(ரலி), நூல்: முஸ்லிம், ஹதீஸ் எண்-01)

    ஒரு நாணயத்தின இரு பக்கங்கள் போல் குர்ஆனும் சுன்னாவும் இஸ்லாத் தின் இரு அடிப்படைகளாகும் என்பதை இந்த ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.

    ஆகவே குர்ஆன் மட்டும் போதும் சுன்னா அவசியமில்லை என்று கூறக் கூடியவர்கள் அல்லாஹ்வுடைய தூதரை பொய்யன் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுவதைத் தவிர வேறெதனையும் அவர்கள் முன்வைக்க வில்லை.

    سنن أبي داود (4ஃ 200)

    عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «أَلَا إِنِّي أُوتِيتُ الْكِتَابَ، وَمِثْلَهُ مَعَهُ أَلَا يُوشِكُ رَجُلٌ شَبْعَانُ عَلَى أَرِيكَتِهِ يَقُولُ عَلَيْكُمْ بِهَذَا الْقُرْآنِ فَمَا وَجَدْتُمْ فِيهِ مِنْ حَلَالٍ فَأَحِلُّوهُ، وَمَا وَجَدْتُمْ فِيهِ مِنْ حَرَامٍ فَحَرِّمُوهُ، أَلَا لَا يَحِلُّ لَكُمْ لَحْمُ الْحِمَارِ الْأَهْلِيِّ، وَلَا كُلُّ ذِي نَابٍ مِنَ السَّبُعِ، وَلَا لُقَطَةُ مُعَاهِدٍ، إِلَّا أَنْ يَسْتَغْنِيَ عَنْهَا صَاحِبُهَا، وَمَنْ نَزَلَ بِقَوْمٍ فَعَلَيْهِمْ أَنْ يَقْرُوهُ فَإِنْ لَمْ يَقْرُوهُ فَلَهُ أَنْ يُعْقِبَهُمْ بِمِثْلِ قِرَاهُ»

    சுன்னாவை நிராகரிக்கக் கூடியவர்கள் உருவாகுவார்கள் என்ற நபியவர் களின் முன்னறிவிப்பை இங்கு குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது என நினைக்கிறேன்.

    ஷஷகுர்ஆனும் அதுபோல் ஒன்றும் எனக்கு கொடுக்கப்பட்டுள் ளது. வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு கட்டிலில் சாய்ந்துக் கொண்டு உங்களுக்கு குர்ஆன் மட்டும் போதும். அதில் ஹலாலாக்கப் பட்டதை ஹலால் என்றும் ஹராமாக் கப்பட்டதை ஹராம் என்றும் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறக் கூடியவன் உருவாகுவான். (அறிவிப்பவர்: மிக்தாத் இப்னு மஹ்திகரீப் (ரலி) நூல்: அபூதாவுத்)

    இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) அவர்கள் தோழர்களுடன் உட்கார்ந்தி ருந்தார்கள். அப்போது ஒருவர் வந்து குர்ஆனை தவிர எதையும் எங்களுக்கு அறிவிக்க வேண்டாம் என்று கூறினார். அப்போது அவரை பக்கத்தில் வருமாறு கட்டளையிட்ட இம்ரான் (ரலி) அவர்கள் நீரும் உனது தோழர் களும் சுன்னா தேவையில்லை என்று கூறுவதாக இருந்தால் லுஹர் நான்கு ரக்அத்கள் அஸர் நான்கு ரக்அத்கள் மஃரிப் மூன்று ரக்அத்கள் தொழ வேண்டும் என்றும் அத்தொழுகையின் இரண்டு ரக்அத்தில் சப்தமிட்டு ஓத வேண்டும் என்றும் தவாப் ஏழு முறை செய்யவேண்டும் என்றும் ஸபா மர்வாக்கிடையில் ஸஃயு செய்ய வேண்டும் என்றும் குர்ஆனில் கூறப்பட் டுள்ளதாக கண்டீர்களா? நீங்கள் எங்களிடமிருந்து சுன்னாவை பெற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் நிச்சயமாக நீங்கள் வழி தவறிவிடுவீர்கள் என கூறினார்கள். (நூல்: பைஹகி பீமத்கலில் தலாஹில் பாகம்-01, பக்கம் 25. அல்கிபாயா பக்கம் 48)

    நபி(ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு இந்த நிமிடம் வரை உண்மை என நிரூபிக்கப்பட்டதன் மூலம் சுன்னாவின் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படுவதோடு சுன்னவை நிராகரப்பது வழிகேடு என்று நிரூபிக் கப்படுகிறது.